07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 22, 2012

பேசும் புகைப்படங்கள்

எனக்கு மூன்று விஷயங்கள் அலுக்கவே அலுக்காது. ஒன்று வீடியோ எடிட்டிங், இரண்டு ராஜா பாடல்கள், மூன்றாவது புகைப்படங்கள். இதில் மூன்றாவதை பற்றி எழுதும் தளங்களை இன்று பார்ப்போம்.

ஆயிரம் வார்த்தைகள் பேச வேண்டிய இடத்தில் ஒரே ஒரு புகைப்படம் அவற்றை பேசிவிடும். 



நிறைய தளங்கள் இருந்தாலும் நான் அடிக்கடி ரசிக்கும் மூன்றை மட்டும் இங்கே பகிர்கிறேன்.





PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை 







சின்ன கேமரா... பெரிய்ய்ய்ய படம். என்ற ஒரு பதிவில் ஆரம்பிக்கிறேன், அருமையான புகைப்படங்களை இந்த தளத்தில் காணலாம். ஒவ்வொன்றும் கொள்ளை அழகு. மாதா மாதம் குறிப்பிட்ட தலைப்பில் புகைப்பட போட்டியும் நடைபெறும்



Renys Click 






ரெனால்ட் ஆல்வின் அவர்களின் வலைப்பூ. வலையுலகிற்கு புதியவர்.என் மூன்றாவது கண்ணின் பார்வை என்று இவர் எடுக்கும் படங்கள் அனைத்தும் ரசிக்கும் வகை. EmotionsBangalore Roads , Madiwala Lake போன்றவை அதற்கு சாட்சி.  அடிக்கடி முகப்புத்தகத்தில் என்னுடைய புகைப்படங்கள் அழகாக இவர் தான் காரணம். 


Jayaraj Photography







ஜெயராஜ் பாண்டியன் அவர்களின் பக்கம் இது. முகப்புத்தகத்தில் மட்டும் தன் படங்களை பகிர்கிறார் இவர். சும்மா என்று பகிரும் படங்களை சும்மா.. பாத்துகிட்டே இருக்கலாம். Reflections ஆல்பத்தில் அனைத்தும் அசத்தல். 




இன்றுடன் என் பணி முடிவடைகிறது. இரண்டாவது முறையாக வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று என்னால் முடிந்த வரை நிறைய பதிவர்களையும், அவர்களின் அருமையான பதிவுகளையும் அடையாளம் காட்டி உள்ளேன் என்று நினைக்கிறேன். 

சீனா ஐயா இந்த முறை பொறுப்பேற்க சொன்ன போது போன முறை அறிமுகம் தலைப்புகள் எதையும் திரும்ப பயன்படுத்தக் கூடாது என்று நினைத்தேன், அதே போல புதியதாக ஆறு வகையான தலைப்புகளில் பதிவர்களை அறிமுகம் செய்து விட்டேன். என் பதிவுகளை வலைச்சரத்தில் படிக்க - பிரபு கிருஷ்ணா

அநேகமாக இது எனக்கு அரியர்ஸ் என்று நினைக்கிறேன். சென்ற முறை சரியாக எழுதாததால் இரண்டாம் முறை வாய்ப்பு. இரண்டாம் முறை நல்ல படியாகவே செய்துள்ளேன் என்று நினைக்கிறேன். 

தொடர்ந்து இணைப்பில் இருப்போம் கற்போம் தளத்திலும், பலேபிரபு ப்ளாக் மூலமும். 

படித்து பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. 

9 comments:

  1. பிரபு ஏற்றுக்கொண்ட பணியை மிகவும் சிறப்பாக நிறை வேர்றி இருக்கீங்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. புகைப் படக் கலவை பற்றியும் கலை பற்றியும் நீங்கள் செய்த அறிமுகம் சூப்பர். சென்று பார்த்து கற்றுக் கொள்கிறேன்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் நண்பா! சிறப்பான வலைச்சர பணி!

    வித்தியாசமாக சிந்தித்து சில புதிய விசயங்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  4. முதல் தளம் ஏற்கனவே தெரியும். Renys Click தளத்தை சகோதரர் ஒருவர் சமீபத்தில் அறிமுகம் செய்தார். புகைப்படங்கள் அருமை.

    வித்தியாசமான தலைப்புகளில் அனைத்து அறிமுகங்களும் அருமை. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் நிறைவாக இருந்தது சகோ.!

    ReplyDelete
  5. இந்த முறை செம கலக்கல்....

    மீண்டும் வரவும்...

    வரவேற்க காத்திருக்கிறோம்...

    ReplyDelete
  6. நல்ல அறிமுகங்கள்... இனிதே முடித்தீர்கள்... வாழ்த்துக்கள். நன்றி ..

    (த.ம. 1)

    ReplyDelete
  7. நல்ல பல தளங்களை சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. அனைத்தையும் படிக்க நேரம் அமையவில்லை என்றாலும், மிக நன்றாக இருந்தன உங்கள் அறிமுகங்கள்! நன்றி நண்பரே!

    ReplyDelete