07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, February 5, 2010

பங்கு சந்தை குறித்த பதிவுகள்

இந்தியாவின் பங்கு சந்தை வரலாறு 1875-லிருந்து ஆரம்பிக்கிறது. அப்போது 318 பேர் தலைக்கு ரூ. 1/- கொடுத்து இப்போது பாம்பே ஸ்டாக் எக்சேஞ்ச் என அழைக்கப்படுகிற BSE-யில் உறுப்பினரானார்கள்!

1875-லேயே தொடங்கினாலும் ஒன்னும் பெருசா சொல்லிக்கிற மாதிரியில்ல. 1986 வரைக்கும் பங்கு சந்தையை மதிப்பிடுவதற்கு எந்த குறியீடும் இல்லை. 1986 -லே தான் BSE சென்செக்ஸ் என்ற பங்கு சந்தைக் குறியீட்டை அறிமுகப்படுத்தியது.

மார்கெட்டில் இருக்கிற 30 பெரிய கம்பெனிகளின் பங்கு விலைகளைப் பொருத்து சென்செக்ஸ் புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன! பல கம்பெனிகள் பங்கு சந்தையில் வெளியிடப்பட்டாலும் எல்லாமே குறியீட்டெண்களைக் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

BSE என்பது Bombay Stock Exchange-யைக் குறிப்பது போல நிஃப்டி என்பது தேசிய பங்கு சந்தையைக் குறிக்கிறது. இதன் தலைமையகம் டெல்லியாகும். இதில் 50 கம்பெனிகள் 24 விதமான துறைகளிலிருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.நிஃப்டியும் நிஃப்டி 500, ஜுனியர் என பல குறியீட்டெண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

BSE-க்கு சென்செக்ஸ் எனவும் NSE-க்கு நிஃப்டி என்பதும் பங்கு குறியீட்டெண்ணாகும். இதைத் தவிர கல்கத்தா மற்றும் மெட்ராஸ் பங்கு சந்தைகளும் உள்ளன.

பங்குச்சந்தை நுணுக்கங்கள் பற்றி சொல்லும், சில பதிவுகளை இன்று பார்க்கலாம்.  

பங்குச்சந்தை குறித்த செய்திகள், அதன் நிலவரம் குறித்த அலசல்கள், ஆலோசனைகள், பங்குகளின் ஏற்ற தாழ்வுகள் என பல்வேறு அம்சங்களை குறித்து துல்லியமாக அலசும் தளம். பங்கு வர்த்தகம் செய்வோருக்கு மிக உகந்த தளம். அத்தளத்தின் சில இடுகைகள் :

***********************************

பங்கு வணிகம் குறித்த அனைத்து தகவல்களையும், தமிழில் முந்தி தரும் ஒரு தளம். தினசரி பங்கு வர்த்தகத்தின் ஏற்றத்தாழ்வுகளை கூர்ந்து கவனித்து, அது குறித்த அலசலை வெளியிடுகிறது. பங்கு வர்த்தகத்தில் உதவி செய்யும் மிக சிறந்த தளம்.  இத்தளம் தேதி வாரியாக அன்றைய பங்கு வர்த்தகத்தை ஆராய்வதால், குறிப்பிட்ட இடுகைகளை தரவில்லை. 

************************************


பொதுவான பொருளாதாரச் சிந்தனைகளையும், பங்கு முதலீட்டின் நுணுக்கங்களையும், சூட்சுமங்களையும், அவை குறித்த செய்திகளையும் அலசுவதற்கான பதிவு.  இத்தளம் பங்கு வர்த்தகத்தின் ஏற்ற தாழ்வுகளுக்கான காரணிகளையும் அலசுகிறது. பங்கு சந்தையில் புதிதாக ஈடுபட்டுல்லோரும், ஆலோசனைகள் வேண்டுவோரும் படிக்க வேண்டிய தளம். இதன் சில இடுகைகள்: 
 
************************************

 இன்றைய அறிமுகங்களும், பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். மீண்டும் சிறந்த பதிவுகளோடு நாளை சந்திக்கலாம். நன்றி.

பி.கு:
1. பணியிடத்தில் ஏற்பட்ட சில எதிர்பாரா பிரச்சனைகளால் கடந்த இரண்டு நாட்களாக இடுகையிட முடியவில்லை. வலைச்சர நாட்களை வீணாக்கியதற்கு வருந்துகிறேன். 
2. இவ்விடுகை ஆக்கத்தில் பெரிதும் உதவிய நண்பன் அன்புக்கு நன்றிகள் பல.

4 comments:

 1. அருமையான பகுதி. மிகவும் அவசியமான லிங்க்குகளை தந்துள்ளீர்கள். பலருக்கும் பயனாக இருக்கும். நன்றி.

  -வித்யா

  ReplyDelete
 2. useful sharing abt stock market CHEENA SIR
  thanks

  ReplyDelete
 3. அன்பின் லோகு

  பங்குச் சந்தை பற்றிய வலைப்பூக்கள் அறிமுகம் நன்று - உதவிய அன்பிற்கும் உனக்கும் நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 4. பங்கு வலைப்பூ அறிமுகங்களுக்கு மிக்க நன்றி நண்பரே..:)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது