07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, May 14, 2010

ஞானப்பழத்தைப் பிழிந்து..!

சேட்டைக்காரன்: அன்பார்ந்த நேயர்களே! தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் பண்பலை வானொலிகள் படுத்துகிற பாடு தாள முடியாமல், திருத்தணிக்கு அப்பால் தமிழக-ஆந்திரா எல்லையருகே அரை கிரவுண்டு நிலத்தில் வீடுகட்டி தனித்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஔவையாரை இன்று பேட்டி காணவிருக்கிறோம். வணக்கம் தமிழ் மூதாட்டியே!

ஔவை: வணக்கம் சேட்டைக்காரன்! என்னைப் பேட்டியெடுக்க நீ வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

சேட்டைக்காரன்: (பெருமையுடன்) மிக்க நன்றி தாயே!

ஔவை: அதாவது, தமிழின் மீது உண்மையான ஆர்வம் இருப்பவர்கள் அவர்களது பணியை இடையூறின்றிச் செய்ய வேண்டும் என்றால், இந்த மாதிரி எடுபிடி வேலைகளை உன்னை மாதிரி ஆசாமிகளிடம் கொடுப்பது தான் சரி.

சேட்டைக்காரன்: தாயே! என்னையும் ஒரு வலைப்பதிவாளர் என்று தான் சொல்கிறார்கள்! நானும் என்னால் முடிந்தவரையில் தமிழ் அழிக்க...மன்னிக்கவும், செழிக்கப் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்.

ஔவை: மகனே! நீ வருவதற்கு முன்னர் நான் என்ன வாசித்துக் கொண்டிருந்தேன் தெரியுமோ? தோழியின் சித்தர்கள் இராச்சியம் . நீயும் ஒரு வலைப்பதிவாளன் என்கிறாயே? வலையில் தமிழில் எழுதிக் கலக்கிக் கொண்டிருக்கும் பெண் பதிவர்களைப் பற்றி உனக்குத் தெரியுமா?

சேட்டைக்காரன்: அது..வந்து..தாயே..அதாவது...நான்..வந்து....!

ஔவை: என்ன, வந்து போயி என்று இழுத்துக்கொண்டிருக்கிறாய் மகனே? வார்த்தைகள் சரளமாக வந்துவிழ வேண்டாமா? சின்ன அம்மிணியின் "சாமியும் ஆசாமியும்" படித்துப் பார்! புரியும்!

சேட்டைக்காரன்: அம்மா! கலக்கல் பதிவாயிற்றே! படித்து விட்டீர்களா?? நீங்கள் வலைப்பதிவுகளையும் வாசிக்கிறீர்களா? அப்படியென்றால் துளசி கோபால் வலைப்பூவுக்கும் கண்டிப்பாக போய்க்கொண்டு தானிருப்பீர்கள்?

ஔவை: இல்லையா பின்னே? பல ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகளை அவரது துளசிதளம் வலைப்பூவில் போட்டிருக்கிறாரே?

சேட்டைக்காரன்: உங்களுக்குக் கவி இயற்றத்தான் தெரியும் என்றல்லவா எண்ணினேன்? கணினியும் இயக்குவீர்களோ? அசத்துகிறீர்கள் போங்கள்!

ஔவை: நான் என்னப்பா அசத்துகிறேன்? சித்ரா "சும்மா..சும்மா..சும்மா" என்று ஒரு வார்த்தையை வைத்தே பதிவு போட்டு அசத்தியிருக்கிறார்களே? வாசித்தாயா?

சேட்டைக்காரன்: ஓ! வாசித்தேனே! 'சும்மா’ அதிருதில்லே....! வேறு என்னவெல்லாம் வாசித்தீர்கள் அம்மா?

ஔவை: சஷிகாவின் சமையல் குறிப்புகள் வாசிப்பேன். சமீபத்தில் கூட "பிரெட் வடை" பற்றி எழுதியிருந்தார்களே?

சேட்டைக்காரன்: அம்மா, நானோ மேன்சன்வாசி! இதையெல்லாம் வாசித்து, படத்தைப் பார்த்து சப்புக்கொட்டிக்கொண்டு மெஸ்ஸில் கிடைக்கிற பரோட்டாவை வயிற்றுக்குள்ளே திணித்துக் கொள்ள வேண்டியது தான்.

ஔவை: சரி போகட்டும்! விதூஷிகா எழுதிய "காதல் வலி" படித்தாயா?

சேட்டைக்காரன்: படித்தேன் தாயே! கவிதை உங்களுக்குப்பிடிக்கும் என்று தெரியாதா எனக்கு? அப்படியென்றால், ராதையின் "முரண்" போன்ற அழகான குட்டிக்கவிதைகளையும் படிப்பீர்கள் அல்லவா?

ஔவை: கண்டிப்பாக! அடிக்கடி பதிவு எழுதாவிட்டாலும் சிறப்பாக எழுதுகிறார். அதே போல ப்ரியா சமீபத்தில் எழுதிய "பதின்ம வயது நினைவுகள்" கூட ஒரு அழகான கவிதையோடு அருமையாக இருந்ததே!

சேட்டைக்காரன்: பலே! விக்னேஷ்வரி எழுதிய "பதின்ம வயது டைரிக் குறிப்பு" என்ற இடுகையையும் ஒரு முறை படித்து விடுங்களேன் அம்மா!

ஔவை: இதுவரைக்கும் படிக்காமல் இருப்பேன் என்றா எண்ணிவிட்டாய்?

சேட்டைக்காரன்: சரி தான்! இத்தனை இடுகைகளை வாசித்த நீங்கள் கண்டிப்பாக தேனம்மை லட்சுமணன் எழுதிய "நான் என்ற எல்லாம்" கூட வாசித்தேயிருப்பீர்கள்!

ஔவை: ஓ! சிறிய கவிதை தான்! ஆனாலும், சீரிய கருத்து!

சேட்டைக்காரன்: அப்படியென்றால் கிருத்திகாவின் "மிக நீண்ட கவிதையொன்று...." இன்னும் வாசிக்கவில்லையா?

ஔவை: நீயே வாசித்திருக்கும்போது நான் வாசிக்காமலா இருப்பேன்? வார்த்தைகள் சில்லென்று தூறி நெஞ்சை மழைபோலக் குளிர்வித்திருந்ததே!

சேட்டைக்காரன்: ஆமாம் அம்மா! கோடை வெயிலுக்கு இதமளித்த மழை போலிருந்தது.

ஔவை: பார்த்தாயா? நீயே எத்தனை இடுகைகளை நினைவூட்டுகிறாய்? சகாராதென்றல் எழுதிய "பெருநகரச் சிறுமழை" இடுகையில் தான் என்ன சொல்வீச்சு? எத்தனை அழுத்தம்? குற்றாலச் சாரல் போல!

சேட்டைக்காரன்: குற்றாலச்சாரல் இருக்கட்டும்! அமைதிச்சாரல் அருமையான புகைப்படங்களுடன் "செவ்வானம் சேலைகட்டி..," என்று இடுகை போட்டிருக்கிறாரே! ஹூம்! சிலரது இடுகைகளைப் படிக்க நேர்ந்தபோது, நம்மால் இப்படி எழுத முடியவில்லையே என்று லேசாக வெட்கமே ஏற்படுகிறது.

ஔவை: வெட்கத்தோடு வெட்கமாய் ஹேமா எழுதிய "வெட்கம்.." என்ற கவிதையையும் வாசித்து விடேன்! காதல் கனிரசம் சொட்டுகிற கவிதை அது!

சேட்டைக்காரன்: நானும் படித்தேன் அம்மா! கவிநா காயத்ரி எழுதிய "என் செய்தாய் அன்பே?" என்ற கவிதையும் வாசித்தேன்! ஆனந்தமாக இருந்தது அம்மா!

ஔவை: அன்பே ஆனந்தம் தானே? அதனால் தான் அன்புடன் ஆனந்தி எழுதிய "எனக்காய்ப் பிறந்தவனே.......!!" என் மனதைக் கொள்ளை கொண்டது.

சேட்டைக்காரன்: ஆஹா, ஒன்று விடாமல் படிக்கிறீர்கள் போலிருக்கிறதே பாட்டி? மன்னிக்கவும் அம்மா....! தவறுதலாய் பாட்டி என்று சொல்லி விட்டேன்.

ஔவை: பரவாயில்லை! பாட்டியாவது எவ்வளவு மகிழ்ச்சியான அனுபவம் தெரியுமா? கோமதி அரசு எழுதிய "சிறுசிறு அரும்புக்கு குறும்புகள் வளருது, ஓ மைனா மைனா!" படித்துப் பார்! பேரக்குழந்தையின் குறும்பு பாட்டிக்கு எவ்வளவு மகிழ்ச்சி தரும் என்று புரியும்.

சேட்டைக்காரன்: அம்மா! ’பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்று சொன்னவர்கள் நீங்கள்! கல்வி குறித்த பதிவுகளை வாசிப்பீர்களா?

ஔவை: என்ன அப்படிக் கேட்டு விட்டாய் சேட்டை? சில நாட்களுக்கு முன்பு மைதிலி கிருஷ்ணன் "பொறியியல் படிக்க உங்கள் பிள்ளை தயாரா என்று தெரிந்து கொள்ளுங்கள்..." என்று ஒரு அற்புதமான பதிவு போட்டிருந்தாரே! பெற்றோர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய பதிவாயிற்றே அது?

சேட்டைக்காரன்: அமுதா கிருஷ்ணாவின் பதிவை வாசித்திருக்கிறீர்களா?

ஔவை: ஓ! "தம்பி தங்க கம்பி" என்று ஒரு பதிவு போட்டிருந்தாரே! தம்பியைப் பற்றித் தான் எவ்வளவு பெருமை இந்த அக்காவுக்கு?

சேட்டைக்காரன்: நானும் படித்தேன் தாயே! தம்பி என்றதும் நினைவுக்கு வருகிறது. "அண்ணன் என்பவன் ஒழிக..." என்று பிரேமா மகள் போட்ட பதிவைப் படித்தீர்களா?

ஔவை: ஹாஹா! கலக்கலாக எழுதியிருந்தார்களே! இவர்கள் அண்ணன்களைக் கலாய்த்தார் என்றால், அனாமிகா துவாரகன் "அப்பாவி ரங்க்ஸ்-1" என்ற பதிவில் யாரைக் கலாய்த்திருக்கிறார்கள் என்று வாசித்துப்பார்!

சேட்டைக்காரன்: அம்மா, நீங்களும் கலகலப்பான பதிவுகளை மிகவும் விரும்பிப் படிப்பீர்கள் போலிருக்கிறதே?

ஔவை: நல்ல வேளை, நினைவூட்டினாய்! சமீபத்தில் கலகலப்ரியா எழுதிய "சித்திராப் பௌர்ணமியின் தொடரலைகள்..." வாசித்தாயா?

சேட்டைக்காரன்: ஒருமுறைக்கு இருமுறை வாசித்தேனம்மா!

ஔவை: அது தானே பார்த்தேன்! அது மாதிரி நீயும் அவ்வப்போது ஆழமாக யோசிக்கலாமே?

சேட்டைக்காரன்: ஹி..ஹி! அது சரி, உங்களுக்குப் புனைவுகள் பிடிக்குமா அம்மா?

ஔவை: மிகவும் பிடிக்குமே! ராமலக்ஷ்மி எழுதிய "வயலோடு உறவாடி"யைப் படித்து மிகவும் வியந்தேன்.

சேட்டைக்காரன்: இப்போதெல்லாம் நல்ல புனைவுகளை வாசிக்க வேண்டுமே என்ற ஏக்கமே இல்லாத அளவுக்குப் பலர் புனைவுகளை அளித்து வருகிறார்கள்.

ஔவை: சரியாகத் தான் சொன்னாய்! "ஏக்கம்-சிறுகதை மாதிரி" என்று அஷீதா எழுதியதையும் ரசித்துப் படித்தேன்.

சேட்டைக்காரன்: சும்மாச் சொல்லக் கூடாது! புனைவுகள், கட்டுரைகள், கவிதைகள், சமையல் குறிப்பு என்று ஒன்று விடாமல் படிக்கிறீர்கள் போலிருக்கிறதே?

ஔவை: நகைச்சுவையை விட்டு விட்டாயே சேட்டை? கோமாவின் "சிரித்து மகிழ, கொண்டா ஒரு ஜிகருதண்டா" வாசித்தது கவுண்டமணி-செந்தில் நகைச்சுவையை நேரில் பார்ப்பது போலிருந்தது.

சேட்டைக்காரன்: ஓ! தாயே! உங்களுக்குத் திரைப்படங்களிலும் ஈடுபாடு உண்டா?

ஔவை: இந்தக் காலத்து ஔவையல்லவா? அது சரி, "மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரைப்படப்பாடல்"களை பூங்குழலி என்ற பதிவர் அழகாகத் தொகுத்து ஒரு வலைப்பூ நடத்துகிறாரே தெரியுமா?

சேட்டைக்காரன்: அப்பப்பா! உங்களுக்கு இவ்வளவு வலைப்பதிவுகள் படிக்க எப்படி அம்மா நேரம் கிடைக்கிறது? தூங்குவீர்களா மாட்டீர்களா?

ஔவை: உரிய நேரத்தில் போதுமான அளவு உறங்குவது கூட ஒரு விதத்தில் பெண்ணின் உரிமை தெரியுமா? இது குறித்து புதுகைத்தென்றல் எழுதிய "ஹைதை ஆவக்காய் பிரியாணி" பதிவைப் படித்துப் பார்! தங்கமணி-ரங்கமணி கலாய்ப்பும் இருக்கிறது அதிலே!

சேட்டைக்காரன்: ஒரு விஷயம் கவனித்தீர்களோ? ஒரு டி.வி.தங்கமணி-"மயிலையை அடைபவர் மகிழ்வர்" என்று தமிழில் மடைதிறந்த வெள்ளம் போலக் கவிதை பொழிகிறார். இன்னொரு புறம், தங்க்ஸுகள் ரங்க்ஸுகளை குதூகலமாகக் கலாய்த்தும் கொண்டிருக்கிறார்கள். சுவாராசியமாக இருக்கிறதே!

ஔவை: நீ ஏன் இப்படிச் சொல்கிறாய் என்று புரிகிறது சேட்டை! ஹுஸைனம்மா எழுதிய "மெக்கானிக்கல் இஞ்சிநீர்" பதிவைப் படித்துவிட்டாய் அல்லவா?

சேட்டைக்காரன்: அம்மா! வளைகுடா நாட்டுப் பெண்பதிவர்கள் துபாயிலே சந்திச்சதைப் பத்தி அநன்யா மஹாதேவன் எழுதின "துபாயில் ஒரு பட்டாம்பூச்சிக் கூட்டம்" படிச்சீங்களா?

ஔவை: படித்தேனே? அதே சந்திப்பைப் பற்றி ஜலீலா எழுதிய "இனிய மாலை பொழுதினிலே ஒரு குதூகல சந்திப்பு" பதிவையும் படித்தேன்.

சேட்டைக்காரன்: இதைப் பற்றி இன்னொருவர் கூட எழுதியிருந்தாரே?

ஔவை: இந்த ஔவையையே சோதிக்கிறாயா? அன்புடன் மலிக்காவும் இந்த சந்திப்பு குறித்து "பெண்பதிப் பூக்களின் சந்திப்பு!" என்று எழுதியிருக்கிறார். அதையும் படித்து விட்டேனே!

சேட்டைக்காரன்: அம்மா! சூட்டோடு சூடாக எல்லாம் படிக்கிறீர்கள் போலிருக்கிறது. கலக்கறீங்கம்மா!

ஔவை: இதில் என்ன கலக்கல்? கல்யாணி சுரேஷ் எழுதிய "வானவில் தருணம்" படித்தேன். அது கலக்கல்!

சேட்டைக்காரன்: ஆஹா வானவில் என்றதும் எனக்கு முத்துலெட்சுமி எழுதியிருக்கிற "வானவில் இற்றைகள்" கூட நினைவுக்கு வருகிறதம்மா.

ஔவை: பார்த்தாயா? இந்தக் காலத்தில் குழந்தைகள் எவ்வளவு புத்திசாலிகள் என்று புரிந்து கொள்!

சேட்டைக்காரன்: அதென்னவோ உண்மைதான்! என்னைத் தவிர எல்லாரும் புத்திசாலிகளாகவே இருக்கிறார்கள் அம்மா!

ஔவை: அதற்கென்ன செய்வது சேட்டை? ஆண்டவன் எல்லாருக்கும் மூளையை வைத்துக் கொண்டிருக்கும்போது நீ அவர் தடுப்பூசி போட வந்திருக்கிறாரோ என்று எண்ணித் தப்பி ஓடிவிட்டாய்!

சேட்டைக்காரன்: தப்பி ஓடிட்டேனா? என்னவோ திருடன் தப்பி ஓடினா மாதிரியில்லே சொல்லுறீங்க!

ஔவை: நீயே ஒவ்வொன்றாக நினைவூட்டிக்கொண்டிருக்கிறாய்! முகுந்த் அம்மா எழுதிய "என்ன கொடுமை இது?" படித்தாயா? அந்தத் தானி ஓட்டுனர் மட்டும் என் கையில் கிடைத்தால் என் தடியாலேயே அவனை அடித்து விடுவேன்.

சேட்டைக்காரன்: அம்மா, வந்ததுமே கேட்க வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் கையிலிருந்த தடியெங்கே அம்மா?

ஔவை: பத்திரமாகத்தான் இருக்கிறது சேட்டை! தப்பித் தவறி உன் கவிதையை இங்கு வாசித்து விடாதே! நீ காதலர் தினம் அன்று எழுதிய கவிதையைப் படித்தது போதாதா?

சேட்டைக்காரன்: அதெல்லாம் வாசிக்க மாட்டேன் அம்மா! இப்போதெல்லாம் நான் கவிதை எழுதுவதையே அறவே நிறுத்தி விட்டேன்.

ஔவை: அப்பாடா, தமிழ் தப்பித்தது! அதற்காக, மற்ற பதிவர்களின் கவிதைகளை வாசிக்காமல் இருக்காதே சேட்டை! கண்ணகி எழுதிய "நீயும் நானும்" போன்ற கவிதைகளை அவ்வப்போது வாசித்து வா!

சேட்டைக்காரன்: சரி அம்மா! சமீபத்தில் கூட மின்மினி எழுதிய "என்ன விலை? " என்ற கவிதையைப் படித்தேனம்மா.

ஔவை: மிக நன்று! இனிமேலாவது வலைப்பதிவில் ஏதாவது உருப்படியாக எழுது! கற்பதற்கும் கற்பிப்பதற்கும் எதுவுமே தடையில்லை! உனக்குத் தெரியுமா? எழுபத்தி ஐந்து வயதில் கணினியைக் கற்றுக்கொண்டு, சீதாம்மாவின் "ஒரு பெண்ணின் பயணம்" அமெரிக்காவிலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிரிக்க வைத்தால் மட்டும் போதாது! சிந்திக்கவும் வைக்க வேண்டும்!

சேட்டைக்காரன்: அவசியம் சிந்திப்பேன் அம்மா! இயற்கை ராஜியின் "ஒற்றை நிமிடம் சிந்திப்பீர்" போன்ற இடுகைகளைப் படித்தால் எப்படி சிந்திக்காமலிருக்க முடியும்? பேட்டிக்கு நன்றி! நான் கிளம்பட்டுமா?

ஔவை: வெயில் கொளுத்துகிறது! அதிகம் அலையாதே! உனக்கு ஆபத்து; உன் வலைப்பூவுக்கு வருகிறவர்களுக்கோ பேராபத்து!

சேட்டைக்காரன்: ஆஹா! ஔவையானாலும் எல்லாருக்கும் அன்னையென்பதைக் காட்டி விட்டீர்களே அம்மா!

ஔவை: இல்லையா பின்னே? நடந்து முடிந்த அன்னையர் தினம் குறித்து ஏதாவது எழுதினாயா? குறைந்தபட்சம் மயில் எழுதிய அம்மாவாக... இடுகையையாவது வாசி! போகட்டும், ஏதாவது பழம் சாப்பிடுகிறாயா?

சேட்டைக்காரன்: தாயே! எனக்கிருக்கிற பசிக்குப் பழமெல்லாம் பத்தாது! சூடாக இட்லி கிடைக்குமா?

ஔவை: என்னிடம் சுட்டபழமும் சுடாத பழமும் தான் உள்ளது. இட்லி வேண்டுமென்றால், அப்பாவி தங்கமணி எழுதிய "இட்லியும் நானும்" என்ற இடுகையைப் படித்துக்கொள்!

சேட்டைக்காரன்: அவசியம் படிக்கிறேன் அம்மா!

ஔவை: இரவில் உறக்கம் வரவில்லையென்றால் மொக்கை போடாதே! மீனா முத்து-வின் தாலாட்டு வலைப்பூவை வாசி!

சேட்டைக்காரன்: அவசியம் வாசிப்பேன்! தகவலுக்கு நன்றி அம்மா! நான் உத்தரவு வாங்கிக்கொள்ளுகிறேன்.

ஔவை: அனைவரும் அறஞ்செய்ய விரும்புங்கள்! வாழ்க தமிழ்!


(பேட்டி நிறைவு)

அன்புடையீர்,

எல்லாரும் மகளிருக்கு 33 சதவிகிதம் என்று பேசிக்கொண்டு தானிருக்கிறார்கள். ஆனால், இந்த 'சேட்டைக்காரன்’ அதை நடைமுறையிலே செயல்படுத்தியே காட்டிவிட்டான் பார்த்தீர்களா? அதுவும் 33 சதவிகிதத்துக்கும் மேலாகவே! ஆகவே, இந்தப் பதிவுக்கு தாய்க்குலம் பெருமளவில் ஆதரவளித்துப் பின்னூட்டமிட்டு, முடிந்தால் எனக்கு ஒரு டாக்டர் பட்டமோ அல்லது கம்பவுண்டர் பட்டமோ வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறேன். :-)

ஒரு மகிழ்ச்சியான செய்தி:
நாளை எமதர்மராஜனும், சித்திரகுப்தனும் சேட்டைக்காரனை சந்திக்க வரவிருக்கிறார்கள். விபரங்களுடன் "தோம் தாத்தா!" என்ற எனது இடுகை நாளை வெளிவரும்.

அதுவரை, உங்களிடமிருந்து விடைபெறுவது, உங்கள் அபிமான அறுப்பாளன், மன்னிக்கவும், அறிவிப்பாளன் சேட்டை...! சேட்டை...!! சேட்டை...!!!!

66 comments:

  1. சாமீ படிச்சிட்டேன்.. ரொம்ம்ப நன்றிபா... அடேங்கப்பா.. எப்பூடி முடிஞ்சது இது... இந்த ஒரு பதிவில இருக்கிற பாதிப் பேரு பக்கம் போகவே என்னால முடியாதே... வேலை தலைக்கு மேல தொங்கிட்டே இருக்கே.. ஆனா.. ஒன்னியும் விடாம.. எல்லாத்தயும் படிச்சு.. இப்டி ஒரு கதை க்ரியேட் பண்ணி.. இந்த உழைப்புக்கு என்னோட மரியாதைகள்.. :).. மென்மேலும் வளர வாழ்த்துகளும்..

    ReplyDelete
  2. ஔவை பாட்டியுடனான பேட்டி அருமை. என்னையும் அறிமுகபடுத்தியதர்க்கு என் நன்றி.

    ReplyDelete
  3. அருமை சேட்டை.

    ReplyDelete
  4. வாவ் உண்மையிலே சாதனைதான் சேட்டை; டாக்டர் பட்டம் கொடுக்க ஆசைதான் ஆனா பாருங்க எழுதுவதற்கு பேப்பர்தான் தேடிக்கிட்டிருக்கிறேன். நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.. கலக்குறீங்க சேட்டை.

    ReplyDelete
  5. சேட்டை பெண்கள் ஸ்பெஷல் அறிமுகங்கள் அனைத்தும் அருமை.

    பொதுப் பிரிவிலும் இடம் கொடுக்க மறந்து விடாதீர்கள். அரசியல்வாதிகளுக்குத்தான் 33 நாம் முடிந்தளவு நிறைய கொடுப்போமே.

    ReplyDelete
  6. சேட்டை ரொம்ப ரொம்ப நன்றி என்னையையும் அறிமுகப்படுத்தியதுக்கு..

    ReplyDelete
  7. இந்த பாட்டியின் மகிழ்ச்சியில் எல்லோரையும் கலந்து கொள்ள வைத்தமைக்கு மகிழ்ச்சி.

    பாட்டியை அறிமுகப்படுத்தியதர்க்கு நன்றி.

    ReplyDelete
  8. //பாட்டியாவது எவ்வளவு மகிழ்ச்சியான அனுபவம் தெரியுமா?//

    இப்படி என்னை அறிமுக படுத்தியதற்கு
    இந்த பாட்டி தந்து விட்டள் ’டாகடர்’பட்டம்.

    ReplyDelete
  9. எதுக்குன்னு பாராட்ட சேட்டை? இப்படி ஒரு கான்ஸெப்டுக்கா, இத்தனை உழைப்புக்கா, தொகுத்த அழகுக்கா? ஒன்னு நிச்சயம். வலைச்சரத்தில் இப்படி தொகுப்பு எனக்கு தெரிந்த வரை முதல். :)

    ReplyDelete
  10. சீனா சார் தயவு செய்து என்னையெல்லாம் வலைச்சர ஆசிரியராக் கூப்பிட்டுடாதீங்க. இத மாதிரியெல்லாம் என்னால உழைக்க முடியாது.. :))


    ஹேட்ஸ் ஆஃப் சேட்டை. எவ்வளவு பதிவுகள் அறிமுகம்? அதை அறிமுகப்படுத்தறதுக்கு யோசிக்கிற கான்செப்ட்.. வாவ் அமர்க்களம்.. சச்சின் டெண்டுல்கர் 200 அடிச்ச மேட்சைப் பாத்த மாதிரி இருக்கு

    ReplyDelete
  11. டாக்டர் பட்டம் இதோ தந்தோம், பிடித்துக்கொண்டு நூல் கட்டி காற்றில் பறக்க விடவும்.

    நல்லா வந்திருக்கு. கலக்குங்க

    ReplyDelete
  12. அறிமுகங்கள் எனக்கு புதுசு
    நன்றி

    ReplyDelete
  13. ஔவையார் மாட்டினாரா இன்றைக்கு...கலக்கல்தான்..

    ஆஹா மேன்ஷன் வாசியா நீங்கள்...அதுதான் இவ்வளவு நகைச்சுவை..(கல்யாணம் இன்னும் ஆகலை பாருங்க..)

    பெண் பதிவர்கள் அறிமுகம் மழை எனப் பொழிந்து விட்டீர்கள். வானம்பாடிகள் பாலா சார் கருத்தை ஆதரித்து வழிமொழிகிறேன்..

    ReplyDelete
  14. மகளிர் மட்டும்..கலக்கீறீங்க..

    ReplyDelete
  15. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
    சீதாம்மா

    ReplyDelete
  16. அன்பின் சேட்டை
    நண்பர் பாலா - வானம்பாடி - கூறியதை அப்படியே எழுத்துக்கு எழுத்து வழி மொழிகிறேன் - எங்கோ சென்று விட்டாய் சேட்டை - பாராட்ட சொற்களே இல்லை - நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  17. ஒவ்வோரு பதிவுக்கும் மிக உழைக்கின்றீர்கள்.....
    ரசிக்கும்படியும்..... வியக்கும்படியும்.... எழுதுகின்றீர்கள்.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  18. //அதுவும் 33 சதவிகிதத்துக்கும் மேலாகவே! //

    டாக்டர் சேட்டைக்காரன் வாழ்க:)!

    இங்கு குறிப்பிட்டிருக்கும் பதிவுகள் சில வாசித்தவை. வாசிக்காதவற்றை அவசியம் வாசிக்கிறேன், நன்றி.

    ஒளவையுடனான பேட்டி மிக அருமை.

    ReplyDelete
  19. என் நண்பா!

    பெருமையாய் இருக்கிறது. சொல்ல வந்ததையெல்லாம் சகோதரி கலகலா, ஆசான் வானம்பாடிகள், சீன அய்யா மற்றும் ஏனைய நண்பர்கள் சொல்லிவிட்டார்கள்.

    இருவர் பேசும் விஷயங்களாகவே இதுவ்ரை எடுத்துக்கொண்டு அதில் காமெடியை தூவி, ஒவ்வொருவரையும் அதில் இயல்பாய் நுழைத்து... கடவுள் மூளையை வைக்க வரும்போது சேட்டை ஓடிவிடவில்லை, சேட்டை சேட்டை செய்ய நான்கைந்து பேருடையதை சேர்த்து வைத்து சென்றிருக்கிறார் எனப் புரிகிறது. உங்க்ளின் நட்பால் நான் பெருமை கொள்கிறேன் நண்பா!

    தோம் தாத்தா தவிர மற்றுமொரு நாளிலும் இதே பாணியில் கலக்குங்களேன்!

    வாரத்திற்கு ஏழு நாள்தானா? ஏங்க வைக்கின்றன உங்கள் இடுகைகள்.

    எனது அன்பும் வாழ்த்துக்களும்.

    பிரபாகர்...

    ReplyDelete
  20. எல்லா அறிமுகமும் அட்டகாசம்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. டாக்டர் சேட்டைக்காரனுக்கு வாழ்த்துக்கள :)்

    ReplyDelete
  22. இம்பூட்டு பேர் எழுதினதை படிச்சி, பொறுமையா இதை தொகுத்தும்
    கொடுத்த உங்கள் உழைப்புக்கு சபாஷ்!!

    ReplyDelete
  23. ஆஹா..... ஒளவையாரே 'நம்ம தமிழ் அழகை'ப்பற்றி ஒன்னும் சொல்லலை. இனி தூள் கிளப்பிட வேண்டியதுதான் போல்!!!!

    நன்றி சேட்டைக்காரரே.

    இந்த இடுகையில் 100% பெண்களுக்கான இட ஒதுக்கீடு!

    ஜமாய் ராஜா ஜமாய்:-))))

    ReplyDelete
  24. அடடா.. எவ்ளோ பதிவுகள்.. அத்தனையும் தூள் போங்க.. :D

    தமிழ்த் தாய் ஒளவையும், டாக்டர் சேட்டைக்காரனும் சேர்ந்து, என்னை அறிமுகப்படுத்தியதற்கு..ரொம்ப நன்றி.. :)

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  25. அறிமுகத்துக்கு மிக்க நன்றி சேட்டை :) அட்டகாசமான அறிமுகங்கள்.
    100 % பெண்களுக்கான ஒதுக்கீடு தூள். டாக்டர் சேட்டைக்காரனுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. மிக அருமையாக தொகுக்கப்பட்ட வலைச்சரம்

    எனக்கு புதியதாக சில பதிவர்கள் அறிமுகங்களை கண்டு மகிழ்வுற்றேன்

    வாழ்த்துக்கள்
    டாக்டர் .சேட்டை

    விஜய்

    ReplyDelete
  27. அறிமுகத்திற்கு நன்றி ...இங்கே குறிப்பிட போகிறேன் என்று என் வலைப்பக்கம் வந்து சொல்லி சென்றதிற்கும் நன்றி .நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற பதிவுகளையும் படித்து பார்க்க போகிறேன் .

    ReplyDelete
  28. பெண் பதிவர்களின் பெருவாரியான ஓட்டுக்களையும் சேட்டைக்காரன் அவர்கள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்....

    போடுங்கம்மா ஓட்டு...சேட்டைக்காரனப் பார்த்து...

    நன்றி...நன்றி...அறிமுகத்திற்கு நன்றி..

    என்னா படிப்பு..டாக்டர் சேட்டைக்காரன் வாழ்க..கலக்கலோ கலக்கல்...

    ReplyDelete
  29. டாக்டர் சேட்டைக்காரன் வாழ்க! வளர்க!.. ;-)

    ReplyDelete
  30. // வெயில் கொளுத்துகிறது! அதிகம் அலையாதே! உனக்கு ஆபத்து; உன் வலைப்பூவுக்கு வருகிறவர்களுக்கோ பேராபத்து!//

    ம்ம்ம்..! ஆந்திராவுக்கு போயி குடியேறியிருக்கும் “ஒளவை”க்கு தெரிஞ்சிருக்கு, சேட்டையோட சேட்டை.

    ReplyDelete
  31. அருமையோ................அருமை!
    டாப்பு அப்பு!

    ReplyDelete
  32. ஒளவையாரின் வழியில் அறிமுகம்.
    செம சூப்பர்.
    என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சேட்டை.

    ஆங்,,
    நீங்க என்னை அறிமுகப்படுத்தல
    எங்க முப்ப்ப்பாட்டி தான் அறிமுகப்படுத்தினாங்க ஆகையினால் அவர்களுக்கு பல நன்றிகள் அத்தோடும் உங்களுக்கும். எப்படி நம்ம சேட்டை..

    ReplyDelete
  33. ஒவ்வொன்றும் முத்து. நல்ல பதிவாளர்களை அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள். டாக்டர் பட்டம் கொடுக்க இந்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் இன்றே ஒரு கடிதம் எழுதிவிட்டேன்.

    வெங்கட் நாகராஜ்

    ReplyDelete
  34. வானம்பாடிகள் சார் சொன்ன மாதிரி, வலைச்சரத்தில் உங்கள் வாரம் மிக முக்கியமான ஒன்று. இனி வலைச்சர ஆசிரியராய் வருபவர்களுக்கு ஒரு பெஞ்ச் மார்க் ஏற்படுத்தி விட்டீர்கள். அதிலும் இந்த இடுகை அபாரம். வாழ்த்துகள் நண்பரே.

    --
    // அதற்கென்ன செய்வது சேட்டை? ஆண்டவன் எல்லாருக்கும் மூளையை வைத்துக் கொண்டிருக்கும்போது நீ அவர் தடுப்பூசி போட வந்திருக்கிறாரோ என்று எண்ணித் தப்பி ஓடிவிட்டாய்! //
    டிபிகல் சேட்டை! :))

    ReplyDelete
  35. இருந்தாலும் சிறப்பான பணி.. மத்தவங்களை பாராட்டறதுக்கு ஒரு மனசு வேணும்.. அது உங்ககிட்ட இருக்கு சேட்டை..

    இத்தனை பெண்களோட பதிவுகளையும் தேடிப் பிடிச்சு, ரசிச்சு விமர்சனம் செய்திருப்பது உங்களின் கடின உழைப்பை காட்டுகிறது..

    உங்கள் பதிவில் கலாய்த்து கமெண்ட் போட்டுத்தான் எனக்கு பழக்கம்.. இங்கே உருக வைத்துவிட்டீர்கள்..

    நன்றி சேட்டை.... நட்சத்திர கூட்டங்களாய் பல பெண் பதிவர்களை அறிமுகம் செய்தத‌ற்கும் அவர்களுள் மின்மினியான என்னை அறிமுகம் செய்தத‌ற்கும்....

    ReplyDelete
  36. அறிமுகங்கள் அனைத்தும் அருமை..
    வாழ்த்துக்கள் சேட்டை நாயகனே..

    ReplyDelete
  37. இத்தனை பெண்பதிவர்கள் இருக்கிறார்கள். இன்னும் நீங்கள் சொல்லாத பல பிரபலங்களும் இருக்கிறார்கள் என்பதை நினைத்தாலே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 50 சதவிகித ஒதுக்கீடே சரியென தோன்றுகிறது.

    ReplyDelete
  38. அப்பு...ராசா சேட்டைக்காரா நல்லாப் பிந்தித்தான் வந்திருக்கிறன்போல.
    எல்லாரும் சொல்லிப்போட்டு போய்ட்டினம்.நாலு பேருக்கு நடுவில நானும் இருக்கிறன் எண்டு கண்டு பிடிச்சிறாய் அப்பு.நிறைய நன்றி சொல்லிக் கொள்றன்.

    நிறையப் பேர் என்ர தோழிகள்தான்.
    அசத்தலா வடிவாய் எழுதுவினம்.
    முழுக்க முழுக்க பெண்டுகள் பதிவாய் தேடிப் பிடிச்சு எழுதினதுக்கும் அதைக் கஸ்டப்பட்டு தொகுத்ததுக்கும் ...

    இரு ஒருக்கா வாறன்.பாய்க்குள்ள பினாட்டு சுத்தி வச்சிருக்கிறன்.
    வீட்டை கொண்டுபோய் மனுசி பிள்ளைகளுக்கும் குடுத்துச் சாப்பிடு.சரி...வரட்டே அப்பு !

    ReplyDelete
  39. அபாரமான உழைப்பு சேட்டை :)

    ReplyDelete
  40. அப்பாடி, எத்தனை பேரை அறிமுகப்படுத்தியிருக்கீங்க. இதுக்கு எத்தனை நாள் கணினி முன்னாடி உக்காந்து தேடிப்படிச்சிருப்பீங்க.
    அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  41. வாவ் உண்மையிலே சாதனைதான் சேட்டை. அருமை.

    ReplyDelete
  42. உழைப்பு உழைப்பு

    உழைப்பைதவிர வேறெதுவும் தெரியவில்லை

    வாழ்த்துகள் வாழ்த்துகள்

    சொல்வதற்கு வேறு வார்த்தையில்லை

    ReplyDelete
  43. அசுர உழைப்பு உங்களது. என்னையும் அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி.

    பாட்டிம்மா கிட்ட அறிமுகப்படுத்தி வெச்சதிலிருந்து பயமா இருக்கு. இனிமேல் நல்லா எழுத கத்துக்கணும்.

    ReplyDelete
  44. டாக்டர் சேட்டைக்காரன் வாழ்க. கம்பவுண்டர் யாருங்க ஆந்தைக்குளம் அய்யாக்கண்ணுதானே :-))

    ReplyDelete
  45. அன்புள்ள சேட்டைக்காரன்!
    அசத்தி விட்டாய்! தமிழ்ப்பாட்டி அவ்வையாருடன்
    நேர்காணல் அருமை!கணினியில் எழுதும் பெண்கள்
    எல்லாத்துறையிலும் வெளுத்துக் கட்டுகிறார்களே?
    பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!
    மகனே!உன் சிறந்த உழைப்புக்கு ஒரு ஸல்யூட்!வாழ்த்துகள்!

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete
  46. என்னையும் அறிமுகம் செய்த்தற்கு நன்றி

    ReplyDelete
  47. மகளீர் சக்தி என்று ஒரு தொகுப்பு இருக்கிறது. அதையும் தாண்டி பெண் வலைப்பதிவர்களை அற்முகம் செஞ்சிருக்கீங்க.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  48. அறிமுகங்கள் அனைத்தும் அருமை..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  49. ரெம்ப நன்றிங்க பிரதர். புதுசா நெறைய தோழர் தோழிகளை உங்க வலை தொகுப்பு மூலமா அடைய போறோம்னு நெனைக்கிறேன்....

    என்னையும் சேர்த்ததுக்கு மிக்க நன்றி
    உங்களுக்கு நன்றி சொல்லி ஒரு பதிவு போட்டு இருக்கேன் பாருங்க
    http://appavithangamani.blogspot.com/2010/05/blog-post_14.html

    ReplyDelete
  50. அருமைங்க சேட்டை... படிக்க நிறைய வலைப்பூக்களை அறிமுக படுத்தியதற்கு நன்றி... நல்ல கற்பனை வளம்... வளரட்டும் உங்கள் பணி... பாராட்டுகள். அம்மாக்களின் வலைப்பூக்கள், சித்திரக்கூடம் , என் இனிய இல்லம் இந்த மூணும் நான் அடிக்கடி படிப்பவை... அம்மாக்களின் வலைப்பூக்கள் பக்கத்தில் நிறைய பெண் பதிவர்களை காணலாம்... நேரம் கிடைக்கும் போது நீங்களும் படியுங்களேன்...

    ReplyDelete
  51. பெண்கள் தான் டாக்டர் பட்டம் தரனுமா ? ஆண்கள் நாங்களும் தருகிறோம். டாக்டர் சேட்டைக்காரனுக்கு ஜே!!

    :-))))))))))))))))))))))))

    ReplyDelete
  52. //// அதற்கென்ன செய்வது சேட்டை? ஆண்டவன் எல்லாருக்கும் மூளையை வைத்துக் கொண்டிருக்கும்போது நீ அவர் தடுப்பூசி போட வந்திருக்கிறாரோ என்று எண்ணித் தப்பி ஓடிவிட்டாய்! ////

    Waaaaahaaaaaahaaaaaa.

    எப்படி தான் இவ்வளவையும் தேடிப்பிடிச்சனீங்கள்? என்னைப் போன்ற புதியவர்களையும் சேர்த்துக் கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  53. டாக்டர் சேட்டை வாழ்க !!!
    டாக்டர் சேட்டை வாழ்க !!!
    டாக்டர் சேட்டை வாழ்க !!!

    இவ்வளவு புதிய அறிமுகங்களுக்கு மிக்க நன்றி சேட்டை!

    ReplyDelete
  54. என்ன சொல்லி பாராட்டுவதுன்னு தெரியல... ரியலி எ கிரேட் வொர்க்!
    என்னையும் அறிமுகப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  55. ஹலோ.

    அப்படியே கடைசி வரியில, புதுசா, ரொம்ப அருமையா எழுதற பொண்ணு ஒன்னு வலையில சேர்ந்திருக்குன்னு நம்மளை பற்றியும் போட்டிருங்களேன்? ஹி..ஹி..

    ReplyDelete
  56. ஞானப்பழத்தைப் பிழிந்து .....ஒளவை பாடிக்கொண்டே ஜிகிருதண்டா அருந்திக் கொண்டே போகிறார்

    ReplyDelete
  57. கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள்,
    அருமை!

    ReplyDelete
  58. நிறைய அறிமுகங்கள்,கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள் சேட்டை!! என்னையும் அறிமுகப்படுத்தியதற்க்கு மிக்க நன்றி ...ஒளவை பாட்டியுடனான பேட்டி அருமை!!

    ReplyDelete
  59. என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக நன்றி சேட்டை. அனைவரையும் அறிமுகப் படுத்திய விதம் அசத்தல்..

    ReplyDelete
  60. பின்னூட்டமிட்டு, உற்சாகப்படுத்திய அன்புள்ளங்களுக்கு எனது பணிவான நன்றி கலந்த வணக்கங்கள்! :-)

    தாய்க்குலத்தின் பேராதரவுக்கும், தந்தைக்குலத்தின் பெருந்தன்மைக்கும், "டாக்டர்" பட்டத்துக்கும் ஸ்பெஷல் நன்றிகள்!

    சேட்டைக்காரன்

    ReplyDelete
  61. அடடா பிரம்மித்துவிட்டேன் நண்பரே... எத்தனை வலைப்பூக்கள்! அத்தனையும் வாசித்து, அழகாகத் தொகுத்து, அதற்கும் மேலாக இப்படி ஒரு கான்செப்ட்-ஐ உருவாக்கியிருப்பது, உண்மையிலேயே பிரமிப்பை ஏற்படுத்தியது!

    எத்தனை பெண் பதிவர்கள்...நினைக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது...

    உண்மையிலேயே உங்களுடைய உழைப்பு அசாதாரணமானது... பெண்களுக்கான 100 % ஒதுக்கீடு மகிழ்ச்சியடையச்செய்கிறது..

    இந்த பதிவைப்பற்றி எனது வலைப்பக்கத்தில் தெரிவித்ததற்கு நன்றிகள் பல....

    இத்தனை பதிவர்களிடையே எனது வலைப்பூவையும் வாசித்து என்னை அறிமுகப்படுத்தியதற்கு என் மிகப்பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

    --
    அன்புடன்
    கவிநா...காயத்ரி...

    ReplyDelete
  62. சேட்டை,
    இப்பொழுது தான் என்னை அறிமுகம் செய்திருக்கும் தங்களது இந்தப் பதிவைப் பார்த்தேன்!
    இவ்வளவு அருமையான ஒரு வலைதளத்தை(சேட்டைக்காரன்) நடத்துவது மட்டுமல்லாமல், பிற தளங்களுக்கும் சென்று படித்து ரசித்து அதை அறிமுகம் செய்து வைக்கும் தங்களது பணி போற்றத்தக்கது!
    அறிமுகம் செய்துள்ள அனைத்தும் அருமையான வலைப்பதிவுகள்.. அதில் என்னையும் சேர்த்துக் கொண்டமைக்கு நன்றி! மகிழ்ச்சி!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது