வரவேற்போம் புதியவர்களை...
➦➠ by:
சௌந்தர்
புதிய பதிவர்கள் நாள் தோறும் வந்து கொண்டிருக்கிறார்கள் அதில் நம் கண்ணில் படுபவர்கள் சிலர் மட்டுமே. நேற்று புதிய பதிவர்களோடு வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றேன். அனைத்து தளங்களையும் பார்க்க ஒரு நாள் போதவில்லை.. சில வலைத்தளங்களை மட்டும் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...
மாய மித்ரான்னு ஒரு வலைத்தளம். உள்ள போய் பார்த்தா ஒரு புலம்பு புலம்பிட்டு இருந்தாங்க... வண்டிய வேகமா ஓட்டாதீங்க... ஐஸ்வர்யா குண்டா ஆகிட்டாங்க... அட.. அப்போ கூட அவங்க அழகு தான். மத்தவங்க யாரும் புலம்பாதீங்க... இவங்க புலம்புறாங்க. அத கொஞ்சம் கேளுங்க...
சிந்தனை சிறகுகள்.. இந்த பேர பார்த்ததும் உள்ளே போய் அப்படி என்ன சிந்தனை சொல்றாங்கன்னு பார்த்தா.. ஒருத்தர் பல்பு வாங்கியிருக்கார், ஒரு மனுஷன் எப்படியெல்லாம் பல்பு வாங்குறாங்க பாருங்க... இந்த விஷயத்தை வெளிய சொல்லாதேன்னு சொன்னா பதிவு போட்டு ஊருக்கே சொல்லிட்டாங்க... அது என்ன பல்பு உள்ளே போய் பாருங்க.. விழுந்து விழுந்து சிரிப்பீங்க...
திடங்கொண்டு போராடு அட... பேரே நல்லா இருக்குல்ல... அவரின் நிறைய பதிவுகள் மிகவும் சுவாரசியமா இருக்கு. சென்னை பற்றிய பதிவு நல்லா தெளிவா எழுதியிருக்கார்.. சென்னைல வந்து பொருட்கள் வாங்கணும்ன்னு நினைப்பவர்கள் இந்த பதிவை படித்தால் எந்த பொருள் எங்கெங்கு கிடைக்கும்ன்னு நீங்க தெரிஞ்சுக்கலாம்.
மனதில் உறுதி வேண்டும். இவர் கலவையான ஒரு பதிவர். அரசியல், கதை, தொழில்நுட்பம், சினிமா, நகைச்சுவை என அனைத்தும் எழுதி வருகிறார். ஆனால், இவருக்கும் நம்ம பதிவை யாரும் வாசிக்கலைன்னு வருத்தம் இருந்திருக்கு. ஆனால் இந்த பதிவுக்கு பிறகு அப்படியொரு எண்ணமில்லை சொல்றாங்க. இதை நான் எதிர் பார்க்கவில்லை.....!!!!
இவரின் சிதறல்கள் நன்றாக இருக்கும். நீங்களும் படிச்சு பாருங்க...
கலிகாலம். இவங்க மொபைல் போன் பற்றி ஒரு பதிவு போட்டு இருக்காங்க... அத படிச்சாவது நமக்கு மொபைல் மோகம் குறையுமான்னு தெரியல... இவங்க பதிவு அனைத்திலும் ஒரு சமூக அக்கறை தெரியுது. இவங்க ரயிலில் பயணம் செய்வது எப்படின்னு பதிவுகள் எழுதிட்டு வர்றாங்க... அந்த பதிவையெல்லாம் நாம் கட்டாயம் படிச்சு பார்க்கணும். அப்போதுதான் எப்படி பயணம் செய்யணும்ன்னு நமக்கு தெரியும்.
தமிழ் காதல். இவருக்கு தமிழின் மீது அதிக காதல் இருப்பது இவரின் பதிவை படித்தாலே தெரியும். புதிய சொற்களையெல்லாம் கற்க நினைப்பவர். இவரின் கவிதைகள் மிகவும் அருமையாக இருக்கும். படித்து கொண்டே இருக்கலாம்.கலாச்சாரம்.....எங் கே போய்க்கொண்டிருக்கிறோம் என்ற தலைப்பில் தன் மனவலிகளை எழுதி இருப்பார். வெளிநாட்டில் இருப்பவர்கள் நிச்சயம் படிக்கத்தான் வேண்டும்.
சரி.. சரி... நீங்க இந்த பதிவை எல்லாம் படிச்சிட்டு இருங்க... நான் நாளைக்கு வர்றேன். என்ன நாளைக்கு என்ன பதிவுன்னு சொல்லிட்டு போகணுமா.... அட... அது எனக்கே தெரியாது. நாளைக்கு வந்து பாருங்க...
பதிவை படித்து அனைத்து தளத்திற்கு சென்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என கருத்துகள் தெரிவிக்கும் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றிகள் பல..
|
|
சௌந்தர் ..... உங்கள் ஸ்டைல்ல அருமையாக அறிமுகங்கள் செய்றீங்க..... தொடர்ந்து கலக்குங்க!
ReplyDeleteபுதியவர்களுக்கு வாழ்த்துக்கள்!
இன்றைய அறிமுகங்கள் அனைவருமே புதியவர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஎல்லோரின் தளங்களையும் பார்க்கிறேன்,புதிய அறிமுகங்களுக்கு நன்றி
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.... அசத்துங்க
ReplyDeleteமுதல் மற்றும் கடைசியில் உள்ள நண்பர்கள் எனக்கு புதுமுகங்கள்...
ReplyDeleteமுதல் தளம் செல்ல முடியல்லை...
(Warning: Something's Not Right Here!) என்று வருகிறது. காரணம் தெரியவில்லை...
(அடுத்து கருத்திட வரும் கற்போம் (karpom.com) அல்லது ப்ளாக்கர் (bloggernanban.com) நண்பர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் !)
அறிமுகப்படுத்திய அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கும் சௌந்தர் சார் !
நன்றி.. (த.ம. 5)
@தனபாலன் சார் அந்த சுட்டிய firefox la ஓபன் பண்ணி பாருங்க...
ReplyDeleteஅறிமுகங்கள் சிறப்பு.கட்டாயம் புதியவர்களை வரவேற்போம்..
ReplyDeleteவாசித்து கருத்திடுங்கள்..
பிரபல பதிவர்கள் சங்கமிக்கும் சென்னை பதிவர் சந்திப்பு
நல்ல அறிமுகங்கள் பகிர்வுக்கு நன்றி சார்.......
ReplyDeleteரொம்பவே நன்றி சார், என் வலைபூவையும் என் எழுத்துகளையும் அறிமுகப்படுத்தியதற்கு. உங்கள் உற்சாகமான அறிமுகத்திற்கு மீண்டும் ஒருமுறை நன்றி... மேலும் தனபாலன் சார் பற்றிய நீங்கள் கூறியிருந்த கருத்துகளும் முற்றிலும் உண்மை, அவருக்கும் என் நன்றிகள்.
ReplyDeleteநன்றி சௌந்தர் சார் ! (Firefox) யில் ஓபன் ஆகுது...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் சௌந்தர். சிந்தனைச் சிறகுகளும். திடம் கொண்டு போராடுவும் என் நண்பர்கள். மற்றவர்களைப் பார்க்கிறேன். மிக்க நன்றி.
ReplyDeletepala puthiya thalangalai arimugam seithatharku nandri
ReplyDeleteகலக்கல் அறிமுகங்கள் தான்...
ReplyDeleteஎன்னைய மாதிரியே பல்பு வாங்குற இன்னொருத்தர்.. அப்பாடா இப்பதான் நிம்மதியா இருக்கு..
சில அறிமுகங்கள் தெரியும் சில தெரியாதவை அனைவருக்கும் , சௌந்தருக்கும் நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்! எங்க வேகமா ஓடுரேன்னு பார்க்குறீங்களா அவங்களை follow பண்ணத்தான் ஹி ஹி ஹி!
ReplyDeleteபோனேன் நல்ல பதிவுகள்....
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் .. வாழ்த்துகள் !
ReplyDeleteநண்பர் சௌந்தர் அவர்களுக்கு மிக்க நன்றியும் வணக்கங்களும்.எனக்கு அதிக நண்பர்கள் வலைச்சரம் மூலமே கிடைத்தார்கள்.அந்த வகையில் வலைச்சரத்திற்கும் அதன் ஆசிரியர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி....(என் பதிவு பகிர்ந்துள்ளதை தெரியப்படுத்திய திண்டுக்கல் தனபால் நண்பருக்கும் நன்றி)
ReplyDelete"கலி காலத்தை" அறிமுகம் செய்தமைக்கு நன்றி சௌந்தர். இச்செய்தியை எனக்கு தெரியப்படுத்திய திண்டுக்கல் தனபாலனுக்கும் எனது நன்றிகள்.
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்! சிந்தனைச் சிறகுகள்! திடம்கொண்டு போராடு வாசித்துள்ளேன்! மற்றவர்களையும் இனி வாசிக்கிறேன்! பகிர்வுக்கு நன்றி! இன்று என் தளத்தில் தெருக்குடிமக்கள்! கவிதை! http://thalirssb.blogspot.in
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி சகோதரம்..
ReplyDeleteஅங்கே ஒரு விஜயம் சென்று விட்டு நாளை வருகிறேன்..
எதிர்பாராத சந்தோஷம் என்பது இது தானென்று நினைக்கிறேன்.. ஏதோ மனதில் தோன்றியவைகளை பதிய நினைத்து ஆரம்பித்த பதிவிற்கு ஒரு அறிமுகம் கொடுத்து, அனேகரிடம் கொண்டு சென்றமைக்கு மனமார்ந்த நன்றிகள் சௌந்தர் சார்.. இது குறித்து அறியத்தந்ததற்கு மிக்க நன்றி தனபாலன் சார்..
ReplyDeleteஎதிர்பாராத சந்தோஷம் என்பது இது தானென்று நினைக்கிறேன்.. ஏதோ மனதில் தோன்றியவைகளை பதிய நினைத்து ஆரம்பித்த பதிவிற்கு ஒரு அறிமுகம் கொடுத்து, அனேகரிடம் கொண்டு சென்றமைக்கு மனமார்ந்த நன்றிகள் சௌந்தர் சார்.. இது குறித்து அறியத்தந்ததற்கு மிக்க நன்றி தனபாலன் சார்..
ReplyDeletenantri sir!
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றி இனித்தான் பார்க்கணும்!
ReplyDeleteவலைச்சரத்தில் சிந்தனைச் சிறகுகளை அறிமுகம் செய்து வைத்த சௌந்த சார் அவர்களுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteஎன் பதிவு பகிர்ந்துள்ளதை தெரியப்படுத்திய திண்டுக்கல் தனபாலன் sir
தங்கள் தகவலுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி....
சிந்தனைச் சிறகுகளை ஒரு அறிமுகம் கொடுத்து, அனேகரிடம் கொண்டு சென்றமைக்கு மனமார்ந்த நன்றிகள்
வலைச்சரத்திற்கும் அதன் ஆசிரியர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி....
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஜலீலா