07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 18, 2009

சிற்றில் நற்றூண்.....


சென்ற பதிவுக்கு பல பின்னூட்டங்கள் போட்டு , நான் நன்றாக எழுதுவது போன்ற மாயையை அல்லது
பிரம்மையை ஏற்படுத்தி விட்டனர் "ராகவன் அண்ணனும் , ஜமால் நண்பரும்.....அவர்களுக்கு என் நன்றிகள் பல.....

இன்று ப்ராஜெக்ட் ஆணி கொஞ்சம் அதிகம் என்பதால் சற்றே தாமதமாக....தாமதத்திற்கு மன்னிக்கவும்.....


இந்த முறை சென்ற பதிவு பாணியில் சில கவிதைகள்.....(கவித கவித....)

"சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்

புலி சேர்ந்து போகிய கல்அளை போல,

ஈன்ற வயிறோ இதுவே;

தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!"

என்ன அருமையான புறநானூற்று பாடல், வீட்டில் இருக்கும் சிறிய தூணை பற்றி கொண்டு ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம், எங்கே உன் மகன் ? என்று கேட்க,

அதற்கு அந்த தாய் சொல்கிறாள்,

"இதோ புலி தங்கி சென்ற கல் குகை போன்று , ஈன்ற வயிறு இங்கே இருக்கிறது அவனை பார்க்க வேண்டும் என்றால் நேரே போர்க்களம் போ, அங்கே தான் அவன் தோன்றுவான் என்கிறாள்....."


என்ன வீரம் வேண்டும் அந்த காவல் பெண்டுக்கு....

இது நான் பன்னிரெண்டாம் வகுப்பில் படித்தது....

இன்று நான் blog எழுத ஆரம்பித்த பின்பு என் அம்மாவிடம் யாராவது நான் எங்கே ? என்று கேட்டால் ...

"சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்

புலி சேர்ந்து போகிய கல்அளை போல,

ஈன்ற வயிறோ இதுவே;

"தோன்றுவன் நெட் சென்டெரில் தானே "

என்று சொல்வாரோ என்று எண்ணினேன்.....என் அம்மா சுலபமாக ஒன்று சொன்னார்,

என்னவாக இருக்கும் என்று சொல்லுங்களேன்......

என் இளங்கலை வகுப்பில் ஒரு செய்யுள் ( செப்பலோசை , நேர் ஆசிரியப்பா என்று என்னமோ சொல்லி)சொந்தமாக எழுத சொன்னார் தமிழ் ஆசிரியர் , கொஞ்ச நேரத்தில் நாக்கு தொங்கி விட்டது.....

அன்று செய்யுள் வடிவில் இருந்த கடின வார்த்தைகள் மற்றும் சற்றே கடின வடிவத்தை உரைநடை மாட்டிற்று , பிறகு புது கவிதைகள் தோன்றின ,பிறகு ஹைக்கூக்கள் ....("சென்றியு அப்படின்னும் ஒன்னு இருக்கு "என்று இருப்பார் சுஜாதா )

புது கவிதைகள் பற்றி பலர் சுவாரஸ்யமாக சொல்லி உள்ளனர்......


"யாப்புடைத்த கவிதை

அணையுடைந்த காவிரி.

யாப்பற்ற கவிதை

இயற்கையெழில் இருக்க

செயற்கையணி எதற்கென்று

உடையுடன் ஒப்பனையும்

நீக்கிவிட்ட கன்னி ..."

ரஜினியின் படம் ஒன்றில் ,

"நமது கதை , புது கவிதை

இலக்கணங்கள் இதற்கு இல்லை ,

நான் உந்தன் பூமாலை "


என்று வரும்....

புது கவிதைகள் , இலக்கணங்கள் இல்லாமல் , வானமே எல்லை என்னும் கோட்பாடு உள்ளவை....

நம் பாரதி மற்றும் வீரமாமுனிவர் இதை ஒரு விதமாக தொடங்கினர் எனலாம்...

ஆங்கிலத்தில் "waste land " என்று நினைக்கிறேன்.... எழுதியவர் T.S .Eliot ,
இந்த புது கவிதைகளுக்கு வித்திட்டார் ......

இதில் இருந்து நமக்கு விளங்குவது , ஒன்றின் எளிய அல்லது குறைந்த(அதாவது சும்மா நச்சுன்னு இருக்கணும் ,நீட்டி முழக்காமல்) வடிவமே அடுத்தது என்பது.

அந்த வகையில் சில ஹைக்கூகள் மற்றும் அதன் இடையே சில அறிமுகங்கள்......

நான் எங்கோ ,என் மிக சிறிய வயதில் படித்தது...(இப்போ கிழவன் இல்லை)
அப்பொழுது எனக்குள் சின்ன தாக்கம் ஏற்படுத்தியதால் இன்று என் நினைவில்....
ஆனால் அதன் பிரம்மாக்கள் பெயர் தெரியவில்லை .....மன்னிக்கவும்......

இங்கே கொடுக்க பட்டவையை எழுதியவர்களின் பெயர்கள் தெரிந்தால் சொல்லவும்.....

இவை ஹைக்கூக்கள் என்று தெளிவாக சொல்வதற்கு இல்லை....



முதலில் அறிமுகம்.....


"ஆண்டின் இறுதியில் என்னை பார்த்து

காலண்டர் கேட்டது

என்னை தவிர வேறு என்ன கிழித்தாய்."


இங்கே வாருங்கள் , கணினி பிரச்சனைகளுக்கு சுலபமாக தீர்வுகள் வழங்கி உள்ளனர்....


"உதிர்ந்த பூக்கள் கீழே

மொட்டுக்கள்

மலராதிர்கள்..."


இலவச கால் களுக்கு (போன்) அதாவது VOIP- Voice Over Internet Protocol மூலம் நீங்கள் இலவசமாக பேசலாம்...

மற்றொன்று.....


பூ வைக்கிறாள் பொட்டும் வைக்கிறாள்

விதவை,

தினமும் தன் கணவன் படத்திற்கு.



இது இந்திய வரி பற்றிய பல சந்தேகங்களை தீர்க்க வல்லது....
பல டிப்ஸ் கொடுத்து உள்ளனர்...
பாருங்கள் ....



சிறு உரசலுக்கே

தீக்குளிப்பா?

தீக்குச்சி.


youtube இல் உள்ள பட காட்சிகளை டவுன்லோட் செய்ய....



அம்மண சிறுவன் கீழே,

வெட்கமின்றி

காற்றில் பறக்கும் கொடி.


டாஸ் விளையாட்டுகளுக்கு,



வானை பார்த்து சிறுநீர் விட்ட சிறுவன்

நிலவை அசைத்தான்

குளத்தில்...


சில டெக் விசயங்களுக்கு....




படங்கள் மற்றும் பல மென்பொருள்களுக்கு....

நன்றி நண்பர்களே.....

கும்மி அப்படின்னா என்ன? நான் சின்ன பையன் கொஞ்சம் சொல்லி தாங்களேன்......

(I'm 16 with 7 yrs of experience)

be cool...
stay cool...









25 comments:

  1. ஹையா நான் தான் பஸ்ட்டு....

    ReplyDelete
  2. // coolzkarthi said...

    ஹையா நான் தான் பஸ்ட்டு....//

    தம்பி தப்பாட்டம் ஆடக்கூடாது...

    வாத்தியார் மீ த பர்ஸ்டு வலைச்சரத்தில் சொல்லக்கூடாது..

    சீனா வாட் இஸ் திஸ். ஐ காண்ட் அக்சப்ட் திஸ்...

    (தம்பி கும்மின்னா என்னன்னு கேட்டியே இதுதான் (ஆ)ரம்பம்...
    இப்படியாக ஆரம்பிக்கப்பட்ட கும்மி, பல பதிவர்கள் சேர்ந்து உன்னை கும்மு கும்முன்னு கும்மினா அதுதான் சரியான கும்மி..)

    ReplyDelete
  3. // Rajeswari said...

    template super kaarthi //

    அய்ய டெம்பேளேட் சூப்பர் அப்படின்னு இங்கச் சொல்லப்பிடாது.. பிடாதுன்னா பிடாதுதான்.. அவர் ப்ளாக் டெம்பிளேட் சூப்பர் அப்படின்னு அவர் ப்ளாக்ல போய்ச் சொல்லணும்...

    (இது ஒரு விதமான கும்மி... பின்னூட்டம் போடுகின்றவர்களை வைத்து அடிக்கும் கும்மி)

    ReplyDelete
  4. கும்மிகள் பலவிதம்
    ஒவ்வொன்றும் ஒருவிதம்..

    ReplyDelete
  5. //
    என்னவாக இருக்கும் என்று சொல்லுங்களேன்......//

    ரொம்ப முக்கியம்.. எல்லார் வீட்டிலேயும் சொவதைத்தான் சொல்லியிருப்பார்கள்..

    எல்லார் வீட்டிலேயும் என்னச் சொல்லுவார்கள்...

    (இது ஒரு விதமான கும்மி... உங்க எழுத்தில் இருந்து ஒரு பகுதியை எடுத்து அடிப்பது..)

    ReplyDelete
  6. // சென்ற பதிவுக்கு பல பின்னூட்டங்கள் போட்டு , நான் நன்றாக எழுதுவது போன்ற மாயையை அல்லது
    பிரம்மையை//

    மாயா, மாயா எல்லாம் சாயா, சாயா... காப்பி, காப்பி...

    இதெல்லாம் ஒரு பிரமையா?

    ReplyDelete
  7. // "ராகவன் அண்ணனும் , ஜமால் நண்பரும்.....அவர்களுக்கு என் நன்றிகள் பல.....//

    என்னா தம்பி.. இதுங்கூட செய்யலன்னா அப்புறம் என்ன அண்ணாத்தங்கோ அப்படி கண்டி திட்ட மாட்ட...

    இதுக்கெல்லாம் ஒரு டாங்ஸ் வேணாங்க..

    ReplyDelete
  8. //
    இன்று ப்ராஜெக்ட் ஆணி கொஞ்சம் அதிகம் என்பதால் சற்றே தாமதமாக....தாமதத்திற்கு மன்னிக்கவும்.....//

    எங்கெங்கு காணினும் ஆணியடா...

    ReplyDelete
  9. // இந்த முறை சென்ற பதிவு பாணியில் சில கவிதைகள்.....(கவித கவித....) //

    கவிதைகளா....

    அய்யோ ஆள விடுங்கடா சாமிங்களா...

    ReplyDelete
  10. // இது நான் பன்னிரெண்டாம் வகுப்பில் படித்தது....//

    இதெல்லாம் வேற ஞாபகம் வச்சு இருக்கீங்களா என்ன...

    ReplyDelete
  11. // என் இளங்கலை வகுப்பில் ஒரு செய்யுள் ( செப்பலோசை , நேர் ஆசிரியப்பா என்று என்னமோ சொல்லி)சொந்தமாக எழுத சொன்னார் தமிழ் ஆசிரியர் , கொஞ்ச நேரத்தில் நாக்கு தொங்கி விட்டது.....//

    ஹா... ஹா... இஃகி, இஃகி...

    ReplyDelete
  12. // இதில் இருந்து நமக்கு விளங்குவது , ஒன்றின் எளிய அல்லது குறைந்த(அதாவது சும்மா நச்சுன்னு இருக்கணும் ,நீட்டி முழக்காமல்) வடிவமே அடுத்தது என்பது. //

    அதாவது சிம்பிளா சொல்லனும்னா, உங்க பதிவு மாதிரி இருக்கணும்

    ReplyDelete
  13. மீதி கும்மி... அப்புறமா வச்சுக்கிறேன்...

    இப்போதைக்கு ஜூட்..

    ReplyDelete
  14. ஆஹா வாங்க ராஜேஸ்வரி அக்கா....

    ReplyDelete
  15. //Rajeswari said...

    template super kaarthi
    //
    ஹா ஹா ஹா நன்றி அக்கா.....

    ReplyDelete
  16. // இராகவன் நைஜிரியா said...

    // coolzkarthi said...

    ஹையா நான் தான் பஸ்ட்டு....//

    தம்பி தப்பாட்டம் ஆடக்கூடாது...

    வாத்தியார் மீ த பர்ஸ்டு வலைச்சரத்தில் சொல்லக்கூடாது..

    சீனா வாட் இஸ் திஸ். ஐ காண்ட் அக்சப்ட் திஸ்...

    (தம்பி கும்மின்னா என்னன்னு கேட்டியே இதுதான் (ஆ)ரம்பம்...
    இப்படியாக ஆரம்பிக்கப்பட்ட கும்மி, பல பதிவர்கள் சேர்ந்து உன்னை கும்மு கும்முன்னு கும்மினா அதுதான் சரியான கும்மி..)
    //

    ஆஹா....இப்படி எல்லாம் வேற இருக்கா.....

    ReplyDelete
  17. // இராகவன் நைஜிரியா said...

    கும்மிகள் பலவிதம்
    ஒவ்வொன்றும் ஒருவிதம்..
    //
    ஹ்ம்ம்...ரவுண்டு கட்டி அடிங்க....

    ReplyDelete
  18. //இராகவன் நைஜிரியா said...

    // Rajeswari said...

    template super kaarthi //

    அய்ய டெம்பேளேட் சூப்பர் அப்படின்னு இங்கச் சொல்லப்பிடாது.. பிடாதுன்னா பிடாதுதான்.. அவர் ப்ளாக் டெம்பிளேட் சூப்பர் அப்படின்னு அவர் ப்ளாக்ல போய்ச் சொல்லணும்...

    (இது ஒரு விதமான கும்மி... பின்னூட்டம் போடுகின்றவர்களை வைத்து அடிக்கும் கும்மி)//

    அதெல்லாம் சொல்ல கூடாது....ஏதோ ரெண்டு பின்னூட்டம் வந்தா சரி...ராஜேஸ்வரி அக்கா கோவிச்சுக்க போறாங்க....

    ReplyDelete
  19. //// "ராகவன் அண்ணனும் , ஜமால் நண்பரும்.....அவர்களுக்கு என் நன்றிகள் பல.....//

    என்னா தம்பி.. இதுங்கூட செய்யலன்னா அப்புறம் என்ன அண்ணாத்தங்கோ அப்படி கண்டி திட்ட மாட்ட...

    இதுக்கெல்லாம் ஒரு டாங்ஸ் வேணாங்க..//

    ஆஹா புல்லரிச்சிடுச்சு அண்ணா....

    ReplyDelete
  20. //
    இராகவன் நைஜிரியா said...

    மீதி கும்மி... அப்புறமா வச்சுக்கிறேன்...

    இப்போதைக்கு ஜூட்..//


    சீக்கிரம் வாங்க அண்ணா...

    ReplyDelete
  21. சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
    யாண்டுளனோ என வினவுதி, என்மகன்
    யாண்டு உளனாயினும் அறியேன் ஓரும்
    புலி சேர்ந்து போகிய கல் அளை போல
    ஈன்ற வயிறோ இதுவே
    தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே

    ReplyDelete
  22. சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
    யாண்டுளனோ என வினவுதி, என்மகன்
    யாண்டு உளனாயினும் அறியேன் ஓரும்
    புலி சேர்ந்து போகிய கல் அளை போல
    ஈன்ற வயிறோ இதுவே
    தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே

    ReplyDelete
  23. மிகவும் அருமையான புறநானூறு பாடல் இதை எழுதியவர் காவற்பெண்டு

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது