07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 15, 2009

வலையும் நட்பும் உங்களிடம் ஓர் அறிமுகம் ...பகுதி-3

வலையும் நட்பும் உங்களிடம் ஓர் அறிமுகம் ...பகுதி-3

வணக்கங்களுடன் ஆ.ஞானசேகரன்
எல்லோரையும் போல நாமும் ஒரு வலைப்பக்கத்தை ஆரம்பித்துவிட்டு, சக நண்பர்களிடம் நேரிலும் மின்னஞ்சலிலும் என் பக்கத்தை பாருங்கள் என்று சொல்லியுள்ளோம்..... அவர்களும் படித்துவிட்டு நல்லா இருக்கு என்று சொன்னார்களேயானால் நம் மனம் சொல்லும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.. அதே போலதான் நம்முடைய தளம் ஒருவருக்கு அறிமுகம் ஆகும்பொழுது ஏற்படும் மகிழ்ச்சியும். இவற்றுகெல்லாம் பெருமை வலைச்சரம் சீனா ஐயாவை சாரும். அவருக்கு வலை நண்பர்கள் சார்பாக நன்றியை சொல்லிக்கொள்கின்றேன். மேலும் நம்முடைய நண்பர்கள் தளம் அனைத்தையும் அறிமுகப் படுத்திவிடவேண்டும் என்ற ஆசைகள்தான் ஆனால் அதற்கான நேரம்தான் கிடைக்கவில்லை.. உங்களின் ஊக்கத்தினால் முடிந்தவரை முயற்சிக்கின்றேன்.....

1. இவர் எனக்கு பின்னூட்டங்களில் மட்டுமே தெரியும். நல்ல இடுக்கைகளை பாராட்ட தயங்காதவர், ஜெய்பூரில்
Principal லாக வேலைசெய்கின்றார். இவரின் இடுக்கைகள் அனுபவம் மற்றும் எதார்த்தமான கட்டுரைகளாக இருக்கும். இவரை 121 நண்பர்கள் பின் தொடர்கின்றார்கள். சமீபத்தில்" தமிழ்வெளி விளம்பரத்தை கணியுங்கள்" என்ற போட்டியின் பரிசை தட்டிசென்றவர். அவர்தான் அருணா, இவரின் தளத்தின் பெயர் அன்புடன் அருணா. இவரின் தளத்தை பார்க்க படத்தின் மேல் தட்டவும்...

அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.ரயில் பயணங்களில் ...1
2.கடிகார முற்களிடம் சிக்கிக்கொள்ளாமல் .... ஒருநாள்..
3.நாம் நினைக்கிற மாதிரி இல்லங்க கடவுள்
4.காதலினால் தோற்க போகும் காதல்...


2. இவர்
தஞ்சையி்ல் பிறந்து, குடந்தையில் வளர்ந்து, (சென்னை) தாம்பரத்தில் வாழ்ந்து வருபவர். தொலைத் தொடர்புத்துறையில் பணியில் இருக்கின்றார். இலக்கியத்திலும், பத்திரிக்கை துறையிலும் ஆர்வம் உள்ள நல்ல நண்பர். இவர் பின்னூட்டங்களில் மட்டிமே எனக்கு பழக்கம், இருந்தாலும் இவரின் நட்பு நன்றாக இருக்கும். அந்த நல்ல நண்பர்தான் அன்பு மணி, இவரின் தளத்தின் பெயர் இலக்கியா, இவரின் மற்றொரு தளம் கவிதைகுரல் . இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்..


அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.அவன், அவள்,அது ( உயிரோடை சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது)

2.ஏதவது செய்யனும் பாஸ்
3.சிற்றிதழ் ஆசிரியராக நான்
4.மகளிர் தின கவிதையும் கூடவே என் குசும்பும்


3. இவர் கிராமசூழலில் வளர்ந்து, தற்பொழுது சென்னைப்பட்டிணத்தில் வசித்துவருகின்றார். இவரின் தளத்தின் பெயரை பார்த்தாலே தெரிந்துவிடும் கிராமத்தின் மீது உள்ள இவரின் ஆசைகள். சமுகம் சார்ந்த கவிதைகள், கட்டுரைகள் எழுதுகின்றார். இவரிடம் நான் பின்னூட்டங்களில் மட்டுமே பழக்கம். என்னுடைய பதிவுகளை படித்து தயங்காமல் பாராட்டுவார். அவர்தான் உழவன், இவரின் தளத்தின் பெயர் உழவனின் உள்றல்கள். இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...


அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.சொந்த மண்ணில்
2.நா
ங்களும் பாரதிதான்
3.உன் பெயர் என்ன?
4.வயதுக்கு வராத பெண்ணுக்கு திருமணமா?

4. தன் தொழிற்சார்ந்த பதிவுகளையும், சமுகம்சார்ந்த பதிவுகளையும் எழுதி வருகின்றார். நான் இவருடன் அலைபேசியில் பேசியுள்ளேன். RPF ல் முக்கிய பொறுப்பில் வேலை செய்து வருகின்றார். தன் கடமைகளுக்கு மத்தியில் சில நல்ல இடுக்கைகளையும் எழுதி வருகின்றார். இவர்தான் நம்முடைய ராம் .CM, இவர் மீசைகாரி என்ற தளத்தில் எழுதுகின்றார். இவரின் தளத்தைப் பார்க்க படத்தில் மேல் தட்டவும்..


அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.இரயிலில் பயணம் செய்பவர்களா நீங்கள்?
2.சர்ககஸ் எங்கள் வாழ்வதாரம்
3.இரயில் மருத்துவமனை
4.சல்யூட் நமது கடமை

5. பின்னூட்டங்களில் கிடைத்த நண்பர்களில் இவரும் ஒருவர். தாராள மனதுடன் பின்னூட்டம் இடுவார். சமுகம் சார்ந்த கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.கலிபோர்னியாவில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகின்றார். இவர்தான் ச.பிரேம் குமார், திரட்டி.காம் நட்சத்திர பதிவுகளில் கலக்கியவர். இவரின் தளம் மொழியோடு ஒரு பயணம். இவரின் தளத்தைப் பார்க்க படத்தில் மேல் தட்டவும்..


அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1. திரட்டி.காம் நட்சத்திர பதிவு: மனிதனை தேடி
2.மாணவர்களும் அரசியலும்
3.திண்ணை நினைவுகள்
4.வந்தாரை வாழவைக்கும் கர்நாடகமா? சிரிப்புதான் வருது

6. இவர் தனது வலைப்பக்கத்தை தொலைத்துவிட்டு இதுபோல் நம் நண்பர்களுக்கும் நேர்ந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்த நல்ல நண்பர். சென்னையில் வசிக்கின்றார், அந்த நல்ல உள்ளம் ஆ.முத்துராமலிங்கம். தனது தளம் "தெருவிளக்கு" பிரச்சனைக்கு பிறகு பென்சில் என்ற தளத்தில் எழுதிவருகின்றார். இவர் கவிதை, சமுகம் சார்ந்த கட்டுரைகள் எழுதுகின்றார். நல்ல ரசனையுள்ள இந்த நண்பர் என் இடுக்கைகளில் அனேகம் படித்துவிட்டு பின்னூட்டம் இடுவார். அவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...


அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.தொலையும் நான் ... தொலைவில் நீ
2.மூன்று கவிதைகள்
3.நூல் வெளியீட்டு விழாவில் என் முதல் அனுபவமும் நண்பர் அன்புமணியுடான இனிய சந்திப்பும்
4.கொடிய பகலின் விசும்பல்கள்


7. இவர் பள்ளி, கல்லூரி ஆண்டு மலர்களில் தொடங்கிய எழுத்துப் பயணம் 'நண்பர் வட்டம்' இலக்கியப் பத்திரிகை, 'திண்ணை' இணைய இதழ், 'வார்ப்பு' கவிதை வாராந்திரி, 'மனிதம்' மின்னிதழ் எனத் தொடர்ந்து இப்போது 'விகடன்' இணைய தளத்திலும்.. *தொடர்ந்து எழுதுவது... என இவரே இவரைப்பற்றி இவரின் தளத்தில் சொல்லியுள்ளார். என்னுடன் பின்னூட்டங்களில் பழக்கமான இவர், எனது எல்லா இடுக்கைகளையும் படித்துவிடுவார் எனத் தெரிகின்றது. இவரின் எழுத்துகளில் சமுகம்சாந்த பதிப்பாக இருக்கும். அவர் தான் ராமலஷ்மி, இவரின் தளம் முத்துச்சரம். இவரின் தளத்தைப் பார்க்க படத்தில் மேல் தட்டவும்..


அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.பால்நிலா
2.பொட்டலம் (உரையாடல் சிறுகதை போட்டிக்கு)
3.விடியலுக்கு ஏங்கும் வெற்றுப் பிம்பங்கள்
4.சேற்றிலே செந்தாமரைகளும் ஆஸ்கார் அவாடுகளும்

8. சிங்கையில் பணிபுரியும் இவரை பின்னுட்டங்களில் மட்டுமே தெரியும். இவரை சந்திக்க வாய்ப்புகள் உருவாகவில்லை. கலக்கலான இளஞர் , சினிமா பாட்டு மெட்டுக்கு இவர் பாட்டெழுதுகின்றார். நீங்களே அவரின் தளத்தைப் பார்த்தால் தெரிந்துவிடும். அவர்தான் பிரியமுடன் பிரபு, அவரின் தளத்தின் பெயரும் பிரியமுடன் பிரபு தான். இவரின் தளத்தில் இலக்கணம் படிக்கவில்லை தலக்கனமும் எனக்கு இல்லை என்று சொல்லி வருகின்றார். இவரின் தளத்தைப் பார்க்க படத்தில் மேல் தட்டவும்...


அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.காதல்... காதல்... காதல்
2.சினிமா மெட்டுக்கு என் பாட்டு-1
3.மாமாவுக்கு கல்யாணம்
4.கல்லூரி காதல்


9. பதிவு உலகின் கலக்கல் மன்னன், தன்னுரைய தளத்தின் பெயரையே கலக்கலுக்கு சொந்தமாக்கிக்கொண்டவர். இவரின் பின்னூட்டம் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லை என்றாலும் நயமான கருத்து இருக்கும். எனக்கும் பிடித்த அந்த நகைசுவை மன்னன் நம்ம நையாண்டி நைனா தான்ங்க. அதே போல் நல்ல பதிவர்களை ஊக்கப்படுத்தும் நல்ல உள்ளம் கொண்டவர். இவரின் தளம் லக லக லக ....., இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...


அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.நாடோடிகள்: அரிப்பும்.. சொரிந்ததால் வந்த புண்ணும்...
2.பதிவை படித்த குரங்கு பகுதி-1
3.சுண்டாமல் இழுக்கும் விளம்பர உலகம்
4.வெட்கமாய் இல்லை இப்படி ஓட்டு கேட்க...

10.கொங்க தமிழில் எல்லா ரசனைகளையும் எழுதி வருகின்றார்.
Fetna.. தமிழ்த் திருவிழா சிறப்புகளை அலசிக் கொடுத்துக் கொண்டிருப்பவருமான நண்பர் பழம பேசியை பற்றி நான் சொல்ல தேவையில்லை. எனது அனேக பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்டும் அதே சமயம் தவறுகளையும், எழுத்து பிழைகளையும் சுட்டிகாட்ட தயங்காத நல்ல நண்பர். இவர் எழிலாய் பழமை பேச என்ற தளத்தில் எழுதி வருகின்றார். இவர் கொங்கு மண்டலத்திலிருந்து அமேரிக்காவில் வேலை செய்துக்கொண்டு வருகின்றார். இவரின் தளத்தைப் பார்க்க படத்தில் மேல் தட்டவும்...


அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.ஈழம்: சாமானியத் தமிழனின் மனநிலை...
2.பழமபேசி பேசுறாரு....
3.பத்தாம் பசலி!
4.தமிழின விரோத உளவியல்ப் போரும் தமிழனின் அறியாமையும்!

இன்னும் வரும் அதுவரை
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

37 comments:

  1. எல்லா சுட்டிகளையும் படிக்க முயற்சிக்கிறேன்...

    ReplyDelete
  2. // sarathy said...

    எல்லா சுட்டிகளையும் படிக்க முயற்சிக்கிறேன்...//

    மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்

    ReplyDelete
  3. என் பழைய பதிவுகளையும் படித்து இங்கு சுட்டி காட்டியமைக்கு நன்றி தோழரே

    ReplyDelete
  4. நண்பர்களை ஊருக்கு காட்டியதற்கு நன்றி. உமது நண்பர், எமது நண்பரே,..

    ReplyDelete
  5. அன்பின் ஞான சேகரன்

    அருமை அருமை - கடுமையாக உழைத்துப் பல பதிவர்களை அறிமுகப் படுத்தி உள்ளீர்கள். மிகவும் நன்று.

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  6. அறிமுகப் படுத்திய அனைவரும் சிறந்த பதிவர்கள்!!

    ReplyDelete
  7. வழக்கம் போலவே நேர்த்தியான தொகுப்பு. முத்துச்சரத்தையும் இங்கு முன் வைத்திருப்பதற்கு என் நன்றிகள்!
    மற்றவருக்கும் என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் சேகர்...பல சிறந்த பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்...
    அறிமுகமே அறிந்துக் கொள்ளும் ஆர்வத்தை தூண்டுகிறது...உழவன் பிரபு தவிர மற்ற பதிவர்களை அறிந்ததில்லை நன்றி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. // ச.பிரேம்குமார் said...

    என் பழைய பதிவுகளையும் படித்து இங்கு சுட்டி காட்டியமைக்கு நன்றி தோழரே//

    வாங்க தோழரே..
    நன்றிகோ

    ReplyDelete
  10. //jothi said...

    நண்பர்களை ஊருக்கு காட்டியதற்கு நன்றி. உமது நண்பர், எமது நண்பரே,..//

    வணக்கம் நண்பா
    மிக்க நன்றி...

    ReplyDelete
  11. // cheena (சீனா) said...

    அன்பின் ஞான சேகரன்

    அருமை அருமை - கடுமையாக உழைத்துப் பல பதிவர்களை அறிமுகப் படுத்தி உள்ளீர்கள். மிகவும் நன்று.

    நல்வாழ்த்துகள்//

    வாய்பழித்த உங்களுக்கும் நன்றி ஐயா

    ReplyDelete
  12. // தேவன் மாயம் said...

    அறிமுகப் படுத்திய அனைவரும் சிறந்த பதிவர்கள்!!//

    வணக்கம் தேவன் சார்..
    கருத்துரைக்கு மிக்க நன்றிங்க

    ReplyDelete
  13. // ராமலக்ஷ்மி said...

    வழக்கம் போலவே நேர்த்தியான தொகுப்பு. முத்துச்சரத்தையும் இங்கு முன் வைத்திருப்பதற்கு என் நன்றிகள்!
    மற்றவருக்கும் என் வாழ்த்துக்கள்!//

    வணக்கம்
    வாழ்த்துகள்

    ReplyDelete
  14. // தமிழரசி said...

    வாழ்த்துக்கள் சேகர்...பல சிறந்த பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்...
    அறிமுகமே அறிந்துக் கொள்ளும் ஆர்வத்தை தூண்டுகிறது...உழவன் பிரபு தவிர மற்ற பதிவர்களை அறிந்ததில்லை நன்றி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..//

    வாங்க தமிழ் வணக்கம்..
    மிக்க நன்றிகோ

    ReplyDelete
  15. நல்ல பதிவர்களை அறிமுகபடுத்தியிருக்கிறீர்கள்

    ReplyDelete
  16. // Suresh Kumar said...

    நல்ல பதிவர்களை அறிமுகபடுத்தியிருக்கிறீர்கள்//

    வாங்க் சுரெஷ் குமார்...
    மிக்க நன்றிங்க

    ReplyDelete
  17. எனது வலையில் 50- வது இடுகை என்ற சந்தோசத்தில் இருந்த எனக்கு தங்களின் வலைச்சர அறிமுகமும், விகடன் குட் பிளாக்கில் வந்திருப்பதும் எல்லாம் ஒருசேர கிடைதிருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி ஞானசேகரன்.

    ReplyDelete
  18. /// குடந்தை அன்புமணி said...

    எனது வலையில் 50- வது இடுகை என்ற சந்தோசத்தில் இருந்த எனக்கு தங்களின் வலைச்சர அறிமுகமும், விகடன் குட் பிளாக்கில் வந்திருப்பதும் எல்லாம் ஒருசேர கிடைதிருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி ஞானசேகரன்.///

    வணக்கம் நண்பா..
    என்னுடைய இனிய வாழ்த்துகள்

    ReplyDelete
  19. நல்ல பதிவர்களை மிக நல்லமுறையில் அறிமுகப்படுத்தி வருவது ரொம்ப நல்லா இருக்கு ஞானசேகரன். இருக்காதா பின்னே. நம்ம தஞ்சை தஞ்சைதான்.

    எல்லா சுட்டிகளையும் கண்டிப்பா படிக்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  20. நண்பர் ஞானசேகரன் வலைபதிவு ஆசிரியர் பதிவை சிறப்பாக செய்துகொண்டு இருக்கிறீர்கள் வாழ்த்துகள்,மேலும் இங்கு அறிமுகபடுத்திய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. அட.. இதுல நானுமா! நன்றிகளும் வாழ்த்துக்களும் :-)

    ReplyDelete
  22. கலக்குறிங்க ஞானசேகரன்!

    அனைவரும் எனக்கு தெரிந்த பதிவர்கள் என்பதால் தப்பித்தேன், இல்லையென்றால் படித்து முடிக்க ஒருநாள் போதாது!

    ReplyDelete
  23. //S.A. நவாஸுதீன் said...
    நல்ல பதிவர்களை மிக நல்லமுறையில் அறிமுகப்படுத்தி வருவது ரொம்ப நல்லா இருக்கு ஞானசேகரன். இருக்காதா பின்னே. நம்ம தஞ்சை தஞ்சைதான்.

    எல்லா சுட்டிகளையும் கண்டிப்பா படிக்க முயற்சிக்கிறேன்.//

    மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  24. //sollarasan said...
    நண்பர் ஞானசேகரன் வலைபதிவு ஆசிரியர் பதிவை சிறப்பாக செய்துகொண்டு இருக்கிறீர்கள் வாழ்த்துகள்,மேலும் இங்கு அறிமுகபடுத்திய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.//

    நன்றி சொல்லரசன்

    ReplyDelete
  25. //" உழவன் " " Uzhavan " said...
    அட.. இதுல நானுமா! நன்றிகளும் வாழ்த்துக்களும் :-)
    //


    நன்றியும் வாழ்த்துகளும் நண்பா

    ReplyDelete
  26. // வால்பையன் said...
    கலக்குறிங்க ஞானசேகரன்!

    அனைவரும் எனக்கு தெரிந்த பதிவர்கள் என்பதால் தப்பித்தேன், இல்லையென்றால் படித்து முடிக்க ஒருநாள் போதாது!//

    நன்றியும் வாழ்த்துகளும் நண்பா..


    முடிந்தால் இன்னும் படிக்கலாமே

    ReplyDelete
  27. //முடிந்தால் இன்னும் படிக்கலாமே //

    மிஸ்ஸான ஒன்றிரண்டை படித்தேன், மற்றவை நான் ரெகுலராக படிப்பது, அனைவரும் எனது ரீடரில் இருக்கிறார்கள் நண்பரே!

    ReplyDelete
  28. // வால்பையன் said...

    //முடிந்தால் இன்னும் படிக்கலாமே //

    மிஸ்ஸான ஒன்றிரண்டை படித்தேன், மற்றவை நான் ரெகுலராக படிப்பது, அனைவரும் எனது ரீடரில் இருக்கிறார்கள் நண்பரே!//

    மிக்க மகிழ்ச்சி நண்பா

    ReplyDelete
  29. அறிமுகங்களுக்கு மிக்க நன்றி ஞானசேகரன் ..!
    கண்டிப்பாக வாசிக்க முயற்சிக்கிறேன் ..!

    ReplyDelete
  30. // நேசமித்ரன் said...

    அறிமுகங்களுக்கு மிக்க நன்றி ஞானசேகரன் ..!
    கண்டிப்பாக வாசிக்க முயற்சிக்கிறேன் ..!//

    மகிழ்ச்சியும் நன்றியும் நண்பா

    ReplyDelete
  31. வாழ்த்துகள்
    பல நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete
  32. // திகழ்மிளிர் said...

    வாழ்த்துகள்
    பல நல்ல அறிமுகங்கள்//

    மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  33. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!

    அனைத்து தொகுப்புகளுமே வழக்கம்போல
    மிகவும் நேர்த்தியான தொகுப்புகள்!!

    அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  34. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

    அறிமுக படுத்தியுள்ள பதிவுகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  35. // RAMYA said...

    வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!

    அனைத்து தொகுப்புகளுமே வழக்கம்போல
    மிகவும் நேர்த்தியான தொகுப்புகள்!!

    அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!!//

    வழக்கம் போல மிக்க நன்றிங்க ரம்யா

    ReplyDelete
  36. // மஞ்சூர் ராசா said...

    வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

    அறிமுக படுத்தியுள்ள பதிவுகளுக்கும் நன்றி.//

    மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  37. அடடா...எப்பிடி மிஸ் பண்ணினேன்னு தெரிலியே? இப்போதான் பார்த்தேன்....ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது