07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 20, 2014

நீங்கல்லாம் நல்லா வருவீங்கப்பா; புதிய ஞாயிறு( அறிமுகமும், நன்றியும்)


சமுத்திரம் பெரிதா?
தேன்துளி பெரிதா?
தேன் தான்...
அப்படின்னு நான் சொல்லலை. வசூல் ராஜா சொல்லுறார்! அப்படி சிறு தேன் துளியாய் இப்போ தான் ப்லாக் தொடங்கி இருக்கும் புத்தம் புது பதிவர்களுக்கு மேடை இந்த பதிவு!! 
சிலர் ஆரம்பத்திலே சிக்ஸர் அடிக்கிறாங்க!
பலர் கொஞ்சம் பம்முறாங்க!!
வாங்க பாஸ், உலகம் ரொம்ப பெருசு!
நாம சாதிச்சுக்காட்டுவோம்!! (சரி நீ என்ன சாதிச்ச? என்றெல்லாம் போட்டுக்கொடுக்காதீங்க நண்பர்களே! நான் உங்களுக்கு குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கித்தரேன்!!)

பேருதாங்க சாமானியன். ஆனா சகோவோட பதிவு சாமானியமா கடந்துபோக முடியாதது! இவரது தமிழ்ப்பற்றை பாருங்க!

பிரியன் அவர்களின் வலைப்பூ பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு!
கவிதைஇனிமையா இருக்கு. பட்டாம்பூச்சிகளின் தேவதையை பார்க்கலாம் வாங்க!

awesome மா எழுறார்! ஆனா நான் புது ஆளுன்னு ரொம்ப தன்னடக்கமா சொல்லுவார். நல்ல நகைச்சுவையா எழுதக்கூடிய விசு அண்ணாவின் ஒரு காதல் கதையை படிச்சுப்பாருங்க!

ஆரம்ப தயக்கங்கள் தகர்த்து, இப்போ கலக்க ஆரம்பித்திருக்கிறார் பாண்டியன் பக்கங்கள் ஜெ.பாண்டியன். இவரது ஈரக்கவிதை ஒன்று!

நம்ம ஊர்கார பொண்ணு ரேவதி தர்மா இப்போதான் புதுசா வலைப்பூ எழுதத்தொடங்கியிருக்காங்க. அவர்களது கருணையான கவிதை ஒன்று!

ரகு என நான் அழைக்கும் குட்டி நண்பர் ரங்கநாதன். மொத்தம் பத்து பதிவு போட்டுருக்கார்! அதில் படித்ததில் பிடித்தது என்று அவர் பகிர்ந்திருக்கும் விஷயத்தை பாருங்களேன்!!!!

இவர் நம்ம தம்பிகளில் ஒருவர்(முகம் தெரியாத). ரொம்ப சீரியஸா ஒரு பதிவும், தன் வயதை காட்டுவது போல் விளையாட்டுத்தனமாய் ஒரு பதிவும் எழுதும் புதுகை சீலன் சகோவின் லேட்டஸ்ட் பதிவு இது.

சல்லடைச்சாரல் உஷா அவர்களுது கவிதை ஒன்று!

புதிதாய் வலைப்பூ தொடங்கியிருக்கும் ஆர்வமான பேராசிரியர்! கல்லூரிப்பேராசிரியர் அனிதா சிவாவின் கவிதை ஒன்று!

ஐ.டி படித்துவிட்டு கவிதை எழுதும் மோகன்ராஜ் மனவெளி என்கிற வலைப்பூ நடத்துகிறார்! தொடக்கத்திலேயே தேர்ச்சி தெரிகிறது கவிதைகளில்! இதோ ஒரு கவிதை 


இந்த வலைப்பூவிற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இது என் மாணவனின் வலைப்பூ. டீச்சர் ட்ரைனிங் முடித்த கையோடு ஆசிரியராய் பணி சேர்ந்த எனக்கும் இவனுக்கும் ஆறேழு வயது தான்  வித்தியாசம். ஆனால் என்னை அம்மா என்றே அழைக்கும் குட்டி அலெக்ஸ் ஸின் குட்டிச்சுட்டி கவிதை இது.


------இப்போ நன்றி கூறும் நேரம்.-------------
இந்த ஒருவார காலம் என்னோடு ஒத்துழைத்த சிஸ்டம் மற்றும் இன்வெர்டருக்கு என் முதல் நன்றி!!

தன் பொழுதுகளை வலைச்சரத்திற்கு விட்டுக்கொடுத்த கஸ்தூரிக்கும், நிறைக்கும், மகிக்கும் நன்றி!!

கைத்தட்டித்தட்டி சின்ன குழந்தையை ஓடவைத்துவிடும் பெற்றோர்போல் என்னை ஊக்கமளித்து இயங்க வைத்த எனதன்பு சகோக்கள் (அண்ணா, அக்கா, தம்பி, தங்கை(?)க்கு நன்றி!

குறள் 781:
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
 சாலமன் பாப்பையா உரை:
சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?.(நன்றி திருக்குறள் by திருவள்ளுவர்)
இந்த குறளை நான் உணரச்செய்த எனதன்பு சகாக்கள்(நண்பர்கள், தோழிகள்)
அனைவருக்கும் நன்றி! நன்றி!நன்றி!

வாய்ப்பளித்த சீனா அய்யாவிற்கும், பொறுப்பாசிரியர்கள் தமிழ்வாசி சகோ மற்றும் ராஜியக்காவிற்கும் மேலும்மேலும் என் நன்றிகள்!

வாய்ப்புக்கிடைத்தால் மற்றும் ஒரு முறை இங்கு சிந்திப்போம். விடைபெறுகிறேன். (அப்பா!! கைத்தட்டல் சத்தம் காதை கிழிக்குதே! என்னாது அது ஷட்டரை மூடுற சௌண்டா?!அவ்வ்வ்....)


66 comments:

  1. வணக்கம்
    சகோதரி
    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஒரு வார காலமும் பல சுமைகளை நெஞ்சில் சுமந்தவண்ணம் பாடசாலை என்றும் . வலைச்சரம் என்றும் குடும்ப பொறுப்பு என்று பலவகையில் கலக்கிவிட்டீங்கள். ஒரு வாரம் அறிமுகம் செய்த வலைப்பூக்கள் பல வாசக உள்ளங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் தொடருகிறேன் பதிவுகளை வாழ்த்துக்கள் வலைப்பூவில் சந்திக்கலாம்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உணர்ந்து வாழ்த்தியிருக்கிறீர்கள் சகோ! மிக்க நன்றி சகோ!

      Delete
  2. வணக்கம்
    சகோதரி

    3தளங்கள் புதிவை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிகள்...
    த.ம 2வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. என்ன டீச்சரம்மாவை தண்ணி இல்லா காட்டுக்கு மாற்றிவிட்டாங்களா என்ன? எங்களுக்கு பிடிச்ச டீச்சரம்மாவே போன பிறகு எங்களுக்கு இங்கே இனிமே என்ன வேலை..

    ReplyDelete
    Replies
    1. touching guy! ஆனா நான் வலைச்சரம் பொறுப்பை முடித்தாலும் அதற்கும் எனக்குமான நட்போ, உங்களுக்கும் எனக்குமான நட்போ, உங்களுக்கும் அதற்குமான நட்போ முடிந்துவிடும் என நம்பவில்லை.( என்னம்மா இது இப்படி கமல் மாதிரி பேசுற? பின்ன பேசிகிட்டிருக்கது வலையுலக கமல்ஹாசன் கிட்ட தானே?)
      actually உங்களுக்கு அந்த பட்டத்தை அறிமுகப் பதிவில் கொடுக்கனும்னு ப்ளான் பண்ணிருந்தேன். but மறந்துட்டேன்:)))
      so இனி சகாவை வலையுலக கமல்ஹாசன் என்றே அழைக்க அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்!!

      Delete
    2. மதுரைத் தமிழனுக்கு மட்டும்தான் பட்டமா தங்கச்சி...? எனக்குல்லாம் கிடையாதா? அவ்வ்வ்வ்வ்....

      Delete
    3. உங்களுக்கு டேய் லூசுப் பயலே என்று சொல்ல ஆசையாய் இருந்த நேரிடியாய் சொல்லி இருக்கலாம் அத்ற்க்காக இப்படி கமல்ஹாசன் என்றுமறைமுகமாக சொல்லாமா

      Delete
  4. சீனா ஐயா டீச்சரம்மாவுக்கு வாய்ப்பு அளித்த நீங்க டீச்சர் ஐயாவுக்கு (கஸ்தூரி) அழைப்பிதழ் அனுப்பிட்டீங்கதானே?

    டீச்சரம்மாவை கலாய்த்த நாங்க டீச்சர் ஐயாவையும் கலாய்க்கனும் சீக்கிரம் சீக்கிரம்

    ReplyDelete
    Replies
    1. இதை நானும் வழிமொழிகிறேன்:)))
      எனக்கும் ஆசையா தான் இருக்கு.
      செங்கொடி, ஆங்கிலப்படம், படிமக்கவிதைகள், photography என வித்யாசமான ரசனைக்கார நண்பனின் அறிமுகம் காண எனக்கும் ஆவல் தான்!

      Delete
    2. கலாய்க்க நாங்க ரெடி அத்ற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தர சீனா ஐயா தமிழ்வாசி ராஜி ரெடியா?

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. சரக்கு அடிக்க வேண்டாம் என்று நினைத்து இருந்தேன். இப்ப டீச்சரம்மா போற சோகம் தாங்கலை.. அழுகை வருகிறது போல இருக்கு ஆனா கண்ணுல தண்ணி வரமாட்டேங்குது அதனால தண்ணியடிச்சா கண்ணுல தண்ணி வரும் போல தோணுது அதனால் ஒரு பாட்டில முழுங்கி கிட்டு வந்து அழுகுறேன்

    ReplyDelete
    Replies
    1. // அழுகை வருகிறது போல இருக்கு ஆனா கண்ணுல தண்ணி வரமாட்டேங்குது //
      வரலேன்னா விட்றணும் பாஸ். அதுக்கு எதுக்கு இவ்ளோ பீலிங்க்ஸ்....பாருங்க எனக்கு கண்ணு வேர்த்துடுச்சு....அவ்வ்வ்வ்
      நான் அழுதுடுவேன். (வீக் end பார்ட்டிக்கு என்னமா பிளான் பன்னுதுபார் பக்கி)
      (ஹே! juz kidding yaar! dont mind)

      Delete
    2. பாட்டிலை முழுங்கினா வயத்தக் கிழிச்ச தான்யா எடுக்கணும். அதனால பாட்டில்ல இருக்கறத மட்டும் முழுங்கு...!

      Delete
    3. நாங்க எல்லாம் பாட்டிலையும் சாப்பிட்டு அதோட வாழைபழத்தையும் சேர்த்து சாபிடுவோம்ல ஹீஹீ

      Delete
    4. ///ஹே! juz kidding yaar! dont mind)///

      dont mind ல எனக்கு எல்லாம் no mindங்க காரணம் எனக்கு mindடே இல்லிங்க ஹா ஹா
      நீங்க மட்டுமல்ல யாரு வேண்டுமானல் என்னை
      கிண்டலோ கேலியோ நக்கலோ பண்ணலாம் ஆனால் என்னை திட்ட ஆசைபடுறவங்க நல்லா திட்டிவிட்டு பிராகெட்குள்ள ( சீரியஸா திட்டுகிறேன் ) என்று போட்டுறுங்க இல்லைன்னா அதையும் நான் கமெடியா எடுத்து சிரிச்சுகிட்டு இருப்பேன். சரி அவங்க சீரியஸ் என்று போட்டா உங்க ரியாக்ஷ்ன் என்ன என்று கேட்கிறீங்களா? என்ன என் மனைவியின் கட்சியில ஒருத்தர் சேர்ந்துட்டாங்க என்று நினைச்சு சிரிச்சுகிட்டு இருப்பேன்..

      Delete
    5. tats தமிழன்!! கிரேட்!!

      Delete
  7. ''செய்வன திருந்தச்செய்'' என்பார்கள் அதை சரியாக செய்து ''வெற்றி'' பெற்ற சகோதரிக்கும், இனிய நண்பர் சாமானியன் அவர்களுக்கும் இன்றைய புதியபதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா! தங்கள் தந்த ஆதரவு அளப்பரியாதது.

      Delete
  8. ஆனைக்கும் அடி சறுக்கும், அதற்கு நீங்கள் மட்டும் விதிவிலக்கா? இத்தனை அருமையான பதிவர்களுக்கும் மத்தியில் என் பெயர்... நன்றி.. நன்றி... நன்றி..

    ReplyDelete
    Replies
    1. இல்ல அண்ணா! புதிய ஞாயிறு என்று யோசித்ததே நீங்க, சாமான்யன் சகோ, அலெக்ஸ் போன்ற மிக நல்ல சகோக்களுக்காக தான்:)
      தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி அண்ணா!

      Delete
  9. நிஜமாவே எனக்கு ரேவதியும், சீலனும் புதிய பதிவர்காள். போய் வாரேன்.

    ReplyDelete
    Replies
    1. போய் பார்த்துட்டு வாங்க! ரெண்டு பேரும் நல்ல பதிவர்கள் தான் அக்கா!

      Delete
  10. அம்மு இந்தக் கிழமை எப்பிடி போச்சுதுன்னு தெரியல்லைம்மா. அவ்வளவு குஷியா இருந்தது. இப்போ ரொம்ப sad ம்மா. வலைச்சர பணியை செவ்வனே முடித்து வெற்றியடைந்தமைக்கு வாழ்த்துக்கள்....! புதிய பதிவர்களும் அமோகமாக வளர்ச்சியடைய என் வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. இனியாசெல்லம்...,
      எல்லாம் உங்களைப்போன்ற நட்புநெஞ்சங்களால் தான் சாத்தியமானது. உங்கள் நட்புக்கு விலையேயில்லை தோழி. உங்கள் பேராதரவுக்கு நன்றிகள் பல.

      Delete
    2. இனியா நீங்களும் sad ஆ பாத்தீங்களா நீங்களும் நானும்தான் sad மற்றவங்க எல்லாம் டீச்சரம்ம போறங்க என்று சந்தோஷத்துல இருக்காங்க போல இருக்கு

      Delete
    3. எதுக்குடா sad? அதான் உங்களுக்கு பொறுப்புகொடுத்து அய்யா என்னை இங்கே புடிச்சு போட்டுடாரே!!

      Delete
  11. நல்ல பதிவர்கள் பலரின் நடுவே என்னுடைய சாதா பதிவையும் பிற புதிய பதிவர்களையும் அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி சகோதரி. இனி அவர்களையும் தொடருவேன் !!

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் நல்ல பதிவர் தான் சகோ. தொடருங்கள் நல்ல வழிகாட்டிகள் கிடைப்பார்கள். வாழ்த்துகள்.

      Delete
  12. உங்களின் சிறப்பான செயல்பாட்டால் தமிழ் மணத்தில் இந்தவார ரெண்டாவது இடத்திற்கு வலைச்சரத்தை கொண்டு வந்து விட்டீர்கள் ,பாராட்டுக்கள் !
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. ஏதோ எனக்குத்தெரிந்ததை, என்னால் முடிந்ததைச் செய்தேன் பாஸ். அவ்ளோ தான் :) மேலும் தங்களைப்போன்றோர் தயவும் தான்
      மிக்க நன்றி!

      Delete
  13. பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்
    மறவாமே நோற்பதொன் றுண்டு - பிறர்பிறர்
    சீரெல்லாந் தூற்றிச் சிறுமை புறங்காத்து
    யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல்.
    . .- குமரகுருபரர்.
    அதுவே இவ்வொரு வாரமும் நோற்றீர்கள்.
    வாழ்த்துக்களும் நன்றியும்!

    ReplyDelete
    Replies
    1. குறை சொல்ல முதலில் நிறைய தெரிந்திருக்க வேண்டுமே!!
      மேலும் இப்படி குமரகுருபரரை தெரியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது விஜு அண்ணா! மற்றபடி........மிக்க நன்றி அண்ணா!

      Delete
  14. மூன்று தளங்கள் புதியவை...

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு புதுசா?
      ரொம்ப நன்றி அண்ணா!

      Delete
    2. வலைச்சித்தருக்கே புதிய தளங்களை அறிமுகப்படுத்திட்டேன்னா... மைதிலி... நீ ஜெயிச்சுட்டே... என்னால்தான் தொடர்ந்து பின்னூ்ட்டம் இடமுடியாத சூழல்.. பாரா்ட்டுகள்மா. நன்றி வலைச்சரம் சீனா அய்யா.

      Delete
  15. முழுமையாக தங்களது அனைத்து பதிவுகளையும் படித்தேன். வலைச்சர ஆசிரியப்பணியை சிறப்பாக நிறைவு செய்தமைக்குப் பாராட்டுகள். பல புதியவர்களை அறிந்துகொண்டேன். வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.com
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. தொடர் ஆதரவுக்கு நன்றி அய்யா! உங்களை போன்றோரால் தான் இது சாத்தியமானது! மிக்க நன்றி!

      Delete
  16. தட்டி கொடுத்தலை விட உலகில் சிறந்தது எதுவும் இல்லை :) :) :) இந்த பெருங்கடலில் இந்த சிறு துளியை அறிமுகபடுத்தியற்கு நன்றி :) :) :) உங்களின் ஆதரவுக்கு நன்றி :)

    ReplyDelete
  17. மிக குதூகலமாக இந்த வார வலைச்சரத்தை வழி நடத்தி -
    சிறப்பான தளங்களையும் புதியவர்களையும் அறிமுகம் செய்தீர்கள்..

    தங்களது மனமார்ந்த உழைப்பினுக்கு - நல்வாழ்த்துக்கள்..
    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. தொடர் ஆதரவுக்கு நன்றி அய்யா! உங்களை போன்றோரால் தான் இது சாத்தியமானது!
      மிக்க நன்றி அய்யா !

      Delete
  18. இன்றைய அறிமுகங்களில் நிறைய பேர் எனக்கு புதியவர்கள்! சென்று பார்க்கிறேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சுரேஷ் சார்!

      Delete
  19. துணிவே துணையாய்த் தொடர்ந்தீரே தோழி!
    பணியினைக் கண்டேன் பணிந்து! - கனிவாய்ப்
    படைத்த பலசுவை பார்த்தோம் மகிழ்வே!
    அடைவோமே ஆனந்த(ம்) அங்கு!

    இந்தாவார வலைச்சர ஆசிரியப் பணியை
    இத்தனை சிறப்பாகச் செய்து முடித்துள்ளீர்கள்!
    தொடர்ந்தும் உங்கள் வலைப்பூவில்
    பதிவுகளால் அசத்துங்கள்!..

    இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கும் உங்களுக்கும்
    இனிய நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தொடர் ஆதரவுக்கு நன்றி தோழி !
      உங்களை போன்றோரால் தான் இது சாத்தியமானது!
      தோழி மிக்க நன்றி!

      Delete
  20. சகோதரி,

    வலைச்சரம் பற்றி அதிகம் தெரியாதவன் நான் ! இனி தொடருவேன் !

    ஏதோ நமது மனதுக்கு பட்டதை, சமூகத்துக்கு தேவை என சிறுபுத்திக்கு படுவதை, நமக்கு தெரிந்த தமிழறிவில் எழுதுவோம் என்ற எண்ணத்தில் தான் வலைப்பூ தொடங்கினேன் !

    உங்களை போன்றவர்களின் அன்பும் ஆதரவும் அளப்பெரிது !

    நாம் அனைவருமே, நட்பால் ஒன்றாக இணந்து நன்றாக வருவோம் !

    நன்றியுடன்
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. ஆம் நட்பால் இணைந்து நன்றாகவே வருவோம்!!
      நன்றி சகோ!

      Delete
  21. இன்றைய அறிமுகங்கள் அனைவரும் எனக்குப் புதியவர்கள். இன்று பார்க்க இயலாவிட்டாலும் வரும் நாட்கள்ல நிச்சயமா எல்லார் தளங்களையும் படிச்சுக் கருத்திடுவேன்மா. ஒரு வாரத்தை சுவாரஸ்யமா ஒரு ஜாலி டூர் போன ஃபீலிங் வர்றமாதிரி நடத்தின தங்கைக்கு கை தட்டுகளும் பாராட்டும் மனசு நிறைஞ்ச நல்வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. தொடர் ஆதரவுக்கு நன்றி அண்ணா !
      உங்களை போன்றோரால் தான் இது சாத்தியமானது!
      மிக்க நன்றி அண்ணா!

      Delete
  22. இன்று அனைவருமே எனக்குப் புதியவர்கள். விடுமுறை நாள்ங்கறதாலே இன்று பலர் என் நட்பு வட்டத்தில் இணைக்கப்படலாம் வாழ்த்துக்கள் தங்கையே.. (அக்கான்னு கூப்பிடலாமான்னு கேட்டீங்களே)... அந்தப் பூனைக்குட்டி கலக்கல்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! அக்கா மிக்க நன்றி!
      புதிய அக்கா கிடைத்திருக்கிறார்:))
      தொடர்வோம் நம் வலைபூக்களில் :))
      நன்றி அக்கா!

      Delete
  23. சோகமாத்தான் இருக்கு, வலைச்சரத்தில் தமிழ்ப் புயலடித்து ஓய்ந்த இந்த ஞாயிறு. ஆம், இது ஒரு புதிய ஞாயிறுதான்!

    மைதிலி: "அப்பாட! ஒரு வழியா தப்பிச்சோம்"னு பெருமூச்சு விட வேண்டாம்! மீண்டும் மகிழ்நிறையில் வந்து உங்களை ஒரு வழி பண்னுகிறேன்- பின்னூட்டம் என்கிற பேரில். :))) Take it easy.

    Enjoy the break! :)

    ReplyDelete
    Replies
    1. பாஸ் நானும் சேர்ந்துகிறேன் ஒரு வழியை இரு வழியாக மாற்றுவோம் உரலுக்கு ஒரு பக்கம்தான் இடி என்பாங்க மத்தளதிற்கு(மைதிலிக்கு) இரண்டு பக்கமும் இடி அல்ல அடி

      Delete
    2. தமிழ்ப் புயலடித்து ஓய்ந்த இந்த ஞாயிறு// ஆஹா! ரொம்ப சந்தோசம் சகா!
      பின்னூட்டம் என்கிற பேரில். :)))// நீங்க என் வலைப்பூ விற்கு வருவேன் சொன்னதே சந்தோசம் பாஸ்! மற்றபடி I am waiting for this frienemy (someone who really is a friend but also a rival.)@ வருண்

      என்னை அடிபீங்களா? அவ்வ்வ்வவ் @ தமிழன்

      Delete
  24. நீங்கள் வலைச்சரம் பொறுப்பேற்று ஒருவாரம் ஓடியதே தெரியவில்லை. நீங்கள் சுட்டிக் காட்டிய பழைய புதிய பதிவர்களது அனைத்து பதிவுகளையும் படிக்கத்தான் முடிந்தது. கருத்துரைகள் உடனுக்குடன் எழுத நேரம் இல்லாமல் போய்விட்டது. இனி உங்கள் வலைப்பதிவின் பக்கம் வந்து பார்க்கிறேன்! நன்றி!
    த.ம.7

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை அய்யா மெதுவாக பொழுது கிடைக்கும் போது கண்டிப்பாக வலைப்பூவிற்கு வருகை தரவும்! மிக்க நன்றி!

      Delete
  25. சிறந்த அறிமுகங்கள்
    தொடரட்டும் தங்கள் பணி

    ReplyDelete
  26. ஒரு சிலர் எனக்கு புதிது இனித்தொடர்வேன் அவர்களை நேரம் கிடைக்கும் போது நீங்கள் உண்மையில் டீச்சர் பள்ளிக்கூட படம் சினேஹா போல என்று இன்றுதான் அறிந்தேன் இனி கலாய்க்கலாம் உங்கள் தளத்தில்

    ReplyDelete
    Replies
    1. பள்ளிக்கூட படம் சினேஹா போல // ஹா,,ஹா...ஹா...
      நான் சாட்டை தயா சார் போல் என்று என் மாணவக் கண்மணிகள் கூறுவார்கள்:))
      //கலாய்க்கலாம் உங்கள் தளத்தில்// யூ டூ நேசன் சகோ!! வெல்கம்! வெல்கம்!!

      Delete
  27. மிகச் சிறப்பான அறிமுகங்களுடன் விடை பெறுதல் சிறப்பு...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. இன்றைய அறிமுகங்கள் பலர் புதியவர்கள். பார்க்க வேண்டும்! அறிந்து கொள்ள வேண்டும். சகோதரி தங்கள் அழகான எழுத்தில் வலைச்சரத்தை அழகு படுத்திவிட்டீட்கள். நன்றி....

    சகோதரி இனியா அவர்களே வருக வருக.....

    மதுரைத் தமிழன் சொல்லி இருப்பது போல் மது அவர்களும் வலைச்சரத்தை அலங்கரிக்கலாமே! ஆவல்!

    ReplyDelete
  29. நன்றி .இதுவரை நான் எழுதிய பதிவுகளை ,பள்ளிக்கூட மாணவன் மனப்பாடம் செய்து தனக்கு தானே ஒப்பிப்பதைப்போல் நான் மட்டுமே படித்து இருக்கிறேன் .இன்று உங்களால் மற்றவர்களின் கண்களிலும் தெரிந்து இருக்கிறேன் .மிக்க நன்றி .என் வாழ்நாளில் ஒரு முக்கியமான நாளாக இன்று அமைத்து கொடுத்ததற்கு மீண்டும் ஒரு நன்றி .

    ReplyDelete
  30. மிக அருமையாகவும், செம்மையாகவும் தங்களுக்கு அளிக்கப்பட்ட இந்த ஆசிரியப்பணியை செவ்வனே முடித்ததற்கு வாழ்த்துக்கள் சகோ.

    இறுதியில் ஒரு திருக்குறளை எடுத்துக்கூறி வித்தியாசமாக முடித்தமைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது