07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, August 2, 2012

இவர்களும் பீஷ்மர்களே!

”சிவனொடொக் குந்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கு யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன் ஒளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே”--(திருமந்திரம்)


---------------------------------------------------
புலன்கள் ஐந்து.நாம் சாதாரணமாகச் சொல்பவை-கண்,காது,வாய்,மூக்கு,மெய் என்பவை.ஆனால் இந்திரியங்களை இரண்டாகப் பிரிப்பர்-கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் என்று.


கர்மேந்திரியங்கள்-வாக்கு,பாதம்,கை,எருவாய்,கருவாய்.
ஞானேந்திரியங்கள்-செவி,கண்,மூக்கு,நாக்கு,மெய்.

-----------------------------------------------------

1)பதிவின் பெயரே கட்டுமானத்துறை என்பதால் துறை சார் பதிவுகள் அநேகம் இருக்கின்றன. நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களை விளக்கிச் சொல்கிறார்.ஒரு மேம்பாலம் கட்டுவதில் என்ன தவறு செய்திருக்கிறார்கள் என்பதச் சுட்டிக் காட்டுகிறார்.நடுவில் உத்திரமேருர், காளஹஸ்தி,சோலிங்கர் என்று நம்மை அழைத்துச் செல்கிறார் வடுவூர் குமார்.


2)free  mason  என்பது தமிழில் இலவசக் கொத்தனார் ஆகி விட்டது.2006 த்திலிருந்து எலவசமாகக் கொத்தி வருகிறார்.  சொல்வதை நகைச்சுவையாகச் சொல்வதில் வல்லவர்.தமிழில் நாம் செய்யும் பிழைகள் பற்றி,அன்றாட வாழ்வில் பயன் படுத்தும்  சொற்றொடர்கள் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார்.(-ம்)வாழ்த்துகளா,வாழ்த்துக்களா?” 
சில சுவாரஸ்யமான க்விஸ் பதிவுகளும் உண்டு. பாருங்கள்மொழியறிவும்,முழியறிவும்-க்விஸ் பாகம்-1”(400 பின்னூட்டங்களா?!)

3)2006 இல் மலர்ந்த இன்னொரு பூ வல்லிசிம்மனின்நாச்சியார் 
சமீபத்தில்  எழுதிய கும்பகோணத்திற்கு ஒரு புண்ணியப் பயணம்  அவரது கோவில் பயணக்கட்டுரைகளுக்கு ஒரு மாதிரி.
தனது பயணங்கள் பற்றி மிகச் சுவாரஸ்யமாக அநேகப் பதிவுகள் எழுதியுள்ளார்.அவரது புகைப்படங்களே எல்லவற்றையும் விளக்கும்!(உ-ம்)ஸ்விஸ் பயணங்கள் 

4) / இந்தக் கோவி கண்ணனின் காலம் 2006இல் தொடக்கம்.சமீபத்தில் எழுதிய பழைய சோறு நல்லதா என்ற பதிவு, நீண்டநாள் கருத்துகளை உடைக்கிறது!அறிவியல் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்-. உலக அறிவியலின் உச்சம் - ஒரு கற்பனைக் கதை ! .

5)2006 இல் மலர்ந்த மற்றொரு பூ. இந்த உலகின் புதிய கடவுள்.சமீபத்திய பதிவு அரளியும் நம்பிக்கைகளும். படித்துப் பாருங்கள் செல்வனின்  வலைப்பூ.

நாளை?!

15 comments:

  1. இன்றைய பீஷ்மர்கள் எல்லோரையும் அன்புடன் வாழ்த்துகின்றேன்.

    இலவசக் கொத்தனார் என்னும் கொத்ஸ், துளசிதளம் வகுப்பறைக்கு க்ளாஸ் லீடர்!

    ReplyDelete
  2. இன்றைய அறி முகங்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  3. இலவசக் கொத்தனார் வெண்பா எழுதக் கற்றுத் தந்தது இன்றும் நினைவில் பசுமையாய். வல்லிம்மாவை மறத்தல் தகுமோ? மற்றவர்களை கவனிக்கிறேன் சொக்கரே... நல்லறிமுகங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  4. அறிமுகப்படுத்தியுள்ள பதிவர்களில் திரு கோவி கண்ணனின் பதிவுகளை மட்டும் படித்திருக்கிறேன்.பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

    ReplyDelete
  5. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...

    நன்றி ஐயா..
    (த.ம. 3)

    ReplyDelete
  6. ”பழைய சோறு நல்லதா” லிங்கில் உள்ள comma-வை (html,) மட்டும் எடுத்து விடவும்... நன்றி ஐயா

    ReplyDelete
  7. எனது வலைப்பதிவு பற்றிய அறிமுகத்திற்கு மிக்க நன்றி, அதனை எனக்கு தெரியப்படுத்திய திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  8. சிறப்பான அறிமுகங்கள் நன்றி ஐயா.

    ReplyDelete
  9. அந்த 400 கமெண்ட்ஸ் பதிவு மிரட்டுது!

    வாழ்த்துக்கள் அறிமுகங்களுக்கு!

    ReplyDelete
  10. அனைவரும் எனக்கு புதியவர்கள்! அறிமுகத்திற்கு நன்றி!

    இன்று என் தளத்தில் நான் ரசித்தசிரிப்புக்கள்!, சமூக சிலந்தி வலை!
    http: thalirssb.blogspot.in

    ReplyDelete
  11. அன்புடன் வாழ்த்துகள். நீங்கள் என் தளத்தை அறிமுகப் படுத்தியதைத் திரு தனபாலன் சொல்லித் தெரிந்து கொண்டேன்.எங்கள் சமகால வலைத்தளங்களைச் சொன்னதற்கும் இன்னோரு நன்றி.

    ReplyDelete
  12. திண்டுக்கல் தனபாலன் சொன்னார்...மிக்க நன்றி.

    ReplyDelete
  13. பழைய சோறு நல்லதா? படித்துப்பார்த்தேன். சர்க்கரை நோய் பற்றியும், அதன் அறிகுறி பற்றியும் நன்கு பகிர்ந்துள்ளார்.

    ReplyDelete
  14. பயனுள்ள பதிவு என்றும் பாராட்டப்படும், உங்களின் இந்த தகவல் பகிர்வு வலைதள நண்பர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது! நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது