07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, June 12, 2009

இருப்பற்று அலையும் வெளி

இயல்பெழுச்சியுடன் யதார்த்த தளத்தில் இயங்குகின்ற கவிதைகள் பெரும்பாலும் பிடித்து விடுகின்றன. சில கவிதைகளின் பொருளை வார்த்தைகளால் விவரிக்க இயலாமல் படித்ததும் ஒரு உணர்வு தோன்றும். கவிதை மனதால் உணர்ந்து இரசிக்கப்பட வேண்டும். புரிதல் புரியாமை என்பது வாசிப்பவரின் வாழ்வனுபவம் சார்ந்தது. ஒரு கவிதையைப் படித்தவுடன் எழுதியவருக்கும் வாசிப்பவருக்கும் இடையே ஏற்படும் உணர்வு உறவுநிலையே கவிதையின் புரிதலை அளிக்கிறது.

இன்று சில கவிஞர்களின் கவிதைகளைக் காண்போம்.

கோகுலன் கவிதைகள்

நானும் காதலும்

மெந்நீலக் கடற்பரப்பின் மீதுலாவும்
தென்றலின் வழியே
நீயனுப்பும் அன்பின் செய்திகளில்
நனைந்துவரும் வண்ணத்துப்பூச்சி
என் வாசல் கடக்கும் தருணம்

அதன் பின்னோடிச் சென்று
செட்டை வருடுகிறேன்
விரல்களில் ஒட்டிக்கொள்கிறது
உன் நேசம்!


அதி குளிர் காலத்தின்
பனிபொழிந்த காலையொத்து

வெண்மை வெடித்துக் கிடக்கிற
இப் பாலைப் பருத்திக்காட்டின்

ஒரு மூலையில் நின்றபடி
உன் பெயரை உரக்கக் கூவுகிறேன்

மெல்லத்தவழும் மேற்காற்றில்
நிறைந்து மிதக்கின்றன
நம் காதலின் பிசிறுகள்!

காதல் கறுப்பி

சாபம்

வேறெதுவும் சொல்ல முடியாத வேளைகளில் புரிகிறது
வாழ்வு மீதான பிடிப்பென்பதும் இருத்தலென்பதும்


நானென்பது
எனக்கு இலக்கியமும் தெரியாது,
தத்துவமும் தெரியாது
,

வாழ்தல் என்பதென் தப்பித்தல்களும்

இருத்தல் என்பதென் பிரயத்தனங்களும்

என் மறைவுக்கு பின்னர் எழுதப்படும்
எதுவுமில்லாத பின்குறிப்புகளும்.


நீங்கள்...
விதிக்கப்படாது தொடர்கிற சாபமென
தேடிப்படித்தெழுதுவீர்கள்

திரிக்கப்பட்ட வரலாறுகளையும்,
இன்ன பிறவைகளையும்.


இப்பொழுது எழுதிக்கொள்ளுங்கள்
ஆதிக்குடிகளின் அழிவும்

அரிதார(அதிகார) புருஷர்களின் வலியுறுத்தல்களும்

காணாமல் போன கடவுளர்களும் என்பதாக!

இவள் என்பது பெயர்ச்சொல் (உமாஷக்தி)

தனிமையின் இரவு

கனவுக்குள் வந்த கனவின்
மிளிரும் விடிவெள்ளியின் ஊடே
ஊர்ந்து நடக்கும் போது
கணப்பொழுதில் கண்ணுக்குள் சிக்கி
காணாமல் போயின..
நிறமறியா சில பறவைகள்!
சட்டென கனவினை உடைத்து வெளிவந்தது
நீண்ட அலகுடைய பட்சியொன்று
கனவா நினைவா காட்சியா
திகைக்கும் முன்
தீராக் கோபத்துடன் கொத்தித் தின்றது
தனிமையின் இரவு முழுவதையும்!

ஆதவா

பெண்களின் குளியலறை

பெண்களின் குளியலறை
எப்பொழுதும் வாசனை மிக்கதாக இருக்கிறது
கடந்து செல்லுகையிலும்
அறைக்குள் நுழைகையிலும்

அவர்களின் அழுக்குகள்
சுவற்றில்
புலப்படாத ஓவியங்களை
நவீன தத்துவங்களாக வரைகின்றன

வழுக்கி விழும் பல்லிகளுக்கு மோட்சமும்
அகப்படாமல் ஒளிந்து கொள்ளும்
பூச்சிகளுக்கு வேட்கையும்
பெண் குளியலின் பரிசாகக் கிடைக்கின்றன

நான்கு சுவர்களுக்குள் பதுங்கியிருக்கும்
பெண்களின் ரகசியங்களை
எளிதில் எவராலும்
கவர்ந்து கொள்ள முடியவில்லை

இப்பொழுதும்
நீங்கள் எட்டிப் பார்க்கலாம்
பெண்கள் இல்லாத நேரங்களில்
சுவர்கள் எவ்வளவு சோம்பிக்கிடக்கின்றன என்று.

ரவி ஆதித்யா

நாய் குட்டிக்கு அம்மா வேணும்

புசுபுசுவென

ஒரு செல்ல நாய் குட்டி

வளர்க்க வேண்டும்

அடம் பிடித்தாள்

என் சின்ன மகள்

யார் கவனித்துக்கொள்வது

சாத்தியமில்லை என்றேன்

வேலைக்குப் போகும்

அம்மாவும் அப்பாவும்

இருக்கும் வீட்டில்

அம்மாவை ரிசைன்

பண்ணிவிட்டு

கவனித்துக் கொள்ளச் சொன்னாள்

மனமில்லை அவளுக்கு

கிரெஷ்ஷில் விட.

.......................................................

தொடர்ந்து வாசிப்போம்.

மிக்க அன்புடன்,

‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

7 comments:

  1. ஐந்தாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. ஒரு கவிதையைப் படித்தவுடன் எழுதியவருக்கும் வாசிப்பவருக்கும் இடையே ஏற்படும் உணர்வு உறவுநிலையே கவிதையின் புரிதலை அளிக்கிறது\\

    ஆஹா! அழகா சொன்னீங்க ...

    ReplyDelete
  3. கவிதைகளும் அறிமுகமும் அருமை வாசு.. இரு புதிய அறிமுகங்கள் எனக்கு.. நன்றி..:-)

    ReplyDelete
  4. நல்ல அறிமுகம், நல்ல பகிர்வு

    ReplyDelete
  5. அனைவர் கவிதைகளும் அருமையாக இருந்தது!

    ReplyDelete
  6. மேலும் புதிய கவிஞர்களையும் கவிதைகளையும் அறிமுப் படுத்துவதற்கு நன்றி வாசு சார்.

    ReplyDelete
  7. வாசிக்கப்பட்ட கவிதைகள் எனிலும்.. மீள்வாசிப்பிலும் மிகவும் ரசனைமிகுந்தவையாகவே உள்ளன!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது