07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 9, 2009

வார்த்தைகளைச் சுமந்து திரிபவன்



கதைகள் வாசிப்பதைவிட கவிதைகள் மனதுக்குள் நிகழ்த்தும் உணர்வெழுச்சியின் தாக்கம் அதிகமாக இருப்பதென் ரகசியம் என்ன ? கவிதைச் சொல்லாடலின் நேரடித்தன்மை உடனுக்குடன் உட்புகுந்து வாசிப்பவரை ஆட்கொள்கிறது. மாறாக கதையில் நாம் வாசித்து முடிந்த பின்னரே அது குறித்து சிந்தனையில் அனுபவித்து ரசிக்கின்ற மனோநிலையில் நாம் இருக்கிறோம். கவிதைகள் சட்டென மனதில் மின்னி இடம்பிடித்துக்கொள்வது இதனால்தான்.

எனக்குப் பிடித்த தேவதச்சனின் கவிதை ஒன்று.

அவரவர் கைமணல்

அவரவர் கைமணலைத் துழாவிக் கொண்டிருந்தோம்
எவரெவர் கைமணலோ இவை என்றேன்
பிறகு மணலறக் கைகழுவி விட்டு
எங்கோ சென்றோம்.

சரி பதிவர்களுக்கு வருவோம். நேற்றே இடுகையில் சில குழப்பங்கள் இருந்தன. பதிவர்களில் நன்கெழுதிவரும், பரவலாக அறியப்படாதவர்கள் குறித்து மட்டுமே நான் இங்கே குறிப்பிடுகிறேன்.

இவர்களையெல்லாம் நான் வாசிக்கிறேன், சிலரை வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். ஒவ்வொருவரைப் பற்றியும் நான் சொல்வதைவிட அவர்களின் எழுத்துக்களை பரவலாக்க நீங்களே வாசித்து அனுபவித்து அறிந்து கொள்ளுங்கள்,

கனவில் தொலைதல்
நிகழ்வுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையேயான அனுபவங்களை கவிதையாக வடித்து அதை நாமும் தரிசிக்கிற உணர்வுகளைத் தருகின்றன சரவணக்குமாரின் கவிதைகள். இவரது கவிதையின் வார்த்தைகள் வாசிக்கும்போதே நம்முள் ஊடுருவிப் பரவுகின்றன.

நந்தாவிளக்கு
தனித்துவ மொழி நடையும், வித்தியாசமான கவிதைக் களமும் நந்தாவின் கவிதைகளில் நமக்கு காணக்கிடைக்கிறது. பிறரது கவிதைகளை இவர் ரசனையோடு கொண்டாடும் விதமும் குறிப்பிடத்தக்கது.


கனவுகளின் தொலைவு
உணர்வுகளைப் அதீத புனைவுகளற்று கவிதையாக்கும் அகிலனின் பாணி நம்மோடு நேரடியாக உரையாடும் தன்மையானவை. துக்கம், நேசம், இயலாமை என வெளிப்படுத்தும் இவரது கவிதைகள் நம்மையும் அதையே உணரச் செய்கிறது.


ராஜாசந்திரசேகர்
நெடுநாட்களாக எழுதிவரும் ராஜாசந்திரசேகரின் கவிதைகள் பலரும் வாசித்திருக்கக்கூடும். எளிமையாகவும் இயல்பானவுமானவை. அன்றாட வாழ்வின் தருணங்களை அழகாக வெளிப்படுத்துகின்றன இவரது கவிதைகள்.

மீண்டும் கவிதைகளோடு சந்திக்கிறேன்.

மிக்க அன்புடன்...

‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

14 comments:

  1. //கவிதைச் சொல்லாடலின் நேரடித்தன்மை உடனுக்குடன் உட்புகுந்து வாசிப்பவரை ஆட்கொள்கிறது//

    அட‌ அட‌

    தேவ‌த‌ச்ச‌ன் க‌விதை செம‌ க‌விதை. ந‌ன்றிங்க‌ வாசு.

    அருமையான‌ வ‌லை அறிமுக‌ங்க‌ள் ந‌ன்றி

    ReplyDelete
  2. இரண்டாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. கவிதைகள் சட்டென மனதில் மின்னி\\

    ம்ம்ம் ...

    ReplyDelete
  4. சரவணக்குமாரின் கனவில் தொலைதல்

    \\இவரது கவிதையின் வார்த்தைகள் வாசிக்கும்போதே நம்முள் ஊடுருவிப் பரவுகின்றன.\\

    நானும் உணர்ந்திருக்கிறேன்.

    வித விதமான களம் எடுத்து அடித்து ஆடி சதம் எடுப்பார்...

    ReplyDelete
  5. மற்ற மூவரையும் அத்துனை பரிச்சியமில்லை

    இனி படிப்போம் நன்றி பகிர்தலுக்கு ...

    ReplyDelete
  6. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வாழ்த்துகள்

    ReplyDelete
  8. வலைப்பதிவர் ராஜாசந்திர சேகரின் கவிதைகள் எளிமையான சொற்களால் படைக்கப் பட்டுள்ளதால் சுலபமாக படிக்க முடிகிறது. நல்ல அறிமுகம்.

    ReplyDelete
  9. நல்ல கவிஞர்களை அறிமுகப் படுத்தி வைக்கின்றீர்கள் வாசு சார் நன்றி!
    இதில் சரவணக்குமாரை மட்டும் படித்திருக்கின்றேன் அகிலன் பக்கமும் தெரியும் மீதம் இரண்டு உங்கள் அறிமுகம் நான் பின் தொடருகின்றேன். நன்றி வாசு சார்.

    ReplyDelete
  10. வாசு, நீங்கள் என் கவிதைகளை தங்களுக்குப் பிடிக்கும் என்று அறிமுகப்படுத்திய நேரம் நான் ஒரு சற்றே சிறிய சிறுகதையை எழுதி்த் தொலைத்துவிட்டேன் - அதைப் படித்தவர்கள் என் வலைதளம் பக்கம் இனிமேல் வரவே மாட்டார்கள் போல இருக்கிறது ... சரி நம்ம விதி அப்படித் தான் போல ... :) ... jokes apart ... மிக்க நன்றி ...

    ReplyDelete
  11. இரண்டாம் நாள் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  12. //கவிதைச் சொல்லாடலின் நேரடித்தன்மை உடனுக்குடன் உட்புகுந்து வாசிப்பவரை ஆட்கொள்கிறது
    //

    தேவ‌த‌ச்ச‌ன் க‌விதை!

    அருமையான‌ அறிமுக‌ங்க‌ள்!

    ReplyDelete
  13. \\இவரது கவிதையின் வார்த்தைகள் வாசிக்கும்போதே நம்முள் ஊடுருவிப் பரவுகின்றன.
    \\

    அருமையான ரசனை!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது