07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 29, 2009

இசையமைப்பாளர் வி.குமாருக்கும் இந்த பதிவுக்கும் தொடர்பென்ன?

1960களில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக இருந்தவர் வி.குமார். கே.பாலச்சந்தர் அவர்களின் பல படங்களுக்கு அவரது ஆஸ்தான இசையமைப்பாளராக விளங்கியவர் இவர். மேஜர் சந்திரகாந்த், அரங்கேற்றம், எதிர்நீச்சல், நீர்க்குமிழி, இரு கோடுகள் முதலிய பேர் பெற்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இவர். கேபி- வி.குமார் கூட்டணியில் வெளிவந்த ஒரு திரைப்படம் "வெள்ளி விழா". இத்திரைப்படத்தில் "காதோடு தான் நான் பாடுவேன்" என்று மெல்லிய husky குரலில் திரையில் ஜெயந்திக்காகப் பாடியிருப்பார் எல்.ஆர்.ஈஸ்வரி. ஆனால் எல்.ஆர்.ஈஸ்வரி திரையில் பாடியுள்ள பெரும்பாலான பாடல்கள் அனைத்தும் துள்ளலான பாடல்கள் தான் என அனைவரும் அறிவார்கள். அதே படத்தில் பி.சுசீலா அவர்கள் வாணிஸ்ரீக்காகப் பாடிய ஒரு பாடல் "நான் சத்தம் போட்டுத் தான் பாடுவேன்". எப்போதும் இனிமையான மெலடி பாடல்களே பாடும் பி.சுசீலா அவர்கள் வித்தியாசமாக சத்தம் போட்டு பாடியிருப்பார். மேற்கண்ட தகவல்களைப் பல வருடங்களுக்கு முன் வி.குமார் அவர்களே ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது தெரிவித்திருந்தார். ஒரு குறிப்பிட்ட விதத்தில் ஒரு குறிப்பிட்ட ஸ்டைலில் பாடிக் கொண்டிருக்கும் ஒரு திறம் வாய்ந்த பாடகர், இன்னுமொரு விதத்தில் பாட வேண்டும் என்றால் அவரால் பாட முடியாது என்பதில்லை. அவர்கள் விருப்பப்பட்டு அவர்களுடைய ஸ்டைலத் தேர்வு செய்து கொள்கிறார்கள்.

நம் தமிழ் வலையுலகத்திலும் அத்தகைய ஒரு சூழல் நிலவுகிறது. சிரிப்பு பதிவர்கள், கும்மி பதிவர்கள், ஆன்மீகப் பதிவர்கள், பொதுவான பதிவர்கள் என்று ஏதாவது ஒரு வகைக்குள் ஒரு குறிப்பிட்ட பதிவரை வகைப்படுத்தலாம். ஆனால் அவர் வகைப்படுத்தப்பட்டுள்ள பிரிவைத் தாண்டியும் அவர் சில பதிவுகளை எழுதியிருப்பார். அதை படிக்கும் போது மிகவும் காண்ட்ராஸ்டிங்காக இருக்கும்.

புகைப்படக்கலை, வெண்பா எழுதுவது இவற்றிற்காகப் பேசப் பெறும் நம்ம ஜீவ்ஸ் அண்ணாச்சியின் பின்நவீனத்துவ புனைவு பதிவு காமெடி ஒன்னு.
பாவமன்னிப்பு - கடைசி பாகம்

இலக்கியம், கவிதைகள், துபாய் அனுபவங்கள் பற்றிய பதிவுகளுக்காக அறியப் பெறும் தம்பி கதிரின் ஒரு மெகா காமெடி பதிவு.
தண்டவாளத்தில ஒண்ணுக்கு போனா தப்பா?

கலில் ஜிப்ரன், இளையராஜா பாடல்கள், கவிதைகள் என்று பல பிரிவுகளில் எழுதும் கொங்கு ராசாவுக்கு இயற்கையிலேயே ஒரு subtle ஹியுமர் சென்ஸ் அதிகம். கோயில் உற்சவத்தைப் பற்றிய செய்தி படிச்சதும் இவருக்கு என்ன தோணிருக்குன்னு பாருங்க.
காரமடை ரங்கநாதன்

காமெடின்னா டுபுக்கு, டுபுக்குன்னா காமெடிங்கிற அளவுக்கு காமெடியில பின்னி பெடலெடுக்குற டுபுக்கு அண்ணாத்தையின் படு சீரியஸான முகத்தைப் பாருங்கள் இந்த சிறுகதையில். தேன்கூடு சிறுகதை போட்டியில் 'மரணம்' என்ற தலைப்பில் இவர் எழுதியது.
சாமியாண்டி

பதிவுகளுக்கு நடுவுல காண்ட்ராஸ்ட் காட்டும் பதிவர்களுக்கு இடையில் ஒவ்வொரு பதிவுலயும் காண்ட்ராஸ்ட் காட்டுறவங்க கவிதா. "அவர்கள்" படத்துல கமல் கதாபாத்திரம் ஒரு பொம்மையை வைத்து கொண்டு பேசுவார். அக்கலையின் பெயர் Ventriloquism. வலையுலகில் அத்தகைய வெண்ட்ரிலாகுவிஸம் முயற்சி தான் இவங்களோட வலைப்பதிவு. படிக்கிறவங்களை "அவர்கள்" படத்து ஹீரோயின் சுஜாதா மாதிரி ஆக்கிவச்சிடுவாங்க. இவங்க படு சீரியஸா எழுத, இவங்களோட இன்னொரு பாதியான அணில்குட்டி அனிதா காமெடியா கலாய்ச்சி எழுதும்.
மார்பகங்கள் இல்லா பெண்ணின் மன உளைச்சல்...

வெண்பா எழுதுதல், மாதாந்திர குறுக்கெழுத்து புதிர் என்று பட்டையைக் கிளப்பி வரும் இலவசக் கொத்தனார் சரக்கு மேட்டர் பத்தி ரெசிப்பியோட சொல்லிருக்காரு பாருங்க.
நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி

நாட்குறிப்புகள், பாடல்கள் பற்றிய கருத்துகள், ஆன்மீகக் கருத்துகள் எனப் பல பிரிவுகளில் எழுதும் மகரந்தம் ராகவன் அண்ணாச்சி எழுதுன முழுக்க முழுக்க கிராமிய வழக்கில் எழுதப்பட்ட ஒரு நகைச்சுவை கதை. இப்பதிவில் நாமக்கல் சிபி சொல்லியிருப்பது போல "இத எழுதினது சாப்ட்வேர் இஞ்சினயர்னா யாரும் நம்ப மாட்டாங்க..."
சீனியம்மா - வடக்க சூலம்

இது தான் வலைச்சரம் ஆசிரியராக நான் எழுதும் கடைசிப் பதிவு. நான் வலைச்சர ஆசிரியராக இருந்த இந்த ஒரு வாரத்தில் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய சில பதிவுகளை அவர்கள் வலைச்சர ஆசிரியர்களாக இருந்த போது இணைத்து அறிமுகப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொடுத்த வேலையை ஒழுங்காக செய்தேனா இல்லையா என தெரியவில்லை. இவ்வாய்ப்பை எனக்கு வழங்கிய சீனா ஐயாவுக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். வணக்கம்.

5 comments:

  1. சூப்பர் கைப்ஸ்! எல்லாம் அரும்மையான தொகுப்புகள்! மிக்க நல்லா இரூந்துச்சு உங்க வலைச்சரம்!!சூப்பர்.தம்பி தண்டவாலத்திலே உச்சா போனதை மறக்க முடியுமா? அது போல ரஸ்ணா பதிவும் கூட,

    சிபியீட சீனியம்மாவும் சூப்பரோ சூப்பர் தான்!

    ReplyDelete
  2. //"அவர்கள்" படத்துல கமல் கதாபாத்திரம் ஒரு பொம்மையை வைத்து கொண்டு பேசுவார். அக்கலையின் பெயர் Ventriloquism. வலையுலகில் அத்தகைய வெண்ட்ரிலாகுவிஸம் முயற்சி தான் இவங்களோட வலைப்பதிவு. //

    கைப்ஸ் நன்றி...!! :)

    எல்லோரும் நீங்க அந்நியனா ன்னு கேட்கும்போது நீங்கள் மட்டும் Ventriloquism முயற்சின்னு சொல்லி இருக்கீங்க.. :)))) நல்ல புரிதல்.. :)

    ReplyDelete
  3. கைப்ஸ் அண்ணா...மிக அருமை! ஜிரா-வுடையது படிச்சதுன்னாலும் இன்னொருமுறை படிக்க வாய்ப்பு கிடைச்சது உங்களாலே..சூப்பர் எல்லா சுட்டிகளும்! படிக்க நல்ல சுட்டைகளை தந்தமைக்கு நன்றிகள்..உங்க வேலைப்பளுவின் நடுவிலும்!!

    ReplyDelete
  4. நல்லா இருக்கு கைப்புள்ள பதிவு.
    வாழ்த்துக்கள்.

    குமாரின் இசை எனக்கும் ரொம்ப பிடிக்கும்.நல்ல திறமை உள்ளவர்.
    ”என்னோடு என்னன்ன ரகசியம்”
    சூப்பர் பாடல்.

    //காதோடு தான் நான் பாடுவேன்" என்று மெல்லிய husky குரலில்//

    இந்த பாடல் ஒரு இந்திப் பாட்டை
    "சுட்டது”.”மருனாயகாம்”

    அடுத்து “மதனோட்சவம் ரதியோடுதான்” என்ற பாடல் படம்: சதுரங்கம்-1978.இது “மானஹோ தும்”
    இந்தி என்ற பாடலை சுட்டது.

    இது மாதிரி சுடுவது தயாரிப்பாளரின்
    நிர்பந்தம் கூட இருக்கலாம்.

    ReplyDelete
  5. நன்றி அபிஅப்பா, முல்லை, கவிதா மற்றும் ரவிசங்கர்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது