07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label * சக்தி. Show all posts
Showing posts with label * சக்தி. Show all posts

Sunday, June 7, 2009

பெண் பதிவர்கள்

கற்பனைக்காய் புனையப்படும் கவிதைகளை விட
சமூக பிரச்னைக்காய் எழுதப்படுபவை சாகாவரம் பெற்றவை

இதற்கு எ,டு சென்ற நூற்றாண்டின் மிகச்சிறந்த கவிஞர்
சுப்பிரமணிய பாரதியார்.

அவர் காலத்தில் பல கவிஞர்களின்
இலக்கணங்களை கரைத்து எழுதப்பட்ட கவிகள்
அடுத்து வந்த தலைமுறையால் மறுதலிக்கப்பட்டது

பாரதியின் காலத்தில் அடிமைபட்டிருந்த பெண் இனத்தை
தம் அற்புத கவிதைகளால் எழுச்சி பெற வைத்தவர் அதனாலேயே
அவரின் கவிதைகள் காலத்தால் அழியாத பொக்கிஷமாய் இருக்கின்றது...

உறங்கிக் கொண்டிருந்த உணர்வாளர்களை
தம் கவிதை வரிகளால் தட்டி எழுப்பிய சிந்தனாவாதி
பெண் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்.

பல துறைகளிலும் பெண்கள் இன்று முன்னேற்றம் காண்கின்றனர்
வலைப்பூக்களிலும் இன்று பெண்கள் கொடி பட்டொளி வீசுகின்றது

சில பெண் எழுத்தாளர்கள்

ஹேமா
உமாசக்தி
ராமலக்ஷ்மி
அன்புடன் அருணா
அமிர்தவர்ஷிணி அம்மா
அமுதா
பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி
வியா
சிதறல்கள் தீபா
நிலாவும் அம்மாவும்



சில புதிய அறிமுகங்கள்

ரோஸ்
ஹனி எனும் தளத்தில் எழுதிக்கொண்டிருக்கும்
புதுப்பதிவர்



விழி மூடி உறங்கச் சென்றால்
என் இதயவாசலில்
எனக்குள் உன் எண்ணங்கள் பிறக்கின்றன;
உனைக்கண்டு திகைக்கின்றேன்
எனைக்கண்டு சிலர் நகைக்கின்றனர்;

ஏன்! தெறியுமா நான் பைத்தியக்காரியாம்
ஆம் அவர்களுக்கு என்ன தெறியும்
நான் உன்மீது கொண்டுள்ள காதல்,



சகாராதென்றல் கவிதைகள்



கசப்புகளை மட்டுமே பரிசளித்த வாழ்வின் தருணங்களை அவை தந்த அதே கசப்புகளோடும் மெலிதானபுன்னகையோடும் நினைத்துக் கொள்கிறேனிப்போது. கடும்வெயிலின் கசகசப்புகள் நிறைந்த இந்நகரின் புலர்காலைப் பொழுது உன்னுடனான என் ரம்மியங்களை மெல்ல மெல்ல மொட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது.


கெளரிபிரியாவின் தூறல் வெளி


துயரப்பிரிவின் மடியில்
துவண்டுறங்குகையில்
நித்திரையின் கரம்பற்றி
நீள்கிறதோர் கனவில்
ஆவாரஞ்செடிகள்
அடர்ந்திருக்கும் வெளியின்
ஆம்பல் குளமருகே
ஆழ்ந்தென் விழிநோக்கி
அறிவிக்கிறாயுன் நேசத்தை...



எனக்கு தந்த இந்த ஒரு வார கால வலைசர ஆசிரியை பணியை என்னால் இயன்ற அளவு பல புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றேன் வாய்பளித்தமைக்கு நன்றி சீனா சார்....

தொடர்ந்து வந்து பின்னூட்டமிட்ட எனது நண்பர்களுக்கும் நன்றி.

மேலும் வாசிக்க...

Saturday, June 6, 2009

இளமை புதுமை


சில புதிய முகங்கள் இளைய முகங்கள் நகைச்சுவை, சமூக பிரச்சனைகள் என அழகாய் பல பதிவுகளை எழுதும் புதுப்பதிவர்கள் சிலர்..... எழுதுவது எல்லாம் எழுத்தல்ல

சுரேஷ் குமார் விக்கிபீடியா மாதிரி இவரு வெட்டிப்பீடியான்னு வச்சிருக்காரு.
கோவையின் லொள்ளு
முதல் பதிவிலேயே பாருங்கள்
காலங்கள் பற்றிய தொடர் ஒன்று!!!!

வழிப்போக்கன். ஈழத்திலிருந்து ஒரு புதிய பதிவர். இவருடைய முதல் பதிவிலேயே நீங்களும் டைரக்டர் ஆகலாமுன்னு சொல்லி துவங்கியிருக்கார் இவருடைய முதல் கவிதையையும் பார்வையிடுங்களேன் நகைச்சுவையான பதிவுகளையும் பார்க்கலாம் இங்கே!!!!

லோக்கல் தமிழனின்
மன்னாரு கம்புயூட்டர் கம்பெனி படித்துப்பாருங்கள் கம்புயூட்டர் இன்ஜினியர்கள் கண்டிப்பாய் படித்து சிரிக்க வேண்டிய பதிவு!!!!

கவியரசன் தமிழ் படிக்க தெரியுமா?(எங்க படிங்க பார்ப்போம்) என பதிவிட்டு நம் மூளைக்கு சற்றே வேலை குடுத்தவர்!!!!

கவிதை காதலன் புகைப்படங்கள் கவிதை கதை புத்தகம் விமர்சனம் என எல்லா துறைகளையும் அலசும் புதிய பதிவர்!!!!!

சுப்பு
காடுவெட்டி எனும் தளத்தில் புகைப்படங்கள் கவிதை என கலக்கிக்கொண்டிருக்கும் இளைய பதிவர் நண்பர்கள் எதுக்கு அவசியம்!! எனும் இவரின் பதிவை காணுங்கள்...

கடைக்குட்டி
பலரின் அன்பிற்கு பாத்திரமான கடைக்குட்டி சூர்யாவின் வாழ்கை வரலாறு பற்றிய தொடர், நிலாவுக்கு போனது புருடாவா??? என பல பதிவை எழுதிக்கொண்டிருக்கின்றார்!!!!!
மேலும் வாசிக்க...

Friday, June 5, 2009

உணர்வுகளின் வடிகால்








தமிழ்தாய்க்கு
கவிதை கீரிடம் அணிவித்தால்
கதைகளும் கட்டுரைகளும்
தமிழன்னையின் மகுடத்தில்
மேலும் சில ரத்தினக்கற்களை பதிக்கின்றது.....

கதைகளும் கட்டுரைகளும் மனித மனத்தின் உணர்வுகளின் வடிகாலாய் விளங்குகின்றது!!!!

சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திடுகின்றது!!!!

கவிதைகளில் சொல்ல முடியாதவற்றை மிக சிறப்பாய் கதைகளும் கட்டுரைகளும் சொல்லிவிடுகின்றது.....

நகைச்சுவை உண்ர்வு மிக்க கதைகள் படிக்கும் போது மனம் லேசாகின்றது....

சில பிரபல கதாசிரியர்கள்,கட்டுரையாளர்கள்!!!

ராஜேஸ்வரியின் ரசனைக்காரி

ஏனோ கவிதையின் மேல் இருக்கும் ஈர்ப்பு வலைப்பூவில் உள்ள கதைகள் மேல் எனக்கில்லை முதல் முறையாய் இவரின் மீனாட்சி அக்காவை படித்ததும் கனத்த மனதை சரி செய்ய சில நிமிடங்கள் தேவைபட்டதெனக்கு...


நசரேயனின் என் கனவில் தென்பட்டவை

இவரின் ரயிலில் மஞ்சள் அழகியுடன் படித்து முடிந்ததும் எழுந்த சிரிப்பலை அடங்க அதிக நேரம் தேவைப்பட்டது அத்தனை அருமையான நகைச்சுவை நிறைந்த கதை!!!!

ரம்யாவின் Will to Live
இவர் அதிகம் கதைகள் எழுதினாலும் இவரின் ஆதரவற்ற குழந்தைகளும்முதியவர்களும்!!! கட்டுரையை படித்தபின் நம்மால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்ய வேண்டும் என தோன்றியது சமூக அக்கறையுடன் கூடிய கட்டுரை!!!!!





பிரியமுடன் வசந்த்

புகைப்படம் மூலம் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் படைப்புகளுக்கு சொந்தக்காரர். இவரின் கொசுவின் கதை அருமை இவர் தளத்திற்கு சென்றவர்கள்
சிரிக்காமல் திரும்ப இயலாது!!!!



ஜெஸ்வந்தியின் மெளனராகங்கள்

புதுபெண்
கதாசிரியர் அழகான உணர்வுபூர்வமான கதைகளின் சொந்தக்காரர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!!!!





ஞானசேகரனின் அம்மா அப்பா

சமீபமாய்
தான் இவரின் கட்டுரைகளை வாசிக்கின்றேன் கையூட்டுக்கு எதிரான நெஞ்சே!! பொறுப்பதில்லை ஏன்??
படைப்பு
சற்றே நமை சிந்திக்க வைத்துவிட்டது!!!!!



முனைவர் இரா.குணசீலனின் வேர்களைத் தேடி

இலக்கியதரமான கட்டுரைகளை இன்றும் எழுதி வரும் இவரின் இந்த முயற்சி மிக மிக பாராட்டுக்குரிய ஒன்று இவரின்கட்டுரைகளில் நான் மிகவும் ரசித்தது புள்ளோப்புதல் எனும் கட்டுரையை...



வினோத் கெளதமின் ஜீலைகாற்றில்

இவரும் நாணல், பதின்மரக்கிளை போல் தனது வினோத் கெளதம் எனும் தளத்தை தொலைத்துவிட்டு மீண்டும் ஜீலைகாற்றில் எனும் புதிய தளத்தில் எழுதிக்கொண்டிருக்கின்றார் அழகான கதைகளும் கட்டுரைகளும் இவரின் சிறப்பம்சம்!!!!
மேலும் வாசிக்க...

Thursday, June 4, 2009

கவிஞன் உருவாகுகின்றான்.....


கவிஞன் உருவாக்கப்படுவதில்லை அவன் உருவாகின்றான் தன்னில் இருந்தே மற்றொன்றாய் எனும் வைரமுத்துவின் வரிகளுடன் இன்றைய அறிமுகம் படித்ததில்பிடித்த சில கவிதைகள்.....

ஷீ நிசி தன்னுடைய நிலவு களவு போனது மூலம் அனைவரின் மனதை நிறைத்த கவிஞர்.இன்றும் தூக்கத்தில் எனை எழுப்பி கேட்டாலும் என்னால் கூற முடியும் அந்த கவிதையின் வரிகளை !!!!!!

கரையோர கனவுகள் ஸ்ரீ மதியின் அம்மாவின் வாசனைஇன்னும் என் மனதை விட்டு அகலவில்லை!!!!!

திகழ்மிளிராரின் ஓசை ஒத்தப்பாக்கள் +காதலி
மேலும்
படிக்க சுட்டியை தட்டுங்கள்....

சிறுமிக்கு
கூட திருமணம்
இன்னும்
திருந்தாத மடமை மக்கள்
கைம்பெண்ணுக்கு
மறுக்கிறார் மறுமணம்




புதிய அறிமுகங்கள்



நிலாமகள் அப்பச்சி காவியத்தை வழங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்திய புதிய பதிவர் ஆரம்பித்த வேகத்திலேயே இத்தனை உணர்வுபூர்வ கவிதை இயற்றிய இவரது திறமை கண்டு அதிசயிக்கிறேன் !!!!!!

கருவாச்சி காவியங்களும்

கள்ளிக்காட்டு இதிகாசமும்
ஆளும்
இந்த பூமியில்
நான் படைக்கிறேன்
என் தாத்தனுக்காக ஓர் அப்பச்சி காவியம்....

மேலும் படிக்க அவர் தளத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்

சக்திகுமார் என் நண்பர்,சகோதரர் எனக்கு கவிதை எழுதும் முறையை சொல்லிக்குடுத்தவர் இப்பொழுது தான் தனக்கு என வலைப்பூவை ஆரம்பித்திருக்கின்றார் அவர் மேலும் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்!!!!

இருள் சூழ்ந்த உலகில் அடிமைப் போல்
கை கால்கள் மடக்கி


விண் எது? மண் எது? தெரியாமல்
பால்வெளியில் மிதப்பவன் போல்
தலைகீழாய்


புள்ளியாய் தோன்றி அவளையும்
அவள் பெரும் மகிழ்ச்சியும் தின்று
கொஞ்சம் கொஞ்சமாய் வளர


தொலைவில் சன்னமாய் கேட்ட சப்தம்
இன்று சப்தமாய் உள்ளுக்குள்ளே


அடைப்பட்டு கிடந்தாலும் இது சிறையல்ல
திரும்ப கிடைக்க பெறா வரம்


எட்டி உதைத்தாலும் எத்தனை வலி கொடுத்தாலும்
கட்டியனைத்து கொஞ்ச காத்திருக்கும்
அவள் முகம் காண இன்னும் சில நாட்கள்.....




மறவாதே கண்மணியே லோகு காதலின் வலி மிகு கவிதைகளை இவரின் வலைப்பதிவில் காணமுடியும் சில வரிகள் மட்டும் இங்கு


அழகான
நிலவு துணையாய் இருந்தும்
அமிலம்
ஊற்றியதை போல்
எரியும்
என் இரவுகளை
என்ன
செய்து கழிப்பதென்று
தெரியவில்லை எனக்கு.

உழவனின் உளறல்கள் கதை கவிதை என இரண்டும் இயற்றும் இவரின் சிறுகதை அழகு என்றால் கவிதையில் சொல்லடுக்கும் வார்தை அமைப்பும் அருமை !!!!!

ஒரு
சிறு கவி உங்களுக்காக
யார்
விதைத்த விதைகளோ
யுகம் யுகமாய்
முளைக்காமலேயே
கிடக்கின்றன !
மேகமே
மேல் நோக்கியும்
கொஞ்சம்
பொழிந்துவிடேன் !

உழவர்
மென்மேலும் விளைச்சல் பெற வாழ்த்துக்கள்



தமிழ்பிரியா காதலின்றிஅனைத்து வகை கவிதைகளையும் எழுதிக்கொண்டிருக்கும் புதுப்பெண்பதிவர் !!!!!

தன்னழகு கொண்டு
இருமாந்திருந்த,
கடலும், மேகமும்
வெட்கித்தான் போகின்றன
அவளழகு கண்டு.....
அவைகளுக்கு தெரியாது...
நேற்று வரை அவள்,
குழந்தை தொழிலாளியாய்
கட்டுண்டு கிடந்தாள் என்று...
அவள் பள்ளிக்கனவு
பலித்த்தற்கான ஆரவாரத்துடன்
ஓடுகிறாள் இன்பமான
எதிர்காலம் நோக்கி......
மேலும் வாசிக்க...

Wednesday, June 3, 2009

நவீன கவிஞர்கள்

யாப்பிலக்கணம் எனும் அரியாசனத்தில்
கொலுவீற்றிருக்கும் மரபுக்கவிதைக்கு இலக்கணம் உண்டு !!!!!

ஆனால் புது கவிதைகள் இலக்கண மீறல்களை அனுமதிக்கின்றது

மரபுக்கவிதைக்கு அடுத்து வந்த புதுக்கவிதை இப்பொழுது பின் நவீனம் எனும் மற்றொரு ரூபத்தில் அழகாய் காலத்திற்கேற்ற மாற்றத்துடன்!!!!!

அதிலும் தற்போது வலையுலகில் இயற்றப்படும் பின் நவீன கவிதைகள்
அசரடிக்கும் வகையை சேர்ந்தது உணர்வுகளின் வெளிப்பாட்டை இயல்பாய் எந்த மேல்பூச்சுக்களும் இன்றி சொல்லப்படும் இந்த கவிதைகளை இயற்றும் பிரம்மாக்களில் சிலர் .......

அய்யனார்
அகநாழிகை
அனுஜன்யா
ஜ்வோராம்சுந்தர்
சென்ஷி
அதிஷா
யாத்ரா
சரவணகுமார்
கென்

இவர்கள் ஏற்கெனவே எல்லோருக்கும் அறிமுகமானவர்கள் என்றபோதிலும் மேலும் சில அறிமுகங்கள் இவர்களின் வரிசையில்

இதழ்கள் அனிதாவின் கவிதை ஒன்று


எதிரி விஷம் கலந்து கொடுத்த
காபியை அருந்திய கதாநாயகி
சுருண்டு விழுகையில் தொடரும் போட்டார்கள்

சோற்றுக் கவளம் வாயிலே இருக்க,
செத்துட்டாளா என்றேன்
சாகமாட்டா நாளைக்கு காப்பாத்திடுவாங்க
என்றாள் அம்மா சாகவாசமாக

பின் மழைக்காற்றையொத்த
குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்தபடி
காப்பாற்றபடாத கதாநாயகிகள் குறித்து
யோசிக்கத் துவங்கினேன்


ராஜா சந்திரசேகர் கவிதைகள்
வெற்றுக்கோப்பை போதும்
என் தாகம் தீர்க்க

நீர் நிரம்பிய பாத்திரங்கள்
அதிகரிக்கவே செய்யும்
தாகத்தை





பிரவின்ஸ்கா கவிதைகள்
நீர்
நிலம்
நெருப்பு
காற்று
ஆகாயம்
-----------------------------------------------
-----------------------------------------------
----------------------------------- என
எழுதியும்
வாசித்தும்
தீர்த்தாயிற்று

எவ்வளவு
குடித்தாலும்
அடங்குவதில்லை
தாகம்.


வெங்கட் தாயுமானவன் கவிதைகள்
மனிதர்கள்
யாருமற்ற
எனது ஊரை
எனக்கு மிகவும்
பிடிக்கிறது
..,
சாதிகளின் பெயரில்
அடையாளப்பட்டாலும்..
எங்கும்
முட்டிக்கொள்ளாமல்
இணைந்தேயிருக்கிறது..
அதன் தெருக்கள்.

வானம் வசப்படும் எனும் வலைப்பூவின் சொந்தக்காரர்
தமிழ்பறவையின் கவிதையொன்று உங்களுக்காக


முன்
பின்னாய் முறை மாற்றி
மேல் கீழாய் வளைத்திழுத்து
கை திருகி,காலொடித்து
முடிவிலி சதுரத்தில்
திணிக்கப்பட்ட
சுயமிழந்த சொற்களின்
மௌன அலறலில்
புரிய ஆரம்பிக்கலாம்
கவிதையொன்று...


நேற்றைய அறிமுகமான‌ மண்குதிரை , சேரல் போன்றோரும் பின் நவீன கவிஞர்களே.....
மேலும் வாசிக்க...

Tuesday, June 2, 2009

கவிஞர்கள் வகை

கவிஞர்கள் இரண்டு வகை

ஒரு வகையினருக்கு
கவிதை எழுதுவது அவஸ்தை
கவிதை எழுதியதும்
களைத்து விடுகின்றார்கள்.....

மற்றொரு வகையினரோ
கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......

ஆனால் எப்படி எழுதினாலும் கவிதை எழுதுதல் ஒரு கலை!!!!
அதை எவர் எழுதினாலும் நம்மால் இயன்றவரை
பின்னூட்டமிட்டு பின் தொடர்ந்து திரட்டிகளில் வாக்களித்து
அவர்களுக்கு ஊக்கமளிப்போம்!!!!!


பொற்கிழிகளும் பூமிதானமும்
கொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!!!

புதிய பதிவர்களுக்கு
நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்
கவிதைக்கான கருக்களை......

மனதில் விதைத்திடுங்கள்
வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......

வற்புறுத்தி எழுதப்பட்டால்
வார்த்தைகளில் வளமிருக்காது ஆழமற்ற
வார்த்தைகள் கொண்டு
வடிக்கப்படுபவை கவிதையாகாது.......

கவிதை எனப்படும் அடைமொழிக்குள் வேண்டுமானால் அவைகள்
இருக்கலாம் ஆனால் எவர் மனதிலும் இடம் பெற இயலாது!!!!!
நமது கவிதை ஒருவரின் மனதில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தினால் உங்கள் கவிதை வெற்றி பெற்றதாகிவிடுகின்றது!!!!!

உங்கள் கவிதைகள் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்க வாழ்த்துக்களோடு

இன்றைய அறிமுகங்கள்


புதிய பதிவர்கள்



மயாதி - புதிய பதிவர்ஆனால் பிரபல பதிவர்களின் கவிதை தொகுப்பை படித்த நிறைவை தருகின்றது இவரின் கவிதைகள் இவரின் சந்தோசமான இரங்கற்பா
மாயை போன்றவை அருமை!!!!!




அசீ - உணர்வுகள் நிரம்பிய கவிதைகளை வடிப்பதில் வல்லமை பெற்றவர் இவர் கவிதைகள் அளவு நான் எழுத முயற்சி செய்து தோற்றிருக்கிறேன் பத்தே வரிகளில் பக்குவமாய் தன் கருத்தை கூறிடும் திறம் பெற்ற கவிஞர் இவரின் மோகத்தீ நினைவு காத்திருக்கின்றேன் போன்ற கவிதைகள்
அற்புதம்



நாணல் - அழகியகவிதைகளை வடிக்கும் புதிய பெண் பதிவர் பதின்மரக்கிளை தளத்தை போல் இவரும் தனதுபழைய தளத்தை இழந்துவிட்டார் மீண்டுமொரு புதிய தளத்தில் எழுதிக்கொண்டிருக்கின்றார் இவரின் கவிப்பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் இவரின் என் விடியல் உங்களுக்காக!!!!

சாவரியா செல்லம் எனும் தளத்தில் எழுதிக்கொண்டிருக்கும் பெண் கவி
காதல்கேடயம் மறுபடியும் படிக்கதோன்றும்!!!!!



ரீனா கனவுகளின் முகவரிக்கு சொந்தக்காரர்
கதை கவிதை என
இரண்டும் இவருக்கு கைவசம்
என் மனம் இவர் கவிதை வசம்
காதலில் சில சமயம் படித்து பாருங்கள்!!!!!!



சேரலாதன் - கருப்பு வெள்ளை எனும் தளத்தில் கவிதை மழை பொழியும் புதிய கவிஞர் இவரின் யாரோ ஒருத்தி புலம்பெயர்தல்
பிரமாதம்
மிகப்பெரும் பின் நவீன எழுத்தர்களின் பாராட்டுகளுக்கு உரியவர் இந்த புதியவர்.....



மண்குதிரை இவர் கவிதைகளில் தான் என்ன ஒரு ரசனை இவரின் பசுங்காடு படித்த எவரும் இவரை பாராட்டாமல் செல்ல முடியாது இவர்கள் எல்லாம் இத்தனை நாள் எங்கு இருந்தார்கள் என்று நம்மை யோசிக்க வைக்கின்றார்கள் இவரின்கண்மாயில் இன்னும் என் கண்முன்!!!!!!!!
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது