07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, August 14, 2013

ஸ்கூல் பையன் - சொல்லாடல் வித்தகர்கள்

சொல்லாடல் என்றால்? எழுத்து நடையில் நம்மை இழுத்துச்செல்லும் தன்மை, வார்த்தைப் பிரயோகங்களில் புதுமை, கடினமான வார்த்தைகளைக் கொண்டு ஆடும் விளையாட்டு என்று சொல்லலாம் தானே. இப்படிப்பட்ட சொல்லாடல் வித்தகர்களை அறிமுகம் செய்யவிருக்கிறேன்.


1. அரசன்

இவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.  அதிகம் கவிதைகள் மட்டுமே எழுதி வரும் இவர் சமீபத்தில் திடங்கொண்டு போராடு சீனு நடத்திய காதல் கடிதப் போட்டியில் எழுதிய கடிதத்தில் வரும் சொல்லாடல்கள்:


நான்குவரிகள் கூட கோர்வையாய் சேராமல், பொறுமையை நாடிபிடித்து பார்க்கின்றன. எங்கோ வெறித்து, எதையோ சிந்திக்க ஏதோ மனதில் உதிக்க, இப்படி சில நிலைகளை கடந்து தான்  உன் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறது இக்கடிதம்! சிரிக்காதே பவி, இந்த தெத்துப் பல் தான் என் சமீபத்திய தூக்கங்களை தின்று கொண்டிருக்கின்றது!


2. சேட்டைக்காரன்

சேட்டைக்காரன் வார்த்தை ஜாலத்தில் சேட்டை செய்கிறவர்.  இவர் எழுதும் நகைச்சுவைக் கட்டுரைகளைப் படிப்பவர்கள் வாய்விட்டு சிரிக்காமல் இருக்க முடியாது.  அப்படி நகைச்சுவை ததும்ப எழுதிய பதிவு இது



ஜி.எம்-மின் அறையிலிருந்து வெளிப்பட்ட டைப்பிஸ்ட் வீரபாகுவின் முகம், பேண்ட்டோடு வாஷிங்-மெஷினில் துவைக்கப்பட்ட கர்ச்சீப்பைப் போலச் சுருங்கிப் போய்விட்டிருந்தது.


காலையில் திருவல்லிக்கேணி புளியோதரை மாதிரி காரசாரமாக இருந்த ஜி.எம்.கமலக்கண்ணன், திடீரென்று திருப்பதி லட்டுபோல தித்திப்பாகப் பேசியது வீரபாகுவின் குழப்பத்தை அதிகரித்தது. அவனது கண்கள் மனைவி செய்து அனுப்பிய மைசூர்பாகை, அரசாங்க மருத்துவமனை நர்ஸ் கையிலிருக்கும் ஊசியைப் பார்ப்பதுபோல கலவரத்துடன் வெறித்துக் கொண்டிருந்தன.


3. கே.ஆர்.பி.செந்தில்

இவர் அனுபவப் பகிர்வு, கவிதை, சிறுகதை என்று எழுதி வருகிறார். இவரது சொல்லாடல்கள் சற்று வித்தியாசமாக இருக்கும். சில கட்டுரைகளை இரண்டாம் முறை படிக்கும்போது தான் புரியும். அப்படிப்பட்ட சொல்லாடல் வித்தகரின் பதிவு

தனிமையின் இசை

அறையில் தனித்திருந்த நான் சமைக்க அலுப்பாகி, கடைத்தெருவுக்கு ஏதாவது உணவு வாங்கிப்போகலாம் என கனுக்கால் நீரில் செறுப்பில்லாத கால்களால் சளப்.. சளப் என ஒரு தாள கதியுடன் நடந்துசென்றேன். மனது சில சோகப்பாடல்களை அத்தாளகதிக்கு தயார் படுத்தி என்னை மழையுடானான உறவில் இருந்து பிரிக்க முயன்றபோது, சடாரேன வீசிய ஒரு காற்று என் முன்னே ஒரு குடையை வேகமாக இழுத்துச்செல்ல பின்னால் அவசரமாக ஒரு குரல் “பிடிங்க..பிடிங்க” எனப்பதறவே குடையை பிடிக்கும் உத்வேகத்தை அக்குரல் என்னை உத்தரவிட்ட வசீகரத்தை ரசித்தபடி ஓடி அக்குடையை அடைந்த கணத்தில்தான் நான் உன்னை பார்த்தேன். ஒரு கணம் பிரபஞ்சம் நின்று சுழன்றது மாதிரி இருந்தது.


4. பிரபாகரனின் தத்துபித்துவங்கள்


இவர் பெரும்பாலும் சினிமா, அனுபவம் என்று எழுதி வருகிறார்.  இவரது சொல்லாடல்கள் மிகவும் ரசிக்கும்படி இருக்கும்.  சமீபத்தில் இவர் கஜுரா என்ற இனிப்பு பண்டத்தை இவர் சுவைத்த அனுபவத்தை எப்படி சிலாகித்து எழுதியிருக்கிறார் பாருங்கள்.

ஒரு மழைநேர மாலைப்பொழுதும் சில கஜுராக்களும்

டீ சொல்லிவிட்டு சட்டென திரும்பியபோது தான் அந்த காக்கி நிற வஸ்து என் கண்களில் பட்டது. அதற்கு கஜூரா என்று பெயர். முதலில் கஜூராவின் குணநலன்களை ஒப்பித்துவிடுகிறேன். கஜூரா கிட்டத்தட்ட சதுர வடிவத்தில் இருக்கும், சமயத்தில் மாஸ்டரின் கைவண்ணத்தை பொறுத்து வடிவம் மாறுபடும். போண்டாவை போலவே கஜூராவும் ஒரு இனிப்பு பண்டம். எனினும் போண்டாவைக் காட்டிலும் திடமானது. ஒரு கஜூராவை கையில் எடுத்தால் சாப்பிட்டு முடிக்க பத்து நிமிடங்கள் வரை ஆகலாம். நிற்க. என்னைப் போன்ற திறன் படைத்தவர்கள் இரண்டு நிமிடங்களிலேயே கூட தின்று முடிக்கலாம்.


5. ஜீவன்சுப்பு (வண்ணத்துப்பூச்சி)

கோவையைச் சேர்ந்த இவர் பெரும்பாலும் சொந்த அனுபவங்களையும் மற்ற விஷயங்களில் தன் சொந்தக் கருத்துக்களையும் எழுதுகிறார்.  சமீபத்தில் தன் மாமியார் இறந்தபோது பின்னிரவில் பயணப்பட்ட அனுபவத்தை சொல்கிறார்.  துக்கமான விஷயமாக இருந்தாலும் அதை சொன்ன விதத்தில் இவருடைய சொல்லாடல் அருமையாக இருக்கும்

இறப்பும், இழப்பும், அனுபவமும்...!

மத்தியான வெயிலில் மைத்துனன் சாலையில் புரண்டு அழுகின்றான் அம்மா வேண்டுமென்று , என்ன சொல்லி தேற்றுவது என்றே தெரியவில்லை . ஆறுதல் சொல்கிறேனென்று ஏதேதோ பிதற்றிக்கொண்டிருந்தேன் . நான் பிதற்றியது எனக்கே புரியவில்லை பாவம் அவனுக்கெங்கே புரிந்திருக்கும் . அழாதேப்பா என்று ஆளாளுக்கு அறிவுரை சொன்னார்கள் . என்னால் அறிவுரை சொல்லவும் முடியவில்லை , ஆறுதல் சொல்லவும் முடியவில்லை , அழுகட்டும் அழுது தீர்க்கட்டும் என்று அமைதியாக அவனை  அணைத்துக்கொண்டேன் . அரவணைப்பைவிட சிறந்த ஆறுதல் வார்த்தை இருப்பதாக எனக்கு தெரியவில்லை .


6. மலரின் நினைவுகள்

சேலத்தைச் சேர்ந்த திரு. மலர்வண்ணன் என்பவர் மலரின் நினைவுகள் என்ற பெயரில் எழுதி வருகிறார்.  தற்போது சென்னையில் வசிக்கும் இவர் தன் மனைவியுடன் ஒரு மாஸ்டர் ஹெல்த் செக்கப் போன அனுபவத்தை எப்படிச் சொல்கிறார் பாருங்கள்.  அதிசிறந்த சொல்லாடல் இல்லையென்றாலும் எழுத்து நடை ரசிக்கவைக்கிறது. படித்துப்பாருங்கள்.

எனக்கும் "அது" வந்திடுச்சி...!!


Master check-up offer ஒருத்தருக்கு 2000 ரூபாய்.  ஆடி மாசம், ஜோடியா வந்தா ஏதும் discount உண்டா எனக் கேட்கத் தோன்றி அடக்கிக் கொண்டேன்.  ஒரு மாறுதலுக்கு பெயர் கொடுப்பது, பணம் கட்டுவது, ரசீது வாங்குவது, ஒவ்வொரு பரிசோதனைக்கும் எங்கெங்கு செல்வது, யாரைப் பார்ப்பது போன்ற அனைத்து வேலைகளையும் அம்மணியே செய்தார்.  சாதாரண நாட்களில் ஹோட்டலில் உப்பு வேண்டுமென்றால் கூட சர்வரிடம் நான் தான் கேட்டு வாங்கித் தர வேண்டும்.


7. கூடல் கூத்தன்


மதுரையைச் சேர்ந்த ராகவன் என்னும் இவர் கென்யாவில் வசித்து வருகிறார்.  அங்குள்ள இரண்டு இன மக்களின் வாழ்வை அலசும் இந்தப் பதிவு.

குருதிப்படுகை...


காய்ந்த ஓடுகளாய் விளை நிலங்கள் அல்லது கருகித் தீய்ந்த  மேய்ச்சல் நிலங்கள்,ஒற்றை  நீர்த்துளி கிடைத்தால் போதும் சிலிர்த்து முளைக்கும் புற்கள்.  விவசாயவிளைநிலங்களும்மேய்ச்சல்  நிலங்களுக்கும் நீராதார  பகிர்விற்கான  நாவுகளை எப்போதும் தாகத்துடன் வைத்திருக்கின்றன.  மழை பெய்யும் காலங்களில் அதிகமழையும்மற்ற நேரங்களில் வறண்ட வானிலையும் இருந்தாலும்பசும் மரங்களும்,செடிகளும்புதர்களும் மண்டிக் கிடப்பது அண்டை நகரமும்சிறுகடல் தாண்டியஅண்டை நாடும் தின்றது போக மீதியே.


8. வண்ணதாசன்

இலக்கிய உலகில் இவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.  சமீபத்தில் நான் படித்த இவரது சிறுகதை உங்கள் பார்வைக்கு.

கனியான பின்னும் நுனியில் பூ

எனக்கும் மாதுளம் பழம் வாங்கத்தான் பிடித்திருந்தது. இப்போதெல்லாம் மாதுளம் பழத்துக்குச் சுளை இருப்பதுபோல் எட்டாக வகிர்ந்து, பூப் போல இதழ் இதழாக விரித்து நான்கு பழங்களை முன்னால் பார்வையாக வைத்துவிடுகிறார்கள். இந்த மாதுளம் பழ விதை, வெள்ளரிப் பிஞ்சு விதையை எல்லாம் இப்படி வரிசையாக அடுக்க வேண்டும் என்று யார் சொல்லிக்கொடுத்தார்கள். எனக்குத் தோன்றுவதுபோல தினகரிக்கும் தோன்றுமா? ‘யாருப்பா சொல்லிக்கொடுத்தாங்க?’ என்று அவள் என்னிடம் கேட்க வேண்டும்போல இருந்தது. 


இன்றைய அறிமுகங்கள் எப்படி? கருத்துக்களை சொல்லுங்கள். அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கு பின்னூட்டம் அளித்து ஊக்கப்படுத்துங்கள்.


இன்று என் தளத்தில் ரத்தம் பார்க்கின் - 3


நாளைய வலைச்சரத்தில் "கலக்கல் கவிஞர்களும் கவிதைகளும்"


நன்றி...

44 comments:

  1. நல்ல அறிமுகங்கள். அரசன்,சேட்டை, பிரபாகரன் கே.ஆர.பி. படித்திருக்கிறேன். சமீபத்தில் . மலரின் சந்தானம் என்னும் சண்டாளன் படித்து பிரமித்துப் போனேன். கூடல் கூத்தன் வண்ணதாசன் இப்பதிவுகளை அறிந்ததில்லை
    தொடரட்டும் சிறப்பான அறிமுகங்கள்

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முரளி சார்...

      Delete
  2. வலைசரத்தில் மாற்றம் ரிப்ளை பட்டன் சேர்க்கப்பட்டிருகிறது. மாற்றங்கள் தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார், எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது....

      Delete
  3. எல்லாம் நல்ல வலைத் தளங்கள்.. அருமையாக எழுதுகின்றனர்!.. அறிமுகம் செய்தமைக்கு நன்றி!..

    ReplyDelete
  4. சில தளம் அறிமுகம் சில புதியவை மேலும் ஸ்கூல் பையனின் தொடர் சுவாரஸ்யம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வணக்கம் அண்ணே .. தங்களின் அங்கீகாரத்துக்கு என் நன்றிகளும், வணக்கங்களும் ...
    தேடல் சிறக்க என் வாழ்த்துக்கள் அண்ணே

    ReplyDelete
  6. இருவர் புதியவர்கள். அறிமுக படுத்தியமைக்கு நன்றி. போய் பார்த்துட்டு வரேன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா...

      Delete
  7. சிரிப்பால் நம்மை கட்டிப் போட முடியும் என்றால் அதில் சேட்டைக்காரன் அய்யாவுக்கு இணை யாரும் இல்லை என்று சொல்லலாம்.. அலுக்காத சொல்லாடல்...

    அரசன், ஜீவன் சுப்பு இவர் இருவர்களின் எழுத்துக்களிலும் ஒரு மெல்லிய இலக்கிய நயம் வழிந்தோடும், மீண்டும் ஒருமுறை படித்தால் இன்னுமொருமுறை படிக்கத் தோன்றும்...

    கே.ஆர்.பி இவரிடம் மிகக் கனமான இலக்கியம் தவழும், எங்கிருந் வார்த்தைகளைக் களவாடி அதனை கோர்க்கிறார் என்ற வித்தையை இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும், இவரது நடையில் ஒரு பதிவாவது முயன்று பார்க்க வேண்டும் என்பது என் ஆசை...

    பிலாசபி பதிவுலகில் தனகென்று ஒரு பாணியை பின் பற்றுபவர், இவரா இப்படி எழுதியது என்று நான் வியந்த பதிவு அவரது காதலியை பெண் பார்க்கச் செல்வது போல் கற்பனையில் வடித்த அந்தக் கடிதம்

    வண்ணதாசன் எழுத்துலகில் இலக்கியம் படித்துக் கொண்டிருப்பவர், சமீபத்தில் குற்றாலம் பேரருவியை பெண் போல் பாவித்து ஒரு பதிவு எழுதி இருப்பார்.. அற்புதமாய் இருக்கும்


    மற்றவர்கள் எனக்குப் புதியவர்கள்... படிக்கிறேன்.. சிறப்பான பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் நீண்ட கருத்துக்கும் நன்றி சீனு...

      Delete
  8. கனியான பின்னும் நுனியில் பூ -

    நிறைய முறை படித்து வியந்த வண்ணமயமான எண்ணங்கள்..

    அருமையான
    அறிமுகங்கள்.. பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. ஓ, நீங்களும் படித்திருக்கிறீர்களா? பாராட்டுக்கு நன்றி அம்மா....

      Delete
  9. அறிமுகங்கள் எல்லாமே அருமை. நீங்கள் சொல்லியிருப்பது போல வித்தகர்கள் தான். சிலரை தெரியும். பலரைத் தெரியாது. நிச்சயம் படித்துப் பார்க்கிறேன்.
    உங்களுக்கும், உங்கள் மூலம் எங்களுக்கு அறிமுகமானவர்களுக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. படித்துப் பாருங்கள் அம்மா... பாராட்டுக்கு மிக்க நன்றி....

      Delete
  10. சிறந்த தேர்வு !! அனைவருக்கும் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

    ReplyDelete
  11. சிறந்த தேர்வு !! அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி நண்பரே.....

      Delete
  12. அழகா தொகுத்து வழங்கியிருக்கீங்க. ஒவ்வொரு பதிவையும் படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.

    ReplyDelete
  13. வணக்கம்

    வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்..

    எனது தனிப்பட்ட அன்பும், நன்றியும்...

    ReplyDelete
  15. மிஸ்டர் ஸ்பை ..! வொய் திஸ் கொலவெறி ...!

    அழகான மலர்ச்சரத்துல திருஷ்டிப்பொட்டாக இந்த காகிதப்பூவையும் சேர்த்ததற்கு கண்டனங்கள் ...!

    உம்ம பதிவின்மூலம் ரெம்பப் பிரமாதமான சொல்லாடர்களை உறவாக்கிக்கொண்டேன் ... நன்றி ஸ்பை ..!

    @ சீனு ...

    என்னாது இலக்கிய நயம் கமழுதா... இதப்படிச்சதுல இருந்து நாக்கெல்லாம் குளறுதய்யா ஒடம்பு பூர (புல்)அரிக்குது .ஏன்யா ...? ஏன் இப்பூடி ..!

    ReplyDelete
    Replies
    1. சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீர் சொல்லாடல் வித்தகர்தான்....

      Delete
  16. அருமை அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.....

    ReplyDelete
  18. சொல்லாடல் வித்தகர்களை இன்று
    நல்லறிமுகம் செய்தீர்கள்.
    தொகுப்புக்கு நன்றி ஸ்... பை...!

    ReplyDelete
  19. Arumaiyaana arimugam nanbaa!

    ReplyDelete
  20. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டினேஷ்சாந்த்..

      Delete
  21. என்னது??... இந்த லிஸ்டில் நானும் ஒருவனா!!
    சிங்கங்கள் இருக்கும் இடத்தில் இந்த சிறு முயலா? (உபயம்: கொக்கிகுமார்) அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி ஸ்கூல் பாய்...

    இனிமே பேருக்கு முன்னாடி "பிரபல வித்தகர்"-ன்னு போட்டுக்கலாம் (எதை வித்தீங்கன்னு யாரும் கேட்கப் படாது).
    11 பேர் கொண்டு குழு ரெடி பண்ணனும்..., ப்ளெக்ஸ் பேனருக்கு மொத்தமா ஆர்டர் கொடுக்கணும்..., ஜெயிலுக்குப் போகணும்..., மூன்றாம் அணி அமைக்கணும்..., ஐ.நா.சபைக்குப் போகணும்..
    நெறைய வேலை வெச்சுட்டீங்களே..!!

    வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் கோட்டான கோட்டி நன்றி..!!

    - அன்புடன்
    - மலர்வண்ணன்

    ReplyDelete
  22. ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் எனக்குப் புதியவர்கள்.கண்டிப்பாக அவர்களையும் தொடர்கிறேன். நன்றி அறிமுகத்திற்கு

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது