07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, August 3, 2010

யார் கடவுள்?? வலைச்சர செவ்வாய்






தென்னை மரத்தைப் பார்த்து வாழை மரம் என்று சொல்லும் குழந்தையை எப்படிக் கண்டிப்பது? அதன் பெயர் தென்னை மரம் என்று உனக்குத் தெரியுமா? நீதான் அதற்குப் பெயர் வைத்ததா? என்று அந்தக் குழந்தை திருப்பிக் கேட்பின் என்ன பதில் சொல்வோம்?.

யாரோ பெயர் வைத்தார். யாரோ வழி மொழிந்தார். தலைமுறை தலைமுறையாக அதன் பெயர் தென்னை மரம். பெயரில் என்ன இருக்கிறது?.

கூச்சல்களை ஒழுங்குபடுத்தி, வடிவம் கொடுத்து, ஒவ்வொன்றுக்கும் பெயர் கொடுத்து அதற்கும் மொழி என்று பெயர் வைத்து இது என் மொழி என்று சிலாகித்து

“ஏய் அது தென்னைமரந்தான், இந்தா பார் வாழை மரம் இப்படி இருக்கும் புரிஞ்சிதா?” என்று நமக்குச் சொல்லிக்கொடுத்ததை மீண்டும் குழந்தையின் மண்டையில் ஏற்றிப் பெயர் கற்றுக்கொள்ளும் பண்டிதனாக்குகிறோம்.

கிட்டத்தட்ட கடவுள் நம்பிக்கையும் ~ மறுப்பும் இதை ஒட்டியதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. ஒன்று தென்னைமரத்தை தென்னை மரமென்றே ஏற்றுக்கொள் அல்லது அது என்ன என்று நிரூபி!. ஆயினும் கடவுளோ, தென்னையோ இதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டதாய் எனக்குத் தெரியவில்லை. நல்ல காலம் அவற்றிற்கென ஏதும் மொழி இல்லை என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


சரி, கடவுள் நம்பிக்கை பற்றி நான் படித்ததில் என்னைக் கவர்ந்த ஒரு பக்குவ பக்கம் திரு.ஏவிஎஸ் அவர்களின் ஞாயிறு தபால். படியுங்கள். தேடல்களுடன் அங்கே நீங்கள் ஆரோக்கியமாய் விவாதிக்கலாம். ஆனால் அந்த இடுகை ஏன் எழுதப் பட்டது? தூண்டிய பதிவர் யார்? என்ற கேள்விக்குள்ளும் நீங்கள் செல்வீர்கள் என்றால் நிச்சயம் ஒரு விஷயத்தை எப்படி தெளிவாக அணுகலாம் என்பது உங்களுக்குப் புரியவரும்.

மேலோட்டமாய் படித்து அல்லது நமது அடையாளங்கள் சார்ந்து பின்னூட்டம் இடுவதை விட எல்லாவற்றையும் கழட்டி வைத்துவிட்டு என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரிந்தால், நம்பிக்கைகள் பற்றிய உங்கள் புரிதல்கள் உங்களுக்கு கைகூடும். :))

ரைட்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



புலனாய்வு பத்திரிகைகள் நீங்கள் விரும்பிப் படிப்பதுண்டா எனில் வழிப்போக்கனின் கிறுக்கல்கள் என்ற வலைப் பூவில் திரு.யோகேஸ்வரன் அவர்கள் எழுதிய இந்த இடுகை நீங்கள் படிப்பது நலம். :-)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


புலனாய்வு பத்திரிகைகள் படிக்காமல் வெறும் இணையம்தானா? :-) எனில் பதிவுலகம் பற்றி சுவாரஸ்யமாக திரு.போகன் ~ அரிவை அரனில் எழுதியுள்ள இந்த இடுகை வாசிக்கலாம்.:) அப்படியே அவரின் இடும்பைக் கூர் என் வயிறே என்பதையும், மர்மயோகி அகத்தியர் என்ற தொடரையும் படித்துப்பாருங்கள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஸ்மைலிகளில் உணர்வுகளைத் தெரிவிக்கும் இந்தக் காலத்தில் புத்தக வாசிப்பை வலியுறுத்தும் திரு.மோகன் ~ மோகனச்சாரலில் எழுதிய அக்கா மகனுக்கு ஒரு பிறந்த நாள் கடிதம். நம்மில் எத்துனைப் பேருக்கு இது போன்று ஒரு கடிதம் வந்திருக்கும்?


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




நிறைய பெண் குழந்தைகளுக்கு அப்பா ஹீரோதான். ஆனாலும் அனாமிகா துவாரகன் ~ அப்பாவை ஹீரோவாக நினைப்பதில் உள்ள சிக்கல்கள் பத்தி ஒரு இடுகை எழுதி இருக்கிறார். நிறைய ரெளவுத்திரமும், ஆதங்கமும் படக்கூடிய ஒரு கோபக்கார சகோதரி!.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

முடிவாக காட்சியில் ~ திரு.சாம்ராஜ் எழுதிய மதுரை பற்றி வந்த இந்தக் கட்டுரை உறங்கா நகரம் (முன்னொரு காலத்தில்)

அதிலிருந்து சில வலிகள்!!

மூணு மணிக்கு இட்லி சாப்பிட போகிறேன் என்பவனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார் மதுரையில் பொறுப்பேற்ற வடக்கத்திய உயர்காவலதிகாரி. தங்க பதக்கம் திரைப்படத்தின் எஸ் பி செளத்ரியின் வசனத்தில் சொன்னால் “அந்த ராத்திரி நாங்க ரெண்டு பேர் மட்டும் தான் இருப்போம்” என்றார்கள். எல்லாம் அடைக்கப்பட்டன, நிறுத்தப்பட்டன. டீக்கடைகள் பனிரெண்டு மணிக்கு மேல் சாராய கடைகளை போல் இயங்கின. ஒரு மணிக்கு விளக்கணைத்து இருட்டில் இட்லி சாப்பிட வேண்டிய கட்டாயம். போலிஸ் வேனின் சக்கரத்தின் கீழ் ஒரு கலாச்சாரம் நசுங்கியது. யுகம் யுகமாய் தூங்காத மதுரை வலுக்கட்டாயமாக அடித்து ”உறங்க” வைக்கப்பட்டது.

சமகாலத்து இரவு நேரத்து மதுரை வீதிகள் என்னை அழ வைக்கின்றன. எவ்வளவோ பார்த்த புது மண்டபத்து யாளிகளும் என்னோடு சேர்ந்து கண்ணீர் விடுகின்றன. புது மண்டபத்தின் வாசலில் இருந்த புராதன குழியை மூடி மார்பிள் பதித்து விட்டார்கள். பதினோரு மணிக்கு மேல் அங்கு “வேறொரு” வியாபாரம் களைகட்டும். கீழ்பாலமும் போனது. அதன் எளிய இரவு வியாபாரங்களும் காணாமல் போயின. “இரவு பறவைகள்” எங்கே போயினர்? “பீம புஸ்டி அல்வாக்காரரை எவரேனும் பார்த்தீரா? கரகாட்டகாரனின் கரகம் எந்த பரணில் உறங்குகிறது? சாமி கள்ளழகரையே நேரத்தோடு வரச் சொல்கிறது “நிர்வாகம்”.


ஹும்ம்..!

:( மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்,

ஷங்கர்.

58 comments:

  1. இன்னிக்கு இந்த ஒரு பதிவுதானா :)

    ReplyDelete
  2. ஒரு காலத்தில் ஏசுவையும் சிலுவையில்தான் அறைந்தார்கள்.. இப்போது கடவுளாக்கி விட்டார்கள்..
    தத்துவமும், பகுத்தறிவும் புரிந்து கொள்வதைவிட கடவுளாவது மிக சுலபம்...
    ஒரு வேப்ப மரத்துக்கு மஞ்சள் தடவி விட்டால் போதும் ....
    நித்தியும், பங்காருவும் கடவுள்களே...

    சுவரஸ்யமான விவாதத்துக்கு வலைச்சரத்தை திருப்பியதற்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. அன்பின் ஷங்கர்

    அத்தனை சுட்டிகளுமே அருமை - வித்தியாசமான - புதிய இடுகைகள் - அறிமுகங்கள் நன்று - தொடர்க - நல்வாழ்த்துகள் ஷங்கர்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  4. மதுரை தூங்குவதில்லை. இந்தியாவின் டோக்யோ அது. நேரயபெருக்கு தெரியலை அவளவுதான் :)

    ReplyDelete
  5. எல்லாமே வித்யாசமான தெரியாத பதிவுகள் :)

    நன்றி பட்டறை அண்ணே

    ReplyDelete
  6. நல்லா இருந்துச்சுண்ணே தகவல்கள்.நன்றி

    ReplyDelete
  7. ந‌ல்ல‌ ப‌திவுக‌ளை அறிமுக‌ப்ப‌டுத்தியுள்ளீர்க‌ள் வாழ்த்துக்க‌ள் ஷ‌ங்க‌ர்ஜி..

    ReplyDelete
  8. வித்தியாசமான தொகுப்பு

    ReplyDelete
  9. கடவுள் நம்பிக்கை - மறுப்பு பற்றிய உங்கள் பார்வை வித்தியாசமாக இருக்கிறது. இதுவும் நல்லா இருக்கே!

    ReplyDelete
  10. கலக்கல் அறிமுகங்கள்! பாராட்டுக்கள்!

    இதிலேயே ஒரு இடுகையில் உள்ள கருத்துக்களை தொகுத்து தந்து இருப்பது, புதுமையாக இருக்கிறது.

    ReplyDelete
  11. கில்லாடிதான் நீங்க. இன்னைக்கு ராத்ரி தல வந்தவுடன் வர்றேன்.

    ReplyDelete
  12. அறியப்படாத முகங்கள், அறிமுகங்கள். வழக்கம்போல் சிறந்த அறிமுகங்கள்.

    ReplyDelete
  13. எல்லாமே வித்யாசமான தெரியாத பதிவுகள்.

    ReplyDelete
  14. அட்டகாசமாய் இருக்கிறது...சங்கர்!

    ReplyDelete
  15. அறிமுகங்கள் அருமை..
    தொடர்ந்து எழுத வாழ்த்த்துக்கள் ஷங்கர்.

    ReplyDelete
  16. இப்பல்லாம் ஸ்வேதா கமெண்ட் போடலைன்னா எனக்கு படிக்கவே மனசு வர மாட்டேங்குது.

    ஸ்வேதா எங்கிருந்தாலும் வரவும்.

    ReplyDelete
  17. //ஆயினும் கடவுளோ, தென்னையோ இதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டதாய் எனக்குத் தெரியவில்லை. //

    தெரிஞ்சா என்ன பண்ணலாம்னு இருக்கீங்க தல??

    ReplyDelete
  18. ஸ்வேதா எங்கிருந்தாலும் வரவும்.

    இவங்க யாரு தல?

    ReplyDelete
  19. //ஆயினும் கடவுளோ, தென்னையோ இதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டதாய் எனக்குத் தெரியவில்லை. //

    அப்ப கடவுள் இருக்குன்னு சொல்லுறீங்க... அப்படித்தானே?!!!!!

    அதாவது.. வலைச்சரத்தை உங்களோட கடவுள் வளர்ப்புக் கொள்கைக்கு சாதகமா பயன்படுத்தப் பார்க்கறீங்க.

    இந்து கடவுள் ஆதரவு பாஸிஸ (இதுக்கு அர்த்தம் யாருனா சொல்லுங்கப்பு) ஷங்கர் ஒழிக.

    ReplyDelete
  20. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
    ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
    ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
    நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
    ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்

    =======

    இவங்கள யாருன்னு கேட்டுட்டீங்களே தல!!

    பாருங்க.. இதுக்குன்னே.. மேலயிருக்கற கமெண்டை உங்க ஏரியாவிலும் போடுவாங்க.

    ReplyDelete
  21. இந்து கடவுள் ஆதரவு பாஸிஸ (இதுக்கு அர்த்தம் யாருனா சொல்லுங்கப்பு) ஷங்கர் ஒழிக.

    தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் உயிர்ப்பு இருக்க்கும்.

    யார் சொன்னது தெரியும்ல?

    ReplyDelete
  22. பார்த்தேன்.

    ஏற்கனவே இது போல வேறொரு கமெண்ட்டுக்கு செந்தழல் ரவி சொன்ன வாசகம்.

    எங்கிருந்துதாண்டா கிளம்பி வர்றீங்க............

    ரொம்ப நேரம் சிரிச்சுக்கிட்டே இருந்தேன்.

    ReplyDelete
  23. //தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் உயிர்ப்பு இருக்க்கும்.//

    எம்ஜியாரா தல?

    ReplyDelete
  24. அய்யோ இதை யாராவது வந்து கொஞ்சம் கேளுங்களேன்.

    நம்ம அண்ணன் விஜய் பாட்டு கூட தெரியாமா அய்யோயய்ய்யா போட்டவரு இவரு.........

    ஷங்கரு எங்கேயிருங்கீங்க?

    மேடைக்கு வரவும்

    ReplyDelete
  25. ஜோக்ஸ் அபார்ட்......

    ஷங்கர்.. அந்த முதல் 4-5 பாராவில் இருக்கும் மேட்டர் முதல்ல படிக்கும் போது சரியான வாதமா தெரிஞ்சாலும்.. அப்புறம் ஒத்துக்க முடியலை.

    தென்னை - வாழை எல்லாம் அடையாளத்துக்கு நம் மொழியில் கொடுத்த பெயர்கள் தானே?

    அதை எப்படி ‘சொல்லி’ வளர்த்ததா சொல்ல முடியும்??

    தென்னை மரத்துக்கு பக்கமா போ-ன்னு சொன்னா அதை எப்படி அடையாளம் காட்டுவீங்க?

    ===

    அடுத்து வாழைக்கு மொழியில்லாம இருக்கலாம். ஆனா... அதுங்க ஒன்னுக்கொன்னு கம்யூனிகேட் பண்ணிக்கறதா கண்டுபிடிச்சதா சொன்னாங்களே!! அது???

    அப்புறம்... இந்த குருவி, காக்காவுக்கும் மொழியிருக்குதானே??

    கடவுள் மேட்டர் மட்டும் அப்புறம்!

    ReplyDelete
  26. ஸ்வேதா எல்லாம் பழசு பாலி இப்ப புதுசா சைனீஸ்ல கமெண்ட் வருது! வேணா ரெக்கமண்ட் பண்றேன் :)

    ஒருவேளை மலையாளம் மாதிரி சைனீஸ் யாராவது என் கவிதைய மொழி பெயர்த்துருக்காங்களா? ம்ம்..!

    ReplyDelete
  27. ஸ்வேதா எல்லாம் பழசு பாலி இப்ப புதுசா சைனீஸ்ல கமெண்ட் வருது! வேணா ரெக்கமண்ட் பண்றேன் :)

    ஆமாம் ஷங்கர் வலைச்சரத்ல இன்னமும் விடாம இது போல ஒன்னு வந்துகிட்டே இருக்கு.

    மொழி தாண்டிய தொடர்பா இருக்குமோ?

    ReplyDelete
  28. இது ஜோதிஜி தல-க்கு!!

    http://www.hollywoodbala.com/2009/03/religulous-2008-21-only.html

    ReplyDelete
  29. நாம யாருங்க பேரு வைக்கறதுக்கு? கடவுளும், பெயர்வைத்தலும் அப்படின்னு வெச்சிருக்கலாமோ?

    விரிவா எழுதறேன்.. அப்புறம் பாலகுமாரன் மாதிரி பெனாத்தறேன் அப்படின்னு பின்னூட்டம் போட்டா நைட் 12 மணிக்கு போன் பண்ணுவேன் :))

    போகட்டும், ஞாயிறு தபாலிலேயே நீங்கள் விவாதிக்கலாம் பாலா! அவர் ஒன்றும் இதுதான் என்று முடிவு செய்து பதிவிடவில்லை வாருங்கள் விவாதிப்போம் என்றுதான் சொல்லி இருக்கிறார். உங்கள் கருத்தையும் அங்கே பதியுங்கள்.

    ReplyDelete
  30. பாலா இந்த பதிவ ஏற்கனவே படித்தேன். ஆனால் இப்ப கூடக் கொஞ்சம் பொறுமையா படிக்க கிட்டத்தட்ட ரெண்டு பேரும் ஒரே மாதிரியாத்தான் இருக்குறோம். குறிப்பா கடைசி பாரா.

    இலங்கை, பாலஸ்தீனம் மக்களின் சாவு குறித்து.

    இதைப்பற்றி தனியா பதிவில் விமர்சனத்தை தர்றேன்.

    ஆனால் உங்க டச் என்பது உண்மைத்தமிழனக்கு கொடுத்த

    யாருக்கு தமிழா?

    எழுதும் போது கூட சிரிச்சுக்கிட்டே தான அடிக்கிறேன்.

    ReplyDelete
  31. ஜோ அதுல கமெண்ட் 3 தென் 4 பார்த்தீங்களா? என்ன பவ்யம்... என்ன பவ்யம்!!
    :))

    ReplyDelete
  32. விவாதம் செய்வது பத்தி ஒரு பிரச்சனையும் இல்லை.

    ஆனா... நோலன் படங்களை விவாதம் செய்வது மாதிரி முடிவில்லா விவாதத்தில் ஆர்வமும் இல்லை. அதனாலதான்.. இந்த மாதிரி விசயங்களை இப்ப பேசறதை கூட நிறுத்திட்டேன்.

    பெட்டர் பி எ ஜோக்கர்! :)

    ReplyDelete
  33. //ஜோ அதுல கமெண்ட் 3 தென் 4 பார்த்தீங்களா? என்ன பவ்யம்... என்ன பவ்யம்!! //

    அதெல்லாம் ஆரம்ப காலத்துல போட்டது சாமி!!

    ஒரு பய முன்னேற விட மாட்டீங்களே!!

    பாஸிஸ ஷங்கர் ஒழிக.

    ReplyDelete
  34. //உண்மைத்தமிழனக்கு கொடுத்த

    யாருக்கு தமிழா?//

    எனக்கு அப்பல்லாம் உ.த பழக்கமில்லைங்க ஜோதிஜி!! இல்லைன்னா ஆன்ஸர் வேற மாதிரி இருந்திருக்கும்! :)

    ReplyDelete
  35. ஷங்கர் எனக்கே மொதல்ல புரியல்ல.

    என்னடா இது தல பாலா பதிலான்னு.

    ஆனால் சாகித்ய அகடாமிக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கும் போலிருக்கு. வந்த கமெண்டும் சும்மா ஒவ்வொருத்தரும் பட்டய கௌப்பியிருக்காங்க

    குறிப்பா துளசிகோபால், வினோத் ஷண்முகப்ரியன் இன்னும் பலர்.

    சுவாமி பாலாஜீ ன்னு கூப்டலாமா?

    ReplyDelete
  36. ஒரு பய முன்னேற விட மாட்டீங்களே!!


    ஐயோ என்ன இப்டி சொல்லீட்டீங்க.

    அகில உலக பாலா பின்னூட்ட ரசிகர் மன்றமே திருப்பூர்ல இருக்குதே?

    கேரளா போகும் போதோ அல்லது ஆஞ்சனேயர பார்க்க போகும் போது வந்து விடுவீங்க தானே?

    ReplyDelete
  37. //பாஸிஸ ஷங்கர் ஒழிக. //


    மூப்பன் ராத்திரி நன்னாயிட்டு ஓறங்கும். :)

    ReplyDelete
  38. மூப்பன் ராத்திரி நன்னாயிட்டு ஓறங்கும். :)


    தனியாவா?

    ReplyDelete
  39. ஜீ அதென்ன பவர்பாலா?

    ReplyDelete
  40. //ஒரு பய முன்னேற விட மாட்டீங்களே!!

    ஐயோ என்ன இப்டி சொல்லீட்டீங்க.//

    ஸாரி.. அது

    ஒரு பய(லை கூட) முன்னேற விட மாட்டீங்களே -ன்னு வந்திருக்கனும்.

    டமில் ஸொ காம்ப்ளிகேடட் லாங்க்வேஜ் மேன் யு நோ.

    ReplyDelete
  41. //பவர்பாலா//

    அது என்னோட ரொம்ப கால மெயில் / டோரண்ட் ஐடிங்க தல.

    வீட்டுலதான் பவர் இல்லையே.. சரி பேர்லயாச்சும் இருக்கட்டும்னு!! :)

    ReplyDelete
  42. வீட்டுலதான் பவர் இல்லையே.

    ஷங்கர் இந்த கில்லாடி ராஜா சொல்றத நம்புனுமா?

    ReplyDelete
  43. உண்மைதாங்க ஜோ வெளில புலிங்க கதையெல்லாம் உங்களுக்குத் தெரியாதா என்ன?

    அடுத்த இந்தியா ட்ரிப்ல திருப்பதி மொட்டை போட்டுட்டு பேஷன்ன்னு சொல்லுவார் பாருங்க!

    ReplyDelete
  44. ஹைய்யா.. இன்னும் இந்த ஊரு என்னை நம்பிகிட்டுதான் இருக்கு! :)

    ReplyDelete
  45. //அடுத்த இந்தியா ட்ரிப்ல திருப்பதி மொட்டை போட்டுட்டு பேஷன்ன்னு சொல்லுவார் பாருங்க//

    ஹல்லோ.. நம்மளது விண்ணைத் தாண்டி வருவாயா கதை.

    திருப்பதியெல்லாம் செல்லாது. மேரி மாதா மொட்டைக்கு ஒத்துக்குவாங்களான்னு தெரியல.

    ReplyDelete
  46. ஷங்கர் தப்பா சொல்லிட்டீங்க

    குருவாயூரப்பன் கோவில்ல எடைக்கு எடை ஏதாவது கொடுப்பாரு?

    ReplyDelete
  47. ஆகா கேரளா தமிழ்நாடு ஆஞ்சனேயர்,மேரிமாதா
    அஞ்சலி பாலா

    கலைஞர் தேடிக்கிட்டுருக்ற உண்மையான உபி நீங்க தான் ஜீ

    ReplyDelete
  48. //குருவாயூரப்பன் கோவில்ல எடைக்கு எடை ஏதாவது கொடுப்பாரு//

    நல்லவேளை வயிற்றை எக்கி 38” கொண்டு வரும் நிலைமை இல்லை. :)

    ReplyDelete
  49. நல்லவேளை வயிற்றை எக்கி 38” கொண்டு வரும் நிலைமை இல்லை. :)

    ஓட்ட வாய்டா முதலி உனக்கு! :)

    ReplyDelete
  50. ///ஆகா கேரளா தமிழ்நாடு ஆஞ்சனேயர்,மேரிமாதா
    அஞ்சலி பாலா
    //

    ஹும்... ஓவரா வாயை திறந்துட்டேனோ???

    பிரச்சனைன்னா.. வினவு வெப்ஸைட்ல இந்த மேட்டரெல்லாம் வந்துடுமே! :)

    ReplyDelete
  51. //ஓட்ட வாய்டா முதலி உனக்கு! :) //

    அந்த வினவு மேட்டர் உங்களுக்கும்தான்!! :) :)

    பிரச்சனைல சிக்காம இருந்துக்கங்க. இல்லைன்னா 38” மேட்டர் சந்தி சிரிச்சிடும்.

    ReplyDelete
  52. நீங்க அநியாயத்திற்கு பயப்படுறீங்க.

    வேறு சிலதும் சொல்லலாம். அதுக்கு இது சரியான இடமில்ல.

    ReplyDelete
  53. அன்பின் ஜோ!

    தோழர் பாலா!!

    பிறகு வருகிறேன்..

    :)

    ReplyDelete
  54. //நீங்க அநியாயத்திற்கு பயப்படுறீங்க.//

    ஹி.. ஹி.. ஹி.. அதெல்லாம் ஒன்னுமில்லிங்க. நாங்கல்லாம் வீரன்! :)


    சும்மா ஜோதிஜி!!! நான் வினவை தொடர்ந்து வாசித்தவன். அந்த ஜாதி மேட்டர் வரைக்கும். இன்னும் எனக்கு ஒரிஜினல் வினவு மேல் நிறைய மரியாதை இருக்கு.

    ஆனா.. அது யாருன்னு இப்ப கன்பீஜ் ஆய்ட்டனால.. அவரையும் நம்ம ஜோக்கில் இழுக்கறேன்.

    ஆனா நீங்க சொன்னது சரி! இது சரியான இடமில்லை! நாம அப்புறம் பேசுவோம்! :)

    ReplyDelete
  55. கும்மியை கெடுத்த பாஸிஸ ஷங்கர் ஒழிக.

    ஜோதிஜி.. நீங்களும் தூங்கப் போங்க தல!! எனக்கு இன்னும் 6 மணி நேரம் ஃப்ரீயா இருக்கு. அப்புறம்தான் வீட்டுக்கு போகனும். :(

    ReplyDelete
  56. அறிமுகங்களுக்கு நன்றி ஷங்கர்.வித்யாசமான தேடல் வலைச்சரத்தில்.

    ReplyDelete
  57. அருமையான அறிமுகங்கள்... வாழ்த்துக்கள். மதுரை கலக்கல் பதிவு...அசத்தல் தொடரட்டும்... வாழ்த்துக்கள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது