07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 19, 2012

அறியவே அறிவியல்


அறிவியல்.... இந்த சொல்லுக்குள் தான் எத்தனை அதிசயங்கள் உள்ளன. அறிவியல் செய்திகளை படிக்கும் போது நம்மையும் அறியாமல் வாயை பிளந்து விடுவோம். கலீலியோ முதல் கடவுள் துகள் வரை அத்தனையும் நமக்கு புதுசு தான். உங்கள் வாயை பிளக்க வைக்கும் தகவல்களை தரும் அறிவாளிகளை காண்போமா? 


அவிழ்மடல்
வலைப்பூ பேரிலேயே வாயை பிளக்க வைக்கிறார் நம்ம அருண் பழனியப்பன் , எழுதிய பதிவுகள் அனைத்தும் அருமை.  நம்பாதீங்க என்று இவர் எழுதிய பதிவுகள் பலதை நம்பி படிக்கலாம். சி.வி.ராமன் நோபல் பரிசு பெற்றதையும் அவர் அந்த பணத்தை செலவிட முடியாமல் போன கதை இங்கே  , அத்துடன் நியூட்டனின் இயக்க விதிகள் பதிவில் அறிவியலை அவியல் ஆக்கி வைக்கிறார்.அறிவியல்புரம் 

சிறந்த அறிவியல் எழுத்தாளரான என்.ராமதுரை அவர்களின் வலைப்பூ. வானத்து நட்சத்திரம் போல, வலைப்பூவெங்கும் இருக்கிறது அறிவியல். சனிப் பெயர்ச்சி என்பது என்ன? என்று தெளிவாக எழுதி உள்ளார்,  கடவுள் துகள் பற்றி எழுதிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ’கடவுள் அல்லாத’ துகள் பதிவு அறிவியல் ஆர்வம் உள்ள அனைவரும் படிக்க வேண்டியது.கூடல் பாலா

கூடங்குளத்தை சேர்ந்த அண்ணன் பாலா அவர்களின் வலைப்பூவில் உங்கள் உடலைப் பற்றி நீங்கள் இது வரை அறியாத 10 உண்மைகள் ! என்ற பதிவு இப்போது நான் அறிந்த உண்மை, எச்சரிக்கை : நீங்கள் உளவு பார்க்கப் படுகிறீர்கள் ! என்ற பதிவை படித்தால் இதுல எல்லாமா கேமரா இருக்கும் என்று கேட்பீர்கள்.


தகவல் துளிகள்
அண்ணன் V.K. மகாதேவன் அவர்களின் வலைப்பூ இது விமானம் பறப்பது எப்படி?நினைப்பதால் தும்மல் வருமா?தலைமுடியின் உன்மையான நிறம் ! என்று பல அறிவியல் தகவல்களை தருகிறார். மூலிகைவளம்
இயற்கை அறிவியல் தான் என்றும் திகட்டாது, அத்தோடு ஆச்சர்யங்களை அள்ளித் தரும், அந்த வகையில் குப்புசாமி சார் எழுதும் இந்த வலைப்பூவில் தான் நுணாவின் மூலிகைத் தன்மை பற்றி அறிந்தேன், மைதானங்களில் அதிகம் காணப்படும் நெருஞ்சில் முள் பற்றிய பதிவு காலை குத்தவில்லை. இவரது வலைப்பூவின் ஒவ்வொரு பதிவும் கட்டாயம் படிக்க வேண்டியவை. புத்தகமாக வெளிவரும் அளவுக்கு தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. மீண்டும் நாளை சந்திப்போம்

கற்போம் தளத்தில் இன்று - HTML 5 - பயனுள்ள முக்கிய குறிப்புகள் [Infographic]


11 comments:

 1. அனைத்து பிரபல அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...
  பகிர்வுக்கு நன்றி...வாழ்த்துக்கள்...(TM 1)

  ReplyDelete
 2. அழகு...

  அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. எல்லாம் புதிய அறிமுகங்களாக உள்ளன. அவர்களிற்கும், பிரபுவிற்கும் நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 4. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. மிக வித்தியாசமான அறிமுகங்கள்!

  ReplyDelete
 6. என்னையா இது நம்ம ப்ளாக்கை காணோம் அப்ப நம்ம எழுதுறது அறிவியில் இல்லையோ? ஹி ஹி ஹி

  ReplyDelete
 7. அறிமுகமான அனைத்து நண்பர்களுக்கும் மிகுந்த வாழ்த்துகள்...

  ReplyDelete
 8. எனது தளத்தையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோதரரே ....

  ReplyDelete
 9. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. எனது தளத்தினை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி நண்பரே....

  இந்த அறிமுகத்தின் மூலம் எதைப் பற்றி அதிகம் எழுதலாம் என்கிற புரிதல் கிடைத்தது.. நன்றி!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது