07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 28, 2010

வாழ்த்துகள் ஜெட்லி - வருக ! வருக ! காயத்ரி

அன்பின் சக பதிவர்களே !கடந்த ஒரு வார காலமாக, ஆசிரியப் பொறுப்பேற்ற ஜெட்லி ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 80 மறுமொழிகள் பெற்று, பல பதிவர்களை அறிமுகப்படுத்தி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவரை வலைச்சரம் சார்பினில் நன்றி கலந்த வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.மார்ச்சுத்திங்கள் முதல் தேதியன்று - நாளை - துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க சென்னையைச் சார்ந்த மாணவி காயத்ரி அன்புடன் இசைந்துள்ளார்....
மேலும் வாசிக்க...

அனைவருக்கும் நன்றி....!!

அனைவருக்கும் நன்றி....!!ஏதோ இப்போ எனக்கும் கொஞ்சம் மன திருப்தி...நாலு பேரை மற்றவர்களுக்கு அறிமுகபடுத்திய திருப்தி.இந்த வாய்ப்பை வழங்கிய சீனா ஐயா அவர்களுக்குநன்றிகள் பல....வலைச்சரம் எழுதுவது கொஞ்சம் கடினமான வேலைதான்,காரணம் அனைவரையும் திருப்தி படுத்த வேண்டும்.நான் அதை செய்யவில்லை என்று நினைக்கிறேன்...ஏதோ என்னால் முடிந்தளவு செய்து இருக்கிறேன்!!எனக்கு ஊறுதுணையாக இருந்த மீன்துள்ளி செந்தில்மற்றும் சித்ரா அவர்களுக்கு நன்றிகள்.அடுத்து...
மேலும் வாசிக்க...

Saturday, February 27, 2010

ரௌத்ரம் பழகு

நான் ரசித்த இயக்குனர்: கற்றது தமிழ் ராம்.எனக்கு கற்றது தமிழ் படம் பிடிக்கும்,பாடல்கள் செம...சமீபத்தில் தான் ராம் அவர்களின் சுந்தரனார் பல்கலைகழகத்தில் நடந்த வீடியோ தொகுப்பை பார்த்தேன்.அதில் இருந்து அவரின் பேச்சுக்கும் ரசிகன் ஆனேன்....கற்றது தமிழ் படம் ஓடவில்லை என்றாலும் பல மக்களை பாதித்தது என்பது உண்மை....கற்றது தமிழில் அவர் கூறிய கருத்து இது தான்..அது பாரதியாரின்.... "மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டா"!!உங்கள்...
மேலும் வாசிக்க...

Thursday, February 25, 2010

கவிதைனா டெர்ரர் ஆகக்கூடாது....!!

கவிதைனா டெர்ரர் ஆகக்கூடாது....!!நான் ரசித்த பாடல் :மூங்கில் காடுகளே....(சாமுராய்)எனக்கு பிடிச்ச பாட்டுன்னு யாராவது கேட்டாசட்டுன்னு நான் சொல்றது சாமுராய் படத்தில்வரும் மூங்கில் காடுகளே என்பேன்.அந்த பாட்டில்அனைத்துமே அருமையை இருக்கும்.அந்த பாடலின்கான்செப்ட் செம.அதை விட அந்த பாடல் வரிகள்நன்றாக இருக்கும்.இயற்கை அழகை வைரமுத்துஅழகாக சொல்லி இருப்பார்.************************************************இன்று கவிதை எழுதுபவர்கள் குறித்து ஒரு...
மேலும் வாசிக்க...

Wednesday, February 24, 2010

இந்த பீட்டர் ரொம்ப நல்லவன்!!

நான் ரசித்த சிறுகதை : பீட்டர்பீட்டர் என்ற சிறுகதையை தூக்கத்தில் என்னை எழுப்பிகேட்டாலும் ஒப்பித்து விடுவேன்.சுஜாதா அவர்களின்சிறுகதை தான் இந்த பீட்டர்.பீட்டர் கதையின் கருவாழ்க்கையில் எல்லாவற்றையும் ஈஸியாக எடுத்துகொள்ள வேண்டும் என்பதே.சுஜாதா அவர்கள் இதைஅளித்த விதம் செம....இந்த கதையை நான் ஒரு இருபதுபேரிடம்ஆவது சொல்லி இருப்பேன்.....நீங்களும் அதைபத்தி ஷேர் பண்ணிக்கலாம்.....************************************நான் ரசித்த சில சிறுகதைகள்......
மேலும் வாசிக்க...

Tuesday, February 23, 2010

த்ரிஷா இல்லனா திவ்யா...!!

நான் ரசித்த தன்னம்பிக்கை பொன்மொழி :த்ரிஷா இல்லனா திவ்யா...!!மேல குறிப்பிட்ட தன்னம்பிக்கை பொன்மொழி இடம் பெற்றபடம் தலைநகரம்.வடிவேலு,மயில்சாமி கூட்டணி செமரகளை பண்ணி இருப்பாங்க.வடிவேல் அவர்கள் இந்தபடத்தில் வாழ்க்கை தத்துவத்தை?? "த்ரிஷா இல்லனாதிவ்யா.." என்று மிக அழகாக சொல்லி இருப்பார்.நம் இளைய சமுதாயத்துக்கு இந்த தன்னம்பிக்கைபொன்மொழி அவசியமானது!!************************************நான் ரசித்த சில காமெடி பதிவுகள் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்....சேட்டைக்காரன்...வேட்டைக்காரன்...
மேலும் வாசிக்க...

Monday, February 22, 2010

வலைச்சரத்தில் முதல் நாள்....

வணக்கம்ங்க....நாலு வருஷம் சந்திக்காத நண்பர்களை ஒரு நண்பனின்கல்யாணத்தில் சந்தித்து அப்போது நாங்கள் பகிர்ந்துகொண்ட விஷயங்களை "ஏன் நாம ப்ளாக் ஆரம்பிக்ககூடாது?" என்று ஆரம்பித்து இப்போது இங்கே வந்துநிற்கிறேன்.என்னோட முதல் இடுகையே "அருந்ததீ" படத்தின்விமர்சனம் தான்.அதற்கு முதல் பின்னூட்டம்அளித்து ஆதரித்தவர் பழனி டாக்டர் சுரேஷ்அவர்களுக்கு என் நன்றிகள் பல.அப்புறம் ஏதோஏதோ டைப் அடிச்சுட்டு இருந்தேன்.நண்பர் லோகுஅவர்களின் அறிமுகத்துக்கு நன்றி.குறுகிய...
மேலும் வாசிக்க...

Sunday, February 21, 2010

வாழ்த்துகள் ஜெரி - வருக வருக ஜெட்லி

அன்பின் சக பதிவர்களே ! கடந்த ஒரு வார காலமாக, வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்று, தனது பணியை முடித்து மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார் அருமை நண்பர் ஜெரி ஈசானந்தா . அவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 300 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். பல்வேறு தலைப்புகளில் பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்து = பல நல்ல இடுகைகளின் சுட்டிகள் கொடுத்துள்ளார். அவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் வலைச்சரம் குழு பெருமை அடைகிறது. 22ம் நாள் துவங்கும்...
மேலும் வாசிக்க...

விடை பெறுகிறேன்.

வலையுலக நண்பர்களே,வணக்கம்,மதுரை பதிவர்களை சந்திக்க படிமக்கவிஞர் நேசமித்திரன் நைஜீரியாவில் இருந்து இன்று வருகை தந்தார்,காலை முதல் இரவு வரை அவருடன் இருந்து விட்டு இப்போ தான் வீட்டுக்குள் வருகிறேன்.இந்த வலைச்சர வாய்ப்பை எனக்கு தந்த சீனா ஐயாவுக்கும்,அவரது துணைவியாரும்,எனது தாயுமான செல்வி ஷங்கருக்கும் நான் வாழ்நாள் கடமை பட்டிருக்கிறேன்.பலதரப்பட்ட பதிவர்களை,தேடி படிக்க முடிந்தது,புதிய நண்பர்கள்,தோழிகள்,கிடைத்து இருக்கிறார்கள்.வலைச்சர...
மேலும் வாசிக்க...

Saturday, February 20, 2010

வலைச்சரத்தில் சிங்கங்கள்.

வணக்கம் நண்பர்களே,இன்று வலைச்சரத்தில் ஐந்து சிங்கங்களை அறிமுப்படுத்தப்போறேன்,என் இந்த பெயர் வைத்தேன் என்று சும்மா போய் பாருங்க,அப்ப..புரியும்.-------------------------------------------------------------------------------------------------------------D.R. அசோக்:என் இனிய நண்பர்,சென்னைக்காரர்,இவர் ஒரு பின்னூட்ட மின்னல்,"அறிதலில் காதல்"என்ற பெயரில் வலைப்பூ வைத்திருக்கிறார்,கவிதைகளின் இளவரசனாக வலம் வருகிறார்.மனித மனத்தின் பேயோட்டமே...
மேலும் வாசிக்க...

Friday, February 19, 2010

"வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்."

நண்பர்களே வணக்கம்,இன்னைக்கு ஒரு வழியா ஐந்து அம்மிணிகளை தேடிப்பிடுச்சு உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போறேன்,எப்பவும் போல உங்க ஆதரவ வேண்டி இந்த கைப்புள்ள களமேறங்கி இருக்கேன். ---------------------------------------------------------------------------------------------சித்ரா: அமெரிக்காவில் வசிக்கும் வலைப்பதிவர்,தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று ஒரு காலத்தில் அழைக்க ப்பட்ட பாளையங்கோட்டையில் பிறந்தவர்,[நானும் இங்கு தான் ஆசிரிய...
மேலும் வாசிக்க...

Thursday, February 18, 2010

"வலைச்சரத்தில் நான்காம் நாள்."

வணக்கம் நண்பர்களே,நேத்து முழுசும் "சீதா புராணம்" பாடி முடிச்சிட்டு.இன்னைக்கு எப்படிடா படத்த ஓட்டபோற கைப்புள்ளைன்னு நெனைச்சுட்டு இருக்குறப்ப,நம்ம மதுரையில இருக்குற மூன்று பாசக்கார பய புள்ளைகளை அறிமுகப்படுத்துவோம்னு "எப்பவும் போல உங்களை நம்பி களமேறங்கி இருக்கேன்,கவுத்திபுடாதீக.நாளைக்கு ஒரு ஐந்து பெண் பதிவர்களையும்,சனிக்கிழமை ஒரு ஐந்து ஆண் பதிவர்களையும் போட்டு,ஞாயிறு அன்னைக்கு நன்றி சொல்லி டைட்டில் கார்டு போட்டுபுட்டு படம் காட்டுரத...
மேலும் வாசிக்க...

Wednesday, February 17, 2010

பெண்பதிவர்:"சீதா பாரதி"

Beloved friends,here iam very proud to introduce such a beautiful and brilliant poetess seetha bharathi. I witness with her soul stirring verses,and all leads you to plunge into the pool of ecstasy,and mesmeric mood. ---jerry eshananda---------------------------------------------------------------------------------------------------------------------மேற்கண்ட...
மேலும் வாசிக்க...

Tuesday, February 16, 2010

வலைச்சரத்தில் 2- வது நாள்.

வணக்கம் நண்பர்களே,என்னைப்பொறுத்த வரையில்,"தமிழ் குடியே,உலகின் தொன்மம் பொதிந்த,ஆதிகுடிஎன்றும்,தமிழ் மொழியே,ஆதி மொழி என்றும் திடமாக நம்புபவன்.வரலாறை மறப்பது துரோகம் என்றால்,வரலாறை மறைப்பது, மாபெரும் துரோகம்.அந்தவகையில்,நம் இனத்திற்கு நேர்ந்த பேரழிவை, அவமானத்தை,கண்டுகொள்ளாமல் புறந்தள்ளி செல்வது என்பது இயலாமை.[Impotent],மாறாக அந்த உணர்வை மனித தன்மையோடு உள்வாங்கி,ஒரு கவிதை வடிவிலோ,கட்டுரை வடிவிலோ,எளிய பாடல் வடிவிலோ,அல்லது தினம் சந்திக்கும்...
மேலும் வாசிக்க...

Monday, February 15, 2010

வலைச்சரத்தில் முதல்நாள்.

நாடி நரம்புகளில் நட்பையும்,அன்பையும்,ஒன்றாக ப்பாய்ச்சும்,வலையுலக நண்பர்களே வணக்கம்."இந்த வாரம் -நம்ம வாரம்", மதுரைக்கே மல்லிகையா?என்பதைப்போல,நம்மையும் ஒரு ஆளாக மதித்து,வலைச்சர ஆசிரியராகபணித்த அன்பின் சீனாவை வாழ்த்த வயதில்லை,வணங்குகிறேன்.[எப்பிடி...வயச குறைச்சு கிட்டோம்ல.]எப்படி படத்த ஒரு வாரத்துக்கு ஓட்ட போறோம்னு?நினைச்சுக்கிட்டே,முன்னாள் ஆசிரியர்களின் பக்கங்களை பார்த்தால்,தலை நன்றாகவே 3-D யில் சுற்றுகிறது,ஆனாலும் கிடைக்க விருக்கும்...
மேலும் வாசிக்க...

Sunday, February 14, 2010

வாழ்த்துகள் கார்த்தி - வருக வருக ஜெரி

கடந்த ஒரு வார காலமாக, ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் கார்த்திகைப் பாண்டியன், ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 170 மறுமொழிகள் பெற்று , பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்து, சுட்டிகள் கொடுத்து, ஏற்ற பொறுப்பினை மன நிறைவுடன் நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.அவர் பதிவர்களை அறிமுகப் படுத்தும் பொழுதே - தினம் ஒரு புத்தக விமர்சனமும் ஒரு சினிமா விமர்சனமும் இடுகையில் சேர்த்து புதுமை படைத்தது நன்று.நன்றி கலந்த நல்வாழ்த்துகள் நண்ப கார்த்திகைப்...
மேலும் வாசிக்க...

Saturday, February 13, 2010

நிறைய நட்பு.. கொஞ்சம் இலக்கியம்..!!!

பொழுதுபோக்கு, வாசிப்பு, தகவல்கள் என்பதையும் தாண்டி இந்தப் பதிவுலகம் எனக்கு கொடுத்திருக்கிற விஷயம் - நட்பு. இந்த ஒன்றரை வருஷத்துல பதிவுலகு மூலமா எனக்கு கிடைச்சு இருக்குற அருமையான நண்பர்கள், நான் பார்த்துப் பழகிய நல்ல இதயங்களைப் பற்றியதுதான் இந்த இடுகை. நிறைய பேரைப் பத்தி சொல்ல வேண்டி இருக்குறதால இடுகைகளை சொல்லாமல் தளத்தோட முகவரியை மட்டும் தந்து இருக்கேன். இவர்களில் நிறைய பேரை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். அதனால கூடவே...
மேலும் வாசிக்க...

Thursday, February 11, 2010

இவர்கள் எனக்கு புதியவர்கள்..!!!

பெருந்துறையில் வேலை பார்த்து வந்த வரை, பதிவுகளைப் படித்து பின்னூட்டம் இடுவது என்பது, எனக்கு பிரச்சினையாக இருக்கவில்லை. ஹாஸ்டல் வாழ்க்கை. கல்லூரியிலும், விடுதியிலும் எந்நேரமும் இணைய வசதி இருக்கும். எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாய் படித்து பின்னூட்டங்கள் இட முடியும். பதிவு எழுதி விட்டு பின்னூட்டங்களுக்காக ஆவலுடன் காத்துக் கிடப்பது எத்தனை கஷ்டமானது என்பதை நான் அறிந்தவன். எனவே புதிதாக எழுத வரும் நண்பர்களை தேடிப்பிடித்து...
மேலும் வாசிக்க...

Wednesday, February 10, 2010

கவிதையாய் கசிந்துருகி..!!!

உலகின் அதி உன்னதமான கலைஞர்கள் என்று கவிஞர்களை சொல்லலாம். சந்தோசம், துக்கம், வெட்கம், கோபம், வெறுப்பு, பயம் என எல்லா உணர்வுகளையும் கவிதைகளில் காண முடியும். தனக்கான வார்த்தைகளைத் தேர்ந்து எடுப்பதில்தான் ஒரு சிறந்த கவிஞன் முழுமை அடைகிறான். இப்படித்தான் கவிதைகள் இருக்க வேண்டும் என்றோ, இதுதான் நல்ல கவிதை என்றோ எந்த வரையறையும் கிடையாது. எந்த வடிவத்தில் இருந்தாலும், படித்து முடிக்கும்பொழுது, நம் மனதில் இன்னதென்று சொல்ல முடியாத...
மேலும் வாசிக்க...

Tuesday, February 9, 2010

மாயமாய் மறைந்த பதிவர்கள்..!!!

நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம். நிறைய பேருடன் நெருங்கிப் பழகுவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கிறது. ஆனால் அத்தனை பேரின் நினைவுகளும் நம் மனதில் நிலைப்பதில்லை. வெகு சிலரையே நமக்கு நெருக்கமானவர்களாக உணர முடியும். மாறாக ஒரு சிலரை ஓரிரு முறைதான் சந்தித்து இருப்போம். இருந்தும் நம் மனதில் நிரந்தரமாகத் தங்கி விடுவார்கள். இந்த விஷயம் பதிவுலகத்துக்கும் பொருந்தும்.நான் பதிவுலகில் எழுத வந்த புதிதில், என்னோடு சேர்ந்து...
மேலும் வாசிக்க...

Monday, February 8, 2010

அன்பென்னும் மந்திரச்சொல்..!!!

அன்பென்னும் ஒற்றை வார்த்தைக்குள் இந்த உலகின் அத்தனை உணர்வுகளும் அடக்கம். புராணங்களும், மதங்களும், கடவுள்களும் சொல்ல வரும் ஒரே விஷயம்.. மற்ற உயிர்களிடத்தில் அன்பாயிருங்கள் என்பதுதான். நம் பாரத தேசத்தில், அன்பை தாயின் வடிவமாக, கடவுளின் வடிவமாக என எல்லா விதங்களிலும் கொண்டாடுகிறோம். அதனால்தான் நம்மை எதிரியாய் நினைக்கும் அண்டை தேசத்தை சேர்ந்த குழந்தைக்கும் நம் நாட்டில் இலவசமாக சிகிச்சை செய்யும் மனம் நமக்கு இருக்கிறது.உலகில்...
மேலும் வாசிக்க...

Sunday, February 7, 2010

பெருங்கடலில் சிறுதுளி நான்..!!!

பிரியத்துக்குரிய வலையுலக நண்பர்களே..அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கம். முதலில் என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.நான் மா.கார்த்திகைப் பாண்டியன். என்னுடைய பெயர்க்காரணத்தை என்னுடைய ஐம்பதாவது இடுகையாக எழுதி இருக்கிறேன். மதுரையில் ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறேன். கணினியில் தமிழில் ஒரு உலகம் தனியாக இயங்கி வருவதே எனக்கு ஜூன் 2008இல்தான் தெரியும். நிறைய பதிவுகளை வாசிக்கத் தொடங்கினேன். பின்னூட்டங்கள் இடுவதற்கு...
மேலும் வாசிக்க...

நன்றி லோகு - வருக வருக கார்த்திகைப் பாண்டியன்

அன்பின் சக பதிவர்களே !இன்றுடன் முடியும் வாரத்திற்கு அருமை நண்வர் லோகு ஆசிரியப் பொறுப்பேற்று - ஏற்ற பணியினை அருமையாக நிறைவேற்றி - மன நிறைவுடன் விடை பெறுகிறார். அவர் சென்ற வாரத்தில் ஐந்து இடுகைகள் இட்டு ஏறத்தாழ நாற்பது மறுமொழிகள் பெற்றிருக்கிறார். வித்தியாசமான முறையில், ஆங்கிலம் பேச உதவும் வலைப்பூக்கள், அழகுக்குறிப்பு-மருத்துவக்குறிப்பு போன்ற உடல் நலம் பேணும் வலைப்பூக்கள், பங்கு சந்தை பற்றிய வலைப்பூக்கள், புகைப்படக் கலை பற்றிய...
மேலும் வாசிக்க...

ஆங்கிலம் பேச உதவும் தளங்கள்

அனைவருக்கும் வணக்கம், ஒரு மொழி என்பது, தொடர்பாடலுக்குப் பயன்படுகின்ற ஒரு முறைமை ஆகும். இது ஒரு தொகுதிக் குறியீடுகளையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் கொண்டுள்ளது.மனிதருடைய மொழிகளில், ஒலியும், கைச்சைகைகளும், குறியீடுகளாகப் பயன்படுகின்றன. இவ்வாறான ஒலிகளை எழுத்து வடிவமாக மாற்றமுடியும். ஆனால் சைகைகளை அவ்வாறு மாற்ற முடியாது....
மேலும் வாசிக்க...

Saturday, February 6, 2010

என்ன விலை அழகே!

அழகு என்பது, ஒருவருக்கோ, இடத்துக்கோ, பொருளுக்கோ அல்லது ஒரு எண்ணத்துக்கோ இருக்கக்கூடிய ஒரு இயல்பு ஆகும். இவ்வியல்பு அவற்றைக் காண்போருக்கு மகிழ்ச்சி, திருப்தி என்பவற்றைக் கொடுக்கக்கூடிய காட்சி அநுபவத்தை வழங்கக்கூடியது. அழகியல், சமூகவியல், சமூக உளவியல், பண்பாடு ஆகிய துறைகளின் ஒரு பகுதியாக அழகு ஆய்வு செய்யப்படுகிறது. ஒரு பண்பாட்டு உற்பத்தி என்றவகையில்...
மேலும் வாசிக்க...