07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 21, 2009

சினிமா வலைஞர்கள்

சினிமா.... நம்மோட வாழ்க்கையில தவிர்க்க முடியாத ஒரு அம்சம். பொழுதுபோக்கு அப்படின்னு சொன்னாலே டிவிக்கு அடுத்து முதல்ல ஞாபகம் வர்ற ஒரு விசயம். வலையுலகத்துலயும் சினிமா மேல அதீத பற்று இருக்குற பலர் இருக்குறாங்க. அதுல நான் பார்த்த சிலரைப் பத்தி இன்னிக்கு சொல்லப் போறேன்.

முரளிகண்ணன்:
வலையுலகத்துல சினிமான்னு சொன்னேலே உடனே நினைவுக்கு வர்றது நம்ம முரளிதான். 75 வருச தமிழ் சினிமா உலகத்தை அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு அலசி நூத்துக்கும் மேல பதிவு போட்டிருக்காரு முரளி. விகடன் வரவேற்பறையில இவரோட வலைப்பூ சுட்டப்பட்டதே இவரோட ரீச்சிற்கு சாட்சி.

சினிமா மட்டும் இல்லாமல் நகைச்சுவை, நையாண்டியும் இவரு கலக்கலா எழுதுறாரு. உண்மையா புனைவான்னு சந்தேகம் வர்ற அளவுக்கு புனைவுகள் எழுதுறதுல இவர் இன்னொரு சாரு. பாராட்டுகள் முரளி.

கேபிள் சங்கர்:
நமக்கெல்லாம் சினிமா பொழுது போக்குன்னா, இவரு பொழுதைப் போக்குறதே சினிமாவுலதான். எந்த தமிழ்ப்படமா இருந்தாலும் அது எவ்வளவு மொக்கையா இருந்தாலும் அந்த படத்தை தியேட்டர்ல போய் பாத்துட்டு விரிவான விமர்சனம் எழுதுற ஆளு இவர்.

தமிழ்ப்படம் மட்டுமில்லாம தான் ரசிச்ச தெலுங்கு, ஹிந்தி மொழிப்படங்களையும், சிறப்பான உலகப்படங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தி நம் சினிமா அறிவை அடுத்த தளத்துக்கு கொண்டு போக சீரியஸா முயற்சி செய்யுறாரு. அப்பப்போ டிவி சீரியல்கள்லயும் தலைகாட்டுறாருன்றது இவரோட இன்னொரு சிறப்பு.

ஒரு நடிகரா பலபடங்கள்ல நடிச்சிட்டு இப்ப டைரக்டர் ஆக முயற்சி செஞ்சுகிட்டு இருக்கார். வாழ்த்துகள் கேபிள்.

ஜாக்கி சேகர்:
இன்னொரு சினிமாக் காதலர். ப்ரொஃபஷனல் கேமிராமேன். உலகப்படங்கள் குறித்த இவரோட விமர்சனங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். வலையுலகத்துல உலகப்படங்கள் குறித்து வேற யாரும் இவரை விட அதிகமா எழுதலைன்னு நினைக்கிறேன்.

இவரோட விமர்சனத்தோட பிடிச்ச விசயமே, கதையோட முக்கிய விசயங்களை சொல்லி சஸ்பென்ஸை கெடுக்க மாட்டார். படம் குறித்து மேலோட்டமான விமர்சனத்தை மட்டும் சொல்லி, படம் பார்க்குற ஆவலை தூண்டுறது இவரோட ஸ்டைல். பாராட்டுகள் ஜாக்கி.

**************

இன்றோட என் வலைச்சர ஆசிரியர் பணி முடிவடையுது. என்னால முடிஞ்சவரைக்கும் வெர்சடைலா தொகுக்க முயற்சி பண்ணினேன். ஒரு சில முக்கிய ந(ண்)பர்கள் விட்டுப்போயிருக்கலாம். அது மறதியினாலயும், அதிக நேரமின்மையாலயும்தானே தவிர இன்டென்ஷனல் கிடையாது.

இந்த வாரத்துல ஒரு நாள் தவிர மத்த எல்லா நாளும் பதிவு போட முடிஞ்சது. இதுவரைக்கும் என்னோட வலைப்பூவுல ஒரு மாசத்துக்கு 6 பதிவு போட்டதுதான் அதிக எண்ணிக்கையா இருந்தது. ஆனா என்னை வலைச்சரத்துக்கு ஆசிரியர் ஆக்கி ஒரே வாரத்துல அதே அளவு எண்ணிக்கையில பதிவு போட வெச்ச சீனா அய்யாவுக்கும், பின்னூட்டங்களில் எனக்கு ஊக்கப்படுத்திய சக பதிவர்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி...

11 comments:

  1. இன்னொரு சினிமாக் காதலர். ப்ரொஃபஷனல் கேமிராமேன். உலகப்படங்கள் குறித்த இவரோட விமர்சனங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். வலையுலகத்துல உலகப்படங்கள் குறித்து வேற யாரும் இவரை விட அதிகமா எழுதலைன்னு நினைக்கிறேன்.//

    உங்கள் பாராட்டை தலை வணங்கி ஏற்றக்கொள்கின்றேன்...வெண்பூ

    நன்றி

    மற்ற எனது இரண்டு நண்பர்களான கேபிள் முரளி இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. வலையுலகத்துல உலகப்படங்கள் குறித்து வேற யாரும் இவரை விட அதிகமா எழுதலைன்னு நினைக்கிறேன்.//

    இன்னும் நிறைய உலக படங்களும் பார்க்க வேண்டிய படங்களும் இன்னும் நிறைய எழுதுகின்றேன்

    பாராட்டியமைக்கு,என்னை உற்சாகப்படத்தியதற்க்கும் நன்றி வெண்பூ

    ReplyDelete
  4. இவரோட விமர்சனத்தோட பிடிச்ச விசயமே, கதையோட முக்கிய விசயங்களை சொல்லி சஸ்பென்ஸை கெடுக்க மாட்டார். படம் குறித்து மேலோட்டமான விமர்சனத்தை மட்டும் சொல்லி, படம் பார்க்குற ஆவலை தூண்டுறது இவரோட ஸ்டைல். பாராட்டுகள் ஜாக்கி.


    ஆமாம் அது உண்மைதான் முழுக்கதை சொன்னால் அப்புறம் படம் பார்க்க போது ஒரு விறு விறுப்பு குறைந்து போய் விடும் அது மட்டும் இல்லாமல் படம் பார்க்கும் போது, யாராவது
    “மச்சான் இப்ப பரேன் கமல் இப்ப அவர்காலை தூக்கி அவன் நெஞ்சில வைப்பார் பாரேன்” என்று படம் ஓடும் போது படத்தின் அடுத்த காட்சியை சொன்னாலே நான் டென்ஷனாகி இப்படியே படம் பார்க்கறப்போ கதையை சொல்லிக்கினே வந்தா?
    இப்ப என் காலை தூக்கி உன் நெஞ்சுல வைத்துடுவேன் என்று கோபப்படும் ரகம் நான்...

    நன்றி வெண்பூ மற்றும் வலைச்சரம்

    ReplyDelete
  5. சினிமாக்காரங்க எல்லாம் படா சோக்காதான் எழுதுறாங்க!

    ReplyDelete
  6. நல்ல தொகுப்பு வெண்பூ. இந்த வாரம் நல்ல சிறந்தமுறையில் சரம் தொடுத்து அசத்தியிருந்தீங்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. தொகுப்புக்களுக்கு நன்றி,

    அதுக்குள்ள ஒரு வாரம் முடிஞ்சு போச்சா!!!!!

    ReplyDelete
  8. நல்ல தொகுப்பு வெண்பூ.

    வலைச்சரம் ஆசிரியர் பணியை செவ்வனே செய்து முடித்து விட்டீர்கள் வெண்பூ.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. தாயே ஜக்கம்மா?

    நானும் எப்போ இந்த வரிசையில வருவேன்? நல்ல வாக்கு சொல்லம்மா...

    ReplyDelete
  10. ஜாக்கி,
    வால்பையன்,
    மங்களூர் சிவா,
    புதுகைத்தென்றல்,
    ரம்யா,
    குறை ஒன்றும் இல்லை!!! (என்னா அருமையான பேருங்க)..

    அனைவருக்கும் நன்றி.. நன்றி..

    ReplyDelete
  11. பெயர பாராட்டினா மட்டும் போதாது நம்ம கடைப்பக்கமும் வந்திட்டு போங்க

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது