07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, August 30, 2013

தேடித் தரும் தேன்சிட்டு-5

 தினசரி தியானம்; ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்  திருப்பராய்த்துறை

வணக்கம் யாவருக்கும்.   இன்றைக்கு சுற்றுக்கு ரெடியா ?
இன்றைக்கு ஒரு மாதிரிதான் ! ’ஒருமாதிரி’-ன்னா கவலைப்படணும்-கைவிடப்பட்ட கேஸ்.   ஆனால் பிரிச்சு ’ஒரு மாதிரி’ ன்னு எழுதினால் அதை ‘ஒரு உதாரணம்’ என்று வைத்துக் கொள்ளலாம் இல்லையா?

வலைப்பதிவர் ஹிலால் முஸ்தாபா, அண்ணாமலை பல்கலைகழகத்தில் தமிழ் புலவர் (தங்கபதக்கம்) பட்டம் பெற்றவர். அவருடைய பேச்சுப் பிரதேசம்-’எது மாதிரியும் அல்ல இது ஒரு மாதிரி’ என்று இரட்டைப் பொருள் வரும்படி எழுதியிருந்ததே என்னை அவருடைய வலைப்பூவில் கணிசமான நேரம் பிடித்து வைத்தது. நேரடியாக வெளிவரும் அவருடைய எழுத்து படிப்பவர் மனதை உடனே சென்று அடைகிறது. அது கதையாகட்டும் கவிதையாகட்டும் ஈர்ப்பு ஒரே மாதிரி தான்.
எதுவும் வரட்டும் துணிகின்றேன்!
நிறைவோ , குறைவோ வெறுப்பில்லை - நீ
நினைத்ததே நடக்கும் மறுப்பில்லை!
புத்தகம் ஆயிரம் படித்துவிட்டேன் - என்
புத்தியால் அதனைப் பிடித்துவிட்டேன்!
செத்ததும் எதுவும் தொடர்வதில்லை - என்
சிந்தனை அங்கே படர்வதில்லை!

 ‘எப்போதோ கொட்டிய மழைத்துளிகள்  என்ற கவிதையில்.

  இது எப்படி நடந்தது என்று தம் சுயசரிதத்தை சொல்லும் கட்டுரைத் தொடரும் வாழ்வின் திருப்புமுனைகளை சுவையாக சுட்டிக்காட்டுகின்றன. படிப்பில் தன் பின்தங்கிய அனுபவத்தை சொல்கிறார் 
 எக்ஸாம் நெருங்கி விட்டது. நான், என் கூடப் படித்த மாணவர்களை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடி விட்டேன். கல்கத்தா போய் பிழைத்துக் கொள்ளலாம் என்று சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குச் சென்று அங்கு நின்றிருந்த ஒரு ரயிலில் ஏறி சென்று விட்டோம். அரக்கோணத்தில் டிக்கெட் பரிசோதகர் பிடித்துக் கொண்டார். பள்ளிக் கூட புத்தகப் பையோடு நாங்கள் இருந்ததால் எங்களை மீண்டும் சென்னைக்குத் திருப்பி அனுப்பி விட்டார்.
மற்றொரு இடுகையில் அவருக்கு சிதம்பரத்தில் இருந்த காலத்தில் ஏற்பட்ட அனுபவத்தை எழுதியிருக்கிறார்.
ஒரு நாள் நல்ல வெயில் நேரம். மதியம். நகரத்தார் சத்திரத்தில் உள்ளே உள்ள கருங்கல் முற்றத்தில் நானும் ஐயாவும் உட்கார்ந்து வழக்கம் போல் விவாதித்துக் கொண்டிருந்தோம். ஐயா நல்ல தமிழறிஞர், அதே அளவு ஆங்கிலப் புலமை உள்ளவர். நகரத்தார் சத்திர வாசலில் ஒரு யாசகரின் பிச்சை ஒலி கேட்கிறது. ஐயா வாசலைப் பார்த்து அமர்ந்திருக்கிறார். நான் அவருக்கு எதிரே இருக்கிறேன். என் பிடரிக்கு பின்னால் வாசல் இருக்கிறது. ஐயா யாசகரை பார்த்து விட்டு திடுக்கிற்று "ஹிலால் திரும்பிப் பார், திரும்பிப் பார்" என்று சத்தமிட்டார். நான் உடனே திரும்பிப் பார்த்தேன். வாசலில் ஒரு சினிமாக் காட்சிப் போல் இருந்தது. யாசகர் தலைக்கு பின்னால் ஒரு ஒளிவட்டம் நாங்கள் இருவரும் பார்க்கும் போது தோன்றி, நின்று மறைந்தது. யாசகம் கேட்டவர் எதையும் பெறாமல் வீதியில் இறங்கி நடக்கலானார். ஐயா பதறிப் போய் எழுந்து வாசலை நோக்கி ஓடினார்.அவர் ஓடியதால் நானும் ஓடினேன். வீதியில் இறங்கி யாசகரைப் பார்த்தோம். அவர் அங்கே தென்படவே இல்லை.  
மேலும் அறிய  குங்குலியம் செட்டியார் பற்றி படிக்கவும்.

ஹிலால் முஸ்தாபா பக்கீர் என்ற கதையில் எளியவனின் மனப்போராட்டத்தை சித்தரிக்கிறார் 

ஒரு நல்ல தமிழ் வளமுள்ள வலைத்தளம் ‘பேச்சுப் பிரதேசம்.

---------------------------------------------------------------------------------------------
அடுத்து நம் கவனத்திற்கு வருவது ’கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்’ அவருடைய பெயரை வைத்தே சொல்லிவிடலாம் இவர் ராணுவ வீரர் என்று. திருவாரூர் அருகில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் அண்டார்டிகா-தென் துருவத்தை - வெற்றி கொண்டவர்.
“அண்டார்டிகா ( தென்துருவம் ) -வில் உள்ள, “தக்‌ஷின் கங்கோத்ரி “ என்ற இந்திய ஆய்வு மையத்தின் தலைவராகத் திகழும் வாய்ப்பைப் பெற்றது எமது வாழ்விலோர் அதிசயம்! உலகிலேயே கொடுமையான குளிரும் ( -89.6C ), பனிக்காற்றும் ( 300 KM/Hr ) நிறைந்த அண்டார்டிகா ஒரு உலக அதிசயம். 480 நாட்கள் உலகத்துடன் எந்தத் தொடர்பும் இன்றி எமது தலைமையில் இயங்கிய இந்திய ஆய்வுக் குழு மகத்தான சாதனைகள் புரிந்து அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளின் தென் துருவ ஆய்வுக் குழுவினரின் பாராட்டுதலைப் பெற்று நாடு திரும்பினோம்” 
இவருடைய பதிவுகள் நிர்வாக இயலில் விருப்பம் உள்ளவர்களுக்கு மிகவும் விருப்பத்தைத் தரும். எண்ணங்களே வாழ்க்கை,  மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை, தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்று பல தலைப்புகளை இவரது எழுத்து ஆட்கொள்கிறது. இவற்றில் விசேஷம் என்னவெனில் இவைகள் சொல்லவருவதை ரத்தினச் சுருக்கமாக சொல்லுகின்றன.
அகத்தூண்டுதல்கள் வாசகர்களுக்கு நல்ல சிந்தனைகளை வழங்க முயலும் வித்தியாசமான வலைப்பூ
 -------------------------------------------------------------------------------
 அடுத்து நாம் பார்க்கப் போவது ஒரு எழுத்தாளரது வலைப்பூ சில நேரங்களில் சில கருத்துகள் அவர் பெயர் பத்ரிநாத்
1995 முதல் 2000 வரையிலான ஒரு வித மன எழுச்சியில் எத்தனை கதைகள் எழுதினேன் என்பதே தெரியவில்லை.. உருப்படியாக 100 சிறுகதைகள் தேரும்.. ஒரு நாவல் ஒன்றும் எழுதினேன்.. 100ல் பெரும்பான்மை கதைகள் புத்தமாக வந்திருக்கிறது. 5 தொகுதிகளாக பிளஸ் ஒரு நாவல்.....
 படிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளாத மிகச் சிறிய பதிவுகள். தன் கருத்துகளை முன் வைக்கும் போது கருத்து என்ற அளவிலேயே நிறுத்தி கொள்ளும் எளிமை எனக்குப் பிடித்திருக்கிறது.
அவர்கள் பேசிய விதம் body language பிற கலைஞர்களை பாராட்டும் விதம், தன்னுடைய கடந்த கால நிகழ்வுகளை நினைவுகூர்ந்தது ஆகியவை வைத்துப் பார்க்கும் போது “சே எத்தனை வெள்ளெந்தி மனிதர்களாக இருக்கிறார்கள்“ என்பது தெரிந்தது. அடித்துச் சொல்ல முடியும் ஒரு இம்மிளவுகூட கர்வமில்லாத வீண் வறட்டு கௌரவமில்லாத பேச்சு சிரிப்பு etc etc., சாதாரணமாக ப்ளாக் எழுதினாலே (என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) ஏதோ கொம்பு முளைத்தைப் போல எண்ணும் சாதாரண மனிதர்கள் முன்பாக இந்தப் பிறவி திறமையாளர்கள் ஒரு இமயமலையைப் போலத் தெரிகிறார்கள்..
இப்படி யாரைப் பாராட்டுகிறார் இவர் ? அங்கேயே போய் பார்த்துவிட்டால் போச்சு.
[ இந்த வலைப்பூவின் முகப்பு டெம்ப்ளேட் சற்று குழப்பம் தருவதாக உள்ளது  ஏதோ ஒரு வணிக சம்பந்தமான முகப்பு. சற்று கூர்ந்து கவனித்ததில் அப்படி ஏதும் இல்லை என்பது புரிந்தது ]

மக்களிடம் புத்தகங்கள் சஞ்சிகைகளைப் படிக்கும் ஆர்வம் குறைந்து வருகிறது என்று கருதுகிறார்.  அவர் எழுதியிருக்கும் சில சிறு கதைகளுக்காக த்னியாக ஒரு வலைப்பூ BADRI STORY  என்ற பெயரில் வைத்து இருக்கிறார்.
 சிறுகதை எழுதும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அது கண்டிப்பாக பயன்படும்.அவருடைய எழுத்துப்பணி மேலும் தொடர்வதாக.
---------------------------------------------------------------------------------------------
  வளர்ந்து கெட்டவன் என்கிற வலைப்பூவில்  ஜனரஞ்சக மொழியில் அப்பட்டமான உண்மைகளை போட்டு உடைக்கிறவர் வளர்ந்து கெட்டவன். இரண்டுமே ஒன்றுதான். நம் சுதந்திரத்தின கொண்டாட்டத்தின் போது அவருடைய இடுகையில் சாடுகிறார்
................ஆனால் ...!!!. டேய் முட்டா பயலுகளா , எதிரிகள்  இந்த நாட்டுக்கு எதிராக ஒட்டி  வரும் டாங்கிகளும், பீரங்கிகளும் , , போர் படை விமானங்களும் உங்கள் கண்ணுக்கு சிக்க போவதே இல்லை ...ஏன் தெரியுமா ???/
அவைகளின் பெயரே  வேற ...
1.மொன்சாண்டோ,போஸ்கோ,ஹுவாய் ,வால்மார்ட், போர்ட் ,ஹயுண்டாய் , சி .என் ..என். ஸ்கை , ஒனிக்ஸ் ,இன்னும்,...இன்னும்..பன்னாட்டு கம்பெனிகள் என்ற போர்வையில் வரும்   அவர்களுக்கு ஆதரவாக உள்நாட்டு ஒற்றகளாக .......... !
... ஒரு கவிஞன் சொன்னதைப்போல 'நீ இந்த பட்டு கோவணத்தை பற்றி கனவுகண்டு கொண்டிரு , உன் இடுப்பில் இருக்கும் ஒற்றை கோவணமும் களவு போகும்.!!!!!
 இவர் பொள்ளாச்சி மண்ணைச் சேர்ந்தவர் என்பதை ,,,, மாநகர வரவேற்பு அறிமுக இடுகையில் தெரிய வருகிறது 
. .......15 வருடங்களுக்கு முன் ... ஒருஅதிகாலை போழுது,.. 'பொள்ளாச்சி'ல  பிழைக்கத் தெரியாத பையன் எந்த ஊர் போனாலும் பொழைக்க மாட்டான்'  என்ற எங்க ஊர் பழமொழியை பொய்யாக்க புறப்பட்டு சென்னை வந்து இறங்கிய அந்த நாள்  நினைவுகள் ....
... முதல் முதலாக 'மெட்ராஸ்' (கவனிக்கவும் சென்னை..அல்ல ) என்ற மாநகரில் காலடி எடுத்து வைக்கபோகிறோம் என்ற நினைப்பே பயம் கலந்த ஒரு சந்தோஷம்,அதுவும் யாருடைய துணையும் இன்றி ஒரு குருட்டு தைரியத்துடன் தனியாகவே புறப்பட்டு வந்தது.......
 சென்னையில் செம்புதாஸ் தெருவில் தன் அலுவலகத்தின் புதுக்கிளைக்கு மாற்றலாகி வந்த கதையை சென்னை மக்களின் வார்த்தைகளிலேயே விவரிக்கும் போது இவருக்குள் இருக்கும் எழுத்தாளனின் திறமை தெரிகிறது.
மேலும் நல்ல விஷயங்களைத் தேர்ந்தெடுத்து எழுதி  ஒரு நல்ல வலைப்பூவாக இவரது உழைப்பு மலரட்டும் என்று வாழ்த்துவோம். .
-----------------------------------------------------------------------------
இன்னும் இரண்டு நாள் தான். பின்னூட்டமிட்டு வாழ்த்தும் அனைவருக்கும் நன்றி. மீண்டும் நாளை சந்திப்போம். வாழ்க வளர்க

6 comments:

  1. நல்ல நல்ல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.

    மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி, காமக்கிழத்தன்

      Delete
  2. உடல் எனும் யந்திரத்தை இறைவன் பொருட்டு கையாளுதலே நல்ல தந்திரம் ஆகும்.
    அருமையான் அமுத மொழி.
    ஹிலால் முஸ்தபா அவர்களின் கவிதை அருமை.
    நிறைவோ , குறைவோ வெறுப்பில்லை - நீ
    நினைத்ததே நடக்கும் மறுப்பில்லை!//
    ரயில் அனுபவம்,மற்றும், சிதம்பர அனுபவம், எல்லாம் மிக அருமையாக படிக்க தோன்றுகிறது.
    வாழ்த்துக்கள் அவருக்கு.


    //எண்ணங்களே வாழ்க்கை, மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை, தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்று பல தலைப்புகளை இவரது எழுத்து ஆட்கொள்கிறது. இவற்றில் விசேஷம் என்னவெனில் இவைகள் சொல்லவருவதை ரத்தினச் சுருக்கமாக சொல்லுகின்றன//
    கர்னல் கணேசன் அவர்களின் பதிவுகள் படிக்கும் ஆர்வத்தை உண்டாக்குகிறது. வாழ்த்துக்கள்.

    //“சே எத்தனை வெள்ளெந்தி மனிதர்களாக இருக்கிறார்கள்“ என்பது தெரிந்தது. அடித்துச் சொல்ல முடியும் ஒரு இம்மிளவுகூட கர்வமில்லாத வீண் வறட்டு கௌரவமில்லாத பேச்சு சிரிப்பு e//

    பதரிநாத் அவர்கள் சொல்லும் வெள்ளெந்தி மனிதர்களை படிக்க ஆசை.
    வாழ்த்துக்கள். அவர் சொல்வது போல் படிக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.படிக்க நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும்.
    பத்ரிநாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    போர் தளவாடங்கள் அந்நிய இறக்குமதியைப்பற்றி வளர்ந்து கெட்டவன் அவர்களின் ஆதங்கம் புரிகிறது.
    //மெட்ராஸ் (கவனிக்கவும் சென்னை..அல்ல ) என்ற மாநகரில் காலடி எடுத்து வைக்கபோகிறோம் என்ற நினைப்பே பயம் கலந்த ஒரு சந்தோஷம்,அதுவும் யாருடைய துணையும் இன்றி ஒரு குருட்டு தைரியத்துடன் தனியாகவே புறப்பட்டு வந்தது.......//

    அப்போது பட்டண்ம போய் என்று தானே ஆரம்பிக்கும்.

    அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.இன்றைய வலைச்சரம் மிக அருமை. நன்றி கபீரன்பன்.



    ReplyDelete
    Replies
    1. பல வேலைகளுக்கிடையேயும் நேரம் ஒதுக்கி விவரமாக கருத்து சொல்லியிருக்கும் கோமதி மேடம், நன்றி ஒன்றைத் தவிர வேறு வார்த்தைகள் என்னிடம் இல்லை. தொடர்ந்த வாசிப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி

      Delete
  3. ஹிலால் முஸ்தபா அவர்களின் அனுபவம் சிலிர்க்க வைக்கிறது. கொடுத்து வைத்தவர். முற்றிலும் புத்தம்புதிய அறிமுகங்கள். கர்னல் கணேசன் குறித்துக் கேள்விப் பட்டிருக்கிறேன். அருமையான மரகதச் சரம்.

    ReplyDelete
  4. என்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் !!!!

    மீண்டும் மீண்டும் சந்திப்போம் ..

    - வளர்ந்து கெட்டவன் .

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது