07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, May 2, 2013

ப்ளேட்பீடியா - 4 - சினிமிக்ஸ்!

சினிமா+காமிக்ஸ் - காமிக்ஸை இளக்காரமாகப் பார்க்கும் நாம், காமிக்ஸ் கதாப்பாத்திரங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் மேலை நாட்டுப் படங்களை (அந்த உண்மை தெரியாமலேயே) பல காலமாய் பார்த்து ரசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்! Batman, Ironman, Spiderman, Superman, X-Men, Blademan என "Man" என்ற பெயரில் முடியும் முக்கால்வாசி படங்கள் காமிக்ஸை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுபவைதான்! சினிமாவுக்கும், காமிக்ஸுக்கும் இடையேயான தொடர்பை மையப்படுத்தி எழுதப்பட்ட பதிவுகள் சிலவற்றை இன்று பார்ப்போம்!

1. ராஜேஷ் - http://www.karundhel.com :
பிரபல (சினிமா) பதிவர் கருந்தேள், Avengers திரைப்படம் வெளியான சமயம், அப்படத்தின் சூப்பர்ஹீரோ கதாபாத்திரங்கள் பற்றி மிக விரிவான (ஐந்து பாக) பதிவொன்றை இட்டிருந்தார்! அமெரிக்க சூப்பர்ஹீரோ காமிக்ஸ்கள் பற்றிய மிகச் சிறந்த தகவல் தொகுப்பாக இப்பதிவு அமைந்துள்ளது!

அவென்ஜர்ஸ் திரைப்பட பின்னணி: பாகம் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து & விமர்சனம்!
ஸ்டான்லி மார்ட்டின் லீபர் என்ற மனிதரின் பிறப்பிலிருந்து இந்த அவெஞ்சர்ஸின் கதை துவங்குகிறது. 1922ல் ந்யூயார்க்கில் பிறந்த லீபர், இன்று 89 வயது ஆகியும், உலகம் முழுக்கப் புகழ் பெற்று விளங்கும் நபர். ஸ்பைடர் மேன், X Men, Fantastic Four, Daredevil ஆகிய கதாபாத்திரங்களை உருவாக்கிய மனிதர் இவர். காமிக்ஸ் பிதாமகர் என்று இன்று அழைக்கப்படும் இவரது இப்போதைய புகழ்பெற்ற பெயர் – ஸ்டான் லீ.

2. பாலாஜி சுந்தர் - http://picturesanimated.blogspot.com :
நண்பர் பாலாஜி சுந்தர், காமிக்ஸ்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களைப் பற்றி பல சிறப்பான பதிவுகள் இட்டிருக்கிறார்! உதாரணத்திற்கு இரண்டு பதிவுகள்:

பேட்மேன் - டார்க்னைட்:
ப்ராங் மில்லர் சிறுவனாக இருக்கும் போது பேட்மேன் காமிக்ஸின் ரசிகனாக மாறி, பின்னாளில் அந்த பேட்மேனையே ஓவியமாக வரையும் அதிர்ஷ்டசாலியாக இருந்திருக்கின்றார். சிறு வயதில் அவர் படித்த பேட்மேன் காமிக்ஸில் எவையெல்லாம் சரியில்லை என்று நினைத்தாரோ, எவையெல்லாம் சேர்க்க வேண்டும் என்று நினைத்தாரோ அதையெல்லாம் பின்னாளில் கலந்து உருவாக்கியதுதான் டார்க் க்னைட்!

சின் சிட்டி (ப்ரூஸ் வில்லிஸ்):
எனக்கு ப்ரான்க் மில்லரின் காமிக்ஸ்களின் மேல் ஆர்வம் ஏற்பட காரணம் இவரது சின் சிட்டி திரைப்படம். ஃப்ராங் மில்லர் இணை இயக்குனராக சின் சிட்டி திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் வெளியான வருடம் 01.04.2005. எனக்குத் தெரிந்தவரை ஹாலிவுட் திரைப்பட வரலாற்றில், முழுநீள திரைப்படம், ஒரு காமிக்ஸைப் போல, இன்னும் சற்று மேலே சொல்லவேண்டுமானால் காமிக்ஸாகவே உணரும்படி தயாரிக்கப் பட்ட திரைப்படம் “சின் சிட்டி”.

3. தமிழ்(செல்வன்?) - http://www.luckylimat.com :
இவருடைய பெயர் தமிழ் என்றுதான் ஆரம்பிக்கும்! அதை ஆங்கிலத்தில் திருப்பி எழுதி, அதற்கு முன்னர் லக்கி என்பதை சேர்த்து தற்போது லக்கி லிமட் என்றே அறியப்படுகிறார்! (ஸ்ஸ்ஸ்...ப்பா!). இவருடைய ஸ்பைடர்மேன் காமிக்ஸ் + சினிமா பதிவு குறிப்பிடப் பட வேண்டிய ஒன்று!

தி அமேஸிங் ஸ்பைடர்மேன் - பாகம் ஒன்று & இரண்டு!:
இதற்கு முன் வந்த ஸ்பைடர்மேன் மூன்று பாகங்களை இயக்கியவர் Sam Raimi . இவர் இயக்கிய ஸ்பைடர்மேன் படங்கள் வெற்றி பெற்றாலும்,  வசூலிலும் கலக்கினாலும்   காமிக்ஸில் ரசித்த ஸ்பைடர்மேனின் கதாபாத்திரம் மற்றும் முக்கியமான கதாபாத்திரங்கள் சரியாக காட்டப்படவில்லை  என்று பலரின் கருத்தாக இருந்தது!

4. நரேன் - http://narenpaarvai.blogspot.com :
மேலே உள்ள பதிவுகளைப் போல இது விரிவானதொரு பதிவு இல்லை என்றாலும், காமிக்ஸ் கதைகளை சினிமாவாக எடுப்பது குறித்த நரேனின் பார்வையை இப்பதிவில் பார்க்கலாம்!

டின் டின்:
நாவல் அல்லது காமிக்ஸ் புத்தகத்தின் கதையை சினிமா வடிவம் கொண்டு வருவது எளிதான விஷயம் அல்ல. அதுவும் காமிக்ஸ் கதையை சினிமா எடுப்பது என்பது கடினமான காரியம்.  படம் பார்க்க வருபவர்கள் பெரும்பான்மையானவர்கள், சிறு வயதில் அந்த காமிக்ஸ் புத்தகத்தை படித்த வளர்ந்தவர்களாக இருப்பார்கள்.

இன்றைய காமிக்ஸ் கோட்டாவிற்கு மேலே உள்ள நான்கு பதிவுகள் போதும் என்று நினைக்கிறேன்! :) கீழே உள்ள ஐந்து பதிவர்கள் வலைச்சரத்துக்கு புதியவர்கள் அல்ல என்றாலும், ஒரு ஒற்றை வரி அறிமுகம் இதோ: வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தி புண்ணியம் தேடிக்கொண்ட பதிவர்கள் இவர்கள்! ;) 

5. அப்துல் பாஸித் - http://www.bloggernanban.com :
நீங்கள் தமிழ் வலைப்பதிவராக இருக்கும் பட்சத்தில், உங்கள் வலைப்பூ வடிவமைப்பில் இவருடைய ஏதாவறு ஒரு பதிவின் பங்களிப்பு நிச்சயம் இருந்திடும் - மறுக்க முடியுமா?:
- ப்ளாக்கரில் கூகுள் ப்ளஸ் கம்மென்ட் பாக்ஸ் வசதி! 

6. பெயரில்லாத வரலாறு - http://varalaatrusuvadugal.blogspot.com :
இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று ஒரு முடிவோடு பதிவிட்டுக் கொண்டிருந்த வசு சில மாதங்களாய் தலைமறைவாக உள்ளார்! :)
- நில் கவனி தவிர் - பிளாஸ்டிக்; பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள்! 

7. ஹாரி - http://ideas.harry2g.com :
சினிமா மசாலா பதிவுகள் நிறைந்த இவருடைய வலைப்பூவை தலைகீழாக புரட்டி எடுத்தத்தில் சிக்கிய ஒரு சமூகப் பதிவு! ;)
- பெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்! 

8. பலே பிரபு - http://www.karpom.com :
என்னுடைய நச்சரிப்பு தாங்க முடியாமல் காமிக்ஸ் வாங்கி, படித்து, அவருடைய 'பலே பிரபு' வலைப்பூவில்  அதைப் பற்றி ஒரு பதிவும் போட்டார்! அதற்கு பிறகு அந்த வலைப்பூவே காணாமல் போய் விட்டது! ;) இருந்தாலும் கற்போம் தளத்தில் பயனுள்ள தகவல்களை பகிர்ந்து வருகிறார்!
- கற்போம் மே மாத இதழ்! 

9. சூர்ய பிரகாஷ் - http://www.karpom.com :
கற்போமின் கோ-ஓனர்! :) இவருடைய மற்ற வலைப்பூக்களை அறிமுகப் படுத்தலாம் என்றால் ஒன்று கூட வேலை செய்ய மாட்டேன் என்கிறது! :) எனவே மேலே உள்ள கற்போம் பதிவையே இன்னொரு முறை படித்து விடுங்கள்! ;)

இன்றைய சரக்கு தீர்ந்து விட்டது நண்பர்களே! முன்பே குறிப்பிட்டபடி வேலைப்பளு / பயணம் காரணமாக வலைச்சரத்துக்கு அதிக நேரம் ஒதுக்கமுடியாமல் போகிறது #நல்லவேளை தப்பித்தீர்கள்! :)

அன்புடன்,
கார்த்திக்
Batman - The Killing Joke!

11 comments:

  1. ஒரு தளம் மட்டும் புதியது... நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. super nanbare! miga mukkiyamaana anaiththu blog kuriththum theriviyungal! miga payanullathaaga anaiyum! nanri!

    ReplyDelete
  3. அப்துல் பாஸித் மற்றும் பலே பிரபு - இவர்களின் சேவைகளுக்கு வாழ்த்துக்கள் பல...

    ReplyDelete
  4. வணக்கம்

    இன்று அறிமுகமான அனைத்துப் பதிவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. காமிக்ஸ் பற்றிய தளங்கள் மட்டும் புதியவை.... மற்றவர்கள் அறிந்தவர்களே... நன்றி....

    ReplyDelete
  6. அட.. நன்றி நண்பரே.. உங்கள் அன்புள்ள அறிமுகத்திற்கு..

    ReplyDelete
  7. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பா! அலுவலக வேலைப்பளு காரணமாக பின்னூட்டம் இட முடியவில்லை!

    ReplyDelete
  8. எண்ணை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நண்பரே, ஆனால் என் பதிவிர்க்குரிய லிங்க் வேலை செய்யவில்லை.. காரணம் முழுமையற்ற URL link-ஐ உள்ளிட்டுளீர்கள், திருத்தம் செய்தால் மகிழ்வேன்.!

    ReplyDelete
  9. நன்றி நண்பர்களே!

    @வசு: பாசறையில் இருந்து உங்களை வெளிவர வைக்கவே திட்டமிட்டு இந்த எழுத்துப் பிழையை என் பதிவில் வைத்தேன்! :) இப்போது அந்த எண்ணம் நிறைவேறி விட்டதால் அதை சரி செய்து விட்டேன்! ;)

    ReplyDelete
  10. வசு அவர்களை வெளிவர வைத்தது - நல்ல முயற்சி...

    இரண்டு நாட்கள் - அறிமுகங்கள் ...?

    ReplyDelete
  11. //
    Karthik Somalinga said...

    @வசு: பாசறையில் இருந்து உங்களை வெளிவர வைக்கவே திட்டமிட்டு இந்த எழுத்துப் பிழையை என் பதிவில் வைத்தேன்! :) இப்போது அந்த எண்ணம் நிறைவேறி விட்டதால் அதை சரி செய்து விட்டேன்! ;)
    //

    இணைப்பை சரி செய்ததற்கு மிக்க நன்றி கார்த்திக்! :-)

    ------

    //
    திண்டுக்கல் தனபாலன் said...

    வசு அவர்களை வெளிவர வைத்தது - நல்ல முயற்சி...
    //

    திண்டுக்கல் அண்ணே, எப்பிடி இருக்கீங்க.? நலம் தானே? :-)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது