07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, April 9, 2011

சிரிக்க வைக்கும் சிங்கார பகிர்வுகள்..










நேற்றைய பதிவில் நெஞ்சத்தை தொடும் நிதர்சனம் சொல்லி உங்க மனசை எல்லாம் கவலையா ஆகிட்டேன் அதான் இன்னைக்கு நகைச்சுவையா சொல்லாம் வந்துட்டேன் நிறைய தேடிப்படித்து ஒரே சிரிப்பு மழை தான் போங்க...உங்களுக்கும் சொல்றேன் வாங்க...!!!


 
மின்மினி தேசத்திலிருந்து மீனாட்சி சுந்தரம் வந்து இருக்காங்க இவங்க எழுதுற தில்லுதுர பதிவு எல்லாம் செம காமெடியா இருக்கும் தில்லுதுர பதிவுகளை படிச்சிட்டே இருக்கலாம் சலிப்பே வராது...டேனியும் தில்லுதுரயும் பதிவை படிச்சு பாருங்க..உங்களுக்கே புரியும்...!!!

 

இவர் நாஞ்சில் மனோ....ரொம்ப புரட்சிகரமா பேசுவார் பார்த்தா எல்லோரையும் கிண்டல் செய்துட்டு இருக்கார். தமாஷுன்னு சொல்லி எல்லா பதிவரையும் (என்னையும்)  கிண்டல் பண்றார்...இவர் பதிவு படிக்கும் நல்லா சிரிப்பு வரும்....எப்படி தான் இதையெல்லாம் யோசிக்கிறாரோ...மலையாளி சேட்டன் ஒரு பதிவு போட்டு இருக்கார் பாருங்க...



நான் உங்க வீட்டு பிள்ளை சொல்றார்...பாட்டு ரசிகன் அநியாயத்துக்கு காமடிப்பண்றாங்கப்பா...சொல்லி கார்டூன் எல்லாம் போட்டு இருந்தார் பாருங்க super collections. எங்களையெல்லாம் மொக்கை போட்டுகொண்டு இருந்த செல்வாவிற்கு எதிர் மொக்கை போட்டவர்...இவர் செல்வாவை நாறடித்த மொக்கராசு 




“தசாவதாரம்” படம் பார்க்க கோவையிலிருந்து தில்லி போயிருக்காங்க. கமல் வருவார் வருவார் பார்த்து இருக்காங்க..ஆனா அவர் கடைசி வரை வரவே இல்லை ஏன் “தசாவதாரம்” படத்தில் கமல் வரல அதை நீங்க அங்கபோய் படிச்சு பாருங்க அப்போ தெரியும்...!!!! 

வாங்க பழகலாம் அழைச்சிட்டு போறார்..எங்க கூப்பிட்டு போறார் பார்த்தா கணவன் வாங்கலையோ..கணவன்!!!.. சொல்றார்.   ஆனா பெண்களுக்கு எந்த கணவரையும் பிடிக்கலையாம் ..பெண்களுக்கு ரொம்ப ஆசை சொல்லுறார்.


இன்றைய பிரபலம் 

"அட்ரா சக்க அட்ரா சக்க" ஆமாங்க அவரே தான் சி.பி.செந்தில்குமார் ரொம்ப வேகமாக வளர்ந்த பதிவர்....விமர்சனம், சினிமா செய்திகள், அரசியல் செய்திகள், ஜோக்ஸ் எதுவாக இருந்தாலும் அதை சுட சுட தருவார் இவர்..ஏதாவது திரைப்படம் வந்து ஐந்து மணி நேரத்தில் விமர்சனம் எழுதிவிடுவார். தலைப்புக்கள் வைப்பதிலும் இவர் சிறந்தவர்..இவரின் ஜோக்ஸ் ஆரம்பத்தில் இருந்தே பத்திரிக்கைகளில் வருகிறது...எனக்கு இவரின் ஜோக்ஸ் தான் மிகவும் பிடிக்கும்.


என்னங்க ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல அப்படியே இருங்க இதோ ஒரு கூட்டத்தோடு வரேன்...அட அடிக்க ஆள் கூப்பிட்டு வரலைங்க.. பயப்படாதீங்க இருங்க வரேன்.




13 comments:

  1. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. சிரிங்க.. சிரிங்க.. சிரிச்சுகிட்டே இருங்க!!!!!!!

    ReplyDelete
  3. சிரிப்பு வாழ்க
    நகைச்சுவை வாழ்க
    காமெடி வாழ்க
    புன்னகை வாழ்க

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  5. நகைசுவைக்கு ஒரு நாளா?சூப்பர்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அறிமுகபடுத்திய உள்ளத்திற்கும், வாழ்த்திய உள்ளங்களுக்கும் நாஞ்சில்மனோ'வின் இதயங்கனிந்த நன்றிகள் நன்றிகள்......

    ReplyDelete
  7. இடுகைக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  9. நன்றி சௌந்தர்..ஒரு சில பதிவுகளை படிச்சு சிரிச்சுட்டே இருக்கேன்.

    ReplyDelete
  10. அருமையான பகிர்வு , எல்லாம் நல்ல சிரிக்க கூடிய வலைபூக்கள் . நன்றி . .

    ReplyDelete
  11. >>>தலைப்புக்கள் வைப்பதிலும் இவர் சிறந்தவர்.

    hi hi பதிவு தான் மொக்கையா இருக்கு.. டைட்டிலாவது நல்லா இருக்கட்டும்னுதான்.. ஹா ஹா

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சவுந்தர்

    ReplyDelete
  12. சாரி ஃபார் லேட் எண்ட்ரி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது