07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, August 22, 2013

கோவையிலிருந்து அகிலா – 4

இனிய வணக்கம் நண்பர்களே...


குட்டிக் கவிதை

உதிர்ந்து போன குல்மோகர் பூக்களை
தொட்டு சென்ற மழை நீரால்
சிவப்பாய் சாலை...


எழுத்தும் அதன் அழகும் : இயற்கை
இயற்கையை அதன் தன்மையோடு மட்டுமே வடித்தல் இயலாது. அலங்காரமான இலக்கியம் தான் இயற்கை பற்றிய எழுத்துக்களுக்கு ஒத்துப் போகும். அவற்றின் வருணனை பூசிய வார்த்தைகள் நேரில் பார்க்கும் நிஜத்தைவிட அழகாக பரிணமிக்கும்.

இனி இன்று என் மனதுக்குப்பிடித்து பதிந்த சில பதிவுகளைப் பார்ப்போம். 

பதிவர் தி. தமிழ் இளங்கோ தனது வலைப்பூவான 'எனது எண்ணங்கள்' களில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரசு மருத்துமனையாய் இருந்தாலும் அங்கு இருக்கும் கவனிப்பு முறை நேர்த்தியாக இருப்பதாகக் குறிப்பிட்டு உள்ளார். 
கோவில் கொடைகளின் அன்னதானம்  செய்யும் முறையின் பயன்களைச் சொல்லும் பதிவும் இவருக்கு சமூகத்தின் மீதான அக்கறையை வெளிப்படுகிறது.
 பழைய ரயில்வே கேட் பதிவில் நினைவில் நிற்பவைகளையும் சுவாசித்திருக்கிறார். 


பதிவர் ராம்குமார் அவர்கள் தனக்கு தானே ரசித்து எழுதிய எழுத்துகளை வாலியும் நானும்  பதிவிலும், அருமையாகப் புரணி பேசுவதை நீ முதலில் யோக்கியமா பதிவிலும் சொல்லுகிறார் சிவகாசிக்காரன் என்னும் தன் வலைப்பூவில்... 


பதிவர் ரூபக் ராமின் கையேந்தி பவன், ரோட்டோரக் கடைகளின் சாப்பாடு பற்றிய பதிவு அருமை. திருவான்மியூர் ஆர் டி ஓ சாலையில் ஒரு உணவு வேட்டை நடத்தியதை கலக்கலாக எழுதியிருக்கிறார் இவரது வலைப்பூவான கனவு மெய்ப்படவில். சுவாரசியமான பதிவுகள் ...


பதிவர் ராமன் படங்களைக் பழமொழிகளைக் கண்டுபிடிக்கச் சொல்லி விடுகதை வைத்திருக்கிறார். அடுத்த பதிவில் அதற்கு விடையும் கொடுத்திருக்கிறார் இன்றைய அரசியல் பொருளாதாரத்தை எண்ணிப் பார்ப்பதில்லை என்று கவலையும் படுகிறார் இவரது வலைப்பூவான ஒரு ஊழியனின் குரலில்...


சந்தோஷமா இருங்க...
நாளைக்கு வரேன்...



33 comments:

  1. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நன்றி அகிலா, அரசியல் நிகழ்வுகள் குறித்து எழுதும்போது கிடைக்கும் வரவேற்பு, பொருளாதாரம் பற்றி எழுதும்போது கிடைப்பதில்லையே என்ற ஆதங்கம் எனக்கு எப்போதும் உண்டு. தாங்கள் கவனித்து அறிமுகம் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமன்...மேலும் நிறைய எழுத என் வாழ்த்துக்கள்...

      Delete
  3. அறிமுகம் செய்தமைக்கு அகிலா அவர்களுக்கும் தகவல் அளித்தமைக்கு ரூபன் அவர்களுக்கும் நன்றி

    ReplyDelete
  4. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்...

      Delete
  5. உங்க ஸ்டைல்ல அறிமுகங்கள் அழுகுடன் மிளிர்கிறது..

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்களுக்கு...

      Delete
  6. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
    குட்டிக் கவிதை மனதைத் தொட்டுச் சென்றது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்களின் பாராட்டுக்கு...

      Delete
  7. நல்ல அறிமுகங்களைத் தந்துள்ளீர்கள். . அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. இன்றைய வலைச்சரத்தில் எனது பதிவுகளை அறிமுகப்படுத்திய சகோதரி அகிலா அவர்களுக்கு நன்றி! இந்த தகவலைத் தெரியப்படுத்திய சகோதரர்கள் க்விஞர் ரூபன் மற்றும் திண்டுக்கல் தனபால இருவருக்கும் நன்றி1

    சகோதரி அவர்களுக்கு, நான் வலைப்பதிவில் தொடர்ந்து எழுதுவதா அல்லது எப்போதாவது எழுதுவதா என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், உங்களது வலைச்சர அறிமுகம் ஒரு உற்சாகம் தருகிறது. மீண்டும் ஒருமுறை நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நிறைய எழுதுங்கள்...உங்களின் எழுத்துக்களில் தெரியும் சமூக அக்கறை அதிகமாக கவனிக்கப்படும்...நன்றி...

      Delete
  9. இன்றைய அறிமுகங்கள் அனைவரும் எனக்கு தெரிந்தவர்களே!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராஜி...

      Delete
  10. அன்பின் அகிலா - அருமையான பதிவு - அறிமுகங்கள் அனைத்துமே அருமை - குட்டிக் கவிதை அருமை. சுருக்கமான் கருத்து - அறிமுகப் படுத்தப் பட்ட நான்கு பதிவர்களின் ஒன்பது பதிவுகளையும் சென்று பார்த்து படித்து இரசித்து மகிழ்ந்து மறுமொழி இட்டு வந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சீனா உங்களுக்கு...

      Delete
  11. பூக்களை தொட்டுச் சென்ற மழை நீர் - மனதையும் தொட்டுச் சென்றது!.. இன்றைய அறிமுகங்கள் அனைத்தும் அருமை!.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்களுக்கு...

      Delete
  12. நல்ல அறிமுகங்கள்...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த தங்களுக்கு மிக்க நன்றி :)

    வலைச்சர அறிமுகம் குறித்து சீனா ஐயா, ரூபன் மற்றும் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கருத்துரையில் சொல்லி இருந்தபோது, யார் என்னை அறிமுகம் செய்தவர் என்ற ஒரு எதிர்பார்ப்புடன் வந்து பார்த்தேன்.

    மேலும் ஒரு சகோதரி கிடைத்ததில் மகிழ்ச்சி... உங்கள் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    அறிமுகம் செய்யப் பட்ட மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி ரூபக் ராம்...

      Delete
  14. கவிதையின் கற்பனை அசத்தல்.
    பதிவர்கள் அறிமுகங்களும் சிறந்ததொரு தொகுப்பு!

    ReplyDelete
  15. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. அன்பின் அகிலா, அன்பான வணக்கமும் வாழ்த்துகளும்.

    என வலைப்பூந்தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com/ சென்று ஆங்குப் பதியமிடப்பட்டுள்ள கவிமலர்களில் தங்களின் நாசி நுகர்ந்து வாசித்தவைகளை இம்மாபெரும் வலைச்சரத்தில் கோத்து விட்டமைக்கும், அவைகளையும் அக்கவிமலர்களைப் படைத்தவனாகிய என்னையும் வெகுவாகப் பாராட்டியும் இக்கவிமுமம் ஈண்டு அறிமுகம் ஆக்கப்பட்டிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    உங்களின் வருகைக்கும், வாழ்த்துரைக்கும் என் உளம் நிறைவான நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி கலாம் அவர்களே...நல்ல படைப்புக்கைளைத் தந்த உங்களுக்கும் ஏன் நன்றி...

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது