07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, June 13, 2009

சொற்சிற்பம்

எந்த படைப்பும் படைப்பாளியில் கைகளில் வெறும் சொற்களின் கோர்வையாக தான் படைக்கப்படுக்கின்றது. என்ன பாடுபொருளாக இருந்தாலும் படைப்பாளி தன் சொற்களை எண்ணத்திலிருந்து விரல்வழி உதிர்க்கும் வரை தான் அது அவன் படைப்பாகிறது பின் அது பொது உடைமையாகிறது. ஒரு கவிஞனின் படைப்பு சொற்சிற்பமாவது வாசகரின் அனுபவ நுகர்வினால் மட்டுமே. புது கவிதைகள் மற்றும் நவீன கவிதைகள் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தன்னோடான அனுப்பவத்தின் மீள்நீள்வாக தோற்றம் பெறுகையிலேயே அது கொண்டாடபடுகின்றது. இன்றைய கவிஞர்களை பார்ப்போம்.

'நெய்தல்' ஆர்.வி.சந்திரசேகர்

பறவைக் கண்டுணர்தல்
------------------------------
அலைவுகளுக்குப் பின்னால்
தணிவு கொண்ட நதிபோல் இருக்கிறேன்
சிறுமி எறிந்த கூழாங்கல்லென
விழுந்து தளும்புகிறாய் என்னுள்
வட்டவட்டமாய்கிளர்ந்து பரவுகின்றன
காதலின் பெருங்கரங்கள்.
மரத்திலிருந்து மீன் பார்க்கிறது
ஆழத்தில் நீந்தும் மீன்கொத்தியை.
மிதக்கும் தக்கையின் ஏற்ற இறக்கத்தில்
துயில்கிறது காலத்தின் நிசப்தம்.
உற்றுநோக்கும் கடவுளின் கண்களை விலக்கி
நிறுத்திவிடவேண்டும்
அதிர்வுகளோடு பரவும் பேரலைகளை,
முடிந்தால்
பெருங்கடல்களில் கலக்கும் நதிகளை.

'நிலாகாலம்' லஷ்மிசாகம்பரி

தீராநதி
---------
நகர்கிறேன்
தெளிந்த நீரின் பிரவாகமாய்
தடயங்களை விட்டுசெல்வதில்லை
பாறைகளின் வன்மம்


நகர்த்தப்படுகிறேன்
உதிர்ந்து விட்ட சருகுகள்
சொல்ல மறந்த சலசலப்பில்


வரையறுக்கப்படாதது
என் வெளி
வெளிச்சமும் இருளும்
வித்தியாச படுவதில்லை

பெருமழையின் சுவடுகள்
எதிர்பாராத வெள்ளமாயும்
வானவில்லின் பிரதிபலிப்பிலும்

உயிர்ப்புடன் பயணிக்கிறேன்
தீராநதியாய் நான்


'நேயமுகில்' கார்த்திகா

முதன் முறை
-----------------
இப்போதுதான்
பறக்கிறேன் என்றது
காற்றில் அலையும்
ஒற்றை இறகு.

கென்

வாழ்வு
-----------
ஏதோ ஒரு புள்ளி வழி
கசிந்த வெளிச்சம்
தூசுகளின் வர்ணஜாலங்களில்
மூழ்க‌டித்திருந்த‌து இருளை

நிகழ்வின் பாரம்தனில் தொலைவு
புல‌ப்ப‌டாம‌லே இருந்தது
விளக்குகளை பற்றிய தகவல்கள்
அச்சமூட்டிக் கொண்டிருந்தன

பாறைகளின் மீதும் விருட்சமாகும்
பறவையின் எச்சம் என்பதை
இப்போது ஒப்புக்கொள்கிறார்கள்

எவை என்னவானாலும்
நதியோடு ஓடிக்கொண்டிருக்கின்றன கூழாங்கற்கள்

நேசமித்ரன் கவிதைகள்

மரம் கொத்திகள் இல்லாத காடு
----------------------------------------
ஏன் ஆம் ?
சரிஏன் இல்லை..?

நேர்ந்தது...? நிகழ்ந்தது...?

கேள்விகளாகவே மிஞ்சி விடுகிற
கேள்விகள்

அழுகை மறக்க சிரிக்கவும்
கோபம் தீராமல் அழவும்

பிரியமும் இல்லை
வெறுப்பும் இல்லை

காய்ந்த உதிரம் கருப்பேறிக்
கொண்டிருக்கிறது..

மண் புழுவின் உயிர் போல்
விரவி கிடக்கிறது பிரிய விஷம்

மரங்கொத்திகள் இல்லா
காடு நோக்கி
விடை பெறுகிறேன்
------------

மீண்டும் கவிதைகளிடனோ அல்லது இன்னபிறவுடனோ சந்திப்போம்

4 comments:

  1. ஆறாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வாழ்த்துகளுடன்.... நல்ல அறிமுகங்களுக்கும் நன்றி

    ReplyDelete
  3. தேர்ந்த படிமக் கவிதைகளை தேடிப் பிடித்து தொகுத்திருக்கிறீர்கள்.

    அனைத்தும் ரசிக்கும் படி இருந்தது.

    குறிப்பாக மரங்கொத்தி இல்லா காடுகள் ரசித்தேன்.

    பகிர்தலுக்கு நன்றி வாசு சார்.

    ReplyDelete
  4. அருமை ....!! அருமை ...!! எல்லாமே அருமை ....!!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது