என்னடா நேத்து காணாமல் போன பதிவர் சொன்னனே..?! எங்கடா என்னை காணோம்ன்னு தேடுறீங்களா... நான் இன்னும் காணாம போகலைங்க. ஆனா நம்ம பதிவுலகத்துல நிறைய பேர் காணாம போய்ட்டாங்க...
பதிவுலகத்துல வந்த புதுசுல அடிக்கடி பதிவு போடுவாங்க... நடந்தா பதிவு. தும்பினா பதிவுன்னு போட்ட ஆளுங்களையெல்லாம் இப்போ எங்கன்னு வலை வீசி தேட வேண்டியதா இருக்கு...
அப்படி எங்கதான் போனாங்கன்னு பாக்குறீங்களா..?! எங்கயும் போகல... பேஸ்புக், கூகிள் பிளஸ்ன்னு சுத்தி சுத்தி கும்மி அடிக்குறாங்க... பதிவுன்னா ஒரு பக்கம் புல்லா எழுதி எவனாவது வரமாட்டானா..?! அவன போட்டு வெட்டலாம்ன்னு காத்துட்டு இருப்பாங்க... ஆனா இப்போ அப்படியெல்லாம் இல்ல... பேஸ்புக் கூகிள்பிளஸ்-ல நாலு வரி போட்டா போதும். தன்னாலே அருவாவோட கிளம்பி போயிடுறாங்க... அப்படியே ஆபிஸ் வேலை முடிஞ்சு வீட்டுக்கும் போயிடுறாங்க....
அட இப்போ நான் சொல்ல போறவங்க எல்லாம் இப்படி பண்ணுறவங்க இல்ல... நான் பொதுவா சொல்றேன்.. நீங்க பாட்டுக்கு சீரியஸா அருவா எடுத்திட்டு வந்துராதீங்க... இது கழுகு இல்ல... வலைச்சரம்.
இவர்தான் பிரியமுடன் ரமேஷ்... இவர் எழுதுற விமர்சனம் எல்லாம் நல்லா இருக்கும். வந்த புதுசுல எல்லோருக்கும் போய் கமெண்ட் போடுவார். ஆனா இப்போ வேலை வேலைன்னு சுத்திட்டு ப்ளாக் உலகம் ஒன்னு இருந்துச்சுன்றதையே அவரு மறந்துட்டார்.... அப்போப்போ சிறுகதையெல்லாம் எழுதுவார்....
அதுலயும்
அக்கா பத்தி ஒரு சிறுகதை எழுதி இருக்கார் பாருங்க... நீங்க உங்க அக்காவை மிஸ் பண்ணா இந்த கதையை படிச்சு பாருங்க.
தொப்பி தொப்பி-ன்னு சொன்னா எல்லோருக்கும் தெரியும். ஏன்னா அவர் அம்புட்டு கோவக்காரரு. கோவைக்காரு இல்லைங்க... இவர் ஒரு பதிவு போட்டா அதுக்கு பக்கம் பக்கமா பின்னூட்டத்தில் பதில் சொல்வார் பாருங்க... அதுவே ஐஞ்சு ஆறு பதிவு தேறும். கொஞ்சம் சர்ச்சையான பதிவர்ல இவரும் ஒருத்தர். ஆனா, இப்போ எல்லாம் எப்பயாச்சும் தான் பதிவு போடுறார்...
நிறைய விசயம் தெரிஞ்ச ஆளு பதிவுலகத்தை கும்மி அடிச்சு சீர் அழிக்க கூடாது. ஏதாவது செய்யணும்ன்னு இவருக்கு எண்ணம் இருந்துச்சு... ஆனா நம்ம எங்க நல்லது சொன்னா கேக்கப் போறோம்..?! ஆனா, இவர்
பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் மட்டும் சொல்ல சொன்னார். அதை நீங்களே என்னன்னு போய் பாருங்க...
காதல் மன்னன், கவி மன்னன், காதல் கவிதை எழுதுற நம்ம பாலாஜி சரவணன் யாரும் மறந்து இருக்க மாட்டாங்க... ரொம்ப நல்ல பையன். எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டான்... பாருங்க.. ரொம்ப தெரிஞ்ச பையன் அதுக்காக அவன நான் வாடா போடா சொல்ற அளவுக்கு இருக்கோம்னா அப்போ பாருங்க அவன் எவ்வளவு நல்லவனா இருப்பான்னு... ஹி..ஹி ...ஹி... சாரி மச்சி... உனக்கு ரொம்ப மரியாதை கொடுத்துட்டேன்.
ஆமா நான் எவ்வளவு நாளா கேக்குறேன் யார் அந்த ப்ரியமானவள் இப்போயாவது சொல்லு....
ஆமாங்க... நம்ம சரவணன்
ப்ரியமானவளுக்கு கவிதை எழுதினாரு. அந்த பொண்ண வந்து பின்னூட்டம் இட சொன்னார். ஆனா, அந்த பொண்ணு வந்துச்சா..?! பின்னூட்டம் போட்டுச்சான்னு சொல்லாமயே போனா எப்படிங்க... நீங்களே கேளுங்க...
என்கிட்ட பேசுற எல்லோரும் கேக்குற கேள்வி. என்ன இப்போவெல்லாம் உங்க பசங்க பதிவே எழுதுறது இல்லன்னுதான்... அட யார்டா அது எங்க பசங்கன்னு கேக்குறீங்களா... டெரர் கும்மிதாங்க... என்ன யாரும் போஸ்ட் எழுதுறது இல்ல... ஒரு கும்மி இல்ல... ஒரு சண்டை இல்லன்னு கேப்பாங்க... அடப்பாவிங்களா.... சண்டை போட சொல்றீங்களே... உங்களுக்கே இது நியாயமான்னு கேப்பேன்.
இல்லையா பின்ன... டெரர் கும்மின்னாலே டெரர் தான்னு சொல்றாங்க.... இன்னுமாடா இந்த உலகம் நான் டெரர் குரூப்ன்னு நம்புதுன்னு என் மைன்ட் வாய்ஸ் வேற ஓடும்.. சரிங்க... விசயத்துக்கு வரேன். டெரர் கும்மில ஒரு போட்டி நடத்துனாங்க இல்லையா... அதுக்கு முக்கிய காரணம் இவர் தாங்க...இவர்
சினிமா புதிர் எல்லாம் போடுவார். அத கண்டுபுடிக்குறேன்னு சொல்லி ஒரு நாள் எல்லாம் செலவு பண்ணா... மறு நாள் இவர் வந்து விடை போட்டுடுவார். அதுக்கு ஏங்க நம்ம விடை சொல்லணும்..?! அதான் அவரே சொல்லிடுறாரே...?!
இப்போவெல்லாம் புதிர் போடுறதே இல்ல... இந்த பதிவுலகமே உங்க புதிர் போட்டிக்காக காத்து இருக்குங்க.
யாருப்பா அங்க... அப்படியெல்லாம் இல்லன்னு சொல்றது..?! இப்படி பொய் சொன்னாதான் அவர் பதிவு எழுதுவார்.
வாங்கன்னா வாங்க... வந்து உங்க புதிர் போட்டிய ஆரம்பியுங்க..
அட யாருப்பா அது..?! அருண் போட்டியே ஆரம்பிக்கல... அதுக்குள்ள நோட் பென்சில் எடுக்குறது...?? அட நம்ம இம்சை அரசன் பாபு-வா..?! ஆமா இப்போவெல்லாம் பல்பு வாங்குறதே இல்லையா..??
நம்ம பல்பு வாங்கினா என்ன பண்ணுவோம். வாங்குன பல்பை அப்படியே ஓடைச்சு மண்ணை போட்டு மூடிடுவோம். ஆனா... இவர் ஆபிஸ் வந்து ப்ளாக்கர் ஓபன் பண்ணி ஐ.. ஐ... ஐ.... நான் பல்பு வாங்கிட்டேன்னு சொல்லி பதிவு போடுவார். ஆனா இப்போ போடுறதே இல்லை...
ஆனா...இவருக்கு லவ் பிடிக்காதாம். ஆனா.. ஒரு காதல் கதை எழுதி இருக்கார்.
ஜைன்தவி..ஐ ..லவ் ..யூ சொல்றார். சைந்தவி இல்லீங்க... அப்படி சொன்னா வெளியூர்காரன் அருவா எடுத்திட்டு வருவார்... இவர் யாருக்கு ஐ ..லவ் ..யூ சொல்றார்ன்னு போய்ப்பாருங்க... இவர் பதிவு எல்லாம் ரொம்ப நகைச்சுவையா இருக்கும். அடிக்கடி அரசியலும் பேசுவார்... இப்போ பதிவு எழுத மாட்டேங்குறார். என்ன பிரச்னைன்னு தெரியல... முதல்ல எல்லாம் ஒரு பல்பு தான் வாங்கினார். ஆனா... இப்போ இன்னொரு பல்பு கொடுக்க ஆள் வந்து இருக்கு.... அப்போ நிறைய பல்பு வரும்ன்னு எதிர்பாக்குறீங்க... கண்டிப்பா வரும். வெயிட் பண்ணுங்க... அண்ணன் நான் சொன்னா கண்டிப்பா கேப்பாரு...
"பதிவுலக பின்னூட்ட புயல்" நம்ம சித்ரா எங்க போனாங்கன்னு தெரியுமா...? இந்தியாவுக்கு போயிட்டு வந்ததுல அவங்களுக்கு என்னமோ ஆகிப்போச்சு. அதான் பதிவே எழுதுறது இல்ல... ஆனானப்பட்ட சித்ராவே பதிவு எழுதுறது இல்ல... நாங்க என்னத்த எழுத போறோம்ன்னு நிறைய பேர் சொல்றாங்க... அதுக்காகவாவது நீங்க எழுதணும். அப்படின்னு நான் சொல்லல... மக்கள் சொல்றாங்க...
இவங்களை யாரோ
வெள்ளாவி வச்சு வெளு வெளுன்னு வெளுத்து இருக்காங்க... பதிவு எழுதுவியா எழுதுவியான்னு... அதான் எழுத மாட்றாங்க.. நீங்க பதிவு போடலைனாலும் பரவாயில்லை. வந்து கமெண்ட் போடுங்க... மக்கள் எல்லாம் ஆசைப்படுறாங்க... (மக்களுக்கு நல்லதாவே ஆசைப்பட தெரியாது போல... இது என் மைன்ட் வாய்ஸ்)
சும்மா இவங்களை எல்லாரைப் பத்தியும் காமெடியா சொன்னாலும் இவங்க எல்லோருடைய பதிவுகளும் படிக்க சுவாரசியமா இருக்கும். இவங்களைப் போல பல பேர் தங்கள் சூழ்நிலையால பதிவு எழுத முடியாம இருக்காங்க... அப்போப்போ பதிவு எழுதுங்க... எனக்கு பிடிச்சவங்களை பத்தி நான் சொல்லிட்டேன். உங்களுக்கு பிடிச்ச பதிவர்கள் எல்லாம் பதிவு எழுதாம இருப்பாங்க... அவங்ககிட்டல்லாம் நீங்க சொல்லுங்க பதிவு எழுத சொல்லி...
காணாம போன பதிவர்களை பத்தி சொல்றேன்னு சொல்லி நானே காணாம போய்டுவேன் போல.... சரிங்க... நான் இன்னைக்கு காணாம போறேன். நாளைக்கு புத்தம் புதிய பதிவர்களோட வரேன்....
அறிமுக பதிவுல வந்து வாழ்த்து சொல்லிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி...