07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 30, 2009

காலமென்றே யொருநினைவுங் காட்சியென்றே பல நினைவும்...

நினைப்பூ

பல மனிதர்கள் தொலைந்து போகாமல் இருப்பதே நினைவுகள் தரும் உயிர்ப்பு தான். நினைவுகள் காலத்தைக் கடத்தும் வலிமை உடையவை. சில நினைவுகளை நாம் போற்றி பாதுகாப்போம். அது பின்னால மகிழ்வதற்காகவோ அல்லது திரும்ப கிடைக்காததாகவோ இருக்கலாம். சில நினைவுகளைப் பின்னாளில் தேடி மகிழ்வோம்(அ) வருந்துவோம் என்று அறியாமலேயே மனப்பெட்டகத்தில் பூட்டி வைத்திருப்போம். சில நினைவுகள் மனதில் இனிமையைக் கொண்டுவரும்; சில நினைவுகள் மனதில் வலியைக் கொண்டு வரும்.

நான் சென்னையில் முதலில் வேலைக்கு செல்கையில் மகளிர் விடுதியில் தங்கி இருந்தேன். நல்ல தோழியர், சண்டைக் கோழிகள் ,முறைக்கும் வார்டன், சூடாக மட்டுமே விழுங்க முடிந்த சாப்பாடு என்று எல்லாம் உண்டு. ஒவ்வொரு தோழி செல்லும்பொழுதும் நாம் எப்பொழுது செல்வோம் என்று மனம் ஏங்கும். விலகி வந்த பொழுது கூட மீண்டும் வந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழவில்லை. ஆனால் இப்பொழுது அந்த விடுதியைக் கடந்து சென்றால் சின்ன ஏக்கம் நெஞ்சைத் தொடும்; சண்டைக் கோழிகள் ,முறைக்கும் வார்டன், சூடாக மட்டுமே விழுங்க முடிந்த சாப்பாடு என்று எல்லாமே உதட்டில் புன்னகை கொண்டு வரும். தோழியருடன் இருந்த அழகான நினைவுகள், மீண்டும் உள்ளே சென்று அந்த நொடிகளைக் கொண்டு வந்துவிட மாட்டோமா என ஏங்கச் செய்யும்.

அழகான நினைவுகளைக் கிளர்ந்தெழச் செய்த சில பதிவுகள் இன்று:

"ஒவ்வொரு வாசத்துக்கும் ஒரு நினைவுண்டு!" என்ற மாதவராஜ் அவர்களின் பதிவு வாசனையில் உறங்கிக் கொண்டிருக்கும் நினைவுகளைத் தேட வைக்கிறது.

"மழை" அமிர்தவர்ஷினி அம்மா நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் பொழுதெல்லாம் நாமும் அந்த நினைவுகளுடன் ஒன்றிவிடுவோம். இவரது "பணத்தின் ருசி" என்ற பதிவில் நினைவுகளைப் பற்றி அழகாகக் கூறுகிறார். நமக்குள்ளும் இருக்கின்றன " சின்னதாய் செல்லமாய் சில நினைவுகள்"

"உங்கள் வீட்டு முற்றம், கூடம் - இரவு நேரத்தில் இங்கு அமர்ந்து வானத்தை ரசித்திருக்கிறீர்களா?" என்று தொடங்கும் ஊர்சுற்றியின் "நகரத்தில் நட்சத்திரங்கள் குறைவாகவே மின்னுகின்றன" என்ற பதிவு வானத்து நட்சத்திரங்களை மீண்டும் கண்டு இரசிக்கத் தூண்டுகிறது.


காணாமல் போன கடிதங்களைப் பற்றிய நினைவுகளைத் தட்டி எழுப்புகிறது கார்த்திகைப்பாண்டியனின் கடிதங்கள் என்ற கவிதை.

கையில் மோதிரம், கடிகாரம் மற்றும் பல வடிவங்களில் கேட்டு கையில் வைத்து சப்பிய சவ்வு மிட்டாய் "மிட்டாய்க்காரன்" பதிவில் அழகாக நினைவுபடுத்துகிறார் பூங்குழலி. ஏலக்காய் டீ கேள்விப்பட்டுள்ளோம்... தேங்காய் டீ? இவரது பதிவுகளில் கவிதைகள், மொழியாக்கக் கவிதைகளுடன் ஆலடிப்பட்டி நினைவுகளும் அழகாக மலர்ந்துள்ளன.

ஒத்தையா இரட்டையா என்று புளியமுத்து வைத்து விளையாடிய முத்தான புளியமரத்து நினைவுகளைத் தூண்டியது ஞானசேகரனின் "என்மீது கல்லெறிந்தவர்கள்-புளியமரம்".

விடுபட்ட விளையாட்டுக்களை சற்றே நகைச்சுவையுடன் நினைவுறுத்தும் நானானி அவர்களின் இந்த பதிவு.

மனப்பூ
"வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்க்கு
உள்ளத்தனையது உயர்வு"



மனம் தான் நம்மை செலுத்தும் சக்தி. "நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால், வலிமை படைத்தவன் ஆவாய்" என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

மனம் என்னும் பூவை மகிழ்ச்சியாக மலர வைத்தால் தான் நிம்மதி என்ற வாசம் வீசும். மனிதன் தேடி அலைவது இந்த நிம்மதியைத் தானே? இந்த நிம்மதி ஒவ்வொருவர் மனதுள்ளும் இருக்கின்றது என்று அறிந்து, உள்ளம் தெளிவாக இருந்தால் உலகமே அமைதிப் பூங்காவாக மாறாதா?

அறிவே தெய்வம் என்றார் பாரதியார். "நான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே" என்ற பதிவில் பிரச்னைகளை அணுகச் சொல்லும் புதிய கோணம் பாருங்கள்.

அ.மு.செய்யதுவின் "யார் சொன்னது ந‌ம்மைக் காதலிக்க யாருமில்லையென்று !!!!" என்ற பதிவில்" வாழ்வின் புதையல்களில் சிக்கி கிடக்கும் ஆயிரமாயிரம் அற்புத கணங்களைத் தோண்டியெடுத்து, தொல்பொருள் துறைக்கு ஒரு நகலையும்,தடயவியல் துறைக்கு ஒரு நகலையும் அனுப்பி வைத்தோமேயானால், கிடைக்கும் நம்மை காதலித்தவர்களின் எண்ணிக்கையை கொண்டு ஒரு தேசத்தையே உருவாக்கலாம்" என்று கூறி வாழ்க்கையைக் காதலிக்க வைக்கிறார்.

"உள்ளக் கமலம்" என்ற பதிவில் மணிமேகலை 12 நற்பண்புகள் பற்றி கூறுகிறார். எல்லோர் உள்ளமும் கமலமானால் உலகில் துன்பம் சருகாக உதிர்ந்து விடாதோ?

மீண்டும் சந்திப்போம்
மேலும் வாசிக்க...

Monday, June 29, 2009

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே!!!

தமிழ்ப்பூ

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு"


க‌ல் தோன்றா, ம‌ண் தோன்றா கால‌த்துக்கும் முற்ப‌ட்ட‌து என்று க‌விக‌ளால் சிற‌ப்பித்துப் பாட‌ப்ப‌ட்டு, இன்று உல‌க‌ளாவிய‌ புக‌ழோடு உல‌விவ‌ரும் ந‌ம‌து த‌மிழ் மொழி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ளது தமிழ் மொழி. அன்னைத் தமிழுக்கு என் வணக்கம் கூறி முதல் பதிவைத் தொடங்குகிறேன்.

தமிழ் இனிமையான மொழி. பொதுவாகத் தமிழ் ஆசிரியர்கள் இனிமையாகப் பாடம் எடுப்பர். எனக்கு தமிழ்ப்பாடம் மிக விருப்பம். தமிழ் ஆசிரியை ஆக வேண்டும் என்பது பள்ளி வாழ்க்கை கனவு. பள்ளி வாழ்வு முடிந்த பின் தமிழின் சுவையை புத்தக வாசிப்பின் மூலம் மட்டுமே பெற முடிந்தது. இன்று வலையுலகம் விரிந்து எல்லா துறையிலும் நம் தேடலைச் சுருக்கிவிட்டது. தமிழ் குறித்து பல தகவல்கள் வலைப்பூக்களில் காண்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழின் இனிமையை நமக்கு பகிரும் சில வலைப்பூக்கள் :

"வேர்களைத்தேடி" என்ற வலைப்பூவில் முனைவர் இரா.குணசீலன் அவர்கள் தமிழின் இனிமை கூறும் பதிவுகள் பல பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் மோகத்தில தள்ளாடும் வேளையில் , "விளையாட்டு என்பது பொழுது போக்கமட்டும் பயன்படுவதில்லை மாறாக உடலையும், மனதையும் நலம் பெறச் செய்வது என்று " பழந்தமிழர் விளையாட்டுக்களை நமக்கு நினைவுறுத்துகிறார். என் பெண்களுக்குப் பிடித்தது "பிசி நொடி விளையாட்டு". மேலும் தொல்காப்பியம், ஆற்றுப்படை, நற்றிணை, குறிஞ்சிப்பாட்டு, குறுந்தொகை, புறாநானூறு என்று தமிழ்த்தேனை இவ்வலைப்பூவில் பருகலாம்.

"வெண்பா எழுதலாம் வாங்க" என்று அழைக்கிறார் "அகரம். அமுதா". பள்ளி காலத்தில் இராகத்துடன் பாடி கற்ற "நேர் நேர் தேமா.." , என்ற "விளாங்காய்ச்சீர்" பற்றி காணலாம். மேலும் அணி இலக்கணத்தைப் பற்றி இவ்வலைப்பூவில் காணலாம். இங்கு இலக்கணம் நன்கு கற்று ஒரு வெண்பா எழுத வேண்டும் என்பது என் விருப்பம்.

திகழ்மிளிரின் "தமிழ்" தமிழின் சுவையை நமக்கு உணர்த்தும் பல தகவல்கள் உள்ள வலைப்பூ. தாம் படித்து துய்த்த தமிழ்ச் சுவையை அவர் இங்கு பகிர்கிறார். "இனிப்பான கற்கண்டிலுள்ள கசப்பான உண்மை" தெரிந்து கொள்ளுங்கள். இது போன்ற பல சொல்லாராய்ச்சிகளை இவரது வலைப்பூவில் காணலாம்.

"க=1, உ=2, எ=7, அ=8" . என்ன என்று யோசிக்கிறீர்களா? தமிழ் எண்கள் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவைக் காணுங்கள்.

வாசிப்பூ

"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு"


வாசிப்பு இல்லா வாழ்க்கை சன்னல் இல்லா வீடு போல் இருண்டு கிடக்கும். உலகில் நடக்கும் நன்மைகளும் தீமைகளும் வாசிப்பின் மூலமே அறிய முடிகிறது. வண்டு பூக்களைத் தேடி தேன் கொள்வது போல் சிலர் நல்ல நூல்களை எப்படியோ தேடிப்படிக்கின்றனர். சிலருக்கு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.

எனக்கு வாசிப்பு வீட்டின் அருகில் திறக்கப்பட்ட நூலகத்தாலும் அதில் உறுப்பினராக்கிய அப்பாவாலும் நாவல்கள் வாசித்த அம்மாவாலும் அறிமுகம் ஆனது. அம்மாவைப் போல் லஷ்மி, இந்துமதி, சிவசங்கரி என்று படித்த எனக்கு பொன்னியின் செல்வன் மீது ஆர்வம் வந்தது தோழி ஒருத்தி கல்கியின் தொடர்கதையைப் படித்துக் கூறிய பொழுது தான்.

அதன் பின் ஐந்து பாகங்களும் நான் நூலகத்தில் இருந்து அடுத்து ஐந்து நாட்களில் முடித்துவிட்டேன். என் வாசிப்பும் விரிவடையத் தொடங்கியது. மெல்ல மெல்ல பல வகை எழுத்துக்கள் எனக்கு அறிமுகமாகின. தோழியர் மூலம் ஆங்கில நாவல்களும் என் வாசிப்பை விரிவுபடுத்தின. நல்ல புத்தகங்களை அறிந்து கொள்ள புத்தக விமர்சனங்கள் மிகவும் உதவுகின்றன.

கிருஷ்ணப்பிரபுவின் "நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்" என்ற வலைப்பூ, புத்தகங்கள் பற்றிய விமர்சனத்துடன் நூல்/ஆசிரியருடன் தொடர்புள்ள பல சுட்டிகளும் இணைத்து நம் வாசித்தலை விரிவு படுத்துகிறது

புத்தக விமர்சனங்களுக்கு இன்னும் சில வலைப்பூக்கள் :
"யாழிசை ஓர் இலக்கிய பயணம்"
"புத்தகம்"
"நூல்நயம்"

மீண்டும் சந்திப்போம்
மேலும் வாசிக்க...

வலைச்சர வணக்கம்!!!

அனைவருக்கும் வணக்கம்!!! வலைச்சரம் வழியாக பல அருமையான பதிவுகள் எனக்கு அறிமுகம் ஆகி உள்ளன. வலைச்சரம் தொடுக்க அழைத்து ஊக்கமளித்த சீனா அய்யா அவர்களுக்கும் வலைச்சர குழுவினருக்கும் எனது நன்றிகள். என்னைப் பற்றிய சிறு அறிமுகத்துடன் எனது பணியைத் தொடங்குகிறேன்.

மகிழ்ச்சியாகவோ வருத்தமாகவோ இருக்கும் பொழுது கையில் கிடைக்கும் காகிதத்தில் கிறுக்கி கவிதை/கட்டுரை என்பேன். அதையும் என் தோழியர் படித்து நன்றாக எழுதுவதாகத் தந்த ஊக்கம் தான் என் வலைப்பூவிற்கு முதல் படி. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். முல்லையின் "சித்திரக்கூடம்" கண்டு மகிழ்ந்து, அவர் உதவியோடு எனது "நட்சத்திரங்களை" பத்திரமாக மின்னச் செய்யவே "என் வானம்" உருவானது. "நட்சத்திரங்கள்", இன்றும் என்றும் எனக்குப் பிடித்த எனது பதிவு. இன்று வலை வழியாக அறிமுகமான பதிவர்கள் பலரும் கொடுக்கும் ஊக்கமே என் வலைப்பூவைத் தொடர உறுதுணையாக இருக்கின்றது; வலைச்சரம் தொடுக்கவும் ஊக்கமளித்துள்ளது. அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

என் பதிவுகளில் சற்றே வித்யாசமாக எனக்கு தோன்றிய பதிவுகள், என் குழந்தைகளிடம் நான் கற்றுக் கொண்டவை பற்றியது:
கற்றுக் கொடுங்கள், கற்றுக் கொள்ளுங்கள் I
கற்றுக் கொடுங்கள், கற்றுக் கொள்ளுங்கள் II

நல்ல பின்னூட்டங்கள் வந்த கவிதைகள் சில :
வெற்று எண்ணங்கள்
ஒரு திண்ணையின் கதை
மின்சாரமில்லா ஒரு பொழுதில்
மங்கையராய் பிறப்பதற்கே
என் பெண் வளர்கிறாள்
வாழ்க்கை

மழலை இன்பம் துய்த்து எழுதிய இக்கவிதைகளும் எனக்கு மிகவும் பிடித்தவை:
மழலை இன்பம்
மழலை சிரிப்பு


இனி இவ்வாரம் எனக்குப் பிடித்த பதிவுகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
நன்றி.
மேலும் வாசிக்க...

Sunday, June 28, 2009

வழி அனுப்புதலும் வரவேற்றலும்

அன்பின் சக பதிவர்களே

கடந்த ஒரு வார காலமாக செல்வி ஸ்ரீமதி வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று - பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்து வைத்து - அவர்களின் அருமையான இடுகைகளையும் சுட்டிக்காட்டி, அவசர வேலை நிமித்தம் விடை பெறுகிறார். அவருக்கும் வருகிற ஜூலைத் திங்கள் 12ம் நாள் திருமணம் நடை பெற இருக்கிறது. அவரையும் பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ வலைச்சரம் சார்பினில் வாழ்த்தி விடை அளிக்கிறோம்.

நாளை 29ம் நாள் துவங்கும் வாரத்தினிற்கு வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க வருகிறார் சகோதரி அமுதா. இவர் என் வானம் என்ற பதிவினில் கலக்கி வருகிறார். செல்ல மகள் நந்தினிக்கு ஒரு பதிவு வைத்திருக்க்கிறார். பல குழுமப் பதிவுகளிலும் எழுதி வருகிறார். கவிதைகள் எழுதிக் கலக்குகிறார்.

ஆசிரியர் பொறுப்பேற்க வருக வருக என வரவேற்கிறோம்.

சீனா
மேலும் வாசிக்க...

Friday, June 26, 2009

நன்றி நவிலல்...

நானும் இங்க இருக்கேன்னு ஏதோ பதிவுகள் போட்டுட்டு இருந்தேன். என்னையும் வலைச்சரம் ஆசிரியராக்கி நானும் என்னைப் போல் பலரும் ஊக்கம் பெற உதவிய சீனா அண்ணாவிற்கு நன்றி.

போடுவது படு மொக்கையாக இருந்தாலும், சின்னப் பொண்ணு பாவம் மனசு வெறுத்து போயிடக்கூடாதுன்னு பின்னூட்டமிட்டு மகிழ்வித்த எல்லா அண்ணா மற்றும் அக்காக்களுக்கும் நன்றி.

புதிய பலப் பதிவர்களை அறிமுகப்படுத்தனும்ன்னு நினைத்தாலும் கொஞ்சம் வேலை பளுக் காரணமாக சரிவர செய்தேனா எனத் தெரியவில்லை. மன்னிக்கவும்.

மீண்டுமொருமுறை நன்றி கூறி விடை பெறுகிறேன். நன்றி.!
மேலும் வாசிக்க...

Thursday, June 25, 2009

கொஞ்சம் கவிதைகள்..கொஞ்சல் கவிதைகள்..

வலையுலகத்தில் தாராளமாக கவிதைப் போட்டி வைக்கலாம் அவ்வளவு கவிஞர்கள் மலிந்துக்கிடக்கின்றனர். :-)

நான் பேசறதெல்லாம் தமிழே இல்ல. இன்னும் கொஞ்சம் நான் நல்லா பேசனும் எழுதனும்ன்னு என்னை நினைக்க வைத்தவர். கொஞ்சும் தமிழில் அழகான பலக்கவிதைகள் பல லேபிளில் எழுதிருக்கார் அத்திவெட்டி ஜோதிபாரதி அண்ணா . அவற்றில் சில புதுக்கவிதைகள் மற்றும் சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு.

அழகான, மென்மையான கண்களை உருத்தாத ஒரு இனிமையான வலைத்தளத்துக்கு சொந்தக்காரர் இவர். தளத்தைப் போலவே மென்மையான கவிதைகள் பல படைத்து மனம் கவர்ந்தவர். இனியவள் புனிதா. இவரின் கவிதைகள் ரசிக்க.

இவரும் அழகான வலைத்தளத்துக்கு சொந்தக்காரர் மிக மிக அழகாக கவிதைகள் படைத்துவிட்டு ஏனோ Close your eyes-ன்னு சொல்றார். ஒருவேளை தேவதை மட்டும் தான் தன் கவிதைய படிக்கனும்ன்னு நினைச்சார் போல. ;-)) இவரின் தேவதைக் கவிதைகள்.

எனக்குத் தெரிந்து இவர் ஒருவர் தான் பிரிவையும் நேசிப்பவர். அழகான கவிதைகள் எழுதிவருகிறார். இன்னும் எழுத வாழ்த்துவோம்.

இன்றையக் கடமையை ஓரளவிற்கு செய்துவிட்டதாய் எண்ணுகிறேன். இன்னும் பல அறிமுகங்களுடன் நாளை சந்திக்கிறேன். நன்றி. :-)
மேலும் வாசிக்க...

Wednesday, June 24, 2009

கொஞ்சம் கவி உங்களுக்காக...

கவிதைகளும், கவிஞர்களும் பத்தி சொல்லனும்னா சொல்லிகிட்டே போகலாம். அந்த வகையில் இன்னைக்கும் கவிஞர்கள் மற்றும் அவர்களின் கவிதைகள் பத்தி தான் சொல்ல போறேன்.

இவரும் உங்களுக்குத் தெரிந்தவர் தான் ஜி3 . ரொம்ப நல்லா கவிதை எழுதினாலும் கடைய ரொம்ப நாள் மூடியே வெக்கிறாங்க.

மழை பெயருக்கு ஏற்ற மாதிரியே ரொம்ப குளிர்ச்சியான கவிதைகள் தர இவங்க ரசனையான அம்மாவும் கூட.. இவங்க போடற அமித்து அப்டேட்ஸ் என்னோட ஃபேவரிட் லிஸ்ட்ல எப்பவும் உண்டு.

அடுத்தது இவர் கவிதை எதுவும் எழுதல இருந்தாலும் எனக்கு பிடிச்ச பத்தி எழுத்தாளர்கள்ல ஒருவர்.

கவிதை காதல்ன்னு சொல்லிட்டு இவர் பத்தி சொல்லாம போனா அவ்ளோ தான். இவர் உருகி உருகி கவிதை எழுதினாலும் சரி, பயங்கரமா மொக்கைப் போட்டாலும் சரி நல்லா இருக்கும். ஏழு அப்படிங்கற பதத்த அதிகம் உபயோகிக்க வெச்சவர். ;-)) காக்டெயிலும் எனக்கு பிடிக்கும்ன்னு சொல்ல ஆசை தான் இருந்தாலும் அதோட பெயர்காரணமா சொல்லாம விடறேன். ;-))

வளர்ந்து வரும் கலைஞர் அப்படின்னு சொல்லலாம் இவரை. சின்ன பையன் தான் ஆனா எழுதறதெல்லாம் ரொம்ப நல்லா இருக்கும். இவரோட ரெயின்போ தாட்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். கவிதைகளும் எழுதிருக்கார்.

இன்னும் நிறைய கவிஞர்கள் உண்டு பட்டியலில். அதனால் நாளை சந்திப்போம். ;-))
மேலும் வாசிக்க...

Tuesday, June 23, 2009

கவி -ஒரு சிறு அறிமுகம்

கவி - கவிதை மற்றும் கவிஞர்கள் இரண்டிலும் நான் ரசித்தவைகள் ரசித்த‌வர்களை அறிமுகப்படுத்துவதால்...



அதென்னவோ சிறுவயது முதலே பாடல்கள் மற்றும் கவிதைகளில் எனக்கு ஆர்வம் கொஞ்ச‌ம் அதிகம். (எழுத இல்ல... படிக்க). நான் அதிகம் விரும்பி வாசித்த புத்தகங்களில் கவிதை புத்தகங்கள் தான் அதிகம். அந்தவகையில் புத்தகம் கிடைக்காத நாட்களில் விருந்தாக அமைந்தது வலைப்பூ கவிதைகள் தான்.

அதிகம் யாருக்கும் தெரியாத இவரின் கவி வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை தேவதைகள் முட்டாள்கள் (என்ன ஒரு கொலைவெறி?? :-)) என்கிற பெயரில் வலைப்பூ எழுதிவரும் ராகவேந்திரனின் கவிதைகள் அருமை. சமீபத்திய இவரின் பூனைக்குட்டி , முதல் நாள் மற்றும் இன்றைய அரசியல்வாதிகள் பற்றி இவர் எழுதிய இந்த கவிதை என்னை மிகவும் கவர்தவை உண்மை சொல்லவேண்டுமெனின் பட்டியல் மிகப்பெரிது. :-))

அடுத்து இவர் ஒரு எதார்த்த கவிஞர்ன்னு சொல்லலாம். அதிகம் எழுதுவதில்லை. எனினும் எழுதியவற்றில் எனக்கு பிடித்த கவிதைகள் ஏராளம். TKB காந்தி தாரணை எனும் பெயரில் வலைப்பூவில் எழுதிவருகிறார். கவிதைகள் மட்டுமல்ல அழகான புகைப்படங்களும் இவரின் கைவண்ணத்தில் உருவானவை. சமீபத்திய இவரின் போதிமரம் கவிதை மற்றும் பல கவிதைகள் என்னைக் கவர்ந்தவை. வித்தியாசமான கவிதைகள் இவருடையது. இவரின் பல கவிதைகள் உயிர்மையை அலங்கரித்துள்ளது.

இவரின் கல்யாணம் ஆகாதவர்களுக்கான எச்சரிக்கைப்பதிவுகளை படித்த எவரும் இவ்வளவு உருகி இவர் கவிதை எழுதுவார் என நம்புவது கொஞ்சம் கடினமே. அந்த வகையில் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர் ஆதி அண்ணா. முதல் முத்தம் கவிதை கொஞ்சமே எனினும் மிக எதார்த்தம் அதனினும் அதிகம் காதல். இன்னும் எழுதலாம். :-)) மற்ற கவிஞர்களை மனதுவிட்டு பாராட்டுவதிலும் முதலிடம் இவருக்கே. :-))

இவரின் பிறந்த நாள் வாழ்த்துக் கவிதைகள் மற்றும் எதிர் கவிதைகள் என்னை மிகக்கவர்ந்தவை. கவிதையும் எழுதலாம். பார்ப்போம் :-))

எனக்கு பிடித்த, நான் ரசித்த கவிதைகளின் பட்டியல் கொஞ்சம் பெரிது. எனினும் இப்பொழுது பதிவின் நீளம் கருதி இதோடு முடிக்கிறேன். நன்றி..!
மேலும் வாசிக்க...

Monday, June 22, 2009

கரையோரக் கனவுகளில் நான்...

வாழ்க்கை பலவகைகளில் பல நேரங்களில அழகான பல விஷயங்களை நமக்கு கற்றுத் தரும் ஆனால் நமக்கு நம்மை அடையாளம் காட்டுவது சில முறை தான் அந்த வகைல என்னை எனக்கு அழகா காமிச்ச ஒரு பெரிய விஷயம் என்னோட இந்த கரையோர கனவுகள் தான். இதை தொடங்கும் போதும் சரி, என் நான் வலைப்பூவில் எழுத ஆரம்பித்த போதும் சரி எனக்கு முதல் முதலில் ஏற்பட்ட அந்த பிரமிப்பு இன்னும் அடங்கினப்பாடில்லை. என் வலைப்பூ ஆரம்பிக்கும் நாளின் காலை வரை (மதியம் தொடங்கினேன்.) கவிதைக்கும் எனக்குமான தொடர்பு படிப்பதோடு மட்டுமே நின்றிருந்தது. (இன்றளவும் நான் எழுதுவது கவிதை என்றெல்லாம் சொல்லி உங்களைக் கொடுமைப்படுத்தமாட்டேன்.. ;-) )

"கரையோரக் கனவுகள்" தலைப்பும் நான் தேடி அலையவில்லை.. (அப்பறம் இதுக்கு விளக்கம் தான் தேடி அலைஞ்சேன் என்கிறது ரகசியம்.. ;-))வலைப்பூ ஆரம்பிச்ச பிரமிப்பே எனக்கு அடங்கல அதுக்குள்ள முதன்முதல்ல வலைச்சரம்ல என் வலைப்பூ அறிமுகம் புதுகை தென்றல் அக்கா செய்தாங்க. நாலைந்து முறை அது நான் தானான்னு சோதிச்சு பார்த்துகிட்டேன்.. ;-)) அப்படிப்பட்ட வலைப்பூவில் இன்னைக்கு நான் எழுதறது ரொம்ப பெருமையா இருக்கு வாய்ப்பளித்த சீனா அண்ணாவுக்கு நன்றி.. :-)))

இப்படியாக என் பிரமிப்பு தொடர்ந்தாலும் நான் உருப்படியா எழுத ஆரம்பிச்சது, யாரோ நாமளும் எழுதுரோம்ன்னு படிக்கிறாங்கன்னு தெரிஞ்ச பிறகு தான். அத தெரிஞ்சிக்க உதவினவங்க நிஜமா நல்லவன் அண்ணா, தமிழ் பிரியன் அண்ணா, ஆயில்யன் அண்ணா.

இதுதான் நான் வலைப்பூ தொடங்கின கதை ;-)) (இனி தான் கொடுமையே... அதாவது நான் என்னென்ன எழுதிருக்கேன் அதுல எனக்கு ரொம்ப பிடிச்சது எதுன்னு சொல்லபோறேன் வித் லிங்க்கோட.. ;-))

ஊமைக்காதல் உண்மையாகவே காதலுக்கும் எனக்கும் பரிச்சயம் இருந்ததில்ல. ஆனா, ஏதோ எழுதணும்ன்னு தொடங்கிட்டோமே வலைப்பூவ எழுதிதான் ஆகனும்ன்னு இத எழுதினேன். ஆனா எனக்கே கொஞ்சம் பிடிச்சிருந்தது.. ;-))

இதே பாணியிலே கவிதை எழுதிட்டு போனாலும். அதிலிருந்து கொஞ்சம் தடம் மாறிய இந்த கவிதை ரொம்ப பிடிச்சிருந்தது, அப்பவும், இப்பவும்.

கவிதை மட்டுமே எழுதி கொடுமைப்படுத்திட்டு இருந்த நானும் கொஞ்சம் தடம் மாறி எழுதின மொக்கைகள் இப்பவும் அடிக்கடி படிச்சு பார்த்து கண்டிப்பா இதவிட இன்னும் மொக்கையா எழுதணும்ன்னு நினைச்சதுண்டு. ;-)) அந்த வரிசையில் நான் என்னோட கல்லூரி காலத்துல பண்ண இந்த விஷயம் எனக்கு எப்பவுமே பிடிக்கும். (இன்னும் நிறைய எழுதனும்.. கொஞ்ச நஞ்சமா பண்ணது?? ;-)))

இதே மொக்கைகள்ல தான்.. ஆனா, ஒரு சீரியசான தொடர் விளையாட்டு அது. எல்லாருக்குமே பிடிசிருந்ததுன்னாலும் அந்த தொடர்விளையாட்டுக்கு என்னை அழைத்த செந்தில் அண்ணா ரொம்ப கவலைப்பட்டுருப்பார். ;-))

ரொம்ப மொக்கையா பதிவு போட்டுக்கிட்டு, ஜாலியா கவிதை எழுதிட்டு உருப்படியா இருந்த பொண்ண புனைவு எழுத சொன்னார் சென்ஷி அண்ணா. விளைவு இதோ. :-)) இதுவும் எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு தான். தேங்க்ஸ் டு சென்ஷி அண்ணா.. :-))

அதற்கு பிறகு தான் நான் கொஞ்சம் சீரியஸா எழுத ஆரம்பிச்சேன்னு நினைக்கிறேன். கவிதை மாதிரின்னு எழுதின இந்த கவிதைகள் எல்லாமே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கவிதைகள்.

நாம் செய்யும் எந்த ஒரு வேலையுமே அது ரொம்ப சின்ன வேலையா இருந்தாலுமே அதுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் போது அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. அந்த வகைல உயிர்மை மின்னிதழில் வந்த என் இந்த கவிதைகள் Feather in my cap-ன்னு தான் சொல்லணும். :-))

இது வரை சொன்னதெல்லாம் எனக்கு ரொம்ப பிடித்தவைகள், பிடித்தவைகள் நிறைய இருக்கு. அப்பறம் என் ப்ளாக் முழுசையும் இங்க கொண்டுவர வேண்டியிருக்கும்.. ;-)) அதானால, என் சுயபுராணத்த இதோட நிறுத்திட்டு இன்னுமொரு நல்ல அறிமுகப்பதிவோட உங்கள சந்திக்கிறேன்.. :-)) நன்றி..! நன்றி..! நன்றி..!

-அன்புடன்,
ஸ்ரீமதி.
மேலும் வாசிக்க...

Sunday, June 21, 2009

வெண்பூவிற்கு நன்றியும் - ஸ்ரீமதிக்கு வரவேற்பும்

அன்பின் பதிவர்களே

கடந்த ஒரு வார காலமாகக் கலக்கிய அருமை நண்பர் வெண்பூ ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ நூற்றி அறுபது மறு மொழிகள் பெற்று - பல்வேறு வகையான பதிவர்களை அறிமுகம் செய்து - ஏற்றுக் கொண்ட பொறுப்பினை மனதார நிறைவேற்றி இருக்கிறார். அவர் தனது வலைப்பூவினில் இடுகைகள் இடத்துவங்கி ஓராண்டு முடிவடைந்ததை வலைச்சரத்தினில் பெருமையுடன் கொண்டாடினார். ஓராண்டு காலமாக 34 இடுகைகளே இட்ட வெண்பூ வலைச்சரத்தினில் ஒரு வாரத்தில் ஆறு இடுகைகள் இட்டு புதிய சரித்திரம் படைத்தார்.

அவருடைய வலைப்பூவின் முதல் இடுகையிலேயே தனக்குப் பிடித்த பதிவர்களை அறிமுகம் செய்திருக்கிறார். அதனடிப்படையில் வலைச்சர ஆசிரியராகக் கலக்கி விட்டார்.

அவர் மேன்மேலும் இதே வேகத்தில் இடுகைகள் இட வாழ்த்தி வழி அனுப்புகிறோம்.

அடுத்து 22ம்நாள் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுபேற்க சகோதரி ஸ்ரீமதி வருகிறார். இவர் தனது வலைப்பூவான கரையோரக் கனவுகளில் "தன் பெருமை தானறியாதவராக" பல்வேறு வகையான இடுகைகள் இட்டு வருகிறார். ஏறத்தாழ 120 இடுகைகள் அவரது வலைப்பூவினில் இட்டிருக்கிறார்.

அவரை வருக வருக - புதிய பதிவர்களை அறிமுகப் படுத்துக என வாழ்த்தி வரவேற்கிறோம்.

நன்றி

நட்புடன் .... சீனா
--------------------------
மேலும் வாசிக்க...

சினிமா வலைஞர்கள்

சினிமா.... நம்மோட வாழ்க்கையில தவிர்க்க முடியாத ஒரு அம்சம். பொழுதுபோக்கு அப்படின்னு சொன்னாலே டிவிக்கு அடுத்து முதல்ல ஞாபகம் வர்ற ஒரு விசயம். வலையுலகத்துலயும் சினிமா மேல அதீத பற்று இருக்குற பலர் இருக்குறாங்க. அதுல நான் பார்த்த சிலரைப் பத்தி இன்னிக்கு சொல்லப் போறேன்.

முரளிகண்ணன்:
வலையுலகத்துல சினிமான்னு சொன்னேலே உடனே நினைவுக்கு வர்றது நம்ம முரளிதான். 75 வருச தமிழ் சினிமா உலகத்தை அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு அலசி நூத்துக்கும் மேல பதிவு போட்டிருக்காரு முரளி. விகடன் வரவேற்பறையில இவரோட வலைப்பூ சுட்டப்பட்டதே இவரோட ரீச்சிற்கு சாட்சி.

சினிமா மட்டும் இல்லாமல் நகைச்சுவை, நையாண்டியும் இவரு கலக்கலா எழுதுறாரு. உண்மையா புனைவான்னு சந்தேகம் வர்ற அளவுக்கு புனைவுகள் எழுதுறதுல இவர் இன்னொரு சாரு. பாராட்டுகள் முரளி.

கேபிள் சங்கர்:
நமக்கெல்லாம் சினிமா பொழுது போக்குன்னா, இவரு பொழுதைப் போக்குறதே சினிமாவுலதான். எந்த தமிழ்ப்படமா இருந்தாலும் அது எவ்வளவு மொக்கையா இருந்தாலும் அந்த படத்தை தியேட்டர்ல போய் பாத்துட்டு விரிவான விமர்சனம் எழுதுற ஆளு இவர்.

தமிழ்ப்படம் மட்டுமில்லாம தான் ரசிச்ச தெலுங்கு, ஹிந்தி மொழிப்படங்களையும், சிறப்பான உலகப்படங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தி நம் சினிமா அறிவை அடுத்த தளத்துக்கு கொண்டு போக சீரியஸா முயற்சி செய்யுறாரு. அப்பப்போ டிவி சீரியல்கள்லயும் தலைகாட்டுறாருன்றது இவரோட இன்னொரு சிறப்பு.

ஒரு நடிகரா பலபடங்கள்ல நடிச்சிட்டு இப்ப டைரக்டர் ஆக முயற்சி செஞ்சுகிட்டு இருக்கார். வாழ்த்துகள் கேபிள்.

ஜாக்கி சேகர்:
இன்னொரு சினிமாக் காதலர். ப்ரொஃபஷனல் கேமிராமேன். உலகப்படங்கள் குறித்த இவரோட விமர்சனங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். வலையுலகத்துல உலகப்படங்கள் குறித்து வேற யாரும் இவரை விட அதிகமா எழுதலைன்னு நினைக்கிறேன்.

இவரோட விமர்சனத்தோட பிடிச்ச விசயமே, கதையோட முக்கிய விசயங்களை சொல்லி சஸ்பென்ஸை கெடுக்க மாட்டார். படம் குறித்து மேலோட்டமான விமர்சனத்தை மட்டும் சொல்லி, படம் பார்க்குற ஆவலை தூண்டுறது இவரோட ஸ்டைல். பாராட்டுகள் ஜாக்கி.

**************

இன்றோட என் வலைச்சர ஆசிரியர் பணி முடிவடையுது. என்னால முடிஞ்சவரைக்கும் வெர்சடைலா தொகுக்க முயற்சி பண்ணினேன். ஒரு சில முக்கிய ந(ண்)பர்கள் விட்டுப்போயிருக்கலாம். அது மறதியினாலயும், அதிக நேரமின்மையாலயும்தானே தவிர இன்டென்ஷனல் கிடையாது.

இந்த வாரத்துல ஒரு நாள் தவிர மத்த எல்லா நாளும் பதிவு போட முடிஞ்சது. இதுவரைக்கும் என்னோட வலைப்பூவுல ஒரு மாசத்துக்கு 6 பதிவு போட்டதுதான் அதிக எண்ணிக்கையா இருந்தது. ஆனா என்னை வலைச்சரத்துக்கு ஆசிரியர் ஆக்கி ஒரே வாரத்துல அதே அளவு எண்ணிக்கையில பதிவு போட வெச்ச சீனா அய்யாவுக்கும், பின்னூட்டங்களில் எனக்கு ஊக்கப்படுத்திய சக பதிவர்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி...
மேலும் வாசிக்க...

Saturday, June 20, 2009

என்னை அசத்திய கவிஞர்கள்

வலைப்பூக்கள் முழுக்க விரவிக்கிடப்பது கதைகளும் கவிதைகளும்தான். நான் சொல்லப்போவது ஒன்றும் வித்தியாசமான கவிதைகளும் அல்ல, எனது லிஸ்ட் பின்நவீனத்துவமும் அல்ல, நான் படித்தவரை எனக்குப் புரிந்த எனக்குப் பிடித்த கவிஞர்களை மட்டுமே இங்கே கொடுத்திருக்கிறேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர்:
விகடனில் இவர் கவிதை வந்ததில் விகடனுக்கே கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கும். வலையுலகுக்கு வந்த புதிதில் இவர் கவிதைக்கு விளக்கம் கேட்டு பின்னூட்டம் போட்டு இவரது சக இலக்கியவாதிகளிடம் வாங்கி கட்டிக் கொண்ட பெருமை எனக்கு உண்டு. பூடகமாக செய்திகளைச் சொல்லும் இலக்கியங்களை எழுதினாலும் அவ்வப்போது என் போன்ற பாமரனுக்கும் புரிகிறமாதிரி அற்புதமான கவிதைகளைக் கொடுப்பது இவரது பன்முகத்தன்மைக்கு உதாரணம்.

மோகன் கந்தசாமி வலைப்பூவில் இவர் எழுதிய இரண்டு கவிதைகள் என்னை அசரடித்தன என்றால் மிகையில்லை.
இவரின் இந்தக் கவிதைதான் விகடனில் பிரசுரமானது.

ஸ்ரீமதி:
"கரையோரக் கனவுகள்"ன்ற கவிதைத்தனமான பெயர்ல வலைப்பூ வெச்சிருக்குற ஸ்ரீமதி எழுதுற எல்லா காதல் கவிதைகளுமே எனக்குப் பிடிக்கும், அவங்க எழுத்துறது காதல் கவிதைகள் மட்டும்தான்கிறதும் ரொம்ப பிடிக்கும்.

ஒரு சின்ன‌ உதார‌ண‌ம்:


பொம்மையை தரமறுக்கும்
குழந்தையின்
அடத்தை ஒத்தது
என்னிதயம் திருடி
நீ செய்யும்
காதல்....


இவ‌ங்க‌ளோட‌ எல்லா க‌விதைக‌ளுமே பிடிக்கும்னாலும் இந்த‌ காத‌லும், இந்த‌ பாச‌மும் கொஞ்ச‌ம் அதிக‌மா பிடிச்ச‌து.

சென்ஷி:
உண்மையை சொல்லப்போனா சென்ஷியோட கவிதைகள் எனக்கு அவ்வளவா புரியறதில்லை. ஆனா அவர் தான் படிச்சதில் பிடிச்சதா அறிமுகப்படுத்துற கவிதைகள் அவ்வளவு அற்புதமா இருக்கும். பகிர்தலுக்கு நன்றி சென்ஷி.

அனுஜன்யா:
தீவிரமான இலக்கியவாதி. உயிரோசை, கீற்று மாதிரியான இதழ்களில் அடிக்கடி இடம் பிடிக்கும் கவிஞர். நான் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் விளக்கம் கொடுக்கும் பொறுமைசாலி. இவரது கவிதைகள் சாமான்யர்களுக்கு புரிவது கொஞ்சம் கடினமே. நான் இன்னமும் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன்.

என்னைக் கவர்ந்தது இவரது இந்தக் கவிதையும், இந்த கவிதையும். பிடித்ததற்கு எனக்குத் தெளிவாகப் புரிந்ததும் காரணமாக இருக்கலாம்.

வால்பையன்:
இவர் எப்படா கவிஞர் ஆனாருன்னு கேக்குறவங்களுக்கு, எந்த கவிதைக் குடுத்தாலும் உடனே அதனோட ஆல்கஹாலை கலந்து எதிர் கவுஜ எழுதற இவரை வேற எந்த லிஸ்ட்ல சேர்க்க முடியும், சொல்லுங்க.

சொல்லப்போனால் பல கவிதைகளை இவர் எதிர் கவுஜ எழுதியபின் இவர் கொடுக்கும் மூலக்கவிதை இணைப்பின் வழியேதான் வாசித்திருக்கிறேன். அதிகமாக கவிதைகளைப் படித்து எதிர்காலத்தில் நானும் எதாவது கவிதை எழுத ஆரம்பித்தால் அதற்கு இவரும் ஒரு முக்கிய காரணியாக இருப்பார். :))))
மேலும் வாசிக்க...

Thursday, June 18, 2009

கோ-இன்சிடன்ஸ் பதிவர்கள்

ஒருசிலர் கூட பழக ஆரம்பிச்சி ரொம்ப நாள் ஆனப்புறம், வேற எதாவது ஒரு விசயத்தைப் பத்தி பேசிட்டு இருக்குறப்போ, அவங்களுக்கும் நமக்கும் எதோ ஒரு ஒற்றுமை இருக்குறது தெரியும், ஒரே ஊரைச் சேந்தவுங்க, ஒரே காலேஜ்ல படிச்சவங்க இப்படி.. அடடா இத்தனை நாளா இது தெரியாம போச்சே அப்படின்னு நெனப்போம்.

இந்த மாதிரி வலையுலக நண்பர்கள்கிட்டயும் எனக்கு ஆச்சர்யப்படுற மாதிரி சில கோ இன்சிடன்ஸ் விசயங்கள் நடந்தது. அந்த நண்பர்களைப் பத்தியும், அவங்க பதிவுகள்ல எனக்கு புடிச்சதையும்தான் இன்னிக்கு சொல்லப்போறேன். (எங்க‌ இருந்துடா புடிக்குற‌ இப்ப‌டி ஒரு தொகுப்பெல்லாம்னு சொல்ற‌வ‌ங்க‌ளுக்கு ஒரு ஹை ஃபைவ்...ஹி..ஹி)

சஞ்சய்:
வயசானதை மறைச்சி இன்னமும் பொடியன்னே சொல்லிகிட்டு திரியுற இன்னொரு மோஸ்ட் எலிஜிபுள் வலையுலக பேச்சுலர் இவரு. இவரோட பேச ஆரம்பிச்சி கொஞ்ச நாள் கழிச்சி, இவர் தருமபுரி மாவட்டத்துல இருக்குற தன்னோட கிராமத்தைப்பத்தி எழுதியிருந்தாரு (இவரோட கிராமம்னா, இவரோடதே இல்ல, இவரு இருக்குற கிராமம்).

என்னோட சின்ன வயசு முழுக்க (நாலாவது வரைக்கும்) தருமபுரி மாவட்டத்துல பாப்பிரெட்டிப்படியிலதான். அதனால ஒரு ஆர்வத்துல இவர்கிட்ட தருமபுரியில எந்த இடம்னு கேக்க அவரும் சொன்னாரு. நானும் அவர்கிட்ட நான் பாப்பிரெட்டிப்பட்டியிலதான் இருந்தேன்னு சொல்ல அவருக்கு ஆச்சர்யம். அவங்க ஊர் பாப்பிரெட்டிப்பட்டி பக்கம்தானாம். அவரும் +1, +2 படிச்சது பாப்பிரெட்டிப்பட்டியிலதான் அப்படிங்கறது கூடுதல் ஆச்சர்யம். (அவரு +2 வரைக்கும் படிச்சதே ஆச்சர்யம்தான் அப்படிங்கறவங்க நம்ம சாதிங்கோவ்....)

இவரோட கிராமத்து நினைவுகள் எனக்கு ரொம்ப புடிக்கும். அழகான படங்களோட (சஞ்சயோட படம் இல்லீங்க) இவர் வர்ணிக்கற விதமே அருமையா இருக்கும். என்ன ஒரே பிரச்சினை, என்னை மாதிரி இவரும் அப்பப்ப காணாம போயிடுறாரு. :)) அடிக்கடி எழுதுங்க சஞ்சய்..

துக்ளக் மஹேஷ்:
என்னை ஆச்சர்யப்படுத்துன கோ இன்சிடன்ஸ் மஹேஷ் கூட நடந்தது. மஹேஷ் இப்ப இருக்குறது சிங்கப்பூர். அங்கிருந்து மனுசன் உலகம் பூரா பறந்து பறந்து வேலை பாக்குறாருங்குறது எல்லாருக்கும் தெரியும். ஒருதடவை இவர்கூட ச்சாட் பண்ணிகிட்டு இருக்கும்போது, இவர் சென்னையில வேலை செஞ்சதைப் பத்தி சொல்லிட்டு இருந்தாரு. எந்த கம்பெனின்னு நான் கேட்க அவர் சொன்ன பதில்லதான் ஆச்சர்யமே.

அவர் சென்னையில வேலை செஞ்ச கம்பெனி, அமெரிக்காவுல இருக்குற இன்னொரு கம்பெனிகூட சாஃப்ட்வேர் டெவலப் பண்ண டீல் போட்டு அந்த அமெரிக்கா கம்பெனி நான் வேலை செய்யுற கம்பெனிக்கு சப்கான்ட்ராக்ட் குடுத்து அந்த ப்ராஜக்டை நான் மேனேஜ் பண்ணிகிட்டு இருந்தேன். எவ்வளவு சிக்கலான லிங்க். ஆச்சர்யம்தானே..

புத்தக விமர்சனம், சினிமா விமர்சனம் இப்படி பல எழுதுனாலும், இவரோட பயணக்கட்டுரைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுல ரொம்ப பிடிச்சது காஷ்மீர் கட்டுரைகள். படிச்சிப் பாருங்க. உங்களுக்கும் கண்டிப்பா பிடிக்கும்.

ச்சின்னப்பையன்:
பூச்சாண்டி அப்படின்னு பயமுறுத்துற பேர்ல வலைப்பூ வெச்சிருந்தாலும் உள்ள போற எல்லாரையும் சிரிக்க வெக்காம வெளிய அனுப்ப மாட்டாரு இந்த மனுசன். ஆபிஸ்ல இருக்குறப்ப பதிவை படிக்கலாமா வேணாமான்னு நான் யோசிக்குற ஒரு சில பதிவுல இவரோடதும் ஒண்ணு, பல தடவை படிச்சிட்டு ஆபிஸ்ல தனியா சிரிச்சிருக்கேன்.

இவரோட எனக்கு ஆன கோ இன்சிடன்ஸ், இவர் பொண்ணோட பர்த்டேவும் என் பையனோட பர்த்டேவும் ஒண்ணே (ஆகஸ்ட் 27). வருசம் வேற வேறயா இருந்தாலும் என்னை "அட" அப்படின்னு சொல்ல வெச்சது இந்த ஒற்றுமை.

இன்னொரு ஒற்றுமை இவர் பொண்ணோட பெயரும், மேல சொன்ன துக்ளக் மஹேஷ் பொண்ணோட பெயரும் ஒண்ணே: சஹானா

ச்சின்னப்பையன் பதிவுல இதைன்னு குறிப்பிட்டு சொல்ல முடியாது, எல்லாமே டெர்ரராத்தான் இருக்கும். இருந்தாலும் இதைப் படிங்க, இது ஒரு எதிர்ப்பதிவு. கலக்கியிருப்பாரு. படிச்சி சிரிங்க..

கணேஷ்:
தன் நண்பர் ராம் சுரேஷ் அப்படின்ற பெயர்ல எழுதிட்டு இருந்த இவர், தன்னோட பெயரான‌ கணேஷ் அப்படின்ற பெயர்ல எழுத ஆரம்பிச்ச மறுவாரமே பின்னூட்டப் புயல், சூறாவளி, டிவிஸ்ட்டர் கணேஷ் வந்து இவர் பெயரை டேமேஜ் பண்ணிட்டாரு. "நான் அந்த கணேஷ் இல்லீங்கோ"ன்னு இவரு கதறுனது இன்னமும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு :))))

ஒருமுறை துணுக்ஸ்ல நான் வேலை செய்யுற கம்பெனிக்கு பக்கத்துல டீக்கடையில நடந்த ஒரு நிகழ்வைப்பத்தி எழுத, உடனே இவரு பின்னூட்டம், நீங்க வேலை செய்யுற கம்பெனியிலதான் நானும் இருக்கேன்னு. அவரோட பதிவுகளை நானும், என்னோட பதிவுகளை அவரும் படிச்சிருந்தாலும் ரெண்டு பேரும் ஒரே இடத்துல வேலை செய்யுறோம்ன்றதே தெரியாம இருந்திருக்கு.

இவரும் வலையுலகத்தோட பேச்சுலர் பதிவர்தான். ஆனாலும் காதல் செய்யுறது (ஆங்கிலமாக்கிக் கொள்ளவும்) பத்தி பதிவுகள் அதிகமா போடுறாரு. டவுட்டாத்தான் இருக்கு.

க‌டைசியில இவரு போட்டிருக்குற‌ டிஸ்கியை ப‌டிக்காம மீதிய‌ ம‌ட்டும் ப‌டிங்க. நான் சொல்ற‌து க‌ரெக்ட்னு தெரியும். :)))

நர்சிம்:
என்னாலயும் சரி, அவராலயும் சரி, நம்பவே முடியாத கோ இன்சிடன்ஸ் நர்சிம் கூடதான் நடந்தது. சில வாரங்களுக்கு முன்னால, இவர்கிட்ட பேசிகிட்டு இருக்குறப்ப சிறுகதைப் போட்டி பத்தி பேச்சு வந்தது. அப்ப அவரு, 'ஈழத்தை அடிப்படையா வெச்சி ஒரு கதை எழுதியிருக்கேன் வெண்பூ'ன்னு சொன்னாரு.

அப்படியா என்ன கதைன்னு கேக்க 'கதை ஆரம்பிக்குறதே கி.பி.2209ல் ஒருநாள் அப்படின்னுதான்'ன்றாரு. எனக்கா தூக்கிவாரிப்போட்டது. 'என்ன நர்சிம் சொல்றீங்க! இதே ஆரம்ப வரிகளோட ஒரு கதையை நான் விகடனுக்கு போன வாரம்தான் அனுப்பினேன்'ன்னு சொன்னேன். அந்த கதைதான் விகடன்ல வெளிவந்தது.

என்னோட கதையை அவரோ, அவரோட கதையை நானோ படிக்குறதுக்கு வாய்ப்பே இல்லை. ஆனா ரெண்டு பேரும் ஒரே நேரத்துல ஒரே தளத்துல கதையை யோசிச்சது நம்பவே முடியாம இருந்தது.

அவரோட கதைக்கும், என்னோட கதைக்கும் சில ஒற்றுமைகள்:
1. வருடம் ரெண்டுமே 2209
2. என் கதையோட தலைப்பு "கி.பி.2209ல் ஒரு நாள்" அவர் கதையோட தலைப்பு "கி.பி.2209..ஒரு மழை நாள்..."
3. என் கதை நடப்பது 716 மாடிக் கட்டிடம். அவர் கதையின் நாயகன் இருப்பது 710வது மாடியில்
4. என் கதையில் (நீளம் காரணமாக விகடனால் வெட்டப்பட்டது) நாயகி தன் கணவனை இவ்வாறு திட்டுவாள் "புது மாடல் கார் வாங்குனா ஃப்ளாட்டுக்கு வெளியவே பார்க் பண்ணிகிட்டு வீட்டுகுள்ள டைரக்டா போகலாம்" என்று. அவர் கதையில் "அண்ணாநகரின் மையத்தில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பு. வாசல் வந்ததும் 710 என்ற எண்ணைத் தொட்டான். ஜிவ்வ்வ் என்று மேலேறிய கார் செதுக்கி வைத்தது போல 710 வது மாடியின் சுவரோடு சுவராக உரசி நின்று அவனைத் துப்பி விட்டு, கட்டளைப் படி சுவரோடு சுவராக படிந்து கொண்டது." என்று எழுதியிருப்பார்.

ஒரே அலைவரிசையில சிந்திக்கிறதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா ஒரே விசயத்தை சிந்திக்கிறதுன்றது என்னைப் பொறுத்தவரை ரொம்ப அபூர்வம். எப்படி இந்த அளவு ஒரே மாதிரி ரெண்டு பேர் ஒரே வாரத்தில் எழுத முடியும். யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன்..

இவரோட எல்லா பதிவுகளுமே பிடிக்குனாலும் ஜல்லிக்கட்டு பத்தி இவரு எழுதின பதிவு எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.
மேலும் வாசிக்க...

Wednesday, June 17, 2009

வெண்பூவிற்கு வயது ஒன்று



இன்னியோட நான் பதிவு எழுத ஆரம்பிச்சி ஒரு வருசம் ஆச்சு.

(அப்படியே எல்லாரும் கைதட்டி ஹேப்பி பர்த்டே டூ யூ சொல்லுங்க பாக்கலாம்) :)))

பதிவுகளை படிக்க ஆரம்பிச்சு ஒரு ஆறு மாசம் கழிச்சி பின்னூட்டம் போட ஆரம்பிச்சி ஒரு ரெண்டு மாசம் கழிச்சு போன வருசம் இதே நாள்லதான் என்னோட முதல் பதிவை எழுதுனேன் (தமிழுக்கு கஷ்ட காலம் ஆரம்பிச்சது இந்த நாள்லதான்றதால யாராவது கருப்புக் கொடி ஏத்துறதுன்னா ஏத்திக்கலாம்).

என்னோட உண்மையான பெயர் வெங்கடாஜலபதி. நண்பர்களுக்கு வெங்கட், உறவினர்களுக்கு வெங்கடேசு.

பதிவுக்கு இதுல எந்த பெயர் வெச்சாலும் ரொம்ப பொதுவான பெயரா இருக்கும்னு நெனச்சி, வலையில எழுதுறதுக்காகவே புனைப்பெயர் (டேய், இதெல்லாம் ரொம்ப அதிகமா இல்லை???) தேட ஆரம்பிச்சேன்.

முதல்ல நான் முடிவு பண்ணினதே பேருக்கு கீழ வர்ற கேப்ஷன்தான். புனைப்பெயரைப் போட்டு அதுக்குக் கீழ "வெங்கட்டின் வலைப்பூ" அப்படின்னு போட்டுடலாம்னு முடிவு பண்ணினேன். அப்புறம் யோசிச்சப்ப அதுலயே ஒரு நல்ல புனைப்பெயர் இருக்குறதா தோணினது.

வெங்கட் அப்படின்றத இங்கிலீஷ்ல எழுதி (Venkat) அதுல முதல் மூணு எழுத்தை மட்டும் எடுத்தும், "வலைப்பூ"ல இருக்குற கடைசி எழுத்தை மட்டும் எடுத்தும் "வெண்பூ (Venpu)"ன்னு வெச்சிகிட்டேன்..(ஹப்பாடா.. எப்படியோ நம்ம வரலாறு சொல்லியாச்சு)..

இந்த ஒருவருசமா என்னை எழுதுறதுக்கு ஊக்கப்படுத்திட்டும், உதவி பண்ணிட்டும் இருக்குற உங்க எல்லாருக்கும் நன்றிகள் பல.

இந்த முதல் பிறந்தநாளை கொண்டாட இடம் குடுத்து உதவின சீனா அய்யாவுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.

ஏறத்தாழ நான் எழுத ஆரம்பிச்ச நேரத்துலயே ஆரம்பிச்ச பல பேர் கூட நல்ல நட்பு உருவானது. சொல்லப்போனா ஒரு குழுவா நாங்க இயங்குறதா குற்றச்சாட்டும் வர அளவுக்கு நட்பு அதிகமாச்சு. அதிஷா, பரிசல், நர்சிம், வடகரை வேலன், ஆதி தாமிரா இவங்களை எல்லாம் போன பதிவுலயே பாத்துட்டதுனால இன்னிக்கு மத்தவங்களைப் பத்தி..

புதுகை அப்துல்லா:
என்னோட வலையுலக‌ பார்ட்னர்.. பழகுறதுக்கு இனிமையானவர், கவிதைகள்ல பின்னுறவர், அப்படி இப்படின்னு பல விஷயங்கள் இருந்தாலும் எனக்கு இவர்கிட்ட ரொம்ப பிடிச்ச விசயம் இவரோட நகைச்சுவை உணர்வு. இவர்கிட்ட எப்ப பேசுனாலும் கண்டிப்பா பேசி முடிக்குறப்ப நாம ஒரு தடவையாவது வாய்விட்டு சிரிச்சிருப்போம். பின்னூட்டங்கள்ல இவரோட லூட்டிய இங்கயும், இங்கயும் பாருங்க. எனக்கு இவர் அடிச்ச டைமிங்லயே ரொம்ப புடிச்ச ரெண்டும் இது..

FYI...பதிவுலகுல அண்ணன் எனக்கு 15 நாள் சீனியர்.

இவரோட மாஸ்டர் பீஸா நான் நினைக்குறது மோகன் கந்தசாமி வலைப்பதிவுல இவர் எழுதுன அரசியல் கட்டுரைகள்.
புதுகை அப்துல்லா: திராவிடமும் கம்யூனிசமும்
புதுகை அப்துல்லா: திராவிடமும் கம்யூனிசமும் - இறுதி பாகம்

கார்க்கி:
ஒன் ஆஃப் த மோஸ்ட் எலிஜிபுள் பேச்சுலர்ஸ் இன் தி வலையுலகம். இப்படித்தான் இவரு பெங்களூரு போனப்ப (சரி..சரி.. சொல்லல..)

தன் எழுத்துக்களால என்னை ஆச்சர்யப்படுத்துற பதிவர். முன்னயெல்லாம் காதல் பத்தி ரொம்ப ஃபீலிங்ஸ் ஆஃப் ஹைதராபாத்தா எழுதிட்டு இருந்த இவரு இப்பவெல்லாம் ஒரே சிக்ஸ் அடிச்சு தாக்குறாரு, ஸாரி, செவன் அடிச்சு தாக்குறாரு.. இவரோட ஏழு கேரக்டரோட தீவிர ரசிகன் நானு. பரிசலுக்கு அடுத்து 300 ஃபாலோயர்ஸை தொடப்போற அடுத்த பதிவர் இவராத்தான் இருக்கப்போறாரு. வாழ்த்துகள் கார்க்கி.
மேலும் வாசிக்க...

Tuesday, June 16, 2009

விகட(ன்)கதை சொல்லிகள்!!!

கடந்த சில மாசங்களா விகடன் ஒரு பக்கக் கதை மற்றும் சிறுகதைகள்ல பதிவர்களோட பங்கு அதிகமாகி இருக்கு. விகடனுக்கு நன்றிகள் சொல்ற அதே நேரத்துல, பதிவர்களுக்கும் பாராட்டுகள் சொல்லணும்ல.

இதுவரைக்கும் விகடன்ல வந்த கதைகளோட தொகுப்புதான் இந்த பதிவு. விகடன் ஆன்லைன் வாசகர்களுக்காக விகடனோட லிங்க்கும் குடுத்திருக்கேன்.

லதானந்த் அங்கிள் மாதிரி எழுத்துலகுல இருந்து பதிவுலகுக்கு வந்தவங்களை நான் இந்த பதிவுல காட்டலை. பதிவுலகம் மூலமா எழுத ஆரம்பிச்சி இப்போ அச்சிற்கு முன்னேறியிருக்குறவங்களைப் பத்தி மட்டுமே இங்க குடுத்திருக்குறேன். அது மட்டுமில்லாம அவரோட அச்சுல வந்த கதைகளைத் தொகுத்தா தனியா அதுக்குன்னே பதிவு போட வேண்டிய அளவுக்கு லிஸ்ட் இருக்கும்ன்றதால இந்த் லிஸ்ட்ல அவர் எக்ஸ்க்ளூடட்.. :)))

லக்கிலுக்:
பதிவுலக சூப்பர்ஸ்டார்னு தாராளமா சொல்லலாம் இவரை. விகடன்ல நம்ம ஆட்களோட ஓட்டத்தை ஆரம்பிச்ச பெருமையும் லக்கியைத்தான் சேரும். மே 6, 2009 இதழ்ல அவர் எழுதுன 13பி அப்படின்ற கதைதான் நம்ம பதிவர்கள் எழுதி முதல்ல வந்த கதை.
அது குறித்து அதிஷா எழுதின பதிவு
விகடன் ஆன்லைன் இணைப்பு

அதிஷா:
ஏறத்தாழ நான் எழுத வந்த காலத்துலயே எழுத ஆரம்பிச்சவர் இவர். என்னோட நல்ல நண்பர் மட்டுமில்ல, என்னோட முதல் ஃபாலோயர்கள்ல ஒருத்தர் மற்றும் நான் ஃபாலோயர் ஆன முதல் சிலர்ல ஒருத்தர். லக்கியோட நெருங்குன நண்பரான இவரு லக்கியோட கதை வந்த அடுத்த வாரமே வந்தது ஆச்சர்ய சந்தோசம்.
இந்த கதை பத்தி லக்கியோட பதிவு
விகடன் இணைப்பு: கனா கண்டேனடி : மே 13, 2009

நர்சிம்:
அறிமுகமே தேவை இல்லாத கார்ப்பரேட் கம்பர். என்னோட முதல் கதை விகடன்ல வந்தப்ப என்னைவிட அதிகம் சந்தோசப்பட்ட சிலர்ல இவரும் ஒருத்தர். இதுவரைக்கும் இவரோட ரெண்டு கதைகள் விகடன்ல வந்திருக்கு. முதல் கதையே நாலுபக்க சிறுகதை அப்படின்றது இவரோட கதை சொல்ற திறமைக்கு எடுத்துக்காட்டு. இந்த கதைகளைத் தவிர, பொதுத் தேர்தல் சமயத்துல ஜூனியர் விகடன்ல இவரோட நையாண்டியான கமென்ட்ஸ் நாலைந்து வாரங்கள் வந்தது.

முதல் கதை குறித்து இவரோட பதிவு
விகடன் ஆன்லைன் இணைப்பு: இன்னுமொரு காதல் கதை, மே 13, 2009

இரண்டாவது கதை கதை குறித்து இவரோட பதிவு
விகடன் ஆன்லைன் இணைப்பு: அஞ்சு கொலைகள்! ஜூன் 10, 2009

வடகரை வேலன்:
அண்ணாச்சின்னு எல்லோராலயும் செல்லமா அழைக்கப்படுகிற கோவைப் பதிவர். இது அவரோட புனைவா இல்லை உண்மை சம்பவமான்னு அவருதான் சொல்லணும். ஒரு வீட்டுக்குள்ள நடக்குற விசயங்களை ரொம்ப இயல்பா சொல்லியிருந்தாரு நம்ம அண்ணாச்சி. ஏற்க‌ன‌வே குங்கும‌த்துல‌யும் அண்ணாச்சி வ‌ந்திருக்காருன்ற‌து ஒரு சிற‌ப்பு

விக‌ட‌ன் ஆன்லைன் இணைப்பு: நல்ல அம்மா... நல்ல பொண்ணு!, மே 20, 2009

கேபிள் சங்கர்:
சினிமாத் துறையில இருந்து பதிவுலகத்துல ஆக்டிவா இருக்குற கேபிள் சங்கர் இதுவரைக்கும் ரெண்டு முறை விகடன்ல வந்துட்டாரு. முதல்ல ஒரு பக்கக் கதையாவும், போன வாரம் நாலு பக்க சிறுகதையாவும் வந்துட்டாரு. போன வியாழக்கிழமை, ஜெயா டிவில ஒரு மணிநேரம் வாசகர்களுடனான கலந்துரையாடல்லயும் அவர் கலந்துட்டு கலக்குனாருன்றது கூடுதல் சந்தோஷம்.

முதல் ஒருபக்கக் கதை பத்தின இவரோட பதிவு
விக‌ட‌ன் ஆன்லைன் இணைப்பு: விளையாட்டு வியூகம்! மே 20, 2009

இரண்டாவது கதை பத்தின இவரோட பதிவு
விக‌ட‌ன் ஆன்லைன் இணைப்பு: எங்கிருந்தோ வந்தாள் - சிறுகதை, ஜூன் 17, 2009


பரிசல்காரன்:
கடந்த ஒருவருசத்துல பதிவுலகுல தனக்குன்னு ஒரு தனி இடத்தைப் பிடித்த திருப்பூர்க்காரர். குறுகிய காலத்துல ரெண்டு லட்சம் ஹிட் + 200 ஃபாலோயர்ஸ் அடிச்சது இவரோட குறிப்பிடத்தக்க சாதனை. என்னோட கதை விகடன்ல வந்தப்ப, முதல் முதல்ல வாழ்த்து சொன்னது இவர்தான். இதுவரைக்கும் இவரோட ரெண்டு ஒருபக்கக் கதைகள் விகடன்ல வந்திருக்கு.

விக‌ட‌ன் ஆன்லைன் இணைப்பு: நட்சத்திரம், மே 20, 2009
விக‌ட‌ன் ஆன்லைன் இணைப்பு: செவ்வரளி - ஒரு பக்கக் கதை, ஜூன் 17, 2009

ஆதிமூலகிருஷ்ணன் (அ) தாமிரா:
தங்கமணி தாமிரான்னு சொன்னா எல்லாருக்கும் "பளிச்"னு தெரியுற அளவுக்கு புகழ் பெற்றவர். தங்கமணிப் பதிவுகள்ல கலக்குற இவர் எழுதுற துறை சார்ந்த பதிவுகளும் அதே அளவு இன்ட்ரெஸ்டிங்கா இருக்குறது இவரோட திறமைக்கு எடுத்துக்காட்டு. கதை எழுதத் தெரியாதுன்னு சொல்லிகிட்டே இவரு எழுதுன கதை சூப்பர் ஹிட்.

விகடன் கதை பத்தின இவரோட பதிவு
விகடன் ஆன்லைன் இணைப்பு: ரேஸ், மே 27, 2009

வெண்பூ:
ஹி..ஹி.. அடியேன்தான். இதுவரைக்கும் என்னோட ரெண்டு ஒருபக்கக் கதைகள் வந்திருக்கு. என்னோட ரெண்டாவது கதை வந்த வாரமே பரிசல், கேபிள் சங்கரோட கதைகளும் வந்தது கூடுதல் மகிழ்ச்சி.

என்னோட முதல் கதைய பத்தி நர்சிம் போட்ட பதிவு
என்னோட முதல் கதைய பத்தி கேபிள் சங்கர் போட்ட பதிவு
விகடன் ஆன்லைன் இணைப்பு: கி.பி. 2209-ல் ஒரு நாள், ஜூன் 3, 2009

ரெண்டாவது கதை பத்தி ஆதியோட பதிவு
விகடன் ஆன்லைன் இணைப்பு: வெடிகுண்டு முருகேசன்!, ஜூன் 17, 2009

அச்சில் வந்த பதிவர்களின் லிஸ்ட் இதோட நிக்காதுன்றது நல்லா தெரியும். இந்த வாரம் யாரோட கதைங்க‌?
மேலும் வாசிக்க...

Monday, June 15, 2009

வலைச்சரத்தில் வெண்பூ : ஒரு சுய‌ அறிமுகம்

"வெண்பூ, நீங்க வலைச்சர ஆசிரியர் ஆயாச்சா?" என்று கேட்கும் நண்பர்களுக்கு, "இதுவரைக்கும் இல்லை" என்பதாகவே பதில் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

ஒவ்வொரு முறை சீனா அய்யா கேக்குறப்பவெல்லாம், 'கஷ்டம் ஐயா, இருக்குற பதிவுல போஸ்ட் போடுறதுக்கே நாக்குல நுரை தள்ளுது, இதுல ஒரே வாரத்துல நாளுக்கொரு பதிவா எப்படி போடுறது?'ன்னு நெனச்சிகிட்டு, 'ஒரு மாசம் போகட்டும் அய்யா'ன்னு தள்ளிப் போட்டுகிட்டே இருக்க, அவரும் "கண்டிப்பாக உங்களால எழுத முடியும் வெண்பூ" அப்படின்னு என்கூட விடாக்கண்டன் கொடாக்கண்டன் விளையாட்டு விளையாடி என்னை எழுத வெச்சிட்டாரு. நன்றி அய்யா.

என்னை நல்லா தெரிஞ்ச பதிவுலக நண்பர்கள் பலபேருக்கு என்னோட உண்மையான பெயரே தெரியாதுன்றதே ஆச்சர்யம்தான். அதேபோல எனக்கும் பலபேரோட நிஜப்பெயரே தெரியாது அல்லது சட்டுன்னு நினைவுக்கு வராது.

எல்லாரும் திரும்பத் திரும்பச் சொல்ற மாதிரி இந்த வலையுலகத்துல வந்ததுக்கு எனக்கு கிடைச்ச மிகப்பெரிய நன்மை நண்பர்கள்தான். சின்ன வயசுல புத்தகங்கள்ல (குமுதம்?) பேனா நட்பு அப்படின்னு ஒரு பகுதி வரும். அப்போவெல்லாம் எப்படிடா முகமே பாக்காம இப்படி பிசிராந்தையர் கணக்கா நட்பு வெச்சிக்க முடியும்னு நெனப்பேன். ஆனா இன்னிக்கு எனக்கே அந்த மாதிரி யு.எஸ், அமீரகம், சிங்கப்பூர், மலேசியா இப்படி உலகம் முழுக்க நண்பர்கள், நெறைய பேரை ஃபோட்டோல பாத்ததோட சரின்றது ஆச்சர்யமான விசயம்.

பதிவுகள் எழுத ஆரம்பிச்சப்புறம்தான் எனக்கே இந்த அளவு தமிழ் சரளமா எழுத வரும்னு தெரிய வந்தது. எழுத ஆரம்பிச்சி ஒரே வருசத்துல விகடன்ல ரெண்டு முறை என்னோட கதைகள் வந்தது எனக்கு ரொம்ப சந்தோசமான விசயம். அதுக்கு முக்கியக் காரணம் நான் மொக்கையாவே எழுதுனாலும் "நல்லா இருக்கு, இன்னும் நிறைய எழுது"ன்னு சொல்லி ஊக்கப்படுத்துற என் பதிவுலக நண்பர்கள்.

தேங்ஸ் பதிவுலகம்.

இந்த அறிமுகத்துல என்னோட பதிவுகள்ல எனக்கு புடிச்சதை அறிமுகப்படுத்தனுமாமே.. நான் எழுதறது எல்லாமே நல்லாத்தான் இருக்கும் (சரி..சரி..) இருந்தாலும் இதுவரைக்கும் படிக்காதவங்களுக்காக ஒரு சில பதிவுகள்.

டிபிசிடி.. சென்னை பதிவர் சந்திப்பில் நடந்தது என்ன? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!!!

மாயா..மாயா..எல்லாம் மாயா.. (அறிவியல் சிறுகதை): நான் எழுதுனதுலயே பர்சனலா எனக்கு ரொம்பப் பிடிச்சக் கதை இது. ஆனா கம்ப்யூட்டர் ஃபீல்ட்ல இருக்குறவங்களைத் தவிர மத்தவங்களுக்கு இது புரியறது கொஞ்சம் கஷ்டம். முடிஞ்சா பின்னூட்டங்களையும் ஒருதடவை வாசிச்சிப் பாருங்க.

கர்நாடக கண்டக்டரும் கவுண்ட பெல்லும்: அப்பப்ப நடக்குற நிகழ்வுகளை எழுதலாம்னு நெனச்சப்ப ஆரம்பிச்சது இது. இந்த பதிவுக்கப்புறம் வேற எதுவும் எழுத முடியலை. வழக்கம்போல ஆணி அதிகம் அப்படின்ற பாட்டுதான்.. :)

சரி.. இன்னைக்கு இந்த மொக்கை போதும். இந்த வாரம் முழுக்க வலைச்சரத்துல மீட் பண்ணலாம். நன்றி..
மேலும் வாசிக்க...

Sunday, June 14, 2009

நன்றி அகநாழிகை - வாழ்த்துகள் வெண்பூ

அன்பின் பதிவர்களே !

கடந்த ஒரு வார காலமாக கவிதை மழை பொழிந்து - கவிஞர்களை அறிமுகப் படுத்தி - எட்டு இடுகைகளிட்டு ஏறத்தாழ நூறு மறு மொழிகள் பெற்று , கலக்கிக்கொண்டிருந்த அருமை நண்பர் அக நாழிகை என்ற பொன்.வாசுதேவன் தன் பணியினைச் செவ்வனே செய்த மன நிறைவினில் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவரை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்பி வைக்கிறோம்.

நாளை 15ம் நாள் சூன் திங்கள் 2009 முதல் வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பினை ஏற்க வருகிறார் அருமை நண்பர் வெண்பூ. இவர் மார்ச்சு 2008லேயே வலைப்பூ துவங்கி விட்டாலும் ஜூன் 2008ல் தான் முதல் இடுகையினையே இட்டிருக்கிறார். பல்வேறு சிந்தனைகளின் அடிப்படியில்
இடுகைகள் இடுகிறார்.

வெண்பூவினை வாழ்த்துகளுடன் வரவேற்பதில் பெருமை அடைகிறோம்.

சீனா
மேலும் வாசிக்க...

அலைகள் தொடர்கின்றன....

வலைச்சரத்தில் சில கவிதைகளையும், பதிவர்களையும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு அளித்த திரு.சீனாஅய்யா அவர்களுக்கு என் அன்பும் வணக்கமும். நான் முழுமையாகவும், சிறப்பாகவும் செய்யாததாகவே உணர்கிறேன். கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

'அகநாழிகை' பொன்.வாசுதேவன்
மேலும் வாசிக்க...

Saturday, June 13, 2009

சொற்சிற்பம்

எந்த படைப்பும் படைப்பாளியில் கைகளில் வெறும் சொற்களின் கோர்வையாக தான் படைக்கப்படுக்கின்றது. என்ன பாடுபொருளாக இருந்தாலும் படைப்பாளி தன் சொற்களை எண்ணத்திலிருந்து விரல்வழி உதிர்க்கும் வரை தான் அது அவன் படைப்பாகிறது பின் அது பொது உடைமையாகிறது. ஒரு கவிஞனின் படைப்பு சொற்சிற்பமாவது வாசகரின் அனுபவ நுகர்வினால் மட்டுமே. புது கவிதைகள் மற்றும் நவீன கவிதைகள் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தன்னோடான அனுப்பவத்தின் மீள்நீள்வாக தோற்றம் பெறுகையிலேயே அது கொண்டாடபடுகின்றது. இன்றைய கவிஞர்களை பார்ப்போம்.

'நெய்தல்' ஆர்.வி.சந்திரசேகர்

பறவைக் கண்டுணர்தல்
------------------------------
அலைவுகளுக்குப் பின்னால்
தணிவு கொண்ட நதிபோல் இருக்கிறேன்
சிறுமி எறிந்த கூழாங்கல்லென
விழுந்து தளும்புகிறாய் என்னுள்
வட்டவட்டமாய்கிளர்ந்து பரவுகின்றன
காதலின் பெருங்கரங்கள்.
மரத்திலிருந்து மீன் பார்க்கிறது
ஆழத்தில் நீந்தும் மீன்கொத்தியை.
மிதக்கும் தக்கையின் ஏற்ற இறக்கத்தில்
துயில்கிறது காலத்தின் நிசப்தம்.
உற்றுநோக்கும் கடவுளின் கண்களை விலக்கி
நிறுத்திவிடவேண்டும்
அதிர்வுகளோடு பரவும் பேரலைகளை,
முடிந்தால்
பெருங்கடல்களில் கலக்கும் நதிகளை.

'நிலாகாலம்' லஷ்மிசாகம்பரி

தீராநதி
---------
நகர்கிறேன்
தெளிந்த நீரின் பிரவாகமாய்
தடயங்களை விட்டுசெல்வதில்லை
பாறைகளின் வன்மம்


நகர்த்தப்படுகிறேன்
உதிர்ந்து விட்ட சருகுகள்
சொல்ல மறந்த சலசலப்பில்


வரையறுக்கப்படாதது
என் வெளி
வெளிச்சமும் இருளும்
வித்தியாச படுவதில்லை

பெருமழையின் சுவடுகள்
எதிர்பாராத வெள்ளமாயும்
வானவில்லின் பிரதிபலிப்பிலும்

உயிர்ப்புடன் பயணிக்கிறேன்
தீராநதியாய் நான்


'நேயமுகில்' கார்த்திகா

முதன் முறை
-----------------
இப்போதுதான்
பறக்கிறேன் என்றது
காற்றில் அலையும்
ஒற்றை இறகு.

கென்

வாழ்வு
-----------
ஏதோ ஒரு புள்ளி வழி
கசிந்த வெளிச்சம்
தூசுகளின் வர்ணஜாலங்களில்
மூழ்க‌டித்திருந்த‌து இருளை

நிகழ்வின் பாரம்தனில் தொலைவு
புல‌ப்ப‌டாம‌லே இருந்தது
விளக்குகளை பற்றிய தகவல்கள்
அச்சமூட்டிக் கொண்டிருந்தன

பாறைகளின் மீதும் விருட்சமாகும்
பறவையின் எச்சம் என்பதை
இப்போது ஒப்புக்கொள்கிறார்கள்

எவை என்னவானாலும்
நதியோடு ஓடிக்கொண்டிருக்கின்றன கூழாங்கற்கள்

நேசமித்ரன் கவிதைகள்

மரம் கொத்திகள் இல்லாத காடு
----------------------------------------
ஏன் ஆம் ?
சரிஏன் இல்லை..?

நேர்ந்தது...? நிகழ்ந்தது...?

கேள்விகளாகவே மிஞ்சி விடுகிற
கேள்விகள்

அழுகை மறக்க சிரிக்கவும்
கோபம் தீராமல் அழவும்

பிரியமும் இல்லை
வெறுப்பும் இல்லை

காய்ந்த உதிரம் கருப்பேறிக்
கொண்டிருக்கிறது..

மண் புழுவின் உயிர் போல்
விரவி கிடக்கிறது பிரிய விஷம்

மரங்கொத்திகள் இல்லா
காடு நோக்கி
விடை பெறுகிறேன்
------------

மீண்டும் கவிதைகளிடனோ அல்லது இன்னபிறவுடனோ சந்திப்போம்
மேலும் வாசிக்க...

Friday, June 12, 2009

இருப்பற்று அலையும் வெளி

இயல்பெழுச்சியுடன் யதார்த்த தளத்தில் இயங்குகின்ற கவிதைகள் பெரும்பாலும் பிடித்து விடுகின்றன. சில கவிதைகளின் பொருளை வார்த்தைகளால் விவரிக்க இயலாமல் படித்ததும் ஒரு உணர்வு தோன்றும். கவிதை மனதால் உணர்ந்து இரசிக்கப்பட வேண்டும். புரிதல் புரியாமை என்பது வாசிப்பவரின் வாழ்வனுபவம் சார்ந்தது. ஒரு கவிதையைப் படித்தவுடன் எழுதியவருக்கும் வாசிப்பவருக்கும் இடையே ஏற்படும் உணர்வு உறவுநிலையே கவிதையின் புரிதலை அளிக்கிறது.

இன்று சில கவிஞர்களின் கவிதைகளைக் காண்போம்.

கோகுலன் கவிதைகள்

நானும் காதலும்

மெந்நீலக் கடற்பரப்பின் மீதுலாவும்
தென்றலின் வழியே
நீயனுப்பும் அன்பின் செய்திகளில்
நனைந்துவரும் வண்ணத்துப்பூச்சி
என் வாசல் கடக்கும் தருணம்

அதன் பின்னோடிச் சென்று
செட்டை வருடுகிறேன்
விரல்களில் ஒட்டிக்கொள்கிறது
உன் நேசம்!


அதி குளிர் காலத்தின்
பனிபொழிந்த காலையொத்து

வெண்மை வெடித்துக் கிடக்கிற
இப் பாலைப் பருத்திக்காட்டின்

ஒரு மூலையில் நின்றபடி
உன் பெயரை உரக்கக் கூவுகிறேன்

மெல்லத்தவழும் மேற்காற்றில்
நிறைந்து மிதக்கின்றன
நம் காதலின் பிசிறுகள்!

காதல் கறுப்பி

சாபம்

வேறெதுவும் சொல்ல முடியாத வேளைகளில் புரிகிறது
வாழ்வு மீதான பிடிப்பென்பதும் இருத்தலென்பதும்


நானென்பது
எனக்கு இலக்கியமும் தெரியாது,
தத்துவமும் தெரியாது
,

வாழ்தல் என்பதென் தப்பித்தல்களும்

இருத்தல் என்பதென் பிரயத்தனங்களும்

என் மறைவுக்கு பின்னர் எழுதப்படும்
எதுவுமில்லாத பின்குறிப்புகளும்.


நீங்கள்...
விதிக்கப்படாது தொடர்கிற சாபமென
தேடிப்படித்தெழுதுவீர்கள்

திரிக்கப்பட்ட வரலாறுகளையும்,
இன்ன பிறவைகளையும்.


இப்பொழுது எழுதிக்கொள்ளுங்கள்
ஆதிக்குடிகளின் அழிவும்

அரிதார(அதிகார) புருஷர்களின் வலியுறுத்தல்களும்

காணாமல் போன கடவுளர்களும் என்பதாக!

இவள் என்பது பெயர்ச்சொல் (உமாஷக்தி)

தனிமையின் இரவு

கனவுக்குள் வந்த கனவின்
மிளிரும் விடிவெள்ளியின் ஊடே
ஊர்ந்து நடக்கும் போது
கணப்பொழுதில் கண்ணுக்குள் சிக்கி
காணாமல் போயின..
நிறமறியா சில பறவைகள்!
சட்டென கனவினை உடைத்து வெளிவந்தது
நீண்ட அலகுடைய பட்சியொன்று
கனவா நினைவா காட்சியா
திகைக்கும் முன்
தீராக் கோபத்துடன் கொத்தித் தின்றது
தனிமையின் இரவு முழுவதையும்!

ஆதவா

பெண்களின் குளியலறை

பெண்களின் குளியலறை
எப்பொழுதும் வாசனை மிக்கதாக இருக்கிறது
கடந்து செல்லுகையிலும்
அறைக்குள் நுழைகையிலும்

அவர்களின் அழுக்குகள்
சுவற்றில்
புலப்படாத ஓவியங்களை
நவீன தத்துவங்களாக வரைகின்றன

வழுக்கி விழும் பல்லிகளுக்கு மோட்சமும்
அகப்படாமல் ஒளிந்து கொள்ளும்
பூச்சிகளுக்கு வேட்கையும்
பெண் குளியலின் பரிசாகக் கிடைக்கின்றன

நான்கு சுவர்களுக்குள் பதுங்கியிருக்கும்
பெண்களின் ரகசியங்களை
எளிதில் எவராலும்
கவர்ந்து கொள்ள முடியவில்லை

இப்பொழுதும்
நீங்கள் எட்டிப் பார்க்கலாம்
பெண்கள் இல்லாத நேரங்களில்
சுவர்கள் எவ்வளவு சோம்பிக்கிடக்கின்றன என்று.

ரவி ஆதித்யா

நாய் குட்டிக்கு அம்மா வேணும்

புசுபுசுவென

ஒரு செல்ல நாய் குட்டி

வளர்க்க வேண்டும்

அடம் பிடித்தாள்

என் சின்ன மகள்

யார் கவனித்துக்கொள்வது

சாத்தியமில்லை என்றேன்

வேலைக்குப் போகும்

அம்மாவும் அப்பாவும்

இருக்கும் வீட்டில்

அம்மாவை ரிசைன்

பண்ணிவிட்டு

கவனித்துக் கொள்ளச் சொன்னாள்

மனமில்லை அவளுக்கு

கிரெஷ்ஷில் விட.

.......................................................

தொடர்ந்து வாசிப்போம்.

மிக்க அன்புடன்,

‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது