07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 18, 2012

கதை கதையாம், காரணமாம்




கதை, இந்த வார்த்தை தான் எத்தனை சுகமானது. நம் வாழ்க்கையே கதைகளால் சூழப்பட்டுள்ளது. சிறிய வயதில் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா என நம் சொந்தங்கள் முழுவதும் கதை சொல்லியே நம்மை வளர்த்தார்கள். இணையத்தில் வந்த பிறகும் நமக்கு அப்படிப்பட்ட கதை சொல்லிகள் கிடைக்கிறார்கள், அவர்களில் சிலரை பற்றி பார்ப்போம். 



செல்வா கதைகள்



அண்ணன் நேற்றைய பதிவில் வந்திருக்க வேண்டியவர். ஆனால் இவரது கதைகள் இப்படியும் யோசிக்க முடியுமா என்கிற ரகம். லிட்டருக்கு 512 கி.மீ என்ற கதையை படித்தால் சிரிப்பு அதிக மைலேஜ் தரும், குழியைத் தூக்கி கிணற்றுக்குள் வீசிய செல்வா! புத்திசாலித் தனமான கதை. 




Veera



இரண்டு கதைகள் இவரது வலைப்பூவில் உள்ளன. செவ்வந்தி என்ற கதை மனதை பிசைகிறது இன்னும், வாடை சிறுகதை குடிக்காத குடிகாரர்களின் நிலையை சொல்கிறது.





அகல் விளக்கு



காற்றை நேசிப்பவன் என்று சொல்லி கதை எழுதும் இவரின் யாக்கை  , வெயிற்காலம்... என்ற இரண்டு கதைகளையும் நான் படித்துள்ளேன். இரண்டுமே அருமை. இனி தான் மற்ற கதைகளையும்  படிக்க வேண்டும். 




சிந்தனை சிறகுகள்



பதிவுலகத்துக்கு புதியவரான இவர் இதுவரை ஒரு கதை மட்டும் எழுதி [மொழிபெயர்த்து உள்ளார்]  காதலும் காலமும்! .... மொழி பெயர்க்கப் பட்ட கதை! என்ற அது ரசிக்கும் படி உள்ளது. அடுத்து சலனம் என்ற தொடர்கதையை எழுத துவங்கி உள்ளார்.




அழியாச் சுடர்கள்



உங்களுக்கு விருப்பமான எழுத்தாளரின் கதைகளை படிக்க வேண்டுமா? அழியாச் சுடர் தான் அதற்கு சரியான இடம். இங்கே சென்று உங்களுக்கு பிடித்த எழுத்தாளரின் கதைகளை படியுங்கள். அத்தோடு நிறைய பேட்டிகள், கட்டுரைகளும் கிடைக்கும். 




மீண்டும் நாளை சந்திப்போம்.

15 comments:

  1. நல்ல அறி முகங்கள். அனை வருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. கதைகளின் தொகுப்பு அருமை...

    தம்பி செல்வா கதைகளை சமீப காலங்களில் படிக்கமுடியாமல் இருக்கிறது..

    செல்வா மீண்டும் எழுதினால் நன்றாக இருக்கும்....

    ReplyDelete
  3. சிந்தனைச் சிறகுகள் சமீபத்தில் நான் விரும்பிப் படித்துவரும் தளங்களில் ஒன்று. அழியாச் சுடர்களை நான் முன்பே அறிவேன். மற்றவர்களைப் படித்துப் பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  4. நல்லதொரு அறிமுகங்கள் நண்பா... வாழ்த்துக்கள் இவ்வார ஆசிரியருக்கு

    ReplyDelete
  5. கதை அறிமுகங்களிற்கும் தங்களிற்கும் இனிய நல்வாழ்த்து. கதைகள் வாசிக்க நான் கொஞ்சம் கள்ளம்....Pirabu.....
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  6. முதல் நான்கு அறிமுகங்களும் புதியவை...
    அனைத்தையும் படித்து விட்டு வந்தேன்...
    அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம. 4)

    ReplyDelete
  7. மிக அருமையான அறிமுகங்கள்! நன்றி! :)

    ReplyDelete
  8. செல்வாவின் கதைகள் நன்றாக இருக்கும். அறிமுகங்களுக்கு நன்றி சகோ.!

    ReplyDelete
  9. அனைத்துமே நல்ல அறிமுகங்கள்தான்.. குறிப்பாக சிந்தனைச் சிறகுகள் வலைத்தளம்.. இத்தளத்தைப் பற்றிய ஒரு சிறப்பு பதிவு நாளை நமது தங்கம் பழனி வலைத்தில் இடம்பெறுகிறது..

    அனைவரும் வருக என அழைக்கிறேன்...!

    ReplyDelete
  10. சிந்தனைச் சிறகுகள் வலைப்பூவை அறிமுகப் படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றிகள்......

    நாளை சிந்தனைச் சிறகுகள் பற்றி சிறப்புப் பதிவு அளிக்க இருக்கும் தங்கம் பழனி சாருக்கு மிக்க மிக்க மிக்க நன்றி!

    இங்கே எமக்குக் கிடைத்துள்ள அறிமுகம் பற்றி திண்டுக்கள் தணபாலன் சார் சொல்லித்தான் எனக்குத் தெரிந்தது.... அவருக்கு எங்களுடைய நன்றிகள்!...

    ப்ரபு க்ரிஷ்ணா அவர்களுக்கும் எங்களது நன்றிகள்!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் நண்பா புதிய அறிமுகங்கள்

    ReplyDelete
  12. அழியாச் சுடர்கள் தவிர மற்றவை எனக்குப் புதிய வலைப்பூக்கள்... படிக்கிறேன்.

    அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    புதிய அறிமுகங்கள் எல்லோரையும் படிக்க ஆவல்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது