07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 16, 2012

பிரபு கிருஷ்ணா வெர்ஷன் - 2.0
ஹாய் ஹாய் ஹாய், 

 எல்லாருக்கும் வணக்கம். என்னைப் பற்றி சீனா ஐயா நேற்றே சொல்லி விட்டார். அதனால் நேரடியாக என் வலைப்பூ பற்றிய தகவல்களுக்கு வந்து விடுகிறேன். இல்லை நான் கண்டிப்பாக என்னைப் பற்றி சொல்லியே ஆகணும் கேக்கறவங்க இவன்தான் பலே பிரபு ன்னு ஏற்கனவே நான் வலைச்சரத்தில் எழுதி இருப்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இப்போது இது எனக்கு வெர்ஷன்-2.  

அடுத்து என் வலைப்பூ, பலே பிரபு  என்ற தளத்தில் என் எண்ணங்களை அவ்வப்போது தெளித்து வருகிறேன்.

அதில் என் மனதை கவர்ந்த படங்களைப் பற்றிய என் பார்வையையும் பதிவு செய்து வருகிறேன், வெங்காயம், உச்சிதனை முகர்ந்தால் - பிழைக்கத் தெரியாதவர்களின் சினிமாதோனி - நான் படித்த படம், மற்றும் வழக்கு எண் 18/9 விமர்சனம் போன்றவை நான் எழுதிய விமர்சனங்கள். 

சினிமா குறித்து நான் எழுதிய மற்ற சில பதிவுகள் நண்பன் திரைப்படம் சில தொழில்நுட்ப தவறுகள், மற்றும் நான் ஏன் விஜய் ரசிகன்?

என் வலைப்பூக்களில் கொஞ்சமாக கவிதைகளையும் காண இயலும். ஈகரை கவிதைப் போட்டி -5 இல் நான் எழுதிய பழுது படாத பாசம் என்ற கவிதை இரண்டாம் பரிசை பெற்றுள்ளது. ஆனால் பரிசு கிடைக்காத ஈழம் பாடாத இதயம் என்ற கவிதை என்னைப் பொறுத்தமட்டில் சிறந்ததாய் நினைக்கிறேன். 

என்னுடைய [எங்களுடைய] அடுத்த வலைப்பூ கற்போம். இதை கடந்த ஆண்டு டிசம்பர் தொடங்கினோம். இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கற்போம் என்ற இணையத்தின் முதல் தொழில்நுட்ப மாத இதழை இலவசமாக வெளியிடுகிறோம். இதுவரை வந்த கற்போம் இதழ்களை தரவிறக்க இங்கே செல்லவும்.  

இதில் நண்பர் சூர்ய பிரகாஷ் என்னுடன் பங்காற்றும் இன்னொரு நிர்வாகி. 

நிறைய பதிவுகளை பரிந்துரைக்க முடியாது என்பதால் 

என்ற மூன்றையும் பரிந்துரைக்கிறேன். 

பதிவர்களுக்கு நான் எழுதிய மிக முக்கியமான பதிவு பதிவர்கள் செய்யும் பத்து தவறுகள்

ஆன்ட்ராய்ட் அலைபேசி பயனர்கள் ஆன்ட்ராய்ட் கற்போம் என்ற தளத்தில் நான் பயன்படுத்தும் பயன்பாடுகள் பற்றி எழுதி வருகிறேன். இதில் முக்கியமான பயன்பாடுகளாக நான் கருதுபவை. 

இனி அடுத்து வரும் ஐந்து நாட்களிலும் என்னால் முடிந்த அளவு புதிய பதிவர்களை அறிமுகம் செய்து வைக்கிறேன் நண்பர்களே.

கற்போம் தளத்தில் இன்று 

சட்டரீதியாக இலவச ஆங்கில மின்புத்தகங்கள் டவுன்லோட் செய்ய

28 comments:

 1. அனைத்து பதிவுகளும் முத்துக்கள்... வாழ்த்துக்கள்...

  தொடருங்கள்... பகிர்வுக்கு நன்றி... (த.ம. 1)

  ReplyDelete
 2. அறிமுகம் அருமை.., தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள் நண்பா :)

  ReplyDelete
 3. வாழ்த்துகள் பிரபு.,

  வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பை இரண்டாம் முறை ஏற்றதற்கு...:))

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் நண்பரே! இப்போதெல்லாம் 2.0 என்றாலே உதறலெடுக்கிறது! :D

  ReplyDelete
 5. சகோதரா நல்வாழ்த்து ஆசிரியப் பதவிக்கு. பதிவர்கள் செய்யும் 10 தவறுகளை நான் எனது முகநூலிலும் மறு பிரசுரம் செய்தேன். எனக்கு இப்போது ரிஷபன்,கோவி, கோமதி அரசு போன்றோரின் வலைகளிற்குச் செல்ல முடியாது அவர்கள் பக்கம் துள்ளுகிறது. (அது வேறு விடயம்.)தங்கள் அறிமுகம் நன்று. நன்றி
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் சகோ.! வெர்சன் இரண்டில் அதிகம் எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 7. வருக பிரபு..நல்லதொரு அறிமுகம் தருக பிரபு..

  ReplyDelete
 8. அன்பின் பிரபு - அறிமுகங்கள் அனைத்துமே படிக்க வேண்டிய பதிவுகள் தான். அனைத்துச் சுட்டிகளையும் சுட்டி - சென்று - பார்த்து - படித்து - ரசித்து - மகிழ்ந்து - மறுமொழிகள் இட்டு - தேவையானவற்றை தரவிறக்கம் செய்து - அன்பளிப்பு பெற்று - இரண்டு மணீ நேரம் கழித்து அப்பாடா எனத் திரும்பி வந்தேன். நல்வாழ்த்துகள் பிரபு - நட்புடன் சீனா

  ReplyDelete
 9. இரண்டாவது முறையாக வந்ததால் நீங்கள் பேராசிரியர் என்று அன்போடு அழைக்கப்படுவீர்..!! :)

  ReplyDelete
 10. பிரபு பிரமாதமாக கலக்குங்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. @ திண்டுக்கல் தனபாலன்

  நன்றி சார்.

  ReplyDelete
 12. @ வரலாற்று சுவடுகள்

  நன்றி நண்பா

  ReplyDelete
 13. @ நிகழ்காலத்தில் சிவா

  நன்றி அண்ணா.

  ReplyDelete
 14. @ Karthik Somalinga

  நன்றி சகோ.

  //இப்போதெல்லாம் 2.0 என்றாலே உதறலெடுக்கிறது! :D//

  ஹி ஹி ஹி கவலைப்பாடதீங்க பில்லா 2 மாதிரி இருக்காது.

  ReplyDelete
 15. @ kovaikkavi

  மிகவும் நன்றிங்க.

  ReplyDelete
 16. @ Abdul Basith

  நன்றி சகோ. முடிந்த அளவு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறேன்.

  ReplyDelete
 17. @ மதுமதி

  நன்றி அண்ணா.

  ReplyDelete
 18. @ cheena (சீனா)

  இரண்டாம் முறை வாய்ப்பு கொடுத்த உங்களுக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete
 19. @ சேலம் தேவா

  ஹி ஹி ஹி முதல் முறை சரியா செய்யலேன்னு இரண்டாம் முறை எழுத சொல்லி இருக்கார் போல. இதை அரியர் என்று கூட சொல்லலாம் ;-)

  ReplyDelete
 20. @ Sasi Kala

  நன்றி சகோ

  ReplyDelete
 21. வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றதற்கு என் பாராட்டுகள் + வாழ்த்துக்கள் பிரபு !!!

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள்...பிரபு...
  மீண்டும் கலக்குங்க....

  ReplyDelete
 23. @ Kousalya

  நன்றி அக்கா.

  ReplyDelete
 24. @ NAAI-NAKKS

  நன்றி சார்.

  ReplyDelete
 25. @ Lakshmi

  நன்றி அம்மா.

  ReplyDelete
 26. @ Seeni

  நன்றி சகோ.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது