அரசியலும் , ஆன்மீகமும் ...
➦➠ by:
Vanga blogalam,
அரசியல்,
அனந்து,
ஆன்மிகம்
நம் நாட்டில் அரசியலும் , ஆன்மீகமும் ஒன்றுடன் ஒன்று நேரடியாகவோ , மறைமுகமாகவோ பின்னிப் பிணைந்திருப்பதாகவே கருதுகிறேன் ... அரசியலில் இருப்பவர்கள் ஆன்மீகவாதிகளை நாடுகிறார்கள் , ஆன்மீகவாதிகளில் பலரோ பொய் , பித்தலாட்டம் என்று அரசியல் செய்கிறார்கள் ... கடவுளே இல்லை என்று சொல்லி அரசியல் செய்பவர்களும் ஆன்மீகத்துக்குள் அடக்கம் , ஏனெனில் கடவுள் இல்லை என்கிற வாதம் ஒன்றும் புதிதல்ல , பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே இந்து மத ரிஷிகளால் அது பேசப்பட்டிருக்கிறது ... இன்று நாம் தன் பதிவுகள் மூலம் ஆன்மீக ஒளி பரப்பும் ஒருவரையும் , அரசியல் , ஆன்மிகம் இரண்டையுமே திறம்பட கையாளும் இருவரையும் பார்க்கப் போகிறோம் ...
கடவுளே இல்லை
சொன்னவருக்கு சிலை வைத்தான்
பகுத்தறிவுவாதி ...
( இந்த பதிவிற்காக எழுதிய ஹைக்கூ )
அறிமுகம் 1
அநேகமாக பதிவுலகில் உள்ள பெரும்பான்மையோருக்கு இவரை தெரிந்திருக்கும் ... மூன்றாம் கோணம் நடத்திய கட்டுரை போட்டியில் முதல் பரிசு இவருக்கு கிடைத்ததன் மூலம் நான் இவரை அறிந்து கொண்டேன் ... இவரின் பதிவுகளை படித்தாலே உலகில் உள்ள நிறைய ஆலயங்களை தரிசனம் செய்த திருப்தி கிடைக்கும் ... நம்மூரில் நமக்கே தெரியாத பல ஆலயங்களை நமக்கு http://jaghamani.blogspot.com அறிமுகப்படுத்துவது ராஜேஸ்வரி அவர்களின் சிறப்பம்சம் . நான் படித்துப் பரவசமடைந்த சில பதிவுகள் இதோ :
http://jaghamani.blogspot.in/2012/06/blog-post_30.html ஓம் சிவோஹம்
http://jaghamani.blogspot.in/2012/06/blog-post_20.html சுதர்சன சக்கரம்
http://jaghamani.blogspot.in/2012/05/blog-post_06.html மதுரை அரசாலும் மீனாட்சி
அறிமுகம் 2
குருஜியாக இருந்து கொண்டு ஆன்மீக விளக்கங்களோடு நின்று விடாமல் அரசியலையும் அலசிப் பார்ப்பது உஜிலாதேவியின் சிறப்பம்சம் ... மதங்களை பற்றிய விளக்கங்கள் கொடுக்கும் இவர் சினிமாவையும் விட்டுவைக்கவில்லை ... உஜிலாதேவியின் மனதை கவர்ந்த சில பதிவுகள் ...
http://www.ujiladevi.in/2012/06/blog-post_15.html என்னை ஜனாதிபதி
http://www.ujiladevi.in/2012/03/blog-post_22.html கலைஞர் வழியில்
http://www.ujiladevi.in/2012/05/blog-post_18.html சிவப்பழமான ஆஞ்சநேயர்
அறிமுகம் 3
பத்மன் பதிவுலகிற்கு புதியவராக இருக்கலாம் , ஆனால் தான் எழுதிய " மூன்றாவது கண் " என்ற முதல் புத்தகத்திற்கே தமிழக அரசின் விருது பெற்றதால் எழுத்துலகில் பரிச்சயமானவர் , அத்தோடு பத்திரிக்கை , மீடியா உலகில் இருபத்தைந்து வருட அனுபவம் பெற்றவர் ... சில காலங்களில் பதிவுலகிலும் பரிச்சயமாவர் என்பது என் அபிப்ராயம் ... பத்மனின் நற்கூடல் தளத்தில் மீண்டும் படிக்க வைக்கும் சில பதிவுகள் ...
நாளை மற்ற மூவருடன் மீண்டும் சிந்திப்போம் ...
இப்படிக்கு
அன்புடன் அனந்து ...
|
|
நம்மூரில் நமக்கே தெரியாத பல ஆலயங்களை நமக்கு http://jaghamani.blogspot.com அறிமுகப்படுத்துவது ராஜேஸ்வரி அவர்களின் சிறப்பம்சம்
ReplyDeleteசிறப்பாக அறிமுகப்படுத்தியதற்கு மனம் நிறைந்த நன்றிகள்..
சிறப்பான அறி முகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteமூன்றாவது அறிமுகம் புதிவர்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…
(TM 1)
ReplyDeleteநம்மூரில் நமக்கே தெரியாத பல ஆலயங்களை நமக்கு http://jaghamani.blogspot.com அறிமுகப்படுத்துவது ராஜேஸ்வரி அவர்களின் சிறப்பம்சம் ஃஃஃஃஃஃஃஃஃஃ
ReplyDeleteஇது உண்மை தான்!!வாழ்த்துக்கள் சொந்தமே!!இப்பகிர்விற்காய் நன்றிகள்.மற்றய இருவரையும் அறிந்து கொள்கிறேன்.
நன்றி அனந்து என்னை அறிமுகப் படுத்தியமைக்கு. அறிமுகக் கட்டுரையை நேர்த்தியாகத் தொடங்கி, அருமையான குறுங்கவிதையைப் பதிவிட்டு,கச்சிதமாக எழுதியிருந்தீர்கள். பல புதிய பதிவர்களின் நட்புக்குப் பாலம் அமைத்ததற்கும் நன்றி.
ReplyDeleteபத்மன் மட்டுமே படித்தது இல்லை! சிறப்பான அறிமுகம்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்!
http://thalirssb.blogspot.in
அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDelete'அரசியலும் ஆத்திகமும்' என்றிருக்க வேண்டுமோ?
ReplyDeleteஆன்மீகம் வேறு, ஆத்திகம் வேறு என்று நம்புகிறேன்.
நற்கூடல் மட்டும் எனக்கு புதிது. அறிமுகத்தளங்கள் அனைத்தும் மிகச்சிறப்பானவையே. வாழ்த்துக்கள்.
ReplyDelete