07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, February 17, 2010

பெண்பதிவர்:"சீதா பாரதி"



Beloved friends,here iam very proud to introduce such a beautiful and brilliant poetess seetha bharathi. I witness with her soul stirring verses,and all leads you to plunge into the pool of ecstasy,and mesmeric mood.
---jerry eshananda------
---------------------------------------------------------------------------------------------------------------
மேற்கண்ட ஆங்கில வரிகள் என் புலமையை காட்ட எழுதவில்லை,சந்தோஷ தர்ணத்தில்,மலை உச்சியில் இருந்து கத்த சொன்னால், உணர்ச்சிப்பெருக்கில் கத்துவோமே,அதைத்தான் இங்கே செய்து விட்டேன்.

வற்றிப்போன ஹார்மோன்களையும்,அரை வினாடியில் சுரக்கச்செய்யும் அருமருந்து -காதல்.

துவண்டு கிடக்கும் மனசை துள்ளி எழுப்பும் பீஜ மந்திரம் - காதல்.

இப்படி காதலை ப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்,அது தரும்....வலி,வேதனை,அவமானம்,வெற்றி,பிரிவு, வசந்தம்,சோகம்,என எத்தனையோ வாழ்வியல் பரிமாணங்களில் நம்மை அமிழ்த்தும் "கருணா சாகரம்"- தான் இவரது வலைப்பூ.

யாருமற்ற தனிமையில் பூத்துக்குலுங்கும் நந்த வனத்தில் தென்றலை தழுவியபடி நீங்கள் நடந்தால் எப்படியிருக்கும்?

மெல்லிய குளிரில்,இதமான வாடைக்காற்றில் பௌர்ணமி வெளிச்சத்தில்,உடலை போர்த்தியிருக்கும் கம்பளி ஆடை தரும் கதகதப்பில்,இளைய ராஜா பாடலை கேட்டுக்கொண்டே நடந்தால் எப்படியிருக்கும்?

இன்னும் இது போன்ற எத்தனையோ இனிமைகளை இங்கே இட்டு நிரப்பிக்கொள்ளுங்கள் .இந்த இனிமைகள் அனைத்தையும் இவரது வலைப்பூவிற்கு சென்றால்,வாசிப்பு என்ற ஒற்றை சுகானுபவத்தில் இதனை நீங்கள் எட்ட முடியும்.

கண்களுக்கு உறுத்தாத,எரிச்சல் தராத வலையமைப்பு.
கவிதைகளுக்கேற்ற புகைப்படங்கள்,சுகமாய் தாலாட்டும் வரிகள்,...இப்படி வலைப்பூவில் நேர்த்தி மிளிர்கிறது.

உங்கள் கணினி இருக்கும் அறையின் மின் விளக்கை அனைத்து விடுங்கள்,பின் ஒவ்வொரு கவிதையாய் சுவாசித்து ப்பாருங்கள்,விண்வெளியில் நட்சத்திர கூட்டங்களுக்கு இடையே மிதப்பீர்கள்.

நண்பர்களே, உங்களது வாழ்த்துக்கள் இந்த பெண் பதிவர் -சீதா பாரதியை உற்சாகப்படுத்தட்டும்.இவரது கனவும் மெய்ப்படட்டும்.

தொடர்ந்து ..வாருங்கள், நாளும் ...அன்பில்......தொடர்வோம்




58 comments:

  1. //மேற்கண்ட ஆங்கில வரிகள் என் புலமையை காட்ட எழுதவில்லை,சந்தோஷ தர்ணத்தில்,மலை உச்சியில் இருந்து கத்த சொன்னால், உணர்ச்சிப்பெருக்கில் கத்துவோமே,அதைத்தான் இங்கே செய்து விட்டேன்.//

    இவ்வளவு ரசித்துப் போற்றும் ரசிகர் ஒருவரின் பெருமைக்குரிய அறிமுகம் சீதாபாரதி அவர்களுக்கும் பொக்கிஷமானதுதான்....

    அருமையான தொகுப்பு... மீண்டும் ஓர் அற்புதமான அறிமுகம்.... இவரையும் தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. நல்ல அறிமுகம். சுருக்கமாகச் சொன்னால் இவர் மற்றொரு ஹேமா. அவர் கல்லூரிப் பருவத்தில் இவர் இப்போது முயற்சித்துக்கொண்டுருக்கிறார். அதென்னவோ காதல், பெண்கள் என்றால் பெரும்பாலும் பின்புலத்தை கருப்பாக வைத்துக்கொண்டு ஏன் கண்களை சோதிக்கிறார்கள்?

    ஏந்கனவே ப்ரியமுடன் வசந்த் ஒரு புதிய பாணியை உருவாக்கிவிட்டுச் சென்றார். நீங்கள் வேறொரு தளத்தில் சிறப்படையச் செய்து கொண்டுருக்கிறீர்கள்?

    ReplyDelete
  3. அன்பு மாப்ள பிரபுவுக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  4. கலக்கிறீங்க... பகிர்வுக்கு நன்றி..கண்டிப்பா படிக்கறோம்

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி ஜோதிஜி,தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  6. சீதாபாரதியைப் பற்றிய அறிமுகத்துக்கு நன்றி ஜெரி ஈசானந்தா

    ReplyDelete
  7. இதுவரை நான் படித்ததில்லை!!!

    ReplyDelete
  8. அன்பு நண்பர் அசோக் வருகைக்கு நன்றிகள் பல....

    ReplyDelete
  9. நன்றி தேனம்மை,,,,அழகான பெயர், வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. என்னுடைய வலைச்சரத்தையும் படிக்கவும்!
    http://blogintamil.blogspot.com/2009_02_08_archive.html

    ReplyDelete
  12. அறிமுகங்கள் எல்லாமே வித்தியாசம் + அருமை, தொடருங்கள் ஜெரி. :))

    ReplyDelete
  13. சீதா பாரதிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. எதைக் குறைசொல்வது
    தொலைத்ததையா
    தொலைந்தததையா?///

    சீதாவின் கவிதை அருமை!!

    ReplyDelete
  15. சீதாபாரதியை அறிமுகப்படுத்தி விட்டீர்கள்!
    பல புதிய கவிஞர்களுக்குப் பொறாமை வரும் ஜெரீ!!(எனக்கே வருதே!!) ஹி ஹி!!

    ReplyDelete
  16. மேற்கண்ட ஆங்கில வரிகள் என் புலமையை காட்ட எழுதவில்லை,சந்தோஷ தர்ணத்தில்,மலை உச்சியில் இருந்து கத்த சொன்னால், உணர்ச்சிப்பெருக்கில் கத்துவோமே,அதைத்தான் இங்கே செய்து விட்டேன்.
    ///

    சரி ஓகே!! புரியுது!!!

    ReplyDelete
  17. //உங்கள் கணினி இருக்கும் அறையின் மின் விளக்கை அனைத்து விடுங்கள்,பின் ஒவ்வொரு கவிதையாய் சுவாசித்துப் பாருங்கள்,விண்வெளியில் நட்சத்திர கூட்டங்களுக்கு இடையே மிதப்பீர்கள்.//

    அறிமுகமே அழகான கவிதை.

    வாழ்த்துக்கள் திரு.சீதாபாரதிக்கும், தங்களுக்கும்....

    ReplyDelete
  18. டாக்டர் தேவா,தங்களின் வலைச்சரத்தையும் படிக்கிறேன்,லிங்க் கொடுத்து உதவிய கொடை வள்ளலுக்கு நன்றி.

    ReplyDelete
  19. பலாப்பட்டறை சங்கர் பொய் இப்போ புது கெட்டப்பில் கலக்கல் சங்கரா, வருகைக்கு நன்றி சங்கர்.

    ReplyDelete
  20. /பல புதிய கவிஞர்களுக்குப் பொறாமை வரும் ஜெரீ!!(எனக்கே வருதே!!) ஹி ஹி!!//
    டாக்டர் நீங்களும் பெரிய கவிஞர் தான் ஒத்துக்கறேன்,அதுக்குன்னு சும்மா கெடக்குற, கவிஞர்கள ,பொறாமை அது இதுன்னு சொல்லி உசுப்பேத்தி விடாதீக.

    ReplyDelete
  21. /பல புதிய கவிஞர்களுக்குப் பொறாமை வரும் ஜெரீ!!(எனக்கே வருதே!!) ஹி ஹி!!//
    டாக்டர் நீங்களும் பெரிய கவிஞர் தான் ஒத்துக்கறேன்,அதுக்குன்னு சும்மா கெடக்குற, கவிஞர்கள ,பொறாமை அது இதுன்னு சொல்லி உசுப்பேத்தி விடாதீக.

    //
    நம்ம மனசு பொறாமை பிடித்த மனசாயிருக்கே!! ஹி!! ஹி!!!

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. wow! excellent intro... i've been drenching in her poetry too - simple, straight and heavy to hold, so good :)!

    ReplyDelete
  24. /மேற்கண்ட ஆங்கில வரிகள் என் புலமையை காட்ட எழுதவில்லை,சந்தோஷ தர்ணத்தில்,மலை உச்சியில் இருந்து கத்த சொன்னால், உணர்ச்சிப்பெருக்கில் கத்துவோமே,அதைத்தான் இங்கே செய்து விட்டேன்.
    ///

    சரி ஓகே!! புரியுது!!!
    சரி உங்களுக்கு புரிஞ்சது,எனக்கும் புரிஞ்சதுனாலும்,எல்லாருக்கும் புரியணும்னு,எனக்கு புரிஞ்சத,நான் இங்க புரியாதது மாதி எழுதி,திரும்ப நீங்க,ஒண்ணுமே,புரியல்லைன்னு எழுதி,பின்ன அதுக்கு,நான் உடனே,திரும்ப புரியுறது மாதி எழுதி.........எதுக்கு ..டாக்டர் ...பாவம் ..படிக்கிறவங்க பொழச்சு போறாங்க,விட்டுருவோம்.

    ReplyDelete
  25. இருந்தாலும் ஆங்கிலத்தில் உங்களுக்கு எழுதத் தெரியுது!!!!

    ReplyDelete
  26. நல்ல அறிமுகம். நீங்கள் துவக்கத்தில் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு சரியே :).

    ReplyDelete
  27. துபாய் ராஜாவின் அன்புக்கு நன்றி....கவிதையை,கவிதையால் சொன்னால் தானே இனிமை.

    ReplyDelete
  28. ஒரு நல்ல வலைப்பதிவரை அறிமுகப் படுத்திய உங்களுக்கு நன்றிகள் பல,பல.

    ReplyDelete
  29. ஒவ்வொரு வரிகளும் முத்துக்கள். . அறிமுகத்துக்கு நன்றி.

    ReplyDelete
  30. அறிமுகத்துக்கு நன்றி

    ReplyDelete
  31. அறிமுகத்திற்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  32. //உங்கள் கணினி இருக்கும் அறையின் மின் விளக்கை அனைத்து விடுங்கள்,பின் ஒவ்வொரு கவிதையாய் சுவாசித்து ப்பாருங்கள்,விண்வெளியில் நட்சத்திர கூட்டங்களுக்கு இடையே மிதப்பீர்கள்.
    //
    kosu thollai thanga mudiyala
    light off panni padichaen

    ReplyDelete
  33. ஜெரி - அறிமுகத்திற்கு மிக்க நன்றி...

    வருகை புரிந்த, மறுமொழி அளித்த அனைவருக்கும் அன்பான நன்றிகள் பல..தொடர்ந்து வாங்க.. சந்திப்போம்.. :)

    ReplyDelete
  34. அருமையான அறிமுகம் ஈசானந்தா சார் .

    ReplyDelete
  35. புதியதாய் ஒரு அறிமுகம்.
    நன்றி ஜெரி.தொடருங்கள்.

    ReplyDelete
  36. அறிமுகத்திற்கு நன்றி பாஸ்.

    ReplyDelete
  37. முற்றிலும் புதிய அறிமுகம்.

    நன்றி - அவசியம் தொடர்கிறோம்.

    ReplyDelete
  38. அன்பின் தெகா,வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,தொடர்வோம்

    ReplyDelete
  39. வாங்க சுடுதண்ணி,வருகைக்கு நன்றி,"அடிக்கடி வாங்க,சுடுதண்ணில,லெமன் டீ போட்டு குடிப்போம்.."

    ReplyDelete
  40. வாங்கஅபுல் பசர்,,வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  41. / ஒவ்வொரு வரிகளும் முத்துக்கள். . அறிமுகத்துக்கு நன்றி.//

    வாங்க சித்ரா,எல்லோரும் நலம் தானே,,வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  42. பத்மாவின் வருகை மிகுந்த சந்தோசம்....தொடர்வோம்.

    ReplyDelete
  43. வலைப்பூவில் சிறகடித்து பறக்கும் வண்ணத்து பூச்சியாரே[ சூர்யா] நலமா? வருகைக்கு நன்றி. சென்னை நண்பர்களை கேட்டதாக சொல்லவும்.

    ReplyDelete
  44. வாங்க மீன் துள்ளியான்..."சும்மா பெயர கேட்டாலே ...நாக்குல...எச்சி ஊருதுல"...அடிக்கடி வாங்கப்பு

    ReplyDelete
  45. அன்பின் சீதா பாரதி,உங்களை அறிமுகப்படுத்தியது எனக்கு அளவில்லா மகிழ்ச்சி.உங்கள் மறு மொழிகளில் பெயர் குட்டி பையா,என்று ஆங்கிலத்தில் வருகிறது, தயவு செய்து சீதா பாரதி என்று தமிழில் திருத்தினால் எல்லோருக்கும் குழப்பம் வராது,[உங்களுக்கு விருப்பம் இருந்தால் ...]
    இந்த வாழ்த்துகள் கிடைத்த உற்சாகத்தில் நீங்கள் நிறைய எழுதினால் அதுவே இந்த பதிவின் வெற்றி. நாளும்...அன்பில்..தொடர்வோம்.

    ReplyDelete
  46. நன்றி ஸ்டார் ஜன்.

    ReplyDelete
  47. ஹாய் ஹேமா,நலமா?உங்களுக்கு போட்டியா இப்ப எங்க ஊர்ல ஒரு ஆள களத்தில இறக்கியிருக்கோம்..

    ReplyDelete
  48. அல்லாஹ் அக்பர், வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  49. ஹாய் ஜமால்,சௌக்கியமா?திரும்பவும் நாம் தொடர்வது மகிழ்ச்சி....வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  50. டிஎஸ்பி..மாமூல் வாழ்க்கை எப்படியிருக்கு?

    ReplyDelete
  51. வாங்க தண்டோரா,வணக்கம்,இப்படி ..டி.எஸ்.பி.....டி .எஸ்.பின்னு சொல்லி ...ஆள..உசுப்பேத்தி,இப்ப இந்த ஒரு வாரமா "சிரிப்பு போலீஸ் "நிலைமைக்கு வந்தாச்சு.

    ReplyDelete
  52. ஜெரி புதுப்பதிவு எப்போ?

    ReplyDelete
  53. சுட சுட வந்துட்டே இருக்கு தேவா

    ReplyDelete
  54. அன்பின் ஜெரி

    அருமையான அறிமுகம்

    மறைந்த புகழ் பெற்ற எழுத்தாளர் சுஜாதா ஜோ என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்திய வரிகள் நினைவிற்கு வருகின்றன.

    நல்வாழ்த்துகள் ஜெரி

    ReplyDelete
  55. அறிமுகத்திற்கு நன்றி!

    ReplyDelete
  56. வேறு சில காரணங்களுக்காக இந்த புகைப்படத்தை இந்த பதிவில் இருந்து நீக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது