07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 12, 2012

இன்று இப்படம் கடைசி ...


முன்பெல்லாம் ஒரு படத்தின் கடைசி நாளன்று " இன்று இப்படம் கடைசி " என்று போடுவார்கள் , அதோடு மட்டுமல்லாமல் முடிந்தால் ஒன்றிரண்டு காட்சிகள் கூடுதலாக காண்பிப்பதும் உண்டு ... அதே போல வலைச்சர ஆசிரியர் பொறுப்பின் கடைசி நாளான இன்று மூவருக்கு பதில் ஆறு பேரை அறிமுகம் செய்யலாமென்று முடிவு செய்தேன்... இது வரை பதினைந்து பேரை அறிமுகம் செய்தாகிவிட்டது , இன்று ஆறு பேரை அறிமுகம் செய்வதன் மூலம் மொத்தம் இருபத்தியொன்று...
இதன் கூட்டுத்தொகையும் மூன்று ,  எனவே இன்று எல்லோருக்கும் ரெண்டு லட்டு ..

பெண்ணே ஆணாதிக்கம் பேசுகிறாய் 

என்னை 
அடிமைப்படுத்திக் கொண்டே ...

பெண்ணே நீ சிரிக்கிறாய் 
பைத்தியக்காரனாவது 
நான் மட்டும் தான் ...

மீளா நிலை ...  என் என்ற கவிதையிலிருந்து )

அறிமுகம் 1

இவரின் பெயரையும் , தோற்றத்தையும் பார்த்தால் ஆள் அமைதியாகத் தான் இருக்கிறார் , ஆனால் வலைத்தளத்தின் பெயரோ அலையல்ல சுனாமி என வைத்து நம்மை பயமுறுத்துகிறார் ... சுனாமியில் நான் பிடித்த சில முத்துக்கள் ... 

சாகித்யஅகாதமி 


அறிமுகம் 2

இவர் அதிகம் எழுதுவதில்லை , இருந்தாலும் எழுதியவற்றுள் கவிதை , சினிமா , ஆன்மிகம் , சமூக நலன் என அனைத்தையும் தொட்டிருக்கிறார்...கடம்பவன குயில்  குரலில் நான் ரசித்த சில பாடல்கள்...


அறிமுகம் 3

சினிமாவை பற்றிய பதிவிலேயே இவரை அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும் , ஆனால் இன்று அறிமுகம் செய்கிறேன் ... இன்று  திரையுலைகையே கலக்கிக் கொண்டிருக்கும் சந்தானத்தின் தீவிர ரசிகர் இந்த அகாதுகா அப்பாட்டக்கர்ஸ் ... அதிலிருந்து எனக்கு பிடித்த சில அஜால் குஜால் பதிவுகள்...


அறிமுகம் 4

பதிவுலகில்   சிறுகதைகள் பிரசித்தம் ... சிறுகதைகளையும் தாண்டி கவிதைகள் , கட்டுரைகள் என இவர் எழதும் எல்லாவற்றிலும் தேர்ந்த எழுத்தாளர்க்குரிய நேர்த்தி இருக்கும் ... ராகவனிடம் நான் ரசித்த சில பதிவுகள் ...

சிவரஞ்சனி என்பது ராகம் மட்டுமல்ல...

அறிமுகம் 5  

சினிமா பகுதியில் நான் ராஜ் அவர்களை அறிமுகம் செய்தவுடன் அவர் எனக்கு பதில் நீங்க இவரை அறிமுகம் செய்திருக்கலாம் என்று பின்னூட்டம் வாயிலாக கேட்டுக்கொண்டிருந்தார் ... அவர் ஏன் அப்படி சொன்னார் என்பது பேபி ஆனந்தன் தளத்திற்குள் சென்ற பிறகு புரிந்தது ... உங்களுக்காக சில பதிவுகள் ...

என் தமிழ் சினிமா!

2012 ஒரு ஆரம்பம்!


அறிமுகம் 6

அன்பே சிவம் என்று தலைப்பில் பக்தி இருந்தாலும் இவர் எழுதும் கிறுக்கல்களில் காதல் ததும்பும்...   கிறுக்கல்களில் எனக்கு பிடித்த சில ..
.
இலைகளற்ற கிளை

ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தில் ஆசிரியராகும் வாய்ப்பை எனக்களித்த சீனா ஐயா அவர்களுக்கும் , இதற்கு பாலமாய் அமைந்த  மயிலன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு என் பதிவுகளை தொடர்ந்து படித்து உற்சாகம் அளித்தவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன் ...

இப்படிக்கு ,
அன்புடன் அனந்து ...















8 comments:

  1. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...

    நன்றி... (TM 1)

    ReplyDelete
  2. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. என்னோட கோரிக்கையை ஏற்று பேபி ஆனந்தன் ப்ளாக்கை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி பாஸ்..
    இதுல "அகாதுகா அப்பாட்டக்கர்ஸ்" ப்ளாக் எனக்கு தெரிஞ்ச ப்ளாக். மற்ற ப்ளாக் அறிமுகத்துக்கு மிக்க நன்றி. அவர்களையும் தொடர்கிறேன்..

    ReplyDelete
  4. அரிதாய் எழுதும் என்னையும் அறிமுகப்படுத்திய நண்பருககு நன்றி. என்ன செய்ய என் குடும்ப சூழல் அப்படி.ஆனாலும் எழுதிய சிலதும் பலரைக் கவர்ந்ததை எண்ணி மகிழ்ச்சியே.

    இந்த வாரம் முழுதும் நீங்கள் முத்தான அறிமுகங்களாய் கொடுத்திருந்தீர்கள். உங்களுககு கொடுக்கப்பட்ட ஆசிரியப்பணியை சிறப்பாய் செய்திருந்தீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே.

    இன்றைய வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதை எனக்கு தெரிவித்த நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு என் நன்றி.

    ReplyDelete
  5. சில அறிமுகங்களைப் படித்துள்ளேன். அமைதியாக இருப்பேன் என்று என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. சில நாட்களாக எனது இணையம் வேலை செய்யவில்லை. நேரம் கிடைக்கும்போது மற்ற அறிமுகங்களை நிச்சயம் படிக்கிறேன்.

    ReplyDelete
  6. சிறப்பான அறிமுகங்கள்!! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    இதோ ஒரு நிமிஷம்!
    மணிப்பூர் மகாராணியும் அம்மன் வேஷக்காரியும்!
    http://thalirssb.blospot.in

    ReplyDelete
  7. என்னை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பர்களே...தொடர்ந்து பல நல்ல் பதிவுகளை எழுத இது என்னை ஊக்கப்படுத்துகிறது.

    வலையுலகம் மூலம் எனக்குக் கிடைத்த வெகு சில நண்பர்களில் மிக முக்கியமானவர், ராஜ்! தொடர் அன்பிற்கும் ஆதரவிற்கு நன்றி நண்ரே! மிக்க மகிழ்ச்சியாக உள்ளது :-)

    ReplyDelete
  8. அது பக்தி இல்ல அனந்து, பக்தி இல்ல. :-)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது