07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 29, 2012

விடைபெறுகிறேன்...





எப்படியோ ஒரு வாரம்ஓடிடுச்சு இரண்டாம் முறை வலைச்சரம் எழுத வாய்ப்பு கொடுத்த சீனா அய்யாவிற்கு நன்றி. நீண்டநாட்களுக்கு பிறகு இந்த வாரம் தான் அதிக பதிவுகள் படித்தேன், நிறைய எழுதி எழுதி அழித்து கொண்டிருந்தேன்... 

படிக்கும் வாய்ப்பும் எழுதும் வாய்ப்பும் வலைச்சரத்தாலே மீண்டும் வந்தது..  அறிமுக பதிவில் கூறியிருந்தேன் கழுகு பற்றி பின்னொரு பதிவில் பார்ப்போமேன்று இதோ இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.. 

கழுகு தளத்தை நாணும் தேவா அவர்களுக்கும் சேர்ந்து ஆரம்பித்தோம் இப்போது நிறைய குழும தோழர்கள் எங்களுடன் கை கைகோர்த்துள்ளார்கள் அவர்களின் உதவியோடு கழுகு தளத்தை சிறப்பாக கொண்டு செல்கிறோம்...  கழுகு தளத்தை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் நிறைவடையபோகிறது ... கழுகு பறக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது...

கழுகின் பதிவுகளை பற்றி இப்போது பார்ப்போம்... 

சமூகத்தை குற்றம் சொல்பவர்களே....நீங்கள் மாறியிருக்கிறீர்களா..?  சமூக நல்நோக்கு என்பது தனிமனித விருப்பம். தனிமனித விழிப்புணர்வு. உணவினை காலமெல்லாம் தட்டில் இட்டு விட்டு அதை உதவி என்று உலகில் உள்ளோர் அறியச் செய்து என்னோடு இருக்கும் சக மனிதனை பிச்சைக்காரனாக்கி வைப்பதுதான் சமூக நல் நோக்கா?



இணைய தமிழ் உறவுகளே.. ஞானாலயாவுக்கு கை கொடுங்கள்....! எத்தனையோ பதிவர் குழுமங்கள் இந்த பதிவுலகில் பரவிக் கிடக்கின்றன, சமூக சேவை செய்யும் அமைப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன, தனித்தனி கட்சிகளைச் சார்ந்த அரசியல் விற்பன்னர்கள் தங்கள் கட்சிகளை வரிந்து கட்டி முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர், வலைத்தளங்களிலும், பேஸ்புக் போன்ற சமூக தொடர்பு தளங்களிலும் நல்லவர்கள் கூடி நாட்டுக்கு நன்மை செய்ய மல்லுகட்டிக் கொண்டிருக்கின்றனர்....,



பேஸ்புக் மற்றும் வலைப்பூக்களில் நடக்கும் அத்துமீறல்கள்...! இந்நேரம் கழுகு போன்ற சமூக விழிப்புணர்வு தளங்கள் யாரேனும் பெண்களால் நடத்தபெற்று இருக்குமெனில் எத்தனை சமூக நல கொம்புகள் சேவை செய்ய வந்திருக்குமென்று நாம் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியது இல்லை. 



சமூகத்தை குற்றம் சொல்பவர்களே....நீங்கள் மாறியிருக்கிறீர்களா..? சினிமாவில் கதாநாயகனாய் நடித்து அதை மக்கள் ஏற்றுக் கொள்ள ஏதேதோ அளவுகோல்கள் காலங்கள் தோறும் இருந்திருக்கின்றன. பெண்களைப் போலவே முகவெட்டும் செக்கச் செவலென்ற தேகமும், முதிர்ந்த சிவப்போடு கூடிய உதடுகளும், மைதா மாவினை பிசைந்து நிரவி விட்டது போல உடல் வாகும், இருந்து விட்டால் போதும்... கூடவே தனது நீணட் கூந்தலை சிக்கலெடுத்துக் கொண்டே கதாநாயகியோடு போதுமான இடைவெளிவிட்டு தனது சொந்தக் குரலில் கர்நாடக சங்கீதத்தில் பிச்சு உதறினால்...


ஆழமான எண்ணங்களும், தீராத வேட்கைகளும் கருத்து வடிவத்தில் இருந்து வெளிப்பட்டு எழுத்தாகிறது, வாய்ப்புக்களின் அடிப்படையில் பேச்சாகவும் அது உருக்கொள்கிறது. சக்தி வடிவமான எழுத்துக்களால் என்ன செய்து விட முடியும் என்ற எண்ணத்தை வரலாறு எப்போதும் தகர்த்தெறிந்து கொண்டே தனது நகர்வினை ஆக்கப்பூர்வமான விளைவுகளாய் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. கழுகு என்னும் போர்வாள்....!



கழுகின் பதிவுகளை வாசித்து கொண்டிருங்கள் எப்போதும்...

ஒரு வாரம் முழுவதும் எனது பதிவிற்கு ஆதரவு கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி கருத்துரையிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...   எனது பணியை சிறப்பாக செய்தேனென்று   நம்புகிறேன் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள் நான் சின்ன பையன்... ஹி ஹி ஹி   அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி...  


6 comments:

  1. கழுகு நான் விரும்பி சென்று பார்க்கும் தளங்களில் ஒன்று .... உங்களை உங்கள் தளத்தில் வந்து சந்திக்கிறேன் சார் .. சிறப்பான பணி செய்தமைக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்

    ReplyDelete
  2. உங்களின் குழுமத்திற்கு சென்று பதிவுகளை படித்து விட்டு வந்தேன். மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    வலைச்சர ஆசிரியர் பொறுப்பை இனிதே முடித்தமைக்கு பாராட்டுக்கள்.

    நன்றி.
    (த.ம. 2)

    ReplyDelete
  3. வலைச்சர ஆசிரியர் பொறுப்பை இனிதே முடித்தமைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. இனிமையான வலைச்சர பணி!

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்! கழுகு தளம்சென்று படித்து விட்டு கருத்திடுகிறேன்!

    ReplyDelete
  6. வாழ்த்துகள் சௌந்தர்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது