07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, August 11, 2010

அன்பினால் - வலைச்சரம் - 3ஆம் நாள்

ஒருவனால் தனியாக வாழ முடியுமா ?. முடியாது என்றே தோன்றுகிறது. ஐந்தறிவு ஜீவராசிகளே, கூட்டத்தோடு வாழும் போது, மனிதனும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்ற கூட்டத்தில் வாழ்வதே சாத்தியம். பல நேரங்களில் உறவுகள் அருகில் இருக்கும் போது அதன் அருமை தெரிவதில்லை. பிரிந்து சென்ற பிறகு, வருத்தம் மேலிட நினைவிலாழ்கிறோம். இதயம் கனக்கச் செய்யும் சில பதிவுகள் இங்கு. இன்னொரு புதிய நாளைத் தொடங்கும் உற்சாகத்துடன் படிக்கும் உங்களைக் கலங்கச்செய்வது என் நோக்கம் இல்லை. சற்றே, அருகில் இருக்கும் உறவுகளுக்கு இன்னும் முக்கியத்துவம் தர வேண்டும் என்ற விருப்பத்தை அதிகரிக்கவே இந்தப் பதிவு.


அன்பு என்ற வார்த்தைக்கு அடுத்து அடிக்கடி எழுதப்படும் வார்த்தை “அம்மா”. இவரின் காலம் சென்ற அம்மாவைப் பற்றிய நினைவு கூறல் இது. இவருடைய அம்மா யார் என்று தெரியாத ஒருவர், ஏன் இந்தப் பதிவினைப் படிக்கவேண்டும் ?. காரணம் ! இதைப் படிப்பவர்கள், அம்மா என்ற சொல் வரும் போது, தன் அம்மாவை நினைவுபடுத்திக்கொள்வதே என்று நினைக்கிறேன்.




மிகப் பிரபல பதிவரான ஜாக்கிசேகர், தன் அம்மாவை நினைவு கூர்ந்து எழுதிய பதிவு இது. மிக இயல்பான வரிகள் மற்றும் எதையும் மறைக்காமல் அவர், தன் அம்மாவை கோபத்தில் திட்டியது முதற்கொண்டு எழுதியதைப் படித்துப் பாருங்கள். கண்கள் கலங்குவது நிச்சயம்.



மாமனார் மற்றும் மாமியாரை, மருமகள்கள், அப்பா, அம்மா என்று அழைக்கும் (நல்ல) பழக்கம் பரவி வருகிறது. இங்கு தன் மாமனாரைப் பற்றிய ஒரு பதிவு என் வானம் - அமுதாவிடமிருந்து. வாழ்ந்து மறைந்த ஒரு நல்லவருக்கு பெருமை சேர்க்கும் ஒரு அஞ்சலி.




எழுத்தாளர் சுஜாதா தன் அப்பாவைப் பற்றி எழுதிய கட்டுரை இது. படித்து பாருங்கள். மற்ற மூன்று பதிவுகளிலும் இருக்கும் அதே உணர்வு இந்தப் பதிவிலும். அப்பா, அம்மா பாச உணர்வுகள், பெரிய எழுத்தாளருக்கும் சாமான்யர்களுக்கு ஒரே சாயலிலேயே வெளிப்பட்டிருப்பது ஆச்சரியமூட்டும் உண்மை.




சற்றே மனம் கனத்த இந்தப் பதிவை அடுத்து, நாளை ஜாலியான ஒரு பயணத்துக்கு கிளம்புவோம்.

நாளை சந்திப்போம் நண்பர்களே !!

14 comments:

  1. அம்மா ,மாமா ,அப்பா அன்பான இணைப்புகள் அதிலும் ஜாக்கி ம்ம்ம்ம்

    ReplyDelete
  2. சேகரின் பதிவு படித்தேன் வேறு எதையும் படிக்க முடியவில்லை. வலி சொல்லும் வரிகள்.

    ReplyDelete
  3. நெகிழ்வான பக்கங்கள்...

    ReplyDelete
  4. மீண்டும் ஒரு முறை படிக்கிறேன்...

    ReplyDelete
  5. மனம் கனத்து விட்டது. ஓரே சமயத்தில் இப்படி போட்டு தாக்கி இருக்கக்கூடாது.

    இன்றைய நாள் அறிமுகம் செய்தவர்களை இன்னும் நாளைந்து முறை படித்தால் தான் தாக்கம் மறையும்.

    ReplyDelete
  6. வித்தியயாசமமான அறிமுகம் பின்னோக்கி...அனைத்தையும் படிக்கிறேன்.

    ReplyDelete
  7. நல்ல நெகிழ்வான அறிமுகங்கள். நன்றி

    ReplyDelete
  8. உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பதிவு..
    அறிமுகங்களும் அருமை.
    தொடருங்கள்.

    ReplyDelete
  9. நன்றிகள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

    @A.சிவசங்கர்
    @கலாநேசன்
    @ஸ்ரீராம்
    @கே.ஆர்.பி.செந்தில்
    @ஜோதிஜி
    @நாஞ்சில்
    @மோகன் குமார்

    ReplyDelete
  10. நன்றிகள் இந்திரா

    ReplyDelete
  11. நல்ல பகிர்வு. சுட்டிக்கு நன்றி

    ReplyDelete
  12. அருமை நண்பர்
    பின்னோக்கி வலைச்சரத்தில் உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி,அறிமுகங்களுக்கு மிக்க நன்றி,மிகுந்த வேலை பளுவினால் பகல் பொழிதிலும்,புதிய வீட்டில் இணையம் புதிதாக எடுக்க வேண்டியிருப்பதால்,இரவிலும் பின்னூட்டமிடமுடியவில்லை,

    ReplyDelete
  13. வீக்கெண்டில் இவர்களை பொறுமையாக படிக்கிறேன்,எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. இப்பபோது அந்த கட்டுரையை திரும்ப படித்தேன்... என்னையறியாமல் கண்களில் கண்ணீர்....
    நன்றி பின்னோக்கி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது