07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 10, 2013

சிரித்து வாழவேண்டும்! – ஏழாம் நாள் – விடை பெறும் நாள்

சிரிப்பு என்பது மனித குலத்துக்கே கிடைத்த ஒரு பெருங்கொடை.இது மற்ற எந்த உயிரினங்களுக்கும் கிடைக்காத ஒரு பெரும்பேறு.

சிரிப்பதால் பல நன்மைகள் உண்டு என சொல்லக் கேட்டிருக்கிறோம். சிரிப்பதால் உடல் வலி மற்றும்  மன அழுத்தம் குறைகிறதாம். மேலும் சிரிப்பு, மன அழுத்தம் தரும் ஹார்மோன்களைக் குறைக்கிறதென்றும், தடுப்பாற்றல் உள்ள திசுக்களை அதிகரிக்கிறதென்றும், இரத்த நாளங்களின் செயலாற்றல்களை செம்மைபடுத்தி, இரத்த ஓட்டம் சீராக வழி செய்வதால் இதய வலி வருவதையும் தடுக்கிறது  என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.

எனவே நாள்தோறும் சிரிப்போம் நலமுடன் வாழ!

சிரித்து வாழவேண்டியதுதான் ஆனால் அந்த சிரிப்பை பிறர் மனத்தை நோகடித்து அல்ல. நம்மில் பலர் மாற்றுத்திறனாளிகளை நையாண்டி செய்தும், பிற மொழியை, பிற மதத்தை,பிற சாதியை  அல்லது அவர்களது நம்பிக்கையை கிண்டல் செய்தும் நகைச்சுவை என்ற பெயரில் சொல்லியும் எழுதியும் வருகிறோம்.

சமீபத்தில் எனக்கு வந்த மின்னஞ்சலில் வந்த ஒரு நிகழ்வு பற்றிய தகவலை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ( அநேகம் பேருக்கு இது தெரிந்திருக்கலாம். இருப்பினும் நல்லதை திரும்பவும் சொல்வதில் தவறில்லை என நினைக்கிறேன்.)

“தென்னிந்தியாவிலிருந்து விடுமுறையை கழிக்க தில்லிக்கு சென்ற கல்லூரி மாணவர்கள் சிலர் தில்லியை சுற்றிப்பார்க்க ஒரு டாக்ஸியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த டாக்ஸின்  ஓட்டுனர் ஒரு வயதான சீக்கியராக இருந்ததால் அவரை கிண்டல் செய்யும் நோக்கில் அன்று முழுதும் சர்தார்ஜி நகைச்சுவையை சொல்லி அவரை வெறுப்பேற்ற நினைத்திருக்கிறார்கள். 
  
ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லையாம்..அவர்களது சுற்றிப்பார்க்கும் வேலை முடிந்தவுடன் அவர்கள் அவரிடம் வாடகைப் பணத்தை தந்திருக்கிறார்கள். 

அவர் பாக்கியை திருப்பித்தரும்போது, ஒவ்வொருவருக்கும் பத்து ரூபாய் தாட்களை கொடுத்துவிட்டு சொன்னாராம்.தம்பிகளா! இன்று முழுதும் நீங்கள் சர்தார்ஜி நகைச்சுவை என்ற பெயரில் சொன்ன ஜோக்குகளில் சில அசிங்கமானவை. இருப்பினும், எனக்கு கோபம் வரவில்லை. காரணம் நீங்கள் இளைஞர்கள். இன்னும் வெளி உலகை அறியாதவர்கள் என்பதால் தான். ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும் உங்களிடம் வைக்கிறேன். நான் கொடுத்த இந்த பத்து ரூபாய் தாளை இந்த  ஊரிலோ அல்லது வேறு எந்த ஊரிலோ நீங்கள் சந்திக்கும் ஒரு பிச்சைக்கார சர்தாரிடம் கொடுங்கள் அது போதும். என்றாராம்.

பிச்சையெடுக்கும் சர்தார் எவரையும் இதுவரை காணமுடியாததால் அவர்களிடமே அந்த பணம் இருக்கிறதாம்!”

எனது நண்பர்  ஒருவர் சொன்னார். இலண்டனில் வேலை தேடி அலையும் இந்தியர்கள் (சொன்னால் நம்பமாட்டீர்கள். இதில் டாக்டர்களும் அடக்கம்) வேலை கிடைக்கும் வரை அங்குள்ள குருத்துவாராவில் தான் இலவச உணவை சாப்பிடுகிறார்களாம்!

இதோ ஒரு புள்ளி விவரம். இந்தியாவில் கட்டப்படும் வருமான வரியில் 33 சதம் கட்டுவோரும், அறக்கட்டளைக்கு செலவிடுவோரில் 67 சதம் செலவிடுவோரும் இராணுவ சேவையில் இருப்போரில் 45 சதமும்  தினம் 60 இலட்சம் மக்களுக்கு 59,000 க்கு மேற்பட்ட குருத்துவாராக்கள்  மூலம் இலவச உணவு தருவோரும் இந்திய மக்கட் தொகையில் 1.4 சதம் உள்ள சீக்கியர்களே என்பதை அறியும்போது இவர்களையா நாம் கேலி செய்கிறோம் என வெட்கப்படத்தான் வேண்டும்.

சக மனிதனுக்கு உதவிடும் சர்தார்ஜிக்களைப் பற்றி மனம் போன போக்கில் நகைச்சுவை என்ற பெயரில் நையாண்டி செய்து சிரிப்பது சரியா என சிந்திக்க வேண்டும்.  இந்த இழி செயலை யார் எப்போது ஆரம்பித்தார்கள் என்பது  தெரியவில்லை. இனி பதிவுலகத்தில் நாமாவது அதை எழுதாமல்  விடுவதன் மூலம்  அவர்களுக்கு  மரியாதை தருவோம்.
                              --------
இனி சில நகைச்சுவை மற்றும் பல்சுவைப் பதிவர்கள் பற்றி இன்று பார்ப்போம். 


1.வாழ்க்கைப் பாதையில் எதிர்ப்படும் சாதாரணர்களில் ஒருவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் மின்னல் வரிகள் வலைப்பதிவின் பால கணேஷ் அவர்கள் அசாதாரணமானவர். இவர் சினிமாவில் தொடங்கி கதை, சிறுகதை, நகைச்சுவை,நூல் மதிப்பீடு, ஆன்மீகம், எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கதைகள் வரை அலசாத விஷயங்களே இல்லை.இருந்தாலும் இவரது நகைச்சுவை பதிவுகள்தான் எல்லாவற்றையும் விட பிரபலமானவை மொறு மொறு மிக்ஸர் என்ற தலைப்பில் இவர் எழுதும் பதிவும். சரிதாவும் நானும், நடைவண்டிகள் என்ற தொடர்களும் எல்லோராலும் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டவை.  பதிவுலகில் உள்ள மிகச் சில நகைச்சுவை பதிவர்களில் இவரும் ஒருவர். இவரது நகைச்சுவைக்கு சாம்பிள் கேட்டால் பல்லவனோடுஒரு யுத்தம் என்ற இந்த பதிவை சொல்லுவேன். இவரின் இன்னொரு வலைப்பதிவு மேய்ச்சல்மைதானம் ஆகும் 

2. தினம் ஒரு தகவல் தந்த திரு  தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள்  போல், தினம் ஒரு சுவாரஸ்யமான தகவல்களைத் தருவதில் இவர் மன்னர். தனது இருப்பிடமான அரசர்குளம் பெயரிலேயே அரசர்குளத்தான் என்ற வலைப்பதிவில் பதிவிட்டு வரும் ரஹீம் கசாலி அவர்கள் 2010 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 500க்கு மேற்பட்ட பதிவுகளைத் தந்திருக்கிறார்.  என்னைப்பற்றி என்ன சொல்ல என்று அவர் சொன்னாலும், வேறொரு இடத்தில் பதிவில் வெளியாகும் கருத்துக்கள் அவருடைய சொந்த கருத்துக்கள்  என்றும், தன் மனதில் தோன்றியதை எழுதியிருப்பதாகவும் , தவிர யார் மீதும் திணிக்க அல்ல என்று கூறி தான் யார் என்பதை சொல்லிவிட்டார். இவரது பதிவில் அரசியலும் உண்டு. சினிமாவும் உண்டு. ஆனால் இவருக்கு விளையாட்டு பிடிக்காததால், விளையாட்டு சம்பந்தப்பட்ட செய்திகள் மட்டும் இருக்காது. மின்வெட்டை சமாளிக்க சுலபமான வழிகளும் ஜெயலலிதாவின் அறிக்கையும் என்ற பதிவு போதும், நையாண்டி செய்து பதிவிடுவதில் இவருக்கு நிகர் இவர் தான் என்பதை நிரூபிக்க. 

3. படிக்க ... ரசிக்க ... சிரிக்க ... சிந்திக்க கடைசியாக தலையில் அடித்துக்கொள்ள வாருங்கள் என அவர்கள் உண்மைகள் என்ற வலைப்பதிவுக்கு நம்மை அழைக்கும் மதுரை தமிழன்( Madurai Tamil Guy ) இருப்பது ஐக்கிய அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸியில். இலவசமாக பல்சுவை தகவல்களைத் தந்து  இதயங்களை கொள்ளை அடிக்கும் இணையதளம் என தனது வலைப்பதிவு பற்றி இவர் சொல்வது உண்மைதான். பல் வேறு தலைப்புகளில் 600 க்குமேல் பதிவிட்டிருக்கும் இவர் நகைச்சுவை என்ற தலைப்பில் இட்ட  பதிவு மட்டும்  178. இவரது நகைச்சுவை பதிவுகள் பெரும்பாலும் அங்கதம்(Satire) வகையை சேர்ந்தவை. உலகம் ஏண்டா அழியலை..... என்ற இந்த பதிவும் அந்த வகைதான்.

4. ஜோக்காளி என்ற பெயரில் வலைப்பதிவு வைத்திருக்கும் திரு K.A.பகவான்ஜி அவர்கள் 2012 ஆம் ஆண்டிலிருந்து சிரிங்க ... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க என்று பதிவிட்டுக்கொண்டு இருக்கிறார்.. இந்த பதிவில் வெவ்வேறு தலைப்புகளில் எழுதினாலும் தின சிரி ஜோக் என்ற தலைப்பில்தான் அதிகமாக பதிவிடுகிறார். இனி சர்தார்ஜி ஜோக்குகளை பதிவிடாதீர்கள் என்பதுதான் இவரிடம் நான் வைக்கும் ஒரே வேண்டுகோள்.

5. படைப்பாளி  என்பதை புனைபெயராகவும் வலைப்பதின் பெயராகவும் வைத்திருக்கும் பாலாஜி அவர்கள் ஓவியக்கல்லூரியில் முதுகலை(MFA) படித்தவர். கதை, கவிதை என்ற பெயரில் சில கிறுக்கல்களை (இது உண்மை அல்ல!) படைப்பதாக சொல்லும் இவர் முதலில் ஒரு ஓவியன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறார். வண்ணங்கள் என்ற தலைப்பின் கீழ் இவர் வெளியிட்டுள்ள வெண்தாடிவேந்தர் என் கை வண்ணத்தில் என்ற படமும், மொபைல் போன்இலவசம் என்ற இந்த கேலிச்சித்திரமும் இவர் ஓவியன் என்று பெருமைப்படுவது சரிதான் என்று சொல்லாமல் சொல்கின்றன.  

6. மைத்துளிகள் என்ற வலைப்பதிவில் 2010 ஆம் ஆண்டிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் இளைய பதிவர் மாதங்கி மௌலி  அவர்கள் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிகிறார். Music method and madness மற்றும் LIGHTER SIDE என்ற இரண்டு வலைப்பதிவுகளிலும் எழுதிக்கொண்டு இருக்கிறார். இது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்... என அழுத்தம் திருத்தமாக சொல்லும் இவரது மைத்துளிகள் என்ற முதல் பதிவே இவர் ஒரு வித்தியாசமாக சிந்திக்கக்கூடியவர் என எண்ணத்தோன்றுகிறது.  

7. இந்த பதிவுலகில் காலடி எடுத்து வைக்க உதவியவர் மதிப்பிற்குரிய அப்துல் சலாம் மஸ்தூக்கா அவர்கள் என்றால், தமிழில் தட்டச்சு செய்ய உதவியவர் சூர்யா கண்ணன் அவர்கள். அவர் பெயரிலேயே உள்ள வலைப்பதிவில் கணினிசார்ந்த தொழில்நுட்ப பதிவுகளை இட்டு வந்தார். 2௦09 ஆம் ஆண்டிலிருந்து பதிவிட்டு வந்தவர் ஏனோ தெரியவில்லை 2012 ஆம் ஆண்டுக்குப்பிறகு எதுவும் பதிவிடவில்லை. "லதா" எழுத்துருவை பயன்படுத்தி நமக்கு தேவையான தமிழ் கோப்புகளை உருவாக்க, மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கிய இலவச  Microsoft Indic Language Input Tool பற்றிய Microsoft: பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி! என்ற பயனுள்ள பதிவால் என்னால் சுலபமாக தமிழில் நினைத்ததை எழுத முடிகிறது. உங்களில் சிலருக்கும் அது உபயோகமாக இருக்கலாம். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
                                 -----------
நண்பர்களே! விடை பெறும் நேரம் வந்துவிட்டது. விளையாட்டாக ஒரு வாரம் ஓடிவிட்டது. நண்பர் திரு சீனா அவர்கள் கொடுத்த பணியை சிறப்பாக செய்தேனா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும். ஆனால் நான் அதை சிரத்தையாய் செய்தேன் என்பது மட்டும் உறுதி.

இந்த பொறுப்பை தந்த நண்பர் திரு சீனா அவர்கட்கும், இந்த வாரம் முழுதும் பின்னூட்டம் இட்டு என்னை உற்சாகப் படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு நாளை வலைச்சரம் ஆசிரியராக பணியேற்கும் நண்பரை வரவேற்று, உங்களிடமிருந்து விடை பெறுகின்றேன்.

வணக்கம்!

61 comments:

  1. சர்தார்ஜி பற்றி அருமையான தகவல் சொல்லி சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.
    நல்ல அறிமுகங்கள் மிகச் சிறப்பாகவே வலைசரம் தொடுத்திருக்கிறீர்கள்
    நன்றி ஐயா!

    ReplyDelete
  2. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

    ReplyDelete
  3. நிஜம்தான்! சர்தார்ஜிக்கள் உழைப்பிற்கு பெயர் பெற்றவர்கள். மக்கள் திலகத்தின் அழகான பாடலை தலைப்பில் நினைவூட்டி அருமையான சிந்தனையைத் தூண்டும் அலசலுடன் ஆரம்பித்த அறிமுகங்களில் முதலாவதாக என்னைக் கண்டு மனநிறைவு கொண்டேன். நம் எழுத்துப் பணிக்கான அங்கீகாரம் நாம் மதிப்பவர்கள் வாயிலாகக் கிடைக்கையில் அது தரும் ஆனந்தமே அலாதி. அந்த ஆனந்தத்தைத் தந்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி நண்பரே!

    ReplyDelete
  4. மாதங்கி மௌலி அவர்களின் தளம் எனக்கு புதியது... சர்தார்ஜி பற்றி அருமையாக சொல்லி விட்டீர்கள்... அவர்கள் மட்டுமல்ல... யாரையும் நையாண்டி செய்யாமல் இருப்பதே சிறந்தது...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... ஒவ்வொரு தலைப்புகளும் அருமை... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete
  5. வலைச்சர ஆசிரியர் பொறுப்பை மிக சிறப்பாக நிறைவேற்றயமைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. பாராட்டுக்கு நன்றி திரு பாலா கணேஷ் அவர்களே! பதிவுலகம் அறிந்த உங்களை அறிமுகம் செய்யத்தேவையில்லை. இருப்பினும் உங்களின் பதிவுகளைப்பற்றி எழுதாமல் விடமுடியாது அல்லவா?

    ReplyDelete
  7. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

    ReplyDelete
  8. தங்களுடைய மனமார்ந்த பாராட்டுகளுக்கு நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

    ReplyDelete
  9. தங்களின் படைப்புகளும்,
    அறிமுகப்படுத்திப் படுத்திய அத்துணைபேரும் முத்துக்கள்.நன்றி

    ReplyDelete
  10. நன்றி திரு கவியாழி கண்ணதாசன் அவர்களே!

    ReplyDelete
  11. வலைசரம் இன்றைய பதிவில் என் ஜோக்காளி வலைப்பதிவை அறிமுகப் படுத்திய திரு வே ,நடனசபாபதி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி !
    நான் சொந்த சரக்கை மட்டுமே பதிவிட்டு வருகிறேன் இதுவரை சிரிகதை -4ம் .சீரியஸ் கதை -1ம் ,சிரிப்பாக்கம் -4ம் ,சிரிகவிதை -131 ம் ,தினசிரி ஜோக் -165 ம் பதிவிட்டுள்ளேன் !ஒரு முறை சர்தார்ஜி என்று தலைப்பு மட்டுமே கொடுத்து இருந்தேன் .
    ,தினசிரி ஜோக்,,சிரிகவிதை ஆகிய தலைப்பில் தினசரி பதிவிட்டு வருகிறேன் ,நேரம் கிடைக்கும் போது தங்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிசெய்கிறேன்!மீண்டும் என் நன்றி !

    ReplyDelete
  12. மிகச்சிறப்பாக வலைச்சரத்தை தொடுத்த தங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  13. கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கு என் நன்றி !

    ReplyDelete
  14. Very good sites were introduced in a short time. Many of the sites were unknown to me. Thanks for introducing.

    ReplyDelete
  15. கருத்துக்கு நன்றி திரு K.A.பகவான்ஜி அவர்களே! நான் உங்களது நகைச்சுவை துணுக்குகள் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. சர்தார்ஜி ஜோக்குகளை இனி பதிவிடவேண்டாம் என்று தான் கேட்டுக்கொண்டேன்.

    ReplyDelete
  16. வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

    ReplyDelete
  17. பாராட்டுக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!

    ReplyDelete
  18. // பிச்சையெடுக்கும் சர்தார் எவரையும் இதுவரை காண முடியாததால் அவர்களிடமே அந்த பணம் இருக்கிறதாம்!” //

    சர்தார்களைப் பற்றிய ஆச்சரியமான செய்தி. உங்கள் பதிவின் மூலம் ஒரு தகவல் தெரிந்து கொண்டேன்.

    வலைச்சரம் ஆசிரியர் பணியை சிறப்பாக செயதமைக்கு எனது நன்றியும், வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  19. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

    ReplyDelete
  20. மனமார்ந்த பாராட்டு

    ReplyDelete
  21. மிகச்சிறப்பாக வலைச்சரத்தை தொடுத்து வழங்கிய தங்களுக்கு நன்றி!. சர்தார்கள் பற்றிய ஜோக்குகளை எழுதுவதற்கு சுதந்திரத்திற்குமுன் பிரிட்டீஷாரால் பத்ரிக்கைகளில் எழுதுபவர்களை ஊக்குவித்ததாக படித்திருக்கிறேன்.

    ReplyDelete
  22. தகவல் பெரும் உரிமை சட்டம் மூலம் தகவல் கேட்டதால் கொலை http://vitrustu.blogspot.in/

    ReplyDelete
  23. சிரித்து வாழ வேண்டும் ஆனாலும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்னும் பாடலுக்கேற்ப

    தங்களது பதிவு அமைந்திருக்கிறது.

    தங்களை ஆசிரியர் நாற்காலியில் உட்கார்த்தியதின் மூலம் வலைச்சரம் ஒரு தனி அந்தஸ்தை
    பெற்றுள்ளது எனவே குறிப்பிடவேண்டும். இந்த ஏழு நாட்களில் மக்கள் அறிய வேண்டிய அரிய செய்திகளை
    எடுத்துச் சொன்னதற்கு தமிழ் உலகம் உங்களுக்கு மிகவும் நன்றி சொல்லவேண்டும்.

    சுப்பு தாத்தா

    ReplyDelete
  24. பயனுள்ள தளங்கள்.
    நன்றி.
    http://techwar1.blogspot.com/2013/03/free-youtube-to-iphone-converter.html

    ReplyDelete
  25. உழைக்கும் மக்களாகிய சர்தார்ஜிகள் பற்றிய மிகச்சிறந்த, மிக உயர்ந்த கருத்துக்களை இன்று பகிர்ந்து கொண்டுள்ளது மிகவும் மகிழ்வளிக்கிறது.

    அதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள், சார்.

    >>>>>

    ReplyDelete
  26. இன்று தங்களால் அடையாளம் காணப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் என் அன்பான பாராட்டுக்கள், இனிய நல்வாழ்த்துகள்.

    வலைச்சரப்பணியை வெகு அழகாக முடித்துள்ள தங்களின் உண்மையான உழைப்புக்கு என் பாராட்டுக்கள் + நன்றிகள்.

    ReplyDelete
  27. தகுந்த பாடலும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த தங்கள் ஒரு வார ஆசிரியர் பணி சிறப்பு மீண்டும் ஒரு வாரம் தொடர்ந்தாலும் மகிழ்வோம். நன்றிங்க.

    ReplyDelete
  28. பாராட்டுக்கு நன்றி திரு பால சுப்ரமணியன் அவர்களே! தாங்கள் தந்த பதிவைப் படித்து எனது கருத்தையும் வெளியிட்டுள்ளேன்.

    ReplyDelete
  29. பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி திரு புரட்சி தமிழன் அவர்களே!

    ReplyDelete
  30. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சுப்பு தாத்தா அவர்களே! என்னைவிட வலைச்சர ஆசிரியராக, சிறப்பாக பணியாற்றியவர்கள் இருக்கிறார்கள். சொல்லப்போனால் எனக்கு வலைச்சரம்தான் தனி அந்தஸ்தை கொடுத்துள்ளது என எண்ணுகிறேன். இருப்பினும் உங்களது கருத்துக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    ReplyDelete
  31. நன்றி திரு Saruban Balsingam அவர்களே!

    ReplyDelete
  32. பாராட்டுகளுக்கும் ஸ்பெஷல் நன்றிக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! தினம் எனது பதிவைப் படித்து ஊக்குவித்தமைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  33. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

    ReplyDelete
  34. சர்தார்ஜிகள் உழைப்பிற்குப் பெயர் போனவர்கள். முடியாத வயதிலும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். அவர்களைப் பற்றிய செய்திகளோடு இன்றைய அறிமுகங்கள் அருமை.

    வலைச்சர வாரத்திற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  35. வாழ்த்திற்கு நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

    ReplyDelete
  36. சர்தார்ஜி பற்றிய நல்லதொரு சிந்தனையுடன் பதிவை ஆரம்பித்து, அதில் என் மொக்கையையும் சேர்த்த உங்களுக்கு நன்றி அய்யா.

    ReplyDelete
  37. என் நகைச்சுவை துணுக்குகள் பற்றி தங்களின் மேலான கருத்துக்களை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன் .
    சர்தார்ஜி பற்றியஉங்கள் கருத்துக்கு இந்த 'பகவான்ஜி 'க்கும் உடன்பாடே !
    உங்களுக்கும் ,திரு, பக்கிரிசாமி ,சருபன் பாலசிங்கம் ,வை ,கோபால கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி!

    ReplyDelete


  38. நீங்கள் வேடிக்கையாய் சொன்னாலும், உண்மையில் உங்கள் பதிவுகளில் சில சிந்திக்க வைக்கின்றன திரு ரஹீம் ஹஸாலி அவர்களே! வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  39. நிச்சயம் எனது கருத்துக்களை உங்கள் வலைப்பதிவில் எழுதுவேன் திரு K.A.பகவான்ஜி அவர்களே!

    ReplyDelete
  40. சிறப்பான அறிமுகங்கள்!என்னை முதன்முதல் வலைச்சரத்தில் அறிமுகம் செய்தவர் கஸாலிதான்.
    உண்ண உணவில் தொடங்கி,சிரித்து வாழ்தல் வரை சொல்லி மிகச் சிறப்பான ஒரு சரத்தை அளித்து விட்டீர்கள்.வாழ்த்துகள்

    ReplyDelete
  41. வாழ்த்துக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    ReplyDelete
  42. என் வலைப்பதிவை அறிமுகப் படுத்திய திரு வே ,நடனசபாபதி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி ! நார்ட் இண்டியாவில் வசிக்கும் சர்தாஜிகளை கிண்டல் பண்ணி ஜோக் வருவது போல செளத் இந்தியாவில் வசிக்கும் மதராஸிகளை கிண்டல் பண்ணிம் ஜோக்குகளை எழுதியும் வருகிறார்கள் சர்தாஜிகள் மட்டும் உழைப்பாளிகள் அல்ல எல்லா சமுதாயத்திலும் உழைப்பவர்கள் உள்ளனர். உழைக்காமல் யாருடைய தட்டிலும் சாப்பாடு வந்து விழாது .


    சர்தாஜி ஜோக்கோ அல்லது மதராஸி ஜோக்கோ எதுவாக இருந்தாலும் அதை நகைச்சுவையாக எடுத்து சிரித்துவிட்டு போக வேண்டுமே தவிர அதற்கு உள் அர்தத்தை தேடிபார்க்க கூடாது

    என் வலைப்பதிவை அறிமுகப் படுத்திய திரு வே ,நடனசபாபதி அவர்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள் பல

    ReplyDelete
  43. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு மதுரை தமிழன் அவர்களே! நான் சொல்ல வந்தது, மாற்றுத்திறனாளிகளை நையாண்டி செய்தும், பிற மொழியை, பிற மதத்தை,பிற சாதியை அல்லது அவர்களது நம்பிக்கையை கிண்டல் செய்தும் நகைச்சுவை என்ற பெயரில் சொல்லியும் எழுதியும் வருவது சரியல்ல என்பதுதான். அதில் எடுத்துக்காட்டாக சர்தார்ஜி ஜோக்குகளைப் பற்றி சொன்னேன்.

    ReplyDelete
  44. Your stint at "Valaicharam" will be remembered for the variety of topics chosen,and introducing hitherto unknown bloggers. The topics chosen were well researched, with wealth of information thrown in backed by statistical information and I am really surprised that you could remember relevant bloggers to introduce them in a nice manner.In fact your skill as a blogger in this Avatar appears to overshadow the skills displayed in the original Avatar. I suggest that you start a parallel blog covering topics similar to the ones that appeared in valaicharam. Be that as it may, the last in this series is very thought provoking. I concur with you , as one ,who has spent better part of his life in north, that during all my stay in Delhi I could never come across a Sardarji beggar. As rightly pointed out, their valor/enterprising spirit is well known . You have rightly stated that while healthy humor always welcome it should not be at the expense of any religion/caste/community etc.
    Vasudevan

    ReplyDelete
  45. இன்றைய அறிமுகங்களும் அருமை.
    இனிய அறிமுகங்கங்களுடன் சிற்ப்பான பணி செய்தீர்கள்.
    பாராட்டுக்கள் சார்.

    ReplyDelete
  46. தங்களின் விரிவான கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வாசு அவர்களே! நான் ஒன்றும் மற்றவர்கள் செய்யாததை செய்துவிடவில்லை. எனக்குத் தெரிந்ததை வரிசைப்படுத்தினேன் அவ்வளவுதான். இருப்பினும் தங்களது பாராட்டுக்கு நன்றி!

    ReplyDelete
  47. பாராட்டுக்கு நன்றி திரு நிஜாமுதீன் அவர்களே!

    ReplyDelete
  48. சர்தார்ஜிகள் பற்றிய தகவல் மிகச் சிறப்பாக இருந்தது. பிறர் தங்களைப் பற்றி ஜோக்கடித்து சிரித்தாலும், பிறர் தங்களைப் பார்த்து சிரிக்கும்படி வாழ்வதில்லை என்பது எல்லோருக்கும் மிகச் சிறந்த பாடம்.
    எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமான வாழ்க்கைப் பாடம்.

    மிகச் சிறப்பாக ஒரு வாரத்தைக் கொடுத்து வலைச்சர ஆசிரியர் பணியை நிறைவேற்றியதற்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  49. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களே!

    ReplyDelete
  50. மனம் நிறைந்த அருமையான வாரமாக அமைத்துவிட்டீர்கள்!

    தினம் தினம் தலைப்புகளும் சூப்பர்!

    மிகவும் ரசித்து வாசித்தேன். பின்னூட்டமிடத்தான் சுணங்கிப்போச்சு:(

    நன்றி ஆசிரியரே!

    ReplyDelete
  51. பாராட்டுக்கு நன்றி திருமதி துளசி கோபால் அவர்களே!

    ReplyDelete
  52. பாராட்டுக்கு நன்றி திரு நிஜாமுதீன் அவர்களே!

    ReplyDelete




  53. சர்தார்ஜி பற்றி அருமையான தகவல் தந்துள்ளீர் ! மனம் மிகவும் வேதனைப் படுகிறது!

    ReplyDelete
  54. கருத்துக்கு நன்றி புலவர் ஐயா அவர்களே!

    ReplyDelete
  55. மிக்க நன்றி அய்யா..என்னைப்பற்றியும் தாங்கள் எழுதியதை கண்டேன் களிப்புற்றேன்..

    ReplyDelete
  56. என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! தாங்கள் அறிமுகப் படுத்தியிருக்கும் மற்ற பதிவுகளும் எனக்கு புதியவையே... நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும்...
    -மாதங்கி மாலி

    ReplyDelete
  57. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பல புதிய அறிமுகங்களையும் இனிதாக பகிர்ந்து வாரத்தை சிறப்புறத் தந்தீர்கள்.

    பாராட்டுக்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  58. இன்றுதான் உங்கள் பின்னூட்டத்தை பார்த்தேன். நன்றி திரு ‘படைப்பாளி’ பாலாஜி அவர்களே!

    ReplyDelete
  59. இன்றுதான் உங்கள் பின்னூட்டத்தை பார்த்தேன். நன்றி திருமதி மாதங்கி மாலி அவர்களே! தங்களது பெயரை தவறாக குறிப்பிட்டமைக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  60. பாராட்டுக்கு நன்றி திருமதி மாதேவி அவர்களே!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது