07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 10, 2011

இனிமேல் நாங்க தான்...!!!




நேத்து ஒரு கூட்டத்தோடு வரேன் சொன்னேன்ல இதோ வந்திருக்கேன் பாதி பேர் தான் வந்து இருக்காங்க மீதி பேர் ஏதோ தேர்தல் வேலையா வெளிய போய் இருக்காங்க...இந்த கூட்டம் வேறு யாரும் இல்லைங்க எனக்கு ரொம்ப தெரிந்த கூட்டம்....இருங்க இவங்கள பத்தி சொல்றேன்.

எதுவும் நடக்கலாம் சொல்றாங்க...உங்களுக்கு இல்லைங்க...யாரை சொல்றார் தெரியல...!!! இவர் வலைச்சரம் ஆசிரியராக இருந்தவர். நல்லா கதை எழுதுவார் நிறைய தொழில்நுட்பப விஷயம் இவருக்கு தெரியும்....போட்டோஷாப் பற்றி இவர் அதிகம் எழுதுவார்...நிறைய பேருக்கு உதவி செய்வார் அவர் தான் எஸ்கே


உண்மை சுடும் சொல்றார் ...அது என்னமோ உண்மை தான்...இவரின் அரசியல் கட்டுரைகள் எல்லாம் புள்ளி விவரத்தோடு இருக்கும்ங்க...சிறைச்சாலை தன் நண்பரின் அனுபவத்தை சொல்லி இருக்கார் பாருங்க...சகபதிவரை நையாண்டி செய்தது இருக்கிறார்....கேட்டால் இவருக்கு நையாண்டி செய்யவும் தெரியுமாம்


இவர் தாங்க முறை மாமன்...யாருக்கு முறை மாமன் கேக்குறீங்களா...அதை தான் சொல்ல மாட்டுறார்...இவனும் செல்வாவும் சேர்ந்து ஒரு பதிவு போட்டனுங்க பாருங்க இவங்ககளுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும் ...ஏன்னா அது அப்படி ஒரு பதிவு...இந்த பதிவுக்கு கூட்டு முயற்சி வேற...



இவங்க தான் மல்லிகை அகிலா. பெயர் காரணம் தொடர் பதிவு இவங்க தான் ஆரம்பித்து வைச்சாங்க. பதிவுலகில் இன்னும் இந்த தொடர் ஓடிட்டு இருக்கு...நான் எங்க கவிதை இவங்க என்னை அடிக்க வராங்க மக்களே என்னனு கேளுங்க... சில எச்சரிக்கை உங்கள் கவனத்திற்கு சொல்றாங்க... நிறைய தெரியாத தகவலை சொல்றாங்க..




உங்க வீட்டுக்கு ஏதாவது பல்பு வாங்கணும்னா இவர் கிட்ட போங்க மொத்த விலைக்கு சீப்பா வாங்கலாம் அந்த அளவுக்கு பல்பு வாங்குவார் தேவையில்லாமல் குழந்தை கிட்ட பேசி மாட்டிக்குறார்...இவர் ஒரு ஆராய்ச்சி செய்திட்டு இருக்கார்..அதுக்கு பதில் இன்னும் கிடைக்கலையாம் காக்கவை பார்த்தால் எது ஆண் காக்கா, எது பெண் காக்கா தெரியனுமாம். பார்த்தவுடன் உங்களுக்கு சொல்ல தெரியுமா..???



இவர் ஒரு சுற்றுலா விரும்பிங்க முதல் ஒழுங்கா சுற்றுலா பத்தி தாங்க எழுதிட்டு இருந்தார் திடீர் என்ன ஆச்சோ,அது ஒரு காதல் காலம் சொல்ல ஆரம்பிச்சார் இன்னும் அந்த காதல் பற்றி சொல்றார்...இவர் காதல் கதையை படிக்க நல்லா இருக்கும் இந்த கதையில் பாதி இவர் கதை தாங்க....நீங்களும் படிச்சு பாருங்க



இவர் தாங்க நரி பாஸ்வேர்ட் மறந்து தொலைச்சிட்டார்..சரி ஏதோ தில்லுமுல்லு பண்ணி வேற ப்ளாக் தொடங்கினார்...ஏன்னு கேட்டா இவர் தான் உலகின் அழகிய ஆண்மகன் சொல்றார், இது இவருக்கே ஓவரா தெரியலையா...என்ன கொடுமை சரவணன்...!!!




அல்ட்டிமேட் பிரபலம்

நான் இப்போ சொல்ல போற பிரபலம் யாருனா இவங்க தான் வாரியார்..ஆமாங்க இவங்க சொல்லுற சேதி நல்ல நல்லாதானுங்க இருக்கும் அட நெசமா தானுங்க..திடீர் விவாசயம் பத்தி எழுதுவாக.. இவங்க எழுத்து எல்லாம் ஒரு தினுசா இருக்குமுங்க...ஒரு புத்தகத்தை புரட்டி கூட பார்த்திருக்க மாட்டார் ஆனால் அதை வைத்து ஒரு பதிவு எழுதுவார்...மகளே.. என் செல்வ மகளே..! என ஒரு பதிவு எழுதி இருக்கிறார் பாருங்கள்..ஒரு பெண்ணின் தகப்பனுக்கு வரும் பயம்...இப்போதே இவருக்கு வந்து விட்டது போல...!!! தன் பெண்ணிற்காகவே, தன் மனைவிக்கு நிறைய சலுகைகளை கொடுத்துவிட்டார்.....இவர் எழுத்தைப் பற்றி பேசி கொண்டே போகலாம் அப்படி ஒரு எழுத்து அது. இவர் எழுத்துக்களை புத்தகமாக வெளியிடலாம்...என்பது என் கருத்து. இவரின் எழுத்தை படிக்க வேண்டும் என்றால்..அமைதியான சூழ்நிலையில் படித்தால் மிகவும் நன்றாக இருக்கும், நமது வேலை பளுவின் காரணமாக வேக வேக படித்தால் ஒன்றும் புரியாது இது என் அனுபவம்.


என்ன நாளைக்கும் நான் வரணுமா அது முடியாதுங்க...இன்றோடு நான் கிளம்புறேங்க எனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்தேன், என நினைக்கிறன்...வலைச்சரத்தில் எழுதவாய்ப்பு கொடுத்த சீனா அய்யா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொண்டு விடை பெறுகிறேன்....நன்றி வணக்கம்.





24 comments:

  1. வணக்கம் மச்சி, வலைச்சரத்தில ஒருவாரகாலமாக சிறப்பாக பல நண்பர்களை அறிமுகபடுத்தி செயல்பட்டதற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் :))

    ReplyDelete
  2. வாழ்த்துக்களும் நன்றிகளும்..

    ReplyDelete
  3. ஒருவாரமும் வெகு சிறப்பான அறிமுகங்கள்...வாழ்த்துக்கள் சௌந்தர்!

    ReplyDelete
  4. வணக்கம் மச்சி, வலைச்சரத்தில ஒருவாரகாலமாக சிறப்பாக பல நண்பர்களை அறிமுகபடுத்தி செயல்பட்டதற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் :))

    ReplyDelete
  5. அட்டகாசமான ஒரு வாரம் ஓடியே விட்டது...தம்பி...!

    இங்கே நான் புரிந்த ஒரு விசயம் அபரிதமான உன் எழுத்து நடையின் வளர்ச்சி. வலைப்பூக்களை மிகுந்த சிரத்தையோடு நீ தேடி எடுத்து முத்துக்களாய் கோர்த்ததையும் நானறிவேன்.....!!!! என் மனமார்ந்த் வாழ்த்துக்கள் இன்னும் வெற்றிகள் பல நீ பெற!!!!

    இந்த வாய்ப்பினை கொடுத்த சீனா ஐயாவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!!!!!

    ReplyDelete
  6. மாணவன் said...
    வணக்கம் மச்சி, வலைச்சரத்தில ஒருவாரகாலமாக சிறப்பாக பல நண்பர்களை அறிமுகபடுத்தி செயல்பட்டதற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் :))////

    ரொம்ப நன்றி மச்சி உன் வருகைக்கும் வாழ்த்திற்கும்...!!!

    ReplyDelete
  7. தங்களின் அறிமுகத்திற்கு நன்றி... நீங்கள் மேற்கோள் கட்டிய அந்த பதிவு ஒரு "நவீன" முயற்சி... இலக்கியத்தின் அடுத்த பரிணாமம்...நண்பர் செல்வாவிற்கு கடமைபட்டுள்ளேன்.... ஹி ஹி ... :))

    ReplyDelete
  8. பாரத்... பாரதி... said...
    வாழ்த்துக்களும் நன்றிகளும்..///



    மிக்க நன்றி பாரத்... பாரதி

    ReplyDelete
  9. சௌந்தர், பாபுவோட அறிமுகத்தில் லிங் தவறாக இருகிறது.

    ReplyDelete
  10. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஒருவாரமும் வெகு சிறப்பான அறிமுகங்கள்...வாழ்த்துக்கள் சௌந்தர்!///

    ரொம்ப ரொம்ப நன்றி சார்....

    ReplyDelete
  11. karthikkumar said...
    வணக்கம் மச்சி, வலைச்சரத்தில ஒருவாரகாலமாக சிறப்பாக பல நண்பர்களை அறிமுகபடுத்தி செயல்பட்டதற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் :))///

    உன் வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி மச்சி...

    ReplyDelete
  12. dheva said...
    அட்டகாசமான ஒரு வாரம் ஓடியே விட்டது...தம்பி...!

    இங்கே நான் புரிந்த ஒரு விசயம் அபரிதமான உன் எழுத்து நடையின் வளர்ச்சி. வலைப்பூக்களை மிகுந்த சிரத்தையோடு நீ தேடி எடுத்து முத்துக்களாய் கோர்த்ததையும் நானறிவேன்.....!!!! என் மனமார்ந்த் வாழ்த்துக்கள் இன்னும் வெற்றிகள் பல நீ பெற!!!!

    இந்த வாய்ப்பினை கொடுத்த சீனா ஐயாவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!!!!!////

    ஆம் வெகு சீக்கிரமே நாட்கள் ஓடி விட்டது...

    மற்ற ப்ளாக் தேடி படிப்பது மிகவும் கஷ்டமான ஒன்று எப்படியோ எனக்கு தெரிந்த வரை நல்ல பதிவுகளை அறிமுகம் செய்து இருக்கிறேன்...மிக்க நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்..!!!

    ReplyDelete
  13. arthikkumar said...
    தங்களின் அறிமுகத்திற்கு நன்றி... நீங்கள் மேற்கோள் கட்டிய அந்த பதிவு ஒரு "நவீன" முயற்சி... இலக்கியத்தின் அடுத்த பரிணாமம்...நண்பர் செல்வாவிற்கு கடமைபட்டுள்ளேன்.... ஹி ஹி ... :))///

    ரொம்ப நல்ல முயற்சி தொடர்ந்து செயல்படுங்கள்... நல்லது உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  14. ஒருவாரமும் வெகு சிறப்பான அறிமுகங்கள்...வாழ்த்துக்கள் சௌந்தர்!

    ReplyDelete
  15. //சௌந்தர், பாபுவோட அறிமுகத்தில் லிங் தவறாக இருகிறது//
    மாத்திட்டான் பய புள்ள ...அந்த பயம் இருக்கட்டும் ...

    ReplyDelete
  16. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    சௌந்தர், பாபுவோட அறிமுகத்தில் லிங் தவறாக இருகிறது.///

    நன்றி மாத்திட்டேன்...

    ReplyDelete
  17. இம்சைஅரசன் பாபு.. said...
    ஒருவாரமும் வெகு சிறப்பான அறிமுகங்கள்...வாழ்த்துக்கள் சௌந்தர்!///

    ரொம்ப நன்றி பாபு அவர்களே

    ReplyDelete
  18. இம்சைஅரசன் பாபு.. said...
    //சௌந்தர், பாபுவோட அறிமுகத்தில் லிங் தவறாக இருகிறது//
    மாத்திட்டான் பய புள்ள ...அந்த பயம் ////

    ரொம்ப அறிவாளி நினைப்பு...குழந்தை கிட்ட பல்பு வாங்குற பய தானே நீ போ போ...

    ReplyDelete
  19. இன்றைக்கும் சூப்பர் அறிமுகம்....நெறைய பேர் தெரிஞ்சவங்கதான்....
    எல்லாருக்கும் வாழ்த்துகள் மக்கா...

    ReplyDelete
  20. அட,,அதுக்குள்ளே ஒரு வாரம் ஆய்டுச்சா...ஒவ்வெரு நாளும் வித்யாசமான தலைப்பில் சிறப்பா பண்ணின சௌ...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  21. சூப்பர் அறிமுகங்கள்!! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. வாவ்.. சௌந்தர்.. ஒரு வாரம் போனதே தெரியலங்க..

    சூப்பர் பதிவுகள் எல்லாமும்..! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..

    உங்களுக்கும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..! :-))

    ReplyDelete
  23. ஹி..ஹி..ஹி.. கலக்கல் மக்கா..!! ஒருவாரத்தை சிறப்பாக நிறைவு செய்து இருக்க... பாராட்டுகள் மக்கா..!!!

    ReplyDelete
  24. சிறப்பான அறிமுகங்கள்...வாழ்த்துக்கள் சௌந்தர்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது