07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, June 4, 2009

கவிஞன் உருவாகுகின்றான்.....


கவிஞன் உருவாக்கப்படுவதில்லை அவன் உருவாகின்றான் தன்னில் இருந்தே மற்றொன்றாய் எனும் வைரமுத்துவின் வரிகளுடன் இன்றைய அறிமுகம் படித்ததில்பிடித்த சில கவிதைகள்.....

ஷீ நிசி தன்னுடைய நிலவு களவு போனது மூலம் அனைவரின் மனதை நிறைத்த கவிஞர்.இன்றும் தூக்கத்தில் எனை எழுப்பி கேட்டாலும் என்னால் கூற முடியும் அந்த கவிதையின் வரிகளை !!!!!!

கரையோர கனவுகள் ஸ்ரீ மதியின் அம்மாவின் வாசனைஇன்னும் என் மனதை விட்டு அகலவில்லை!!!!!

திகழ்மிளிராரின் ஓசை ஒத்தப்பாக்கள் +காதலி
மேலும்
படிக்க சுட்டியை தட்டுங்கள்....

சிறுமிக்கு
கூட திருமணம்
இன்னும்
திருந்தாத மடமை மக்கள்
கைம்பெண்ணுக்கு
மறுக்கிறார் மறுமணம்




புதிய அறிமுகங்கள்



நிலாமகள் அப்பச்சி காவியத்தை வழங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்திய புதிய பதிவர் ஆரம்பித்த வேகத்திலேயே இத்தனை உணர்வுபூர்வ கவிதை இயற்றிய இவரது திறமை கண்டு அதிசயிக்கிறேன் !!!!!!

கருவாச்சி காவியங்களும்

கள்ளிக்காட்டு இதிகாசமும்
ஆளும்
இந்த பூமியில்
நான் படைக்கிறேன்
என் தாத்தனுக்காக ஓர் அப்பச்சி காவியம்....

மேலும் படிக்க அவர் தளத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்

சக்திகுமார் என் நண்பர்,சகோதரர் எனக்கு கவிதை எழுதும் முறையை சொல்லிக்குடுத்தவர் இப்பொழுது தான் தனக்கு என வலைப்பூவை ஆரம்பித்திருக்கின்றார் அவர் மேலும் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்!!!!

இருள் சூழ்ந்த உலகில் அடிமைப் போல்
கை கால்கள் மடக்கி


விண் எது? மண் எது? தெரியாமல்
பால்வெளியில் மிதப்பவன் போல்
தலைகீழாய்


புள்ளியாய் தோன்றி அவளையும்
அவள் பெரும் மகிழ்ச்சியும் தின்று
கொஞ்சம் கொஞ்சமாய் வளர


தொலைவில் சன்னமாய் கேட்ட சப்தம்
இன்று சப்தமாய் உள்ளுக்குள்ளே


அடைப்பட்டு கிடந்தாலும் இது சிறையல்ல
திரும்ப கிடைக்க பெறா வரம்


எட்டி உதைத்தாலும் எத்தனை வலி கொடுத்தாலும்
கட்டியனைத்து கொஞ்ச காத்திருக்கும்
அவள் முகம் காண இன்னும் சில நாட்கள்.....




மறவாதே கண்மணியே லோகு காதலின் வலி மிகு கவிதைகளை இவரின் வலைப்பதிவில் காணமுடியும் சில வரிகள் மட்டும் இங்கு


அழகான
நிலவு துணையாய் இருந்தும்
அமிலம்
ஊற்றியதை போல்
எரியும்
என் இரவுகளை
என்ன
செய்து கழிப்பதென்று
தெரியவில்லை எனக்கு.

உழவனின் உளறல்கள் கதை கவிதை என இரண்டும் இயற்றும் இவரின் சிறுகதை அழகு என்றால் கவிதையில் சொல்லடுக்கும் வார்தை அமைப்பும் அருமை !!!!!

ஒரு
சிறு கவி உங்களுக்காக

யார்
விதைத்த விதைகளோ
யுகம் யுகமாய்
முளைக்காமலேயே
கிடக்கின்றன !
மேகமே
மேல் நோக்கியும்
கொஞ்சம்
பொழிந்துவிடேன் !

உழவர்
மென்மேலும் விளைச்சல் பெற வாழ்த்துக்கள்



தமிழ்பிரியா காதலின்றிஅனைத்து வகை கவிதைகளையும் எழுதிக்கொண்டிருக்கும் புதுப்பெண்பதிவர் !!!!!

தன்னழகு கொண்டு
இருமாந்திருந்த,
கடலும், மேகமும்
வெட்கித்தான் போகின்றன
அவளழகு கண்டு.....
அவைகளுக்கு தெரியாது...
நேற்று வரை அவள்,
குழந்தை தொழிலாளியாய்
கட்டுண்டு கிடந்தாள் என்று...
அவள் பள்ளிக்கனவு
பலித்த்தற்கான ஆரவாரத்துடன்
ஓடுகிறாள் இன்பமான
எதிர்காலம் நோக்கி......

35 comments:

  1. நான்காம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நடத்துங்க நாலாம் நாளையும் ...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நான்காம் நாள் வாழ்த்துகள் சக்தி

    ReplyDelete
  4. வாழ்த்துகள் சக்தி, பதிவர்களின் அறிமுகம் அருமை....

    ReplyDelete
  5. நன்றி ஜமால் அண்ணா
    நன்றி மயாதி
    நன்றி சுரேஷ்
    நன்றி ஞானசேகரன்

    ReplyDelete
  6. வலை பூக்களின் அறிமுகங்கள் சிறப்பாக உள்ளது... நான்காவது நாள் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  7. நான்காம் நாள் வாழ்த்துக்கள் சக்தி.

    ReplyDelete
  8. சிறுமிக்கு கூட திருமணம்
    இன்னும் திருந்தாத மடமை மக்கள்
    கைம்பெண்ணுக்கு மறுக்கிறார் மறுமணம்

    அருமை.

    ReplyDelete
  9. இருள் சூழ்ந்த உலகில் அடிமைப் போல்
    கை கால்கள் மடக்கி..............

    .........எட்டி உதைத்தாலும் எத்தனை வலி கொடுத்தாலும்
    கட்டியனைத்து கொஞ்ச காத்திருக்கும்
    அவள் முகம் காண இன்னும் சில நாட்கள்.....

    சக்திகுமாரின் கவிதை - கருவறைக் காவியம்

    ReplyDelete
  10. அழகான நிலவு துணையாய் இருந்தும்
    அமிலம் ஊற்றியதை போல்
    எரியும் என் இரவுகளை
    என்ன செய்து கழிப்பதென்று
    தெரியவில்லை எனக்கு.

    வலியின் வரிகள் - அற்புதம்

    ReplyDelete
  11. யார்
    விதைத்த விதைகளோ
    யுகம் யுகமாய்
    முளைக்காமலேயே
    கிடக்கின்றன !
    மேகமே
    மேல் நோக்கியும்
    கொஞ்சம்
    பொழிந்துவிடேன் !

    உழவன் - சரியான பெயர்தான். விண்மீன் விதைத்து கவிதை அறுவடை

    ReplyDelete
  12. மொத்தத்தில், அறிமுகம் செய்த விதமும் மேற்கோள் காட்டிய கவிதைகளும் அருமை சக்தி

    ReplyDelete
  13. வாழ்த்துகள்
    வாழ்த்துகள்
    வாழ்த்துகள்

    ReplyDelete
  14. நான்காம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  15. un arimugangalum nalla iruku da

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் / நல்ல அறிமுகம்

    ReplyDelete
  17. நான்காம் நாள் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  18. பதிவர்களின் அறிமுகம் அருமை....

    ReplyDelete
  19. நான்காம் நாள் வாழ்த்துக்கள் சக்தி...

    //கவிஞன் உருவாக்கப்படுவதில்லை அவன் உருவாகின்றான் தன்னில் இருந்தே மற்றொன்றாய் //

    கவிஞர் வைரமுத்துவின் வரிகளோடு கவிஞ்ர்களின் அறிமுகமா...?

    ReplyDelete
  20. ஷீ-நிசி யின் கவிதைகள் மிகவும் எளிமையான
    வார்த்தைகளுடன் வளமாய் வலம் வருபவை

    அவரின் சில காதல் தூறல்களில்
    நான் ரசித்த சில வரிகள்

    //பூவுலகில் மனிதரெல்லோரும்
    தங்கள் காதலிகளை,
    நிலவோடு ஒப்பிடுகிறார்கள்...

    என் தேவதையே....

    வானுலகில் தேவரெல்லோரும்
    தங்கள் காதலிகளை,
    உன்னோடுதான் ஒப்பிடுகிறார்கள்!!//

    வாழ்த்துக்கள் ஷீ-நிசி...

    ReplyDelete
  21. ஸ்ரீமதியின் கவிதைகளில் அனைத்தும் பிடிக்கும்
    என்றாலும் நான் மிகவும் ரசித்த
    துளிக் காதலில் ஒரு கவித் துளி

    //அடை மழையில்
    குடைப்பிடிக்கத் தெரியாத
    குழந்தையெனத் திணறுகிறேன்
    நீ முத்தம்
    தரத்துவங்கியதும்....//

    வாழ்த்துக்கள் ஸ்ரீமதி...

    ReplyDelete
  22. திகழ்மிளிர் (அழகான பெயர்) கவிதைகள்
    படித்திருக்கிறேன் என்றாலும் அவருடைய
    அனேக கவிதைகள் வாசிக்கத் தவறி இருக்கிறேன்,
    இனி அவரையும் தொடர்ந்து வாசிப்போம்...

    வாழ்த்துக்கள் திகழ்மிளிர்...

    ReplyDelete
  23. மேலும் புதிய அறிமுகங்கள்

    நிலாமகள்

    சக்திகுமார்

    லோகு

    உழவன்

    தமிழ்பிரியா

    ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்...

    அவர்களின் படைப்புகளையும் வாசித்து
    அவர்களின் வலையில் கருத்துரைக்கிறேன்...

    ReplyDelete
  24. வலையில் வலை போட்டு கவி முத்துக்களை தேடித்
    தருவதற்காக மீண்டும் ஒரு வாழ்த்துக்கள் சக்தி...

    ReplyDelete
  25. நான் சக்தி அவர்களின் அறிமுகத்திலா என்று எண்ணும்போது, ஆஸ்கர் வாங்கிய Pleasure எனக்கு! மிக்க நன்றி :-)

    வாழ்த்திய S.A. நவாஸுதீன் அவர்களுக்கும், மற்றும் அனைவருக்கும் என் நன்றிகள்!

    ReplyDelete
  26. நன்றி தமிழரசி
    நன்றி நவாஸ் அண்ணா
    நன்றி சுப்பு
    நன்றி காயத்ரி
    நன்றி ரம்யா
    நன்றி புதியவன் அண்ணா
    நன்றி அமிர்தவர்ஷினி அம்மா
    நன்றி உழவரே

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள் சக்தி

    வலைச்சரத்திலேயும் எழுதிக்கொண்டு தன்னுடைய பதிவும் போடுறீங்க‌

    ReplyDelete
  28. புதியவர்கள் அறிமுகம் கலக்கல்

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. வாழ்த்துகள்

    தங்களின் அன்பிற்கு நன்றி தோழி

    அன்புடன்
    திகழ்

    ReplyDelete
  31. வாழ்த்துகள்

    தங்களின் அன்பிற்கு நன்றி தோழி

    அன்புடன்
    திகழ்

    ReplyDelete
  32. நான்காம் நாள் வாழ்த்துக்கள் சக்தி

    ReplyDelete
  33. வாழ்த்துக்கள் நான்காம் நாளுக்கு

    ReplyDelete
  34. வலை பூக்களின் அறிமுகங்கள் சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. நன்றி அபு அண்ணா
    நன்றி திகழ்மிளிர்
    நன்றி நசரேயன்
    நன்றி கடையம் ஆனந்த்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது