07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 21, 2009

திருவல்லிகேணி-பேச்சலரின் சொர்க்க பூமி

இது நான் எழுதியதில் எனக்கு பிடித்த ஒன்று...
"வந்தாரை வாழவைக்கும் சிங்கார பூமி சென்னை" என்றொரு பெயர் உண்டு,அந்த சென்னைக்கு ,அடையாளம் தேடி கொள்ளும் பொருட்டு வரும் எண்ணற்ற இளைஞர்களின் முகவரியாக அன்று முதல் இன்று வரை இருப்பது "triplicane"என்று செல்லம்மாக அழைக்கப்படும் "திருவல்லிகேணி".

வேலை,கல்யாணம் என்று ஆகி சென்னையின் இன்ன பிற இடங்களில் செட்டில் ஆகும் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் பிடித்த இடம் triplicane.
திருவல்லிகேணி ஒவ்வொரு காலையும் செல்வ விநாயகர் கோயிலின் முன் ஒரு ஹாய் வகை உபத்திரவமில்லாத கும்பிடு மூலம் ஆரம்பிக்கும் ,சில இன்று interview ,இன்று எனக்கு பரீட்சை
போன்ற சில வினோத பேச்சலர்களுக்கே உரிய பிரார்த்தனைகளுடன்..எதை சொன்னாலும்,சின்ன சிரிப்புடன்,மறுத்து பேசாத பிள்ளையாரின் முகத்தை பார்த்தது ஏதோ பாதி வேலை முடிந்து விட்டது போன்றதொரு திருப்தி,பின்பு நேரே மோனிஷா மெஸ், அங்கே சில இட்லி மற்றும் தோசையுடன் காலையின் simple breakfast முடியும்,விடுமுறை நாட்கள் எனில் மதியம் காசி விநாயகா மெச்சின் கலந்து கட்டி அடிக்கும் super meals,கலர் கலரான கார்டுகளுடன் ,ஒவ்வொரு கார்டுக்கும் தகுந்த ,வகை வகையான பொரியல் ,,நல்ல பதமான சாதம் ஆஹா அருமை. அந்த உன்னதமான சுவையை எந்த five ஸ்டார் ஹோட்டலிலும் கூட சுவைக்க முடியாது ,மாலை நேரத்தில் ,அப்படியே மெரினாவின் ஓரம் நடக்கும் பொது ,காதோடு ரகசியம் பேசி ,உறவாடிவிட்டு ,தழுவி போகும் கடல் காற்றும் ,காதலியின் மடியில் உலகம் மறந்து கிடக்கும் காதலனை பார்த்து ,ஒரு சின்ன பெருமூச்சு விட்டுவிட்டு,சூரியனின் குட் நைட் ஐ ஏற்று விட்டு,முருகன் இட்லி கடையில்,இட்லியின் பல்வேறு பரிணாமங்களையும் பார்த்து விட்டு(ஹி ஹி பார்க்க மட்டும்,எல்லாம் சாப்பிட்டால் கட்டு படி ஆகாது)வழக்கமான இரண்டு மல்லி பூ இட்லியுடன் அந்த கொதி சாம்பார்,ஆஹா அது சுகானுபவம், அல்லது வழக்கமான மோனிஷா மெஸ் போய் ,நல்ல full கட்டு கட்டிவிட்டு ,ஒரு புள்ளி வாழை,ஒரு ஆவின் பாலோடு,பிள்ளையாரிடம் இதோ வந்து விட்டேன் என்பதோடு பொழுது முடியும்,நண்பர்களின் உடன் அடிக்கும் லூட்டிகளும்,அருகே இருக்கும் மொக்கை தியேட்டரில் மொக்கை படமும் நண்பர்களுடன் காணும் போது நன்றாகத்தான் இருந்தது,திருவல்லிகேணி தன்னிடம் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் ஒரு ஆச்சரியமும்,சுவாரசியமும் கொண்டிருந்தது,

ஒரு புறம் முழவதும் பேச்சளர்களின் கும்மாளம் என்றால் திருவல்லிகேனியின் இன்னொரு முகம் அப்படியே எதிர்மாறானது ,அங்கே "bachelors not allowed"

இரு வேறு துருவங்களாக ,அங்கே ஐயங்கார்களும் பார்த்தசாரதி கோயிலும்,சனிக்கிழமைகளில் அங்கே கூடும் கூட்டமும்,என்னதான் கூட்டம் எனக்கு பிடிக்காது என்றாலும்,அங்கே நிற்பதில் எனக்கு ஒரு இனம் புரியாத சந்தோஷம்,என்றைக்குமே பெருமாள் பிரசாதம் பிரசித்தமானது,

எல்லாம் சொல்லிவிட்டு சீட்டு கட்டு அறைகளை பற்றி சொல்லாவிட்டால்?திருவல்லிகேணி கோபித்துவிடும்,அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற அறைகளுக்கு திருவல்லிகேணியில் பஞ்சம் இல்லை,ஒருவர் படுக்க கூடிய இடத்தில் இருவர் என அமர்க்கள படுத்தும்,சில சமயங்களில் வரும் நண்பனின் தூரத்து உறவினர்,நண்பன் என்று வருவோருக்கு இடம் தரும் மனம் அன்று(?)இருந்தது,சற்றே பணம் இருந்தால் attached bathroom ரூம்கள் ....எல்லோரும் உனக்கு பிடித்த இடம் எது என்று கேட்டால் அமெரிக்காவோ,ஆப்ரிக்காவோ ,ஆட்டுகுட்டியோ என்று சொன்னால் ,எனக்கு பிடித்தது தன்னுள் எண்ணற்றவர்களின் ரகசியங்களையும்,சலிக்காத ஆச்சர்யத்தையும் வைத்திருக்கும் சொர்க்க பூமி,
திருவல்லிகேணி....தான்..



கல்யாணமாகி மனைவியுடன் ,திருவல்லிகேணி வரும் ஆண்களின் முகத்தில்,ஏதோ ஒன்றை இழந்து விட்ட சோகம் அப்பட்டமாக தெரியும்,
அது தான் திருவல்லிகேணி...
"The Paradise of Bachelors"

(இன்னும் அம்பாள் மெஸ் , புத்தக கடைகள் )

நன்றி நண்பர்களே....

Be Cool...
Stay Cool...

13 comments:

  1. நான்தான் முதல் ஆளு! படிச்சிட்டு வர்றேன்!

    ReplyDelete
  2. //என்னதான் கூட்டம் எனக்கு பிடிக்காது என்றாலும்,அங்கே நிற்பதில் எனக்கு ஒரு இனம் புரியாத சந்தோஷம்,என்றைக்குமே பெருமாள் பிரசாதம் பிரசித்தமானது,//

    அது மட்டும்தானா?

    ReplyDelete
  3. வாங்க குடந்தை அன்புமணி சார்...

    ReplyDelete
  4. குடந்தைஅன்புமணி said...

    //என்னதான் கூட்டம் எனக்கு பிடிக்காது என்றாலும்,அங்கே நிற்பதில் எனக்கு ஒரு இனம் புரியாத சந்தோஷம்,என்றைக்குமே பெருமாள் பிரசாதம் பிரசித்தமானது,//

    அது மட்டும்தானா?//

    அதெல்லாம் Behind the scenes sir...

    ReplyDelete
  5. எனக்கும் பல நண்பர்கள் திருவல்லிக்கேணியில் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  6. அடடே ....இப்ப நான் ஆதம்பாக்கம் NGO காலனி வந்துவிட்டேன் சார்....

    ReplyDelete
  7. //coolzkarthi said...
    அடடே ....இப்ப நான் ஆதம்பாக்கம் NGO காலனி வந்துவிட்டேன் சார்...//


    நான் தற்போது தாம்பரத்தில்தான் இருக்கிறேன்.

    ReplyDelete
  8. We missed a lot!
    Where ever we are now , but the thoughts still belongs to ???
    Good representation.
    (TAMIL FONT PROBLEM)

    ReplyDelete
  9. நல்லா சொன்னீங்க‌

    திருவல்லிக்கேணி எத்தனையோ கதைகள் சொல்லும் காலம் காலமாக‌, இன்றும் அது தொடருது

    ReplyDelete
  10. வாங்க அசோசியேட் & அபுஅஃப்ஸர்

    ReplyDelete
  11. திருவல்லிக்கேணி, இவ்வளவு நல்ல மெஸ்களுக்குப் பிரசித்தமா.

    எனக்கு ராகவேந்திரர்,பார்த்தசாரதியும் கோவில்களின் பூக்கடைகளும் பிடிக்கும்.:)

    ReplyDelete
  12. வாங்க வல்லிசிம்ஹன் ...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது