07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, August 27, 2013

தேடித் தரும் தேன்சிட்டு -2

 தினசரி தியானம்,  ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை

சுற்றி வருவோமா வலைப்பூக்களில் தேன் அருந்த ....கிளம்புங்கள்
முதலில் நெடுஞ்சாலை, விருதுநகர் பக்கம் போவோம்

எளிமையான வார்த்தைகளில் தெளிவாகக் கருத்துகளை சொல்ல முடிந்தால் அதுவே சிறப்பான எழுத்து. 
அது எவ்வளவு உண்மை என்பதை நெடுஞ்சாலை வலைப்பூவில் வேல்முருகன் அவர்கள் எழுத்தாளர் மலர்வதியின் வரிகளில் நமக்கு எடுத்துக்காட்டுகிறார்.
”நாலுபேரு பாராட்டனும்னு பத்துபேருக்கு விழா நடத்தி உதவிசெய்வானுங்க ஆன தனியேபோய் உதவி கேட்டு போனா செய்யமாட்டாக என வசதிபடைத்தோரின் குணநலனை சாடும்போது   இன்றைய அரசியல்வாதிகளின் முகமுடிகளும் நம்முன் வந்து செல்கிறது.
  கிளைகளின் சலனம்
  ஊருக்கு தெரியும்?
  வேர்களின் அழுகை
  யாருக்கு தெரியும்?
  இப்படி நாவல்களின் இடையே கதாபாத்திரங்களின் வேதனைகள் கவிதைகளாக பதிவு செய்துள்ளது நாவலுக்கு   அழகுசேர்க்கின்றன
மேற்கண்ட வரிகள் சமீபத்தில் சாகித்ய அகடெமி விருது பெற்ற தூப்புக்காரி நாவலில் இடம் பெற்றுள்ளது. அதன் ஆசிரியை மலர்வதி அவர்களின் சந்திப்பைப் பற்றி தமது ஏப்ரல் மாத இடுகையில் வேல்முருகன் விவரிக்கிறார்.
..........திருவள்ளுவர் புத்தககடைக்கு சென்று கடையில் விபரம் கூறி தூப்புக்காரி நாவல் வாங்கிகொண்டு, நாவல் பெற்றுக்கொண்ட விபரத்தை நாவலாசிரியர் மலர்வதிக்கு போன்செய்து நன்றிகூற, அவர் கடைக்கு ஐந்துநிமிடத்தில் வந்துவிட்டார்,  விருது பெற்றவர் வாசகனை தேடி வந்து சந்தித்தது மகிழ்ச்சியளித்தது.
நாவல்களை படித்துவிட்டு நாவலாசரியர்களை சந்தித்த அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு ஆனால் நாவல் படிக்கும்முன்பே நாவலாசிரியரை சந்தித்த அனுபவம் வித்தியாசமானதாக இருந்தது....
மலர்வதி என்கிற நாவலாசிரியரின் எளிமையையும் மற்றும் அவருடனான நேர்காணலையும் அறிய இடுகைக்கான இணைப்பு  தூப்புக்காரி நாவல் 
வேல்முருகனே ஒரு நல்ல படைப்பாளி. தவிப்பு என்கிற பெயரில் அவருடைய கதையின் ஒரு துணுக்கைப் படியுங்கள்
“.........அப்படியே பூனை கழுத்தை பிடித்து தூக்கி ஜவுளி வாங்கும் போது தந்த கட்டை பையில் வைத்து பையை இருக்க மூடிபிடித்து கொண்டேன், மகளை பெப் ஸ்கூட்டரை ஓட்டசொல்ல பின்னால் உட்கார்ந்து கொண்டு, வீட்டில் இருந்து ஒரு கி.மீ தள்ளி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பையை திறந்து பூனையை வெளியில் விட்டேன். வெளியில் வந்த பூனை எங்களை பார்த்துவிட்டு புதர்குள் ஓடிவிட்டது.
               அப்பாடா என நிம்மதி மூச்சை விட்டுவிட்டு வீடு வந்தேன். பாதியில் விட்ட சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு உடைமாற்றி அலுவலகம் கிளம்ப பைக்கை வாசலில் இருந்து கீழே இறக்கிகொண்டு இருந்தேன், மியாவ் என குரல் கொடுத்துகொண்டே என்னை கடந்து என் வீட்டு தோட்டத்தில் நூழைந்த பூனையை நானும், என்னை வழி அனுப்பவந்த மனைவியும்,ஆச்சரியமாக பார்த்துகொண்டிருந்தோம்.........................
அப்புறம் என்ன ஆச்சு? விடை  - இடுகை தவிப்பு   என்ற பெயரில் 
எழுத்தின் மீது அதீத காதல் கொண்டவர் என்பது அவருடைய இலக்கிய நண்பர்களின் தொடர்பு பற்றி விவரிக்கும் போது நன்கு புரிகிறது.  இவரை புக்மார்க் செய்து கொள்ளுங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------
சாத்தான்குளம் வாசகசாலை: என்ற பெயரில் வலைப்பூவில் எழுதி வரும் சொர்ணமித்திரனும் புத்தகவாசிப்பில் பெரும்பிடிப்பு உள்ளவர்,  தேரிக்காட்டில் ஒரு எழுத்துக்காடு என்னும் இடுகையில் ஒரு சிறுகதை எழுத்தாளரைச் சந்திக்கச் செல்கிறார். அதை அவர் சொற்களிலே காண்போம் 
”....அது சுற்றிலும் தொழிலாளர் மிகுந்த பகுதி. அங்கு அதில் பனை ஓலையால் வேயப்பட்ட சிறு கோழி இறைச்சிக்கடை. அதன் பின்னால் சிறு விறகு கடை.காலை நேரம் அந்தக் கைகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. கோழிகளை துண்டு துண்டுகளாக்குகிறது.  மின் நிறுவையில் போடுகிறது.  பணத்தை பெற்று கல்லாவில் போடுகிறது. அந்த கைகள் உழைத்து உழைத்து இறுகிப்போனதாய் தெரிகிறது.  அந்தக் கைகளுக்கு சொந்தக்காரர் ஆறுமுகப்பெருமாள். வாடிக்கையாளர்களிடம் இன்முகமாய் பேசுகிறார்.  நாட்டு நடப்புகளை அலசுகிறார்.
முற்பகல் வியாபாரம் முடிகிறது.  இரத்தம் தோய்ந்த கைகள்  அலசப்படுகின்றன.
பிற்பகல் அதே கைகளில் இப்பொழுது பேப்பரும் பேனாவும் சிந்தனைகள் எழுத்துக்களாய் மாறி சிறுகதைகளாய் பிறக்கின்றன.  மாலை நேரம் அவரைத்தேடி இலக்கிய விரும்பிகள் வருகிறார்கள். இப்பொழுது அந்தக் கைகளுக்கு சொந்தக்காரர் கண்ணகுமார விஸ்வரூபன். தமிழ் சிறுகதை எழுத்தாளர். இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவர் படித்திருப்பதோ எட்டாம் வகுப்பு வரை மட்டுமே........
 மிகவும் அபூர்வமான நேர்காணல் வாசிப்பு. கண்டிப்பாக வாசியுங்கள்
சொர்ணமித்திரனின் குறுங்கவிதைகளும்  சுவையானவை
துருப்பிடித்து தவமிருக்கிறது  
செல்போன் அழியட்டும் என்று  
தபால்பெட்டி!  
ஆழிமழையும் அம்மாவின் மிக்ஸியும் என்னும் சிறுகதை இவரிடம் எழுத்து இயல்பாக இருக்கிறது என்பதை காட்டுகிறது .
இவருக்கும் வாசகர் வட்டம் பெருக வேண்டும்.
------------------------------------------------------------------------------------------------------------------
சமூகத்தை பீடித்திருக்கும் அவலங்களையெல்லாம் சாடத் துடிப்பவர்  இவர். அது பொது நம்பிக்கையாகட்டும், பத்திரிக்கைகளாகட்டும் அல்லது வாழ்க்கை முறைகளாகட்டும் எல்லாவற்றையும் அலசுகிறார். சொல்ல வரும் கருத்தில் தெளிவு, எளிமை  இரண்டையும் காணமுடிகிறது
பிச்சைக்காரர்களைக் கண்டாலே எனக்குப் பிடிக்கவில்லை ஏனெனில் அவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் பிச்சை எடுக்க தகுதியற்றவர்கள்” என்று சொல்லி ஆரம்பிக்கும் காமராஜ் என்னும் காமகிழத்தன் அவர்களை வைத்து தான் நடத்திய பரிசோதனையை சொல்லுகிறார்
“நடக்கவே நடக்காது என்று நம்புகிற ஒன்று நடந்து முடிந்துவிட்டால் மனிதர்களுக்குக் கடவுள் நினைப்பு வந்துவிடுகிறது. முழுசா ஒரு பத்து ரூபாயை யாரும் பிச்சையாகக் கொடுக்க மாட்டார்கள் என்பது அந்தக் கிழப் பிச்சைக்காரனுக்குத் தெரியும்தான். இருந்தும் ஒரு அவசரத் தேவைக்காகக் முயற்சி செய்திருக்கிறான். எதிர்பாராதது நடந்தபோது அவனுக்கும் அவன் குலதெய்வம்  நினைவுக்கு வந்துவிட்டது.
இந்த நிகழ்வு முடிந்த சிறிது நேரத்தில் என் சிந்தனை வானில் ஒரு சிறு பொறி.
இன்னும் கொஞ்சம் பிச்சைக்காரர்களுக்குத் தலா பத்து ரூபாய்  கொடுத்து, அவர்களிடம், “நீ கடவுளை நம்புகிறாயா?” என்று கேட்டால் அவர்களின் பதில்கள் என்னென்னவாக இருக்கும்?
அவருக்கு என்னென்ன பதில்கள் கிடைத்தன என்பதை அறிய ’நான் நீங்கள் அவர்கள் ’ என்னும் வலைப்பூவில் சொல்கிறார் பத்து ரூபாய்களும் பத்து பிச்சைக்காரர்களும் கடவுளும்.  இவர் விதியோடும் கொஞ்சம் விளையாட யாவரையும் அழைக்கிறார் :
”என்னப்பா காமக்கிழத்தா, விதி விதின்னு நீ பாட்டுக்குக் கதை அளந்துட்டே போற? ஐந்தறிவு ஜீவன்களும் ஜடப்பொருள்களும் ஒரு பக்கம் இருக்கட்டும். மனுசங்க தங்களுடைய ஆறாவது அறிவைக்கொண்டுதான் சிந்திக்கிறாங்க; செயல்படுறாங்க. அவங்களை எப்படி விதி கட்டுப்படுத்தும்?”னு நீங்க கேட்க நினைக்கிறீங்கதானே?
அதே கேள்வியைத்தான், கடவுள், ஆன்மா, மறுபிறப்பு, பாவம், புண்ணியம்னு ஏதேதோ பேசுற ஆன்மிகவாதிகள்கிட்டே  நானும் கேட்க நினைக்கிறேங்க.”“என்னப்பா இது, விதிக்கு விளக்கம் தந்து, உதாரணம் எல்லாம் தந்த நீ இப்போ கட்சி மாறிப் பேசி குழப்புறே?”-இது நீங்க.
நான் கட்சியெல்லாம் மாறலீங்க....................
’’ அவருடைய முடிவு என்ன ?  -  படியுங்கள் “ வாருங்கள் விதியோடு  கொஞ்ச(சி)ம் விளையாடுவோம்
-------------------------------------------------------------------------------------------------------------------
எவனோ யாரோ - அப்படீன்னு அடையாளம் காட்டிக்கத் தயங்குறாரே அவர்தான் உதயா பகத் : 
GDP ன்னா என்னங்க ? அப்படீன்னு கேக்கிறவங்களுக்கு இங்கே சிம்பிளா பொருளாதார விளக்கம் தருகிறார்
நம்ம மதுரை ன்னு பழைய காலத்து மதுரை புகைப்படங்களை போட்டிருக்கிறார். மதுரை எவ்வளவு அழகா இருந்திருக்கு என்கிற ஏக்கம்தான் மிஞ்சுது  அவசியம் பாருங்க  நம்ம மதுரை
-------------------------------------------------------------------------------------------------------------
தென்பொதிகைத் தேன் எல்லாம் ருசியாய் இருந்ததா? 
மலர்வதி யும் விஸ்வரூபனும் பள்ளிக்கூடம் கூட படிச்சு முடிக்காதவங்க. அவர்களைப் போன்ற நிறைய பேர் - மலர்வதி அவர்களின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்- தமிழ் என்னும் மரத்தின் வேர். அவர்கள் தான் இதயத்தின் ஒலியை சத்தாக மாற்றி தமிழ் மரத்திற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். படிப்பறிவு என்னும் காற்றில் சலசலக்கும் இலைகளாக நம் வலைத்தளங்கள் ஆகாமல் தரமான எழுத்திற்கு வேர்களாக மாற்றுவோம். ஏனென்றால் இலைகளுக்கு உதிர்காலம் உண்டு. விரைவிலேயே காணாமல் போய்விடும்.  வேர்களுக்கு அது இல்லை.

லேட்டாயிடுச்சு.  நாளைக்கு எங்க போறோம் என்கிறதையும் இனிமேதான் பார்க்கணும்.   நிர்வாகம் பற்றிய ஒரு கதை சொல்லியிருக்கேன் [ கார்பொரேட் ஸ்டோரி ] அதையும் படிச்சுகிட்டு இருங்க.
 நாளை மீண்டும் சந்திப்போம். அது வரை இனிய வாசிப்பு தொடரட்டும்.

19 comments:

  1. ஆஹா, நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள விதமே மிக அருமை. மிகுந்த சிரத்தையுடனும், ரசனையுடனும் செய்திருக்கிறீர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. அறிமுகங்கள்
    அனைவருக்கும்
    வாழ்த்துகள்..!

    ReplyDelete
  3. வேர்களின் அழுகை யாருக்குத் தெரியும்? அந்த வேர்களை அறிமுகப்படுத்துதி

    வலைச்சரப்பணியை சிறப்பாக ஆரம்பித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. கபீரன்பன்,

    என் பதிவுகளை முழுமையாகப் படித்து ஆராய்ந்து முழு மனதுடன் பாராட்டியிருக்கிறீர்கள்.

    தங்களுக்கும் மதிப்பிற்குரிய சீனா, தமிழ்வாசி பிரகாஷ் ஆகியோருக்கும் நன்றி சொல்வதோடு, இனியும் தரமான, பயனுள்ள பதிவுகளைத் தருவது என் கடமை என்பதையும் உள்மனதில் பதிந்துகொள்கிறேன்.

    மிக்க நன்றி.

    ஒரு சிறு திருத்தம்: என் இயற்பெயர் ‘காமராஜ்’ அல்ல. என் சுய விவரக்குறிப்பு அவ்வாறு நம்பும் வகையில் அமைந்துவிட்டது.

    பெயரை ஒட்டிப் [என் பெயர் அல்ல] போதிய விளக்கத்தைச் சேர்த்துவிட்டேன்.

    மீண்டும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் விளக்கத்திற்கான காரணம் புரிவதற்காக இடுகையில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. மேலும் சிறப்புடன் எழுதி வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
      அன்புடன் கபீரன்பன்

      Delete
  5. தங்களால் பாராட்டப்பட்ட ஏனைய பதிவர்களுக்கு என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அறிமுக பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தாங்கள் குறிப்பிட்டுள்ள மேலாண்மைக் கதை மிக அருமை.

    ReplyDelete
  7. மிகவும் வித்தியாசமான முறையில் சிறப்பான பதிவுகளையும் பதிவர்களையும் அறிமுகப்படுத்தியவிதம் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. தினசரி தியானத்திலிருந்து உடம்பினில் உத்தமனை காணச்சொல்லும் அமுத மொழி பகிர்வு அருமை.
    வேர்களின் அழுகை
    யாருக்கு தெரியும்?//
    மிக அருமை.

    தவிப்பு கதையில் வரும் பூனை விஷயம் நன்றாக இருக்கிறது. நாய் மனிதர்களையும், பூனை வீட்டையும் தான் நம்பும் என்பதற்கு சாட்சி.
    அந்த வீட்டில் வசித்தவர்கள் விட்டு போனாலும் பூனை அந்த வீட்டை விடாது என்பார்கள்.
    நீங்கள் குறிபிட்ட பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
    எல்லோர் வலைத்தளம் சென்று வாசித்து மகிழ்கிறேன்.

    தென்பொதிகைத் தேன் எல்லாம் ருசியாய் இருந்ததா? //
    அனைத்தும் ருசி.
    // இதயத்தின் ஒலியை சத்தாக மாற்றி தமிழ் மரத்திற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்//
    அழகாய் சொன்னீர்கள்.

    நல்ல பதிவுகளை தேடி படிக்க கொடுத்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி மேடம்.

      ///தவிப்பு கதையில் வரும் பூனை விஷயம் நன்றாக இருக்கிறது.///

      மறக்காமல் ஆசிரியருடைய வலைப்பூவிலும் பின்னூட்டம் இட்டு ஆசிரியர்களை வாழ்த்த வேண்டுகிறேன்
      ஆதரவுக்கு நன்றி

      Delete
  9. அனைவருக்கும் வாழ்த்துக்கள். சிறப்பான முறையில் நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி!.. தினசரி தியானம் சிந்தைக்கு விருந்து!..

    ReplyDelete
  10. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. வித்தியாசமான அறிமுகம், விளக்கமான எடுத்துக் காட்டு என அருமையான படைப்பு. வளரும் பதிவர்களை ஊக்குவிக்கம் நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.-கவிஞர் இராய செல்லப்பா [சென்னையில் இருந்து]

    ReplyDelete
  12. வித்தியாசமாய் அழகிய அறிமுகங்கள்...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
    கலக்குங்க...

    ReplyDelete
  13. அட்டகாசமான பகிர்வுகள் ...!

    கபீர்ஜி அப்டியே அங்கிருந்தே என்னுடைய HUG ஐ பெற்றுக்கொள்ளுங்கள் ப்ளீஸ் ...!

    சொர்ணமித்திரன் குறுங்கவிதைகள் - சான்சே இல்ல ரெம்பப் பிரமாதம் ...!

    ReplyDelete
  14. வணக்கம், தங்கள் வலைச்சரத்தில் என் நெடுஞ்சாலை க்கு ஓர் பாராட்டு மகிழ்ச்சி

    ReplyDelete
  15. எனது வலைப்பதிவை இந்த தளத்தில் அறிமுகப்படுத்திய கபீரன்பருக்கு மிக்க நன்றி.மேலும் எழுதுவதற்கு எனக்கு ஊக்கத்தை அளித்தீர்கள்.

    ReplyDelete
  16. செவ்வாய் இடுகைக்கு பின்னூட்டமிட்டு உற்சாகம் ஊட்டிய
    @கவிநயா
    @இராஜராஜேஸ்வரி
    @சேதுராமன் ஆனந்தகிருஷ்ணன்
    @காமக்கிழத்தன்
    @நடனசபாபதி
    @சுரேஷ்
    @கோமதி மேடம்
    @துரை செல்வராஜ்
    @2008ரூபன்
    @செல்லப்பா யக்ஞசாமி
    @சே.குமார்
    @ஜீவன் சுப்பு
    @வேல்முருகன்
    @சொர்ணமித்திரன்
    யாவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
    பயணத்தில் இன்னும் உடன் வாருங்கள்

    ReplyDelete
  17. அருமையான, அதே சமயம் புதுமையான எழுத்தாளர்களின் பதிவுகள். இவர்களை எல்லாம் அறிந்தேன் இல்லை. ஒவ்வொருத்தராகச் சென்று படிக்கவேண்டும். அறிமுகம் செய்திருக்கும் விதம் அருமை/ இந்தச் சரமும் நல்ல ரத்தினச் சரமே.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது