07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, April 21, 2011

பல்சுவை "பதிவர்"களும்..பின்னூட்ட புலிகளும்...

ரெண்டு சுவாரஸ்யமான நண்பர்கள் பேசிட்டு இருக்கிறதை நாம வேர்கடலை வாங்கி கொறிச்சுட்டே கேட்கும் ஒரு கேஷுவல் டாக்கிங் தான் இந்த பல்சுவை பதிவுகள்...நம்மை சுத்தி நடக்கும் பல நிகழ்வுகளை ,ஒரே நேரத்தில் ஜாலியா சுருக்கமா சுவாரஸ்யமா சொல்லிட்டு போறது...அப்படி நான் ரசிச்ச சில வலைப்பூக்கள்...


1 . சமுத்ரா: There is no choice...முதல்ல சொல்ல போறது இந்த பதிவரின் பல்சுவை பதிவு பத்தி தான்... இவரின் "கலைடாஸ்கோப்" பதிவுகள் ரொம்பவே இஷ்டம்...என்னவோ இவர் எழுத்து ஸ்டைல் செம பக்கா...போயி பாருங்க ஏன் இப்படி சிலாகிக்கிறேன்னு தெரியும்...


2.இரவு வானம்: இவரின் பல்சுவை தொகுப்பு "கமர்ஷியல் பக்கங்கள்" ..இவர் சொல்ற விஷயங்கள் நிறைய கேள்விப்பட்டு இருப்போம்...ஆனால் அந்த narration செம இயல்பு....


3.நா.மணிவண்ணன் : மதுரை மரிக்கொழுந்து..தன் ப்ளாக்கை கஷ்டப்பட்டு அழகாக்கியவர்...:)) இவர் தனது பல்சுவை தொகுப்புக்கு வச்ச பெயர் "சோப்பு..சீப்பு...கண்ணாடி"...
மதுரை ஒரிஜினல் accent அப்போ அப்போ தலைய காமிச்சு கலக்கு கலக்குன்னு கலக்கும்..

4.செங்கோவி : குமுதம் புக் எதுவும் ஒரு வாரம் வாங்க மறந்துட்டிங்கனால் டோன்ட் வொர்ரி:))...இவரின் பல்சுவை தொகுப்பான "நானா யோசிச்சேன்" பாருங்க..ஓ..சாரி...படிங்க..:)
பயங்கரமான :) படங்களுடன் கூடிய அக்மார்க் குசும்பு தொகுப்பு..:))

5.தமிழ்வாசி: இவரின் பல்சுவை தொகுப்பு "தனபாலு...கோபாலு" ..டீக்கடையில் ரெண்டு நண்பர்கள் பேசும் டீக்கடை பெஞ்சு பாணியில் நாட்டு நிலவரங்களை அசால்ட்டா அலசுவது...

6.R கோபி : ஒரு intellectual பதிவர் என்பேன்..:) "முரண்படுதல் அழகு -சில நேரங்களில் " தலைப்பில் எழுதும் பல்சுவை தொகுப்பில்...இவர் உரையாடலில் ஒரு விதமான நையாண்டி கலந்தே இருக்கும்..

7.ஜனா..: " ஹொக்ரெயில்" என்ற பெயரில் எழுதும் பல்சுவை தொகுப்பு...வீடியோ..படிச்ச புத்தகம்..வெளிநாட்டு செய்திகள் னு போட்டு பிரிச்சு மேஞ்சுருவார் .

8.வானதி : இவங்க ப்லாக்கே ஒரு பல்சுவை ப்லாக் தான்...ஸோ..தனியா எதுவும் தொகுப்புக்கு பெயர் வைக்கலை...இவங்க நிறைய கதை எழுதும் எழுத்தாளர்...சின்ன விஷயமாய் தான் இருக்கும்...ஆனால் அவங்க அதை ப்ரெசென்ட் பண்ற ஸ்டைல் கலக்கலோ கலக்கல்.

9.மெட்ராஸ் பவன் சிவா: இவர் பல்சுவை பதிவு "ஸ்பெஷல் மீல்ஸ் "நகைச்சுவை தொகுப்பாக,நையாண்டியுடன் இருக்கும் தொகுப்பு..."மிக்சர் கடை "என்ற பெயரிலும் வேறு சுவாரஸ்யமாய் தொகுத்து வழங்குகிறார்..
இன்னும் நான் ரசிப்பவர்கள் லிஸ்ட் நிறைய இருக்கு...but..பெரிய பதிவா போய்டுமே..:((



ஓகே...அடுத்து பின்னூட்ட புலிகள்...


ஒரு பதிவு போட்டால் அந்த பதிவுக்கு மனரீதியா நல்ல அங்கீகாரம் கிடைப்பது அந்த பதிவுக்கு கிடைக்கும் பின்னூட்டங்கள் பொறுத்து தான்...(more than vote&amp;hit)..பதிவை சரியா படிக்காமல் :))மொய் விருந்து வச்சுட்டு போறதை விட...பதிவை நல்லா படிச்சு அதன் குறை நிறைகளை சொல்லிட்டு போறதில் தான் பதிவர்களுக்கு நிஜ அங்கீகாரம் மனதுக்குள் கிடைக்கிறது என்பேன்...அப்படி நான் பார்த்த பின்னூட்ட புலிகள் நிறைய...ஆனால் சிலரை மட்டுமே குறிப்பிட தான் இடம் இருக்கு இங்க..:((

1. jo amalan : பின்னூட்ட புலிகளில் முதலாய் இவரை குறிப்பிட விரும்புகிறேன்..ஏன் என்றால் ஜோ அவர்களின் பின்னூட்ட தீவிர விசிறி நான்...:)) என் பதிவில் ஒரு முறை வந்து இவர் பின்னூட்டம் போட்ட போது ... அதை நான் மட்டுறுத்தேன்...:( தேவைபட்டால் மட்டுருப்பது என் உரிமை மற்றும் சரியான காரணத்துக்காய் அப்படி பண்ணினேன் என்றாலும்...ம்ம்..சின்ன குற்ற உணர்வு இன்னும் எனக்கு...ஆனால் ஒன்னு மட்டும் நான் தெரிஞ்சுகிட்ட உண்மை அன்னைக்கு...ஒரு பிரச்சனையை பார்க்கும் கண்ணோட்டங்களை இன்னும் நான் விரிவு படுத்திக்கனும்னு (ஜோ..ஏன் உங்க ப்லாக் காணோம்?? )


2 .தம்பி கூர்மதியன்: தலைவர் நாலு ப்லாக் வச்சு சூப்பர் ஆ மெயின்டைன் பண்ணிட்டு இருக்கார்..இவர் எழுதும் உணர்வு பூர்வமான கவிதைகளின் பரம விசிறி நான்..
அரசியல் நிகழ்வுகளை கவிதையா போட இவரை அடிச்சுக்க ஆள் இல்லை என்பேன்..
அதற்கடுத்து விரும்புவது இவரின் அதிரடி டாப் டக்கர் பின்னூட்டங்களுக்கு..:)))

3 .நிருபன்: கொஞ்சநாளைக்கு முன்னாடி தான் வந்த புதுமுகம்..ஆனால் நல்ல ரசனையான பையன்...எந்த டாபிக் கொடுத்தாலும் மூச்சு விடாமல்:)) பேசுவார்னு நம்புறேன்..இவர் போடும் பின்னூட்டங்கள் க்ளாஸ்..

4 .இக்பால் செல்வன்: இந்த பதிவரை கொஞ்சநாளாய் கவனித்து வருகிறேன்...பின்னூட்ட விவாதங்களில் வெகு ஆழமான விஷயங்களை அனாயசமாய் ஹான்டில் பண்றார்...சூப்பர் இக்பால்..

நகைச்சுவை பின்னூட்டங்கள் போடுபவர்கள் லிஸ்ட் எக்கச்சக்கம்...சிலர் பதிவுகளை பின்னூடங்களுக்காகவே விரும்பி போயி படிப்பது என் வழக்கம்...



ஒருத்தர் பேரு சொல்லி..மீதி பேரு விட்டுச்சுனால் மதுரையில் வந்து என்னை என்கவுன்ட்டர் இல் போட்டு தள்ளிருவாங்க என்ற பயத்துடன்...:))) அப்படியே..அப்பீட் ஆகிக்கிறேன்...நாளைக்கு பார்ப்போம்..:))

59 comments:

  1. ஒருத்தர் பேரு சொல்லி..மீதி பேரு விட்டுச்சுனால் மதுரையில் வந்து என்னை என்கவுன்ட்டர் இல் போட்டு தள்ளிருவாங்க என்ற பயத்துடன்...:))) அப்படியே..அப்பீட் ஆகிக்கிறேன்...நாளைக்கு பார்ப்போம்..:)) ////

    ஏன் அம்புட்டு பயமா...????/ இன்றும் நல்ல அறிமுகங்கள்... வாழ்த்துக்கள் கா

    ReplyDelete
  2. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. எல்லோருமே ஒரு விதத்தில் பழக்கப்பட்டவர்கள் தான்..

    அப்பரம் நான்.. ஹி ஹி.. என்னையும் இங்கே எனது அரும்பெரும் நண்பர் நிரூபன் மற்றும் இக்பாலுடன் இணைத்ததில் மகிழ்ச்சி.. இக்பால் ஈழம் சம்பந்தமான நிரூபனின் பதிவில் போட்ட பின்னூட்டங்கள் சிறப்பா இருக்கும்..

    //ஆனால் சிலரை மட்டுமே குறிப்பிட தான் இடம் இருக்கு இங்க..:((//

    அந்த சிலருல நானுமா.? ஹி ஹி.. அதென்ன யாரா இருந்தாலும் என்னுடைய நாலு ப்ளாக் மேலயே கண்ணா இருக்கீங்க.. முதல்ல ஒரு பெரிய பூட்டு வாங்கி போடணும்..

    ReplyDelete
  5. நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete
  6. சிறந்த பின்னூட்டவாதிகள் ஸ்பெஷல் சூப்பர்

    ReplyDelete
  7. @தம்பிகூர்மதியன்
    ஆமாம் கூர்..இக்பாலின் பதிவுகள் கூட சம்திங் different :)) செம potential பிளாக்கர்..

    ReplyDelete
  8. @ஆனந்தி://இக்பாலின் பதிவுகள் கூட சம்திங் different :)) //
    ஆனா அவரை கொஞ்சம் சின்னதா எழுத சொல்லுங்க.. உஷ்ஷ்ஷ்.. முடியல..

    ReplyDelete
  9. சி.பி.எஸ் சார்..நான் உங்களை கூட குறிப்பிட்டு டைப் பண்ணி வச்சிருந்தேன்..ஆனால் மத்த சகோ எல்லாம் சண்டைக்கு வருவாங்கன்னு போடல..:((

    ReplyDelete
  10. சி.பி.எஸ் சார் ன் "முதன் முதலாக...முதன் முதலாக பரவசமாக.." ,அப்புறம் "முதல் வெட்டு" ..அப்புறம் "முதல் வாக்கு" இப்படி டைமிங் ஆ கலக்கும் நகைச்சுவை பின்னூட்டம் பார்த்து பயங்கரமா சிரிச்சு இருக்கிறேன்..இதை பின்னூட்டத்தில் குறிப்பிட விடும்புகிறேன்..:)))

    ReplyDelete
  11. கலக்குங்க...

    ReplyDelete
  12. கலக்கல் அக்கா! நீங்கள் சொல்வது சரிதான்...இவர்கள் அனைவரும் எனக்கு அறிமுகமானவர்களே! வானதி மட்டும் புதியவர் எனக்கு! நன்றி!

    ReplyDelete
  13. you have forgotten our kovai puyal Priya.r =((

    ReplyDelete
  14. நல்ல அறிமுகங்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. பின்னூட்ட புயல் என்றால் அவங்க தான். அப்புறம் ஒரு பெண் பின்னூட்டம் இடுபவர் பெயர் இல்லாததால் வெளி நடப்பு செய்கிறேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்

    வான்ஸ் அக்காவுக்கு வாழ்த்துக்கள்

    சமுத்ராவின் பதிவை எட்டிப்பார்க்கப்போனேன். மூடவே முடியவில்லை. நன்றி நன்றி

    ReplyDelete
  16. ஒரு சிலர் நடிகைகளின் கவர்ச்சி படங்களை அள்ளிப் போட்டே பதிவு போடுகிறார்கள். எரிச்சலாக இருக்கிறது. என்ன பிழைப்பு.

    ReplyDelete
  17. அனைவருக்கும் என் வாழ்த்துகள்....

    ReplyDelete
  18. @anamika

    Can u give me "Priya's "link??

    ReplyDelete
  19. @ ஆனந்தி,
    அப்பாவி தங்கமணியை கலாய்ப்பதில் ஷீ இஸ் த பெஸ்ட். அவங்க நகைச்சுவை பதிவு எழுதுவது ரொம்ப குறைவு. ஆனால் பின்னூட்டங்களில் ரொம்பவே அருமையாக கலாய்ப்பார்.

    ReplyDelete
  20. நாங்கெல்லாம்..எலியாவே இருந்துட்டு ப்போறோமுங்கோ.

    ReplyDelete
  21. என்னையும் அறிமுகபடுத்தியதற்கு மிகவும் நன்றி ஆனந்தி மேடம்

    ReplyDelete
  22. என் மேல் டார்ச் அடித்து வெளிச்சம் காட்டியதற்கு நன்றி. சமுத்ரா, ஜனா, வானதி ஆகியோரை பற்றி அறிமுகம் செய்துள்ளீர்கள். கண்டிப்பாக அங்கேயும் விசிட் அடிக்க வேண்டும்.

    ReplyDelete
  23. http://parvathapriya.wordpress.com/feed/

    ReplyDelete
  24. அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றிகள்..

    ReplyDelete
  25. அக்கா ஓரிருவரைத் தவிர மற்றைய எல்லோரும் ரொம்ப பரீட்சையமானவர்களே அவர்களது அறிமுகத்திற்கு மிக்க நன்றிகள்...

    ReplyDelete
  26. சீனா ஐயாவும் அக்காவும் முதலில் மன்னிக்கவும் நான் இங்கு கூறப் போவது ஆரோக்கியமான பதிவுலகத்துக்காகவே..

    ஃஃஃஃஃஅனாமிகா துவாரகன்.ஃஃஃஃஃ

    என்ற பதிவரை அறிந்தவர் தெரிந்தவர்கள் அவருக்கு நல்ல அறிவுரை வழங்குங்கள் மிக அநாகரிகமான கருத்துக்களை இடுகிறார்.. சற்று முன்னர் கூட என் தளம் வந்து என்னை

    ஃஃஃஃSon of a bitch.ஃஃஃஃ என்று திட்டி விட்டுப் போயிருக்கிறார் இவை எந்தளவு பொறுமைசாலிக்கும் கோபமூட்டும் வார்த்தை பிரயோகமாகும்....
    அரோக்கியமான ஒரு உலகத்தை அசிங்கப்படுத்தாதீர்கள் உறவுகளே..

    ReplyDelete
  27. @ அனாமிகா நீங்க கொடுத்த லிங்க் பார்த்தேன்...நல்லா இருந்தது பின்னூட்டங்கள்...எனக்கு அப்பாவி தங்கமணியின் நகைச்சுவை பின்னூட்டங்கள் கூட ரொம்ப பிடிக்கும்...அதான் சொல்லி இருந்தேன்..எனக்கு பிடிச்ச நகைச்சுவை பின்னூட்ட சிங்கங்கள் (பன்னிகுட்டி ராமசாமி யில் இருந்து..........சகோ அஞ்சாசிங்கம் வரை ஒரு பெரிய பட்டியலே நீளும்..)எண்ணவே முடியாத அளவுக்கு இருக்கு...யாரை போட..யாரை விட ன்னு தெரியலை...:(((((

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. பின்னூட்டப் புலிகள் சரியான தேர்வுப் புலிகள்.இக்பால்,கூர்மதி,நிரூபன் பதிவைவிட பின்னூட்டங்களில் நிறைவான விளக்கங்கள் தருகிறார்கள்.நிரூபன் சிலசமயம் கும்மியும்தான் !

    ReplyDelete
  30. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. kopalu, thanapalu: rendu peraiyum kurippittu sonnathukku thanks. avinga rendu perum santhosathula treat ketkuraanga. ha... ha....

    ReplyDelete
  32. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  33. நல்ல அறிமுகங்கள், ஆனந்தி.
    என்னை சிறப்பாக அறிமுகபடுத்தி இருக்கிறீங்க. மிக்க நன்றி.
    அனாமி ஸிஸ், மிக்க நன்றி.
    எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  34. நன்றிகளுடனான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. இன்னைக்கு மட்டும் என் பதிவை நீங்க சொல்லாம விட்டிருந்தீங்க....மர்ரைக்கே கிளம்பி வந்திருப்பேன்க்கா!

    ReplyDelete
  36. @ ஆனந்தி - எம்மைப் பற்றியும் சக நண்பர்களின் பல பதிவுகள் பற்றியும் அறிமுகம் தந்தமைக்கு மிக்க நன்றிகள் !

    ReplyDelete
  37. //@ஆனந்தி://இக்பாலின் பதிவுகள் கூட சம்திங் different :)) //
    ஆனா அவரை கொஞ்சம் சின்னதா எழுத சொல்லுங்க.. உஷ்ஷ்ஷ்.. முடியல..//

    தம்பிகூர்மதியான் - அவ்ளோ பெரிசாவா எழுதறேன் .. ஹிஹி !!! நானும் யோசித்தேன் - தமிழில் இவ்வளவு பெரிசா எழுதினாப் பிரச்சனைனு.. கொஞ்சம் குறைச்சுக்குறேன் சகோ.

    ReplyDelete
  38. @ மதிசுதா //ஃஃஃஃSon of a bitch.ஃஃஃஃ என்று திட்டி விட்டுப் போயிருக்கிறார் இவை எந்தளவு பொறுமைசாலிக்கும் கோபமூட்டும் வார்த்தை பிரயோகமாகும்//

    அனாமிகா துவாரகனின் இந்த பொறுப்பற்றத் தனங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை... மதி அப்படியான பின்னூட்டங்களை ஸ்பாம் பெட்டிக்குள் தள்ளி முட்டிக்கு முட்டித் தடுங்க ......... அனாமிகாவின் செயலை நானும் கண்டிக்கிறேன் .......

    ReplyDelete
  39. அறிமுகத்திற்கு நன்றி ஆனந்தி

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. இன்றைய நாள் சம்பாஷணைகளுடன் கூடிய பதிவுகளையும், சுவையான பதிவுகளையும் அலசியிருக்கிறீர்கள்.
    நன்றிகள் சகோ.

    ReplyDelete
  42. சகோ, பின்னூட்டப் புலிகள் என்ற அடை மொழி வேறு கொடுத்து, எங்களையும், எங்கள் நண்பர்களையும் பாராட்டியிருக்கிறீர்கள்.
    நன்றிகள் சகோ.

    ஆனால் ஒரே ஒரு குறை மட்டும் மனதில், நேரம் இன்மை காரணமாக அனைத்து உறவுகளின் வலைப்பூக்களையும் படிக்க முடிவதில்லை. இதனைப் புரிந்து கொள்ளாத ஒரு சில அன்பு நெஞ்சங்கள், நான் தங்கள் வலைக்கு வருவதில்லை,
    பின்னூட்டம் தருவதில்லை,
    உங்கள் பின்னூட்டங்களை மட்டும் என் பின்னூட்டப் பெட்டி திருப்பி அனுப்புகிறதா என்று என் வலையில் வந்து கேள்வி கேட்டு, குறை பட்டுக் கொள்கிறார்கள்.

    எல்லோர் வலையினையும் சென்று ஆர்வமுடன் படித்து, விமர்சிக்க வேண்டும் என்று ஆசை தான், ஆனால் நேரம் மட்டும் கைவசம் இல்லாதிருக்கிறது, ஆகவே எல்லோரும் என்னை மன்னிக்கவும்,

    என்னைப் பொறுத்தவரை, நான் பின்னூட்டப் புலியாக, இன்னமும் மாறவில்லை என்றே கருதுகிறேன், இப்போதி பின்னூட்ட நாற்றாகத் தான் இருக்கிறேன் சகோ, பல உள்ளங்களின் வலைப் பூக்களைத் தவற விடுகிறேன் எனும் ஒரு குறை மட்டும் இன்றும் என் மனதில் இருக்கிறது.

    உங்களின் அறிமுகத்திற்கு மிக்க நன்றிகள். தொடர்ந்தும் அதிரடியாய், அசத்தலாய் உங்கள் அறிமுகத்தைத் தொடருங்கள் சகோ.

    ReplyDelete
  43. சிறப்பான அறிமுகங்களுக்கு நன்றி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  44. ♔ம.தி.சுதா♔ said...
    சீனா ஐயாவும் அக்காவும் முதலில் மன்னிக்கவும் நான் இங்கு கூறப் போவது ஆரோக்கியமான பதிவுலகத்துக்காகவே..

    ஃஃஃஃஃஅனாமிகா துவாரகன்.ஃஃஃஃஃ

    என்ற பதிவரை அறிந்தவர் தெரிந்தவர்கள் அவருக்கு நல்ல அறிவுரை வழங்குங்கள் மிக அநாகரிகமான கருத்துக்களை இடுகிறார்.//

    She uses offensive language, She has to apologise for abusing Mathisutha.
    please don't do this silly things again.

    ReplyDelete
  45. //She uses offensive language,//

    She uses என்றால் வழமையாகவே செய்வது என்பது கருத்து. "புரிந்து" தான் எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் நிரூபன். தவறாமல் என் வலைத்தளம் படிப்பவருக்குத் தெரியவேண்டும் She uses என்று போட்டது பொய் என்று. பலரைப் போல எனக்கும் அரைகுறை ஆங்கிலம் தான் தெரியும் என்று சொல்லி கதையை மாற்றமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

    ஒன்று, கண்டிப்பாக மன்னிப்பு கேட்கப்போவதில்லை. இரண்டு, நான் எந்த குழுவிற்கும் சேர்மதியான ஆளோ அல்லது சங்க உறுப்பினரோ அல்ல. யார் சொன்னாலும் காது கொடுத்து கேட்டாலும் (மரியாதையின் நிமித்தம்) கடைசி முடிவு என்னுடையது தான். =))

    ReplyDelete
  46. ஆமாம் இக்பால் ஒரு விவாத புலி ..
    ஹி ஹி நாங்கள் எல்லாம் விதண்டாவாத புலி ..............

    ReplyDelete
  47. அனாமிகா துவாரகன் said...
    //She uses offensive language,//

    She uses என்றால் வழமையாகவே செய்வது என்பது கருத்து. "புரிந்து" தான் எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் நிரூபன். தவறாமல் என் வலைத்தளம் படிப்பவருக்குத் தெரியவேண்டும் She uses என்று போட்டது பொய் என்று. பலரைப் போல எனக்கும் அரைகுறை ஆங்கிலம் தான் தெரியும் என்று சொல்லி கதையை மாற்றமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

    ஒன்று, கண்டிப்பாக மன்னிப்பு கேட்கப்போவதில்லை. இரண்டு, நான் எந்த குழுவிற்கும் சேர்மதியான ஆளோ அல்லது சங்க உறுப்பினரோ அல்ல. யார் சொன்னாலும் காது கொடுத்து கேட்டாலும் (மரியாதையின் நிமித்தம்) கடைசி முடிவு என்னுடையது தான். =))//

    சகோ, உங்கள் வலைத் தளத்தில் நீங்கள் இவ்வாறான மொழிகளைப் பயன்படுத்துவதில்லை, ஏனைய நண்பர்களின் வலைத் தளங்களில் இவ்வாறான புரியாத அல்லது புரிந்து எழுதும் திட்டல் வார்த்தைகளைத் தாங்கள் பின்னூட்டமாக எழுதி வருவதை அவதானித்திருக்கிறேன்.
    அதற்கு உதாரணமாக இதே ஒரு லிங்

    http://settaikkaran.blogspot.com/2010/12/blog-post_17.html

    ReplyDelete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete
  49. மங்குனி அமைச்சரை கலாய்ப்பது போல கலாய்த்ததை வைத்து சேட்டைக்காரன் வேண்டும் என்று எழுதிய பதிவு அது. அங்கே எங்கேயும் abusive வார்த்தை பாவிக்கப் படவில்லை. இது உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும்.

    வன்னி மக்களை சாராய பதிவில் கேவல படுத்தின மாதிரி யாராலும் கேவல படுத்தி இருக்க முடியாது. நல்லா இருங்கள்.

    புன்னகை தேசத்தை (அவர் நல்லவரோ கெட்டவரோ) பற்றி கேவலமாக எழுதியவர் எனக்கு புத்தி மதி சொல்கிறாராம். அவர் எழுதின பதிவு தான் உதாரணமாக கிடைத்தா உங்களுக்கு. கலிகாலம்.

    எஸ்.ஒ.பி முதல் முறையாக வன்னி மக்களை கேவலப் படுத்தினதுக்கு ஆக எழுதியது. புலிகளை அவர்கள் இருக்கும் போது எதுவும் சொல்லாதவர்கள் இப்ப என்ன என்னவோ சொல்கிறாங்கள். அதை விடுங்கோ. மானங் கேட்ட தமிழன் தானே. மக்களையுமா இப்படி எழுதுவீர்கள். சீய் மானங் கேட்ட இனத்தில் பிறந்ததுக்கு வருந்துகிறேன்.

    End of discussion.

    ReplyDelete
  50. ஃஃஃஃஃவன்னி மக்களை சாராய பதிவில் கேவல படுத்தின மாதிரி யாராலும் கேவல படுத்தி இருக்க முடியாது. ஃஃஃஃஃ

    வன்னி மக்களை கேவலப்படுத்தவதாக சொல்கிறிர்களே அப்படியானால் நான் யார் என்பது வடிவாகத் தெரிய வேண்டும்... நாங்கள் காட்டுக்குள் வாழ்ந்தவர்கள் தான் அனால் எங்களுக்கு தொழில் நுட்பம் வடிவாகத் தெரியும்... ஒரு கணக்கை திருடுவதானால் முறையாக திருடச் சொல்லுங்கள்...

    உங்களை போல நாட்டை விட்டு ஓடிப் போய் நின்று ஈழப் பற்று கதைக்கும் ஆட்களில்லை நாங்கள்...

    ReplyDelete
  51. புலிக்கு போக வேண்டிய வயதிலை புழுதி மேய்ந்து விட்டு என்னை சொல்ல வாறிங்களா ? வன்னி மக்களை கேவலப்படுத்தியதாக.. முடியுமானால் ஒரு வன்னி பதிவர் வந்து சொல்லட்டும் இந்த பதிவில்

    http://mathisutha.blogspot.com/2010/08/blog-post_08.html

    நான் எழுதியது பொய் என்று...

    பெரிய நாகரீகமானவராம் எந்த ஒரு பெண்ணாவது இன்னொரு பெண்ணை BITCH என்று ஏசி கேள்விப்பட்டிருக்கிறிர்களா ? அதிலிருந்து உங்க வரலாறு தெரியலியா...

    எங்களுக்கான நாக ரீகத்தை வெள்ளையன் நாட்டிலிருந்து கற்பிக்கத் தேவையில்லை சங்கு சுட்டாலும் வெண்மை தான்...

    ReplyDelete
  52. ஃஃஃஃEnd of discussion.ஃஃஃஃ

    என்னால் முடியாது தங்களுக்க என்னை ஏச 100 அனுமதியிருக்கிறது காரணம் என் எழுத்துகளுக்கு நான் தான் சொந்தக்காரன் என் அம்மாவல்ல..

    நான் நிறுத்திக் கொள்வதானால் 2 சந்தர்ப்பம் எனது கணக்கை முழுமையாக திருடுங்கள் அல்லது என் தாயிடம் மன்னிப்பு கேளுங்கள்...

    திருப்பியும் சொல்கிறேன் நாங்கள் காட்டக்குள் இருந்தாலும் தொழில் நுட்பமம் நாகரிகமும் தாராளமாகத் தெரிந்தவர்கள்... முடிந்தால் கணக்கை கையகப்படுத்திக் காட்டுங்கள்..

    ReplyDelete
  53. அன்பின் அனாமிகா மற்றும் மதி சுதா - இது ஒரு பொதுவான தளம் - இங்கு தங்களின் சண்டைகள் வேண்டாமென நினைக்கிறேன். தயவு செய்து நிறுத்துங்கள் - நிறுத்த இயலவில்லை எனில் அவரவர் பதிவினில் தொடருங்கள். தயவு செய்து இங்கு வேண்டாம். எனது வேண்டுகோளை ஏற்பீர்கள் என நம்புகிறேன். நல்வாழ்த்துகள் இருவருக்கும் - நட்புடன் சீனா

    ReplyDelete
  54. நன்றி ஐயா நான் தங்கள் சொல்லுக்கு கீழ்படிகிறேன்...

    ReplyDelete
  55. அறிமுகங்கள் கலகக்ல்

    ஆனால் திடீருன்னு ஏன் கீழே வாக்கு வாதம்
    மனக்கசப்பாக இருக்கே.

    ReplyDelete
  56. நகைச்சுவைப் பின்னூட்டர்களை வரிசைப்படுத்துவதில் அப்படியென்ன கஞ்சத்தனம் ? ( உங்களூர் வைகையில் ஓடும் தண்ணீர் மாதிரி ! ). `மற்றும் பலர் ' ரீதியில் லிஸ்ட் ஒன்றைப் போட்டிருந்தால் கொலை வெறியோடு ஒத்தக்கடை தாண்டி ஓடி வரும் கூட்டத்தைக் குறைத்திருக்கலாமில்லையா ?

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது