07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, July 14, 2012

மிரட்டும்.. பெண் வேங்கைகள்..!


அனைவருக்கும் வணக்கம்., தொடர்ச்சியாக என்னை வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு எனது நேற்றைய இடுகையை வாசித்த உடனேயே தெரிந்திருக்கும்.., அது ஏதோ அவசரகதியில் எழுதப்பட்ட இடுகை என்று.! உண்மைதான்.! நண்பர் ஒருவர் “வெள்ளி-இரவு” தாய் மண்ணிற்காக பயண புறப்பாட்டில் இருந்ததால் அவருக்கான சில பொருட்களை வாங்குவதில் அவருடன் எனது நேரத்தை செலவிட வேண்டிய கட்டாயம் இருந்தது. இதன் காரணமாகவே நேற்றைய பதிவிற்கான நண்பர்களின் மறுமொழிகளுக்கு கூட உடனே நன்றி தெரிவிக்க இயலாமல் போனது! இதற்க்காக எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்ளவே இந்த முன்னுரை.! வாக்குரிமையை பயன்படுத்தி நேற்றைய பதிவை பரிந்துரை செய்த அனைத்து நண்பர்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்..! இனி இன்றைய பதிவிற்கு செல்வோம் வாருங்கள்.!

தொழில்நுட்ப வரலாற்றில் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளுள் ஒன்றாக கருதப்படுவதுதான் குளிர்சாதன பெட்டி (Refrigerator)! இது பேச்சு வழக்கில் ஃபிரிட்ஜ் (Fridge) என்று அழைக்கப்படுகிறது. ஃபிரிட்ஜ் என்றதுமே அது தண்ணீர், குளிர்பானங்கள் போன்ற வகையறாக்களை குளிர்விக்கவும் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் மற்றும் மீன் கோழி மட்டன் போன்ற இறைச்சிகளை மொத்தமாக குறைந்த விலையில் வாங்கி அவற்றை கெட்டுப்போகாமல் வைத்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு பெட்டி என்பதுதான் தான் ஞாபகத்திற்கு வரும் இல்லையா நண்பர்களே.? உண்மையில் இந்த காரணங்களுக்காக ஃபிரிட்ஜ் கண்டுபிடிக்கப்படவில்லை.!

விளைச்சல் நேரங்களில் அதிகமாக கிடைக்கும் உணவுப்பொருட்கள் வெயில் காலங்களில் அழுகி கெட்டுப்போகாமல் வைத்து பாதுகாத்து விளைச்சல் இல்லாத நேரங்களில் அவற்றை பயன்படுத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் குளிர்சாதன பெட்டி. நாளடைவில் உயிர்காக்கும் மருந்துகளை., பதப்படுத்தி வைத்து பயன்படுத்தவும் உபயோகிக்கப்பட்டது. தற்போது மூன்று நாளைக்கு தேவையான சாப்பாட்டை ஒரே நாளில் சமைத்து.., அவற்றை கெட்டுபோகாமல் வைத்து பயன்படுத்த இன்றைய நவீன இல்லத்தரசிகளால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது! ஃப்ரிஜ்ஜில் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் எப்படி கெட்டுப்போகாமல் இருக்கிறது என்பதை பற்றி பார்ப்பதற்கு முன்பு முதலில் உணவுப்பொருட்கள் எப்படி கெட்டுப்போகிறது என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள்.!

உணவுப்பொருட்களில் இயல்பாகவே இருக்கும் பாக்டீரியாக்கள் வெளிப்புறத்தில் உள்ள இயல்பான வெப்பநிலையில் அந்த உணவுப் பொருளில் உள்ள நீர்ச்சத்தின் உதவியுடன் பல்கி பெருகி அந்த உணவுப் பொருளை அழுக வைத்து விடுகின்றன இதைத்தான் நாம் உணவுப்பொருள் கெட்டுப்போய்விட்டது என்கிறோம்.! அவை ஃபிரிட்ஜ்ஜில் வைக்கப்படும் போது கெட்டுப்போகாமல் இருப்பதற்கு காரணம் ஃபிரிட்ஜ்ஜில் உள்ள இயந்திரங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் ரெப்ரி ஜெரன்ட் (refrigerant) என்ற வாயுதான். இந்த வாயு கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையில் அதிக அளவு ஆவியாகி ஃபிரிட்ஜ்ஜிக்குள் உறைபனி போன்ற குளிரை உற்பத்தி செய்கிறது.  இந்த குளிர்ச்சி உணவுப்பொருளில் உள்ள பாக்டீரியாக்கள் பல்கி பெருகும் நிகழ்வை தடுத்துவிடுவதால் உள்ளே வைக்கப்படும் உணவுப்பொருள் கெட்டுப்போவதில்லை.!

இன்று வீடுகளில் உபயோகப்படுத்தும் ஃபிரிட்ஜ்கள் பொதுவாக இரண்டு அடுக்கு கொண்டது. ஒன்று ரெப்ரிஜிரேட்டர் (Refrigerator) மற்றொன்று ப்ரீசர் (Freezer). இரண்டுமே வெவ்வேறு வெப்பநிலைகளை கொண்டது. இதில் ரெப்ரிஜிரேட்டர் நீரின் உறைநிலைக்கு மேலேயுள்ள (3 to 5°C) வெப்பநிலையை கொண்டது.! நீரின் உறைநிலைக்கு கீழேயுள்ள (0 to -18 °C) வெப்பநிலையை கொண்டது தான் ப்ரீசர். ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்ட ஃபிரிட்ஜ்களில் நீற்றற்ற அமோனியா (anhydrous Ammonia) வாயு தான் குளிரை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்டது. இது விஷத்தன்மை கொண்டதாக இருந்ததால் பின்பு சல்பர் டை ஆக்சைடு (Sulfur dioxide) பயன்படுத்தப்பட்டது. இதுவும் பாதுகாப்பற்றதாக கருதப்பட்டதால் பின்பு CFC-12 எனப்படும் டை குளோரோ டை புளூரோ மீத்தேன் (Di-chloro-di-fluoro-methane) என்ற வாயு பயன்படுத்தப்பட்டது.!

டை குளோரோ டை புளூரோ மீத்தேன் மனிதர்களுக்கு தீங்கிழைக்கவில்லை என்றாலும் ஓசோன் படலத்தை (Ozone Layer) வெகுவாக பாதிக்ககே கூடியதாக இருந்தது. அதை தொடர்ந்து உலகமெங்கும் 1994 ஆம் ஆண்டு CFC-ஐ உற்பத்தி செய்யும் ஃபிரிட்ஜ்கள் தயாரிக்க தடை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து CFC இல்லாத ரெப்ரி ஜெரன்ட்டுகள் கொண்ட ஃபிரிட்ஜ்கள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தன. இப்போது வரை இந்த வகை ஃபிரிட்ஜ்கள் தான் பயன்பாட்டில் உள்ளன! சரி இனி தலைப்பிற்கு செல்வோம் வாருங்கள்..!

ஒரு வீட்டில் எத்தனை ஆண்கள் இருந்தாலும் அந்த வீட்டில் பெண் இல்லையென்றால்., அந்த வீடு வீட்டிற்க்கு உண்டான முழுமையை பெறுவதில்லை. வீட்டை கெளரவித்துக்கொண்டிருந்த கொண்டிருந்த பெண்கள் பதிவுலகத்தையும் கெளரவிக்க வந்தது., நிச்சயம் வரவேற்புக்குரியது என்று தான் சொல்ல வேண்டும்.! அதிலும் சில பெண் சகோதரிகள்..., கதை, கவிதை, கட்டுரை என்று பன்முகங்களிலும் ஜொலித்துக் கொண்டிருப்பது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.!

அறிமுகம்-13; வலைத்தளம்: http://rajiyinkanavugal.blogspot.com/
பதிவர்: சகோ. ராஜி!

கதை, கவிதை, நகைச்சுவை பதிவு என்று பன்முகங்களிலும் ஜொலித்துக் கொண்டிருக்கும் பதிவர் சகோ ராஜி. இவரது ஏனைய இடுகைகளை காட்டிலும் இருவர் பேசுவது போல் அமைக்கும் உரையாடல் வகை இடுகைகள் என்னை மிகவும் கவர்ந்தவை.! அவற்றில் நான்கு இடுகைகளை இங்கே இணைத்துள்ளேன் படித்துப்பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்.! படித்தால் மட்டும் போதுமா? மோனாலிசா புன்னகையின் மர்மம்? முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்! யார் பெறுவார் இந்த அரியாசனம்?

அறிமுகம்-14; வலைத்தளம்: http://thmalathi.blogspot.com/
பதிவர்: சகோ. மாலதி!

காதல், சமூகம் சார்ந்த தனது எண்ணங்களை கவிதையாக வடித்து வருபவர் சகோ மாலதி.! இவரது காதல் கவிதைகளில் காதல் பெருக்கெடுத்து ஓடும் அதேவேளை சமூகம் சார்ந்த கவிதைகளில் கோபக்கனல் சுட்டெரிக்கும்! இவரது இடுகைகளில் எண்ணை கவர்ந்த சில இடுகைகளை இங்கே இணைத்துள்ளேன் வாசித்து பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்! ஆனந்த காதலில் மூழ்கி திளைக்கிறேன்! மறக்க இயலாத மே18 நானுன் ஒருத்தி என்பதாலா அன்பனே! மானங்க்கெட்ட உலகத்தீரே

அறிமுகம்-15; வலைத்தளம்: http://veesuthendral.blogspot.com/
பதிவர் சகோ. தென்றல்!

சினிமா பாடலுக்கான கவிதை எழுதும் எல்லா தகுதியும் கொண்டவர் சகோ தென்றல் சசிகலா! சினிமாப் பாடல் பாணியிலேயே எழுதும் கவிதையாக இருந்தாலும், உரைநடை கவிதையாக இருந்தாலும் சரி அனைத்தும் ரசிப்புக்குரியவை! கவிதை பிரியர்கள் தவறாது இணைந்திருக்க வேண்டிய தளம்.! இவரது அனைத்து கவிதைகளுமே ரசித்து மகிழவேண்டியவை இருப்பினும் இவரது கடைசி நான்கு படைப்புகளை இங்கே பகிர்கிறேன் வாசித்து மகிழுங்கள்! பேச்சில்பெண்ணுரிமை! எங்கும் தமிழ்! பூப் பூவாய்பூத்திருக்கு! சிறைக்கு வெளியே!

வலைச்சரத்தில் நாளை ஆசிரியராய் என் இறுதிநாள்! இதுவரை, தொடர்ந்து எனக்கு ஆதரவளித்துக்கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்., நாளையும் சந்திப்போம்., நன்றி வணக்கம்.!

17 comments:

  1. மிரட்டும்.. பெண் வேங்கைகள்..!

    தொகுப்புகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. ஃபிரிட்ஜ்ஜைப் பற்றி நல்லதொரு தகவல்...
    மூன்று அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...
    (TM 1)

    ReplyDelete
  3. மூவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  4. அன்புச் சகோதரிகளோடு தென்றலையும் இணைத்துச் சொன்னது அழகு தங்களுக்கு எனது நன்றி .
    சகோதாிகளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அறிமுகம் ஆன மூன்று பேருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. @ இராஜராஜேஸ்வரி

    மிக்க நன்றி சகோ., வருகைக்கும் கருத்துக்கும்!

    @ திண்டுக்கல் தனபாலன்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

    @ மோகன் குமார்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. @ Sasi Kala

    வருகை தந்து கருத்தளித்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி சகோ!

    @ வெங்கட் நாகராஜ்

    வாங்க வெங்கட் ஜீ, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  8. குளுமையான விஷயத்தைப் பற்றிய அற்புதமான விளக்கத்துடன் அருமையான பெண் வேங்கைகளின் அறிமுகங்கள். மூவரும் முத்தானவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. @ பால கணேஷ்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. அறிமுகப் படுத்தப்பட்டுள்ள மூன்று பதிவர்களுக்கும், அவர்களை அறிமுகப்படுத்திய உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. அறிமுக பதிவர்களிற்கு நல்வாழ்த்து. நேரமிருக்கும் பேர்து இந்தப் பெண்ணின் வலையையும் பார்க்கவும். எப்போதும் நல்வரவு. வரலாறிற்கும் நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. Congrats to the three...I know it is hard to choose only a handful...congrats to all the mothers and young ones , who blog amidst all their other responsibilities ,Tamil society expects them not to share...

    ReplyDelete
  13. @ வே.நடனசபாபதி

    மிக்க நன்றி ஐயா..வருகைக்கும் கருத்துக்கும்!

    @ kovaikkavi

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ., நிச்சயம் ஓய்வு நேரத்தில் வருகை புரிந்து கருத்துரைப்பேன் :)

    @ ரெவெரி

    உங்ககிட்ட உண்டான கெட்ட பழக்கமே இதுதான் அப்பப்ப இப்பிடி சுத்தமான இங்க்லீஷ்ல பேசி..., எனக்கு தெரிஞ்ச அரைகுறை இங்க்லீஷையும் மறக்க வச்சிருவீங்க ஹி ஹி ஹி ஹி

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)

    ReplyDelete
  14. sako!

    maalathi enakku puthithu!

    pinthodarkiren

    ReplyDelete
  15. @ Seeni

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.!

    ReplyDelete
  16. ஹா..ஹா..ஹா..ஹா....Fabuloso...Muchas Gracias seneor..
    Hasta la vista....:)

    ReplyDelete
  17. >>>
    ரெவெரி said...
    ஹா..ஹா..ஹா..ஹா....Fabuloso...Muchas Gracias seneor..
    Hasta la vista....:)
    >>>

    Fabulous ... Thank you sir ..
    Bye-என்று ஸ்பானிய மொழியில் என்னை மிரட்ட பார்த்திருக்கிறீர்கள் என்று கூகிள் ஆண்டவர் கூறுகிறார் ஹி ஹி ஹி!

    ReplyDelete