07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 5, 2012

நிற்காது வீசும் புதுத்தென்றல்.

”சூடுவன்:நெஞ்சிடை வைப்பன்;பிரான் என்று
பாடுவன்;பன்மலர் தூவிப் பணிந்து நின்று
ஆடுவன்;ஆடி,அமரர் பிரான் என்று
நாடுவன்;நான் இன்று அறிவதுதானே”----(திருமந்திரம்)


----------------------------------------------------


பஞ்சகவ்யம் என்பது பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களால் உருவாக்கப்படும் ஒரு கலவை. பஞ்சகவ்யம் - பஞ்ச என்றால் ஐந்து மற்றும் கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்கள் - 1) பால் 2) தயிர் 3)நெய் 4)சாணம் 5)கோமியம்.
இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கப் படுவதே பஞ்சகவ்யம். இது இந்து சமய இறை வழி பாட்டின்போது முக்கியபூசை பொருளாகவும், ஆயுர்வேத வைத்தியம், வேளாண்மை பயிர் பாதுகாப்பிலும் பயன் படுகிறது. பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


பசுவுன் மடியிலிருந்து பெறப்படும் பொருட்களே குறிக்கப்படுவதாகவும் அவை,பால், தயிர்,மோர், வெண்ணை, நெய் என்றும் சிலர் கூறுவர்.  


-------------------------------------------------


1)சிறு புன்னகையால் இந்த உலகை அழகாக்க வருகிறார் அவரது செவ்வாய்,சுக்கிரனுடன், விக்னா@யமுனா. இவரது பயணத்திற்கான பயணம் நிச்சயமாகச் சிரிக்க வைக்கும்!


2)கொஞ்சம் பூக்கள்,கொஞ்சம் புன்னகை ,கொஞ்சம் கண்ணீரால் நிறைந்தது இந்த மௌனதேசம் இடுகை ஒன்றில் மகாத்மா காந்தி பெண்களுக்காகச் சொன்ன பிரபல வாசகம் ஒன்றை நினைவு கூர்ந்திருக்கிறார். அதே வாசகத்தையே சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி யொருவர் தனது நேற்றைய தீர்ப்பில் சொல்லி யிருக்கிறார்.பெண்களுக்கான , என்றும் பொருந்தும் வாசகம்!


3)வாழ்க்கையின் அவலங்களை ,யதார்த்தங்களைச் சின்னச் சின்ன வரிகளில் அழகான கவிதைகளாக வடிக்கும் இனிப்பு மனிதர்--சீனி!  இவரது மன்னிப்பு சிறப்பான சிந்தனை கொண்டது


4) இனியவை கூறுகிறது கலாகுமரனின்  இந்த வலைப்பூ.கோவை அருகில் உள்ள பேரூர் பற்றி இவர் எழுதியுள்ள சுவடுகளைத் தேடி என்ற தொடர்பதிவு சிறப்பாக இருக்கிறது


5)பதிவின் பெயரும் இணைந்த பெயர் சிகரம்பாரதி. கல்யாண வைபோகம் என்னும் தலைப்பில் கவனிக்கப்பட வேண்டிய, குறு(வலை)நாவல் ஒன்று எழுதி வருகிறார். பாருங்கள். 


இன்னும் இருக்கிறார் எத்தனையோ!
------------------------------------------------------------
வலைப்பூச் சரம் தொடுக்கப் பணித்தார் சீனா
மலைத்தேன் ஒரு கணம் செய்வது நானா?!
மலைத்தேன் போல் இனிக்கும் பல பதிவுகள் !
தொலைப்பேனோ பகிரும் வாய்ப்பை நான்?

சொல்ல நினைத்தது எத்தனையோ
சொல்லி முடித்ததோ கொஞ்சமே!  
சொல்ல நினைத்ததிலும்
சொல்லி முடித்ததிலும் 
இல்லை ஏதும் குறை.
சொல்லத் தெரியாத இந்த 
சொக்கனிடம்தானே குறை.


வாய்ப்பளித்த சீனாவுக்கும்
வந்து வாழ்த்திய மக்களுக்கும்
படித்து ரசித்த  உள்ளங்களுக்கும்
படிக்காமல் விட்ட பாசங்களுக்கும்


நன்றி,நன்றி,நன்றி!


9 comments:

  1. பணியை சிறப்பாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. முதல் இரு நண்பர்கள் தளம் புதியவை...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பணியை சிறப்பாக முடித்தீர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...

    நன்றி… (t.m.2)

    ReplyDelete
  3. பணியை சிறப்பாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. தங்களது பணியை திறம்பட செய்து இனிமையாய் நிறைவு செய்தீர்கள் ஐயா!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. ayya naanumaa!?

    mikka nantri!

    ungalukku manam kanintha vaazhthukkal!

    ReplyDelete
  6. எனது பதிவையும் அறிமுகப்படுத்தியமைக்கு ரொம்ப நன்றி ஐயா,,

    ReplyDelete
  7. பஞ்சகவ்யம் நல்ல தகவல்.இன்னும் இருக்கிறார் எத்தனையோ!அருமையாகவுள்ளது. நன்றி அய்யா.

    ReplyDelete
  8. அன்பின் மதுரைச் சொக்கன் அண்ணா

    நன்றி கூறும் கவிதை அருமை - கவிதை எழுதுவதைத் தொடருங்களேன். நல்வாழ்த்துகள் அண்ணா - நட்புடன் சீனா

    ReplyDelete
  9. "வலைச்சரத்தில் இந்த எளியேனுடைய வலைத்தளத்தை அறிமுகம் செய்த மதுரை சொக்கன் அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றி! "

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது