07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, February 9, 2010

மாயமாய் மறைந்த பதிவர்கள்..!!!

நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம். நிறைய பேருடன் நெருங்கிப் பழகுவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கிறது. ஆனால் அத்தனை பேரின் நினைவுகளும் நம் மனதில் நிலைப்பதில்லை. வெகு சிலரையே நமக்கு நெருக்கமானவர்களாக உணர முடியும். மாறாக ஒரு சிலரை ஓரிரு முறைதான் சந்தித்து இருப்போம். இருந்தும் நம் மனதில் நிரந்தரமாகத் தங்கி விடுவார்கள். இந்த விஷயம் பதிவுலகத்துக்கும் பொருந்தும்.

நான் பதிவுலகில் எழுத வந்த புதிதில், என்னோடு சேர்ந்து எழுதத் தொடங்கிய நண்பர்கள் பலர் இருந்தார்கள். திரட்டிகள் என்றால் என்னவென்று தெரியாமல், பின்னூட்டங்கள் ஏதும் இல்லாமல், படிப்பதற்கு ஆள் இல்லாமல்... இனிமேலும் நான் எழுத வேண்டுமா என்று துவண்ட போதெல்லாம் எனக்குத் தோள் கொடுத்துத் தாங்கியவர்கள் அவர்கள்தான். அந்த நண்பர்களே இன்று வரை நான் தொடர்ந்து எழுதுவதற்கும் தூண்டுகோலாக இருப்பவர்கள்.

ஆனால் இன்றைக்கு இவர்களில் பெரும்பாலானோர் பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக எழுதுவதை நிறுத்தி விட்டார்கள். அப்படிக் காணாமல் போன ஒரு சில நண்பர்களைப் பற்றியதே இந்த இடுகை.

இலங்கையைச் சேர்ந்தவர் நண்பர் பிரசன்னா. "வேத்தியன்" என்கிற பெயரில் எழுதி வந்தார். பின்னூட்ட சுனாமி. பொது அறிவு, அழகான படங்கள், நகைச்சுவை என்று கலந்து கட்டி அடிப்பவர். காதல் பற்றிய அவருடைய இந்த இடுகையை படித்துப் பாருங்கள். மின்னஞ்சலில் வந்ததை அழகாக நமக்கு ஏற்றமாதிரி தந்திருப்பார். தற்போது கோவையில் ஒரு கல்லூரியில் படித்து வருவதால் கணினிப்பக்கம் வருவதில்லை.

இது காதலர் தின வாரம். காதலை விரும்பாத மனிதர் யாரேனும் இருக்க முடியாது. உள்ளம் நெகிழ்ந்து, காதலாகி கசிந்துருகும் கவிதைகளைப் படிக்க வேண்டுமா? நண்பவர் புதியவனின் தளத்துக்குப் போங்கள். சிங்கையைச் சேர்ந்தவர். ஏழு மாதங்களுக்கு முன்பாக விடுமுறைக்கு தாயகம் வருவதாக சொன்னவர், அதன் பின்னர் ஆளையே காணவில்லை. அவருடைய இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று.

ஆ.முத்துராமலிங்கம். சென்னையில் இருக்கிறார். நண்பர் குடந்தை அன்புமணிக்கு மிகவும் நெருங்கிய நண்பர். "பென்சில்" என்பது இவருடைய வலைப்பூ. அருமையான கவிஞர். எளிமையான கவிதைகளால் உள்ளம் கவர்பவர். இவரையும் கடந்த ஏழு மாதங்களாக வலைப்பக்கம் பார்க்க முடிவதில்லை. அவர் எழுதிய கவிதைகளில் எனக்குப் பிடித்தது இங்கே..

சமூகத்தின் மீது பெரிதும் அக்கறை கொண்டவர் நண்பர் ராம்.CM. "மீசைக்காரி" என்ற பெயர் கொண்ட தளத்தில் எழுதுபவர். மத்திய அரசில் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிறார்.வேலைப்பளு காரணமாக சமீப காலமாக எழுதுவதில்லை. தர்மம் போடுவதைப் பற்றிய அவருடைய வித்தியாசமான சிந்தனையை வாசித்துப் பாருங்கள்.

புதிதாக எழுத வருபவர்களை அரவணைத்து பின்னூட்டம் போடுவதை தன்னுடைய கடமையாக செய்து வந்தவர் இவர். பதிவுலகில் என்னை முதன்முதல் அடையாளம் கண்டுகொண்டு உற்சாகப்படுத்தியவர். அவர் நண்பர் பிரேம்குமார் சண்முகமணி. "மொழியோடு ஒரு பயணம்" என்ற பெயரில் எழுதி வந்தார். நல்ல கவிஞர். இவருடைய கவிதை ஒன்று கல்கியில் கூட வந்திருக்கிறது. தற்போது கலிபோர்னியாவில் இருப்பதாகக் கேள்வி. எனக்குப் பிடித்த அவருடைய கவிதை..

திருப்பூரைச் சேர்ந்தவர் நண்பர் ஆதவா. அட்டகாசமான கவிதைகளை எழுதக் கூடியவர். "குழந்தை ஓவியம்" என்பது இவருடைய தளம். இதுதான் என்றில்லாமல் எதைப் பற்றியும் வித்தியாசமான கோணங்களில் கவிதை எழுதும் ஆற்றல் நண்பருக்கு உண்டு. வெகு இறுக்கமான கட்டுரைகளையும் எழுதுவார். "பெண்களில் குளியலறை" என்கிற அவரின் கவிதை உங்கள் பார்வைக்கு..

பதிவர் என்பதை விட என்னுடைய மிகச் சிறந்த நண்பன் என்று பொன்.பாரதிராஜா பற்றி சொல்லுவேன். அவனை இதுவரை பார்த்தது கிடையாது. போனில் பேசியதும் ரொம்பக் கம்மி. இருந்தும் வாடா,போடா என்னுமளவுக்கு எனக்கு மிகவும் நெருக்கமானவன். "பெய்யெனப் பெய்யும் தமிழ்" என்று தளத்தின் பெயரே அழகு. அனுபவங்களை அருமையாக தொகுத்து எழுதக் கூடியவன். செம ராவடியான இந்த இடுகையைப் படித்துப் பாருங்கள்.

மலேஷியாவில் இருக்கிறார் நண்பர் குமாரை நிலாவன். இவருடைய தளம் - "மனம் பேசிய மவுனங்கள்". பிறருக்கு உதவ வேண்டும் என்ற நல்ல இதயம் கொண்ட மனிதர். சமூகம் மற்றும் காதல் என்கிற இரண்டு விஷயங்களைப் பற்றியும் ஆவலோடு எழுதுபவர். அவருடைய கவிதை ஒன்று உங்கள் வாசிப்பிற்கு..

( இதை யாரேனும் படிக்க நேரிட்டால் இவர்கள் மீண்டும் எழுத வரமாட்டார்களா என்ற என்னுடைய நப்பாசையும் இங்கே ஒளிந்திருக்கிறது... )

புத்தகம்

மதினிமார்கள் கதை

இலக்கிய உலகில் ஒரே ஒரு பெயரைக் கேட்டால் மட்டும் நான் காத தூரம் ஓடிவிடுவேன். அந்தப் பெயருக்கு உரியவர் - கோணங்கி. "பாழி" என்ற அவருடைய நாவலுக்கான முன்னுரையைப் படித்ததிலேயே எனக்கு தலை சுற்றிப் போனது. கனமான வார்த்தைகளுடன் கூடிய சொல்லாடல்கள் மூலம் தமிழ் இலக்கிய உலகில் ஒரு புது பாதையை வகுத்தவர் கோணங்கி. என்னைப் போன்ற வாசிப்பு அனுபவம் கம்மியாக உடைய நண்பர்கள் இவருடைய எழுத்தை புரிந்து கொள்வது கஷ்டம் என்பது என்னுடைய எண்ணம்.

கோணங்கி தன்னுடைய ஆரம்ப காலத்தில் எழுதியதுதான் "மதினிமார் கதை". அவருடைய எழுத்துக்களில் எனக்கு ஓரளவு படித்து புரிந்து கொள்ள முடிந்தது என்றால் அது இந்தப் புத்தகம்தான். இது எழுதப்பட்ட காலகட்டம்தான் "உலகமயமாக்கல்" என்ற பெயரில் கிராமங்கள் எல்லாம் நகரத்துக்கு இடம்பெயர்ந்து கொண்டிருந்த நேரம். காலத்தின் கோலத்தால் மாறிப்போகும் மனித மனங்களைப் பற்றி, தொலைந்து போகும் உறவுகள் பற்றி, அழியும் சந்தோஷ நினைவுகள் பற்றி.. ஆழமாக பேசுகின்றன இந்தப் புத்தகத்தில் இருக்கும் கதைகள். நிச்சயம் வாசிப்பவர்களின் உள்ளத்தைத் தொடும்படியான மனதை கனமாக்கும் கதைத்தொகுப்பு.

வெளியீடு : அன்னம் பதிப்பகம்
விலை : ரூ. 50 (1987 பதிப்பு)

உலக சினிமா

My Sassy Girl

ஒரு சில பெண்கள் நம் வாழ்க்கையில் கடந்து போய் இருப்பார்கள்... அல்லது வாழ்நாள் முழுவதும் நம்முடனே வாழ்க்கை நடத்துவார்கள்.. அவர்கள் என்னதான் தப்பு செய்தாலும் அவர்கள் மேல் கோபம் வரவே வராது.. பொதுவாக ஒரு சிலரிடம் அவர்களை பார்த்தாலே வயிற்று எரிச்சலாக இருக்கும்.. இத்தனைக்கும் அவர்களுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது... அவர்கள் அறிமுகம் கூட நமக்கு இருக்காது.. இருப்பினும் பயங்கர கோபம் வரும்... இத்தனைக்கும் அவர்கள் நமக்கு எந்த கெடுதலும் செய்து இருக்க மாட்டார்கள்..

ஆனால் ஒரு சிலர் செய்யும் தவறுகளை நாம் மன்னித்து கொண்டே இருப்போம்... அதற்க்கு காரணம் ரொம்ப சிம்பிள் அந்த நபரை நீங்கள் ரொம்ப ரொம்ப அதிகமாக நேசிக்கின்றீர்கள் என்று அர்த்தம்.. அது பிள்ளையாக இருக்கலாம் அல்லது மகளாக இருக்கலாம்... இவ்வளவு ஏன் நீங்கள் வளக்கற உங்க நாயா கூட இருக்கலாம்... அப்படி ஒரு குடிகார பெண்ணை ஒருவனுக்கு ரொம்பவும் பிடித்து போக அவன் படும்பாடுதான்.. மை சாசி கேள் எனும் கொரிய மொழி படம்...

படம் பற்றிய அண்ணன் ஜாக்கிசேகரின் விரிவான பதிவு இங்கே..

26 comments:

  1. காணாமல் போனவர்கள்- வித்தியாசமான பதிவு!!

    ReplyDelete
  2. தேனி சுந்தர் என்று ஒருவர் இருந்தார்!!!!!!!!!!!!!!!1

    ReplyDelete
  3. வாழ்த்துகள் கார்த்திகைப் பாண்டியன்..

    ReplyDelete
  4. புதுசா இருக்கு "மாயமாய் மறைந்த பதிவர்கள்..!!!"

    ReplyDelete
  5. //தேவன் மாயம் said...
    நான்தான் 1 ! காணாமல் போனவர்கள்- வித்தியாசமான பதிவு!!//

    நன்றி தேவா சார்..

    //தேவன் மாயம் said...
    தேனி சுந்தர் என்று ஒருவர் இருந்தார்!!!!!!!!!!!!!!//

    அவர் மதுரையில்தான் பத்திரமா இருக்காரு..:-)))

    //நிகழ்காலத்தில்... said...
    வாழ்த்துகள் கார்த்திகைப் பாண்டியன்..//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  6. அப்பாடா நான் பிழைச்சுகிட்டேன்...

    காணம போனவங்க பட்டியலில் நான் இல்லை...

    நீங்க சொன்ன பதிவர்கள் எல்லாருமே அருமையானவர்கள்...

    கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டுவிட்டார்கள்..

    ReplyDelete
  7. மாயமான பதிவர்கள்,

    பதிவுகளிலே இது வித்தியாசமான பதிவு,
    என் மனதை அடிக்கடி கேட்கும் கேள்வி.

    நிறைய பதிவர்கள் தங்கள் வேலை பளுவின் காரணமாக விடை பெற்று போகின்றனர்.
    மாயமான பதிவர்கள் பற்றி மற்ற பதிவர்கள் தொடர்வார்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
  8. // அன்புடன் அருணா said...
    புதுசா இருக்கு "மாயமாய் மறைந்த பதிவர்கள்..!!!"//

    கொஞ்சம் புதுசா யோசிப்போம்னு தான் தோழி..

    // இராகவன் நைஜிரியா said...
    அப்பாடா நான் பிழைச்சுகிட்டேன்... காணம போனவங்க பட்டியலில் நான் இல்லை...//

    அண்ணே.. நீங்க பிரபல ஊர்சுற்றும் பதிவர்ன்னே..

    // நீங்க சொன்ன பதிவர்கள் எல்லாருமே அருமையானவர்கள்...
    கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டுவிட்டார்கள்..//

    வருத்தப்பட வேண்டிய உண்மை :-(((

    //காவேரி கணேஷ் said...
    மாயமான பதிவர்கள், பதிவுகளிலே இது வித்தியாசமான பதிவு, என் மனதை அடிக்கடி கேட்கும் கேள்வி.நிறைய பதிவர்கள் தங்கள் வேலை பளுவின் காரணமாக விடை பெற்று போகின்றனர். மாயமான பதிவர்கள் பற்றி மற்ற பதிவர்கள் தொடர்வார்கள் என நம்புகிறேன்.//

    ஒரு சிலர் மறுபடி வருவாங்க அப்படின்னு எனக்கு நம்பிக்கை இருக்கு நண்பா

    ReplyDelete
  9. காணாமல் போகாமல் தொடர்ந்து எழுதணும்னு ஆசைப்படுறேன் கார்த்திகைப் பாண்டியன்

    ReplyDelete
  10. //thenammailakshmanan said...
    காணாமல் போகாமல் தொடர்ந்து எழுதணும்னு ஆசைப்படுறேன் கார்த்திகைப் பாண்டியன்//

    கண்டிப்பாங்க.. நல்ல விஷயம்.. வாழ்த்துகள்..

    // வி.பாலகுமார் said...
    its different :)//

    thanks dude..:-)))))

    ReplyDelete
  11. சரியான தேடல் கார்த்தி.நானும் புதியவனையும், ஆதாவா வையும், ஆ.முத்துராமலிங்கம் அவர்களையும் தேடுகிறேன்.
    அருமையான பதிவாளர்கள்.

    ReplyDelete
  12. விரைவில் திரும்புவார்கள் என்று நம்புவோம்

    இதில் வேத்தியன் படிப்பு முடிந்ததும் மீண்டும் எழுத வருவதாக கூறியே சென்றார்...

    ReplyDelete
  13. ஆஹா! அருமை.

    வித்தியாசமான தொகுப்பு.

    சிலரை தெரியும் நேரடியாகவே சொல்றேன் ...

    ReplyDelete
  14. வணக்கம் பாண்டியன்...காணாமல் போன பதிவர்கள் படித்ததும் பழைய நினைவுகளை மீட்ட தொடங்கியது இதயம்...இவர்கள் அனைவரும் என் நண்பர் என்பதால் மீண்டும் வருவார்களா எனவும் மனசு ஏங்கத்தான் செய்கிறது....காணாமல் போனவர்கள் என்று நானே பதிவிட இருந்தேன்.................ம்ம்ம்ம் போச்சே போச்சே ஒரு பதிவு எழுத சான்ஸ் போச்சே.......

    ReplyDelete
  15. அன்பின் கார்த்திக்

    காணாமல் போனவர்கள் - தலைப்பைப் பார்த்ததும் பயந்தேன் - என் பெயரும் இருக்குமோ என்று - நானும் அதிகம் எழுதுவதில்லை - பணிச்சுமை - மன அழுத்தம் - ம்ம்ம்ம்

    நல்ல வேளை - இல்லை - இனி வாரம் ஒன்றாவது எழுதிடறேன்

    நல்வாழ்த்துகள் கார்த்திக்

    ReplyDelete
  16. எழுதாமல் இருக்கும் பதிவர்கள் பற்றி நீங்கள் நினைத்தும் பதிந்ததும் நல்ல விஷயம் நண்பா..

    ReplyDelete
  17. தலைப்பு வித்தியாசமான ஒன்று. புதிய பதிவரான எனக்கு, இந்த பதிவர்களை பற்றி தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. நன்றி.

    ReplyDelete
  18. காணாமல் போன பதிவர்கள் இடுகையில் நமத நண்பர்களை மீண்டும் எழுத வைக்க முயற்சிக்கும் உங்கள் ஆசை பலிக்கட்டும். நண்பர் முத்துராமலிங்கத்திடமிருந்து தொலைபேசியாவது வந்து கொண்டிருந்தது. தற்போது அதுவும் இல்லை. இதை ஒருவேளை படிக்க நேர்ந்தால் தொடர்பு கொள்வாரா என்பது எனது ஆசை.

    கோணங்கி விரைவில் மீண்டும் கல்குதிரை இதழை வெளியிட உள்ளர் என்பதாக தகவல்...

    ReplyDelete
  19. வித்யாசமான பதிவு.., வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. வைலை பளு காரணமா இப்பதான் வாசிச்சேன்... ரொம்ப நல்ல சொல்லி இருக்கிங்க... வேலை அதிகம் ஆயிட்டா, சோம்பேரிதனம் வந்துடும் இருப்பினும்.. நான் தொடர்ந்து எழுத முயற்ச்சிக்கின்றேன்...
    நன்றி பதிவை இனைத்து பலரிடம் சென்று சேர வைத்ததிற்க்கு...

    ReplyDelete
  21. என்னைப் போலவே இந்த நண்பர்களை பின்னூட்டமிட்ட பலரும் மிஸ் பண்ணுவதாக சொல்லி இருப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது.. இவர்கள் என்றேனும் திரும்பி வர வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்..

    ReplyDelete
  22. இதுல 'பென்சில்; பற்றி நான் அடிக்கடி நினைப்பதுண்டு..

    ReplyDelete
  23. prem chennai vanthuttar anna. manushan net pakkam than vara mattengurar. :))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது