சுயம்
➦➠ by:
அறிமுகம்,
உணவு உலகம்,
சுயம்,
வலைச்சரம்
”தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்”-எனும் வள்ளுவன் வாக்கினிற்கிணங்க, தான் கற்றதையும்,பெற்றதையும்,சக பதிவர்களும்,இணைய வாசிப்பாளர்களும் கற்றும்,பெற்றும் மகிழ்ந்திட உருவாக்கப்பட்டதே வலைச்சர ஆசிரியர் பொறுப்பு. அந்த மதிப்புமிக்க பொறுப்பு இந்த வாரம்,எனக்கு வழங்கப்பட்டுள்ளது. சீனா அய்யா மற்றும் வலைச்சர ஆசிரியர் குழுமத்திற்கு என் நன்றிகளை தெரிவித்துத் தொடர்கிறேன்.
மூன்றாண்டுகளுக்கு முன்னர்,புலியைப்பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதுபோல்,எறும்பு வலைத்தளம் மூலம் அறிமுகமாகி, எனக்கும் ஒரு வலைப்பூ துவக்கிவைத்தேன். ஆம்,அது 2009ம் ஆண்டின் இறுதிப்பகுதி. துவக்கத்தில் சமைத்து வைத்த உணவை, ருசிக்க வந்த நெஞ்சங்கள் குறைவே. சமையல் சரியாய் ருசிக்கவில்லையோ,சமைத்துவைத்த உணவின் ருசியை சரியாய் எடுத்துரைக்கவில்லையோ! வருடம் ஒன்றும் உருண்டோடியது, சகோதரி கௌசல்யா அவர்தம் மனதோடு மட்டும் வலைப்பூவில், இன்று ஒரு பதிவர்-விமரிசனம் பகுதியில் இனிமையாய் அறிமுகம் செய்து வைத்து, என் வலைப்பூவை பதிவுலக நண்பர்கள் பக்கம் எடுத்துச்சென்றார். அத்தோடு வலைச்சரத்தில் அறிமுகம் செய்துவைத்த மூத்தோர் பலர்.பழக இனிமையான பண்பாளர் ஸ்டார்ட் மியூசிக் ராம்சாமி சார்,அவர் இதயத்தில் ஓர் இடமளித்தார். ஆம்,அவர் ப்ளாக்கில்,’உணவு உலகம்’தளத்திற்கு தனியிடம் கொடுத்தார். அதனைத்தொடர்ந்து,’மனோ நாஞ்சில் மனோ’வும், மனசார அவர் தளத்தில் தனியிடம் கொடுத்தார். 17.06.11ல் நடைபெற்றநெல்லைப்பதிவர்சந்திப்பு,உணவு உலகத்தை உங்களருகே எடுத்துவந்தது. ப்ளாக்கிலிருந்து டொமைன் வாங்கியது அடுத்த கட்ட பயணம்.
என்பக்கம் குறிப்பிட்டுச்சொல்லும் பதிவுகள் இவை:
பதினொரு வயதில் பாரில் சிறந்த பட்டங்கள் பெற்ற நெல்லைச்சிறுமி பற்றிய என் தொகுப்பு-விசாலினி இந்தியாவின் விடிவெள்ளி,மும்பை பயணத்தின்போது நான் கண்ட காட்சியின் அடிப்படையில் அமைத்த பதிவு-முதுமையை மதிப்போம்- மருமகனே மகனான்,அனைவரும் ஓட்டு போட தெரிஞ்சுக்க-உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப் போடலாம் வாங்க,
மனித நேயம் கற்க- அற்றார் அழிபசி தீர்த்தல் -தமிழன் ஒரு தலைசிறந்த ஹீரோ, மனித நேயம் மறந்த நிகழ்வு-மனிதம் மரத்த மர(ரு)த்துவர்கள்,
உங்கள் நலனில் எந்தன் அக்கறை- உடல் நலக் குறிப்புகள் உங்களுக்கே!
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்- வாட்டர் கேன்களும் வாட்டும் நோய்களும்-அதிர்ச்சி தகவல்கள்.
சத்துக்கள் குறித்த முத்தான பதிவு-வியக்க வைக்கும் வேர்கடலை.
துறைசார்ந்த தகவல்கள் மட்டும் என் ஆங்கில வலைப்பூ FOOD SAFETYல் எழுதி வருகிறேன்.
உணவு உன்னதமாய் அமைந்திட,அறுசுவையும் அவசியம். ஆறில் ஒன்று குறைந்தாலோ,கூடினாலோ இன்சுவை அதிலிருக்காது.இனிப்பு,கசப்பு(கைப்பு),கார்ப்பு,உவர்ப்பு(கூர்ப்பு),துவர்ப்பு, புளிப்பு. இந்த அறுசுவைகளின் அடிப்படையிலேயே,பதிவர்களின் பல்சுவையைப்பகிரப்போகிறேன். இத்துடன், கூடுதல் ருசிக்குக் கூட்டாஞ்சோறும், கண்ணாமூச்சி ரே ரேயும் வ்ந்து உங்களை வசப்படுத்தும். நாளைக்குப் பார்ப்போமா!
|
|
சுய அறிமுகமே எம்மை ஒரு பெரிய விருந்துக்குரிய
ReplyDeleteஎதிர்பார்ப்பை ஏற்படுத்திப்போகிறது
தொடர்ந்து வருகிறோம்
தயாராகட்டும் நளபாகம்
Tha.ma 2
ReplyDeleteஅண்ணே வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் இந்த சிறியோன்..
ReplyDeleteவலைச்சரத்தில் இந்த வார ஆசிரியர் பொறுப்பேற்ற உணவுஉலகம் ஆபிசர்க்கு வாழ்த்துகள்!
ReplyDeleteமோதிர கையால் கொட்டுப்படும் ஷொட்டும் வாங்கும் நண்பர்களை எதிர்பார்ப்போம்!
சுய அறிமுகம் நல்லா இருக்கு வாழ்த்துகள்
ReplyDeleteஅடடே..எங்க ஆபீசர் சார் ஆசிரியராவும் ஆகிட்டாரே..வாழ்த்துகள் சார்!
ReplyDeleteசிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
ReplyDeleteஆபீசர் சார், அறிமுக சுயத்தில் செம கலக்கல்...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஆபீசர்.
Congratulations, Big Brother!!!! :-)))
ReplyDeleteகூடுதல் ருசிக்குக் கூட்டாஞ்சோறும், கண்ணாமூச்சி ரே ரேயும் வ்ந்து உங்களை வசப்படுத்தும்./////
ReplyDeleteவரட்டும்... வரட்டும்....
வசப்படுத்த வரவேற்கிறேன்....
கலக்குங்கள் அய்யா ..
ReplyDeleteஇன்று
ReplyDeleteவாங்க கொஞ்சம் மூளையை பயன்படுத்தலாம்
ஆரம்பமே அமர்களமாக இருக்கிறது..... வலைத்தளத்திலும் தனக்கென்று ஒரு தனியிடம் பெற்றது போல் வலைச்சரம் தொகுப்பும் தனித்தன்மையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.வாழ்க வளமுடன்.
ReplyDeleteஇந்த வார ஆசிரியர் பொறுப்பேற்ற ஆபிசர்க்கு வாழ்த்துகள்.
ReplyDeleteசுய அறிமுகமே அருமை ! தொடருங்கள் ... ஆவலுடன் காத்திருக்கிறேன் ! வாழ்த்துக்கள் ! நன்றி !
ReplyDeleteஆபீசரின் வலைச்சர வாரத்திற்கு வாழ்த்துகள்....... கலக்குங்க...!
ReplyDeleteகலக்குங்க ஆபீசர், வாழ்த்துக்கள்
ReplyDeleteஇலைய போட்டாச்சு. நாளைல இருந்து வித விதமா அறிமுகங்கள் கிடைக்கும்..
ReplyDeleteஅறிமுகம் அருமை!
ReplyDeleteவாழ்த்துக்கள்...ஆபிசர்...
ReplyDeleteஉங்களுக்காகவும்....
நம் அனைவருக்காகவும்...
இந்த லிங்க்-ஐ சமர்ப்பிக்கிறேன்....
http://www.youtube.com/watch?v=AR0Tapw-mdc
பழைய நினைவுகளையும், உங்கள் ஆக்கப்பூர்வமான பதிவுகளையும் மறுபடியும் படிக்கும் போது புத்துணர்வு பெறுகிறேன் ஆபீசர்....!
ReplyDeleteம்ம்ம் ஒருவாரம் இனி நட்சத்திர கொண்டாட்டம்தான் ஹா ஹா ஹா ஹா வாழ்த்துகள் வாழ்த்துகள் ஆபீசர்...!
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்! பல்சுவை விருந்துக்கு காத்திருக்கிறேன்! நன்றி!
ReplyDeleteவலைச்சரம் + உணவு உலகம் கூட்டணி! இன்னும் ஒரு வாரத்திற்கு மறக்க முடியாத விருந்துதான் தினமும்! வாழ்த்துகள்! :-)
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பொறுப்பிற்கு வாழ்த்துக்கள் சித்தப்பா சார்...
ReplyDeletewishes sir
ReplyDeleteவாழ்த்துகள் சங்கரலிங்கம் சார்.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்!..........
ReplyDelete/// துவக்கத்தில் சமைத்து வைத்த உணவை, ருசிக்க வந்த நெஞ்சங்கள் குறைவே. சமையல் சரியாய் ருசிக்கவில்லையோ,சமைத்துவைத்த உணவின் ருசியை சரியாய் எடுத்துரைக்கவில்லையோ! வருடம் ஒன்றும் உருண்டோடியது,////
ReplyDeleteஆயினும் தடைகளை கடந்து தற்போது தாங்கள் ஆற்றும் பணி அளப்பறியது ஆபீஸர் சார்.இந்தியாவின் விடிவெள்ளியை உலகறியச் செய்த பெருமை உங்களையே சாரும்
இந்த வார ஆசிரியர் பொறுப்பேற்ற சகோதரருக்கு நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
This comment has been removed by the author.
ReplyDeleteஅன்பின் சங்கர லிங்கம் - சுய அறிமுகம் அருமை. அனால் ஒரு சிறு பிரச்னை. தங்களின் பதிவுகளுக்குக் கொடுத்துள்ள சுட்டிகள் வேலை செய்ய வில்ல்லை. என்ன பிரசனை என்று பார்த்து சரி செய்யவும். unavuulagam.blogspot.in என இருக்க வேண்டுமா ? பார்
ReplyDeleteக்கவும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.
வாழ்த்துக்கள் சார்......
ReplyDelete