07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, August 13, 2015

வலைச்சரத்தின் நான்காம் நாள்-தேடல் பதிவர்கள்!


வணக்கம் நண்பர்களே!

வலைச்சரத்தின் நான்காம் நாளை  தேடலில் ஆர்வம் கொண்ட பதிவர்கள் அலங்கரிக்கிறார்கள்.


http://karanthaijayakumar.blogspot.com/

பதிவர்: கரந்தை ஜெயக்குமார்
ஜவஹர்லால் நேரு அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் உலகிற்கு மிகப் பெரிய இலக்கியவாதி கிடைத்திருப்பார் என்று சொல்வார்கள். நண்பர் கரந்தையாரின் எழுத்துக்களைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு இன்னொரு நேருவை பார்ப்பதுபோல் இருக்கும். ஒருவேளை அவர் கணித ஆசிரியராக இல்லாமல் இருந்திருந்தால் மிகப் பெரிய எழுத்தாளராக அவதாரம் எடுத்திருப்பார்.   பதிவுக்கான இவரின் தேடல் அலாதியானது. கணித மேதையின் வீட்டில் இருந்து தொடங்கும் இவரின் 'கணித மேதை சீனிவாச ராமானுஜன்' நூல் இவரின் எழுத்துக்கான மற்றொரு மைல்கல்.

http://karanthaijayakumar.blogspot.com/2015/05/blog-post_28.html#more




சொல்லப்படுபவர் யாரென்று சொல்லாமல் கடைசிவரை அவரின் பாடுகளை மட்டுமே கூறி, இறுதியில் சஸ்பென்சை உடைப்பதுதான் இவரின் ஸ்டைல். அதை இந்த பதிவிலும் பார்க்கலாம். தன் வாழ்க்கையில் மட்டுமல்ல, தன் பெயரிலும் கசப்பைக் கொண்ட இந்த மனிதர் பின்னாளில் உலகையே வென்றவர். படித்துப் பாருங்கள் கரந்தையாரின் பாணியில்...
* * * * *


http://karanthaijayakumar.blogspot.com/2015/07/blog-post_22.html


இந்த மனிதர் மட்டும் இல்லாதிருந்திருந்தால் தமிழகம் கல்வியில் இந்த உயர்ந்த நிலையை அடைந்திருக்காது. அவர் வாழ்ந்த இல்லத்திற்கு இவர் சென்ற போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். வேதனையான பதிவிது. 
$ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $


http://thulasidhalam.blogspot.com/

பதிவர்: துளசி கோபால்
மிக இளமையான பதிவர். இவர் பதிவில் தெரியும் ஆன்மிக நெடியை மட்டும் நீக்கிவிட்டால் இவரை எல்லோரும் அப்படிதான் சொல்வார்கள். என்னவொரு துள்ளலான நடை! இணைய மொழியின் இலக்கணம் தெரிந்தவர். கடவுளைக் கூட மிக உரிமையோடு இவர் கலாய்ப்பதை ரசிக்காமல் இருக்க முடியாது. ஒரு தொழில்முறை புகைபடக்காரரை விட அதிகப் படம் எடுத்த பதிவர். அலுப்புத்தட்டாத பயணத்துக்கு சொந்தக்காரர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அத்தனை சுவராசியமான மனிதர் துளசி கோபால்! இவர் கால்படாத இடம் எதுவும் பூமியில் இருக்கிறதா என்று இனிதான் தேடிப்பார்க்க வேண்டும். 


thulasidhalam.blogspot.in/2015/08/blog-post.html



இந்த பதிவை படித்து முடித்ததும் நாம் விமானம் ஏறி, ஹோட்டலில் தங்கி, கடலை ரசித்து, ஷாப்பிங் செய்த எல்லா அனுபவமும் நமக்கு ஏற்படும். அதுதான் இவர் எழுத்தின் சக்தி.
* * * * *

http://thulasidhalam.blogspot.in/2014/08/blog-post_13.html



தனது வீட்டுக்கருகில் இருக்கும் நூறாண்டு கண்ட சிறையைப் பற்றி சுவைபட சொல்கிறார். வாருங்கள் கேட்போம்.
$ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $


http://satheeshchennai.blogspot.in/

பதிவர்: சதீஷ் குமார் 
சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட இவர், வாசிப்பு, பயணம், இசை இவற்றின் மீது பற்று கொண்ட பொறியாளர். தான் பயணம் செய்யும் வாகனங்களைப் பற்றியே அதிகம் எழுதுவார். இவரின் இந்த தேடல் எனக்கும் பிடித்துப்போனது. பொது வாகனங்களைப் பற்றி எழுதக்கூடிய ஒரே பதிவர் இவர் மட்டும்தான் என்று என் சிற்றறிவுக்கு படுகிறது. வேறு யாரவது இருந்தால் தெரிவியுங்களேன்... 

மதுரைக்கு WAP-7

http://satheeshchennai.blogspot.in/2015/04/wap-7.html


பயணங்களை கொண்டாடுகிற நாம் என்றாவது நாம் பயணம் செய்யும் வாகனங்களை கொண்டாடியிருக்கிரோமா? அதிலும் பொது வாகனங்களை யாருமே கண்டு கொள்வதில்லை. இந்த பதிவரின் சிறப்பே அத்தகைய பொது வாகனங்களை அக்குவேறு ஆணிவேராக அலசுவதுதான். இங்கு ஒரு ரயில் எஞ்சினைப் பற்றி பேசுகிறார். 
* * * * *

பயணிகள் கவனத்திற்கு!

http://satheeshchennai.blogspot.in/2012/06/1_22.html
முந்தைய பதிவில் ரயிலைப் பற்றி கூறியவர் இப்போது அரசு பஸ்களைப் பற்றி கூறுகிறார். அதனால் வோல்வோ படத்திற்கும் நமது போக்குவரத்துக்கும் தொடர்பில்லை.
* * * * *

மும்பை பயண குறிப்புகள்

http://satheeshchennai.blogspot.in/2015/05/1.html


எர்ணகுளத்தில் இருந்து மும்பை செல்லும் ரயில் பயண அனுபவங்களை இவர் விவரிக்கும் அழகே தனிதான்.
$ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $


www.ponnibuddha.blogspot.com

பதிவர்: முனைவர் B.ஜம்புலிங்கம்
தமிழ் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றும் ஜம்புலிங்கம் அய்யா புத்தர் குறித்த மாபெரும் தேடலில் ஈடுபட்டுள்ளார். அவரின் தேடலில் கிடைத்த பல பொக்கிஷங்களை பதிவின் மூலம் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். 

http://www.ponnibuddha.blogspot.com/2015/02/blog-post_27.html


கிட்டத்தட்ட 20 வருடங்களாக சோழ நாட்டில் உள்ள புத்தர் சிலைகளை தேடி மிக நீண்ட ஆய்வுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார் இவர். அதன் மூலம் பல அரிய தகவல்களையும் தந்திருக்கிறார். மீசை வைத்த புத்தர் இதுவரை கேள்விப்படாத ஒன்று. மேலும் பல புத்தர்களை இந்த பதிவு நமக்கு அறிமுகம் செய்கிறது.
* * * * *

ஆனந்த பவன்

http://drbjambulingam.blogspot.com/2015/02/blog-post_21.html


ஆனந்த பவனம் பார்த்து வந்தவர்கள் குறைவு. அதை பார்த்த இவர் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் இந்த பதிவு அபூர்வமான பல தகவல்களை தருகிறது. 
$ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $

---------------------------------------------------------------------------------------

நேற்றைய வித்தியாசமாக சிந்திக்கும் பெண் பதிவர்களில் விடுபட்டு போன பதிவர் இவர்.
http://puthiyamaadhavi.blogspot.in/ 

பதிவர்: மல்லிகா சங்கரன்
மும்பையில் HSBC வங்கியில் பணிபுரியும் இவர், திருநெல்வேலிக்கு சொந்தக்காரர். வித்தியாசமாக சிந்திக்க கூடியவர். சமகால நிகழ்வுகள் உட்பட பலவற்றையும் நெற்றியடியாக விமர்சிப்பவர். எங்களுக்கு மொழியில்லை.. தேசமில்லை... இனமும் இல்லை... நாங்கள் பெண்கள்! என்று பெண்களுக்கு கொடி பிடிப்பவர். Second SEX world என்ற ஆங்கில வலைப்பூவையும் நடத்தி வருபவர்.

அம்மாவின் காதலன்(ர்)

http://puthiyamaadhavi.blogspot.in/2011/01/blog-post.html



காதல் என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுதானே. அம்மாவும் ஒரு பெண்தானே. அவள் காதலித்திருக்கக்  கூடாதா? இப்படி ஒரு கேள்வி இவரை வாட்டி எடுக்கிறது. அந்த மன அவஸ்தையை அற்புதமாக சொல்லியிருக்கிறார். இடையில் நெல்லை தமிழ் வேறு விளையாடுகிறது. ஞானப் பழத்திற்காக சிவா பெருமான் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டைக்கு இவர் வித்தியாசமான விளக்கத்தை தருகிறார். 

* * * * *

கங்காணியின் பேத்தியாக இலங்கை மலையகத்தில் நான்

http://puthiyamaadhavi.blogspot.in/2015/05/blog-post_28.html


தனது பூட்டன் ஒரு கங்காணி என்று தெரிந்தப் பின் இவர் பெருமையடைகிறார? அல்லது அவமானம் கொல்கிறார? தேர்ந்த நடையில் இவரின் அனுபவத்தை ரசியுங்கள்.

$ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $


இன்றைய அறிமுகங்களை பற்றி தங்கள் பின்னூட்டத்திற்காக காத்திருக்கிறேன்.

நன்றி!

மீண்டும் நாளை சந்திப்போம்!

அன்புடன்,

எஸ்.பி.செந்தில்குமார்


48 comments:

  1. வணக்கம் நண்பரே...
    இன்றைய அறிமுகங்கள் மதிப்பிற்குறிய நண்பர் திரு.கரந்தையார், திருமதி. துளசிதளம் கோபால், முனைவர் திரு. பி.ஜம்புலிங்கம், மற்றும் சதீஷ் மனவுரை, திருமதி. மல்லிகா சங்கரன் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்
    தமிழ் மணம் இணைப்புடன் ஒன்று

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைதந்து பதிவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி, வாக்கும் அளித்த நண்பருக்கு மிக்க நன்றி!

      Delete
  2. நான் பின்பற்றும் வலைப் பதிவர்கள் இவர்கள் என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமை! சகோ. மல்லிகா சங்கரன் தவிர! இனி தொடர்வேன். நன்றி!

    அனைவருக்கும் அன்பு நல்வாழ்த்துகள்
    த ம 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் அறியாத ஒரு பதிவரை நான் அறிய வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி நண்பரே!

      Delete
  3. வணக்கம்,
    நான் மிக மதிக்கும் திரு கரந்தையார், முனைவர் அய்யா மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    இருவரை இனி தான் தொடரனும்.
    தங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தொடருங்கள் தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

      Delete
  4. இனிய அறிமுகங்கள்.. அருமை..
    தொடரட்டும் தங்கள் பணி!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துடன் தொடர்கிறேன் அய்யா!

      Delete
  5. வணக்கம் நண்பரே!

    சதீஷ் குமார் மற்றும் துளசி தளங்கள் புதியன.
    பிறர் நான் மதிக்கும் ஆளுமைகள்.
    தங்களால் அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கு வாழ்த்துகளும்.
    தங்கட்கு நன்றியும்.

    த ம 4

    ReplyDelete
    Replies
    1. துளசிதளம் தங்களுக்கு புதியது என்பதை என்னால் நம்பமுடியவில்லை. மிக மூத்த பதிவர் அவர். ஆனாலும் என்னால் அவர் உங்களுக்கு அறிமுகமாவது மகிழ்ச்சியை தருகிறது. வருகைக்கு நன்றி நண்பரே!

      Delete
  6. ஜெயக்குமார் ஐயா, துளசி தளம், ஜம்புலிங்கம் ஐயா மூவரும் நான் தொடரும் மிகச் சிறந்த பதிவர்கள். புதிய மாதவி வாசித்திருக்கிறேன்... சதீஷ் புதியவர்... வாசிக்கிறேன்.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாசித்து மகிழுங்கள் நண்பரே!

      Delete
  7. இன்றைய அறிமுகங்களில் சதீஷ் எனக்குப் புதியவர். மற்றவர்களின் தலங்களுக்கு நான் செல்வதில்லை என்றாலும் நன்கு அறிவேன். பெண் எழுத்தாளர்களில் புதிய மாதவி மிகவும் குறிப்பிடப்பட வேண்டியவர். அவர் கட்டுரைகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். அருமையான அறிமுகங்கள்! எல்லோருக்கும் என் பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! தொடர்ந்து வாருங்கள்!

      Delete
  8. இந்த எளியேனுக்கும் ஓர் அறிமுகம் வழங்கியமைக்கு நன்றி நண்பரே
    தங்களின் அன்பு கண்டு நெகிழ்ந்தேன் நண்பரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பதிவுகளாலும், வலைச்சர வருகையாலும் நானும் நெகிழ்ந்தேன் நண்பரே!

      Delete
  9. தங்களது தேடலில் நாங்களும் வந்தது பெருமையாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. சக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களை அறிமுகப்படுத்தியதால் நான் பெருமையடைகிறேன் அய்யா!

      Delete
  10. நான்கு நாள் பதிவுகளையும் இப்போதுதான் படித்தேன். ஒரு பத்திரிகையாளருக்குரிய சிறப்பு தகுதிகள் உள்ளன என்பதை கூட்டாஞ்சோறு பதிவுகள் சொல்கின்றன
    நல்ல அறிமுகங்க்ள செய்திருகிறீர்கள் வாழ்த்துகள் தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பதிவுகளை படித்ததற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே!

      Delete
  11. சீரிய பதிவர்களைப் பற்றி சிறப்புடன் சொன்ன விதம் பாராட்டுக்குரியது!!!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி நண்பரே!

      Delete
  12. அன்புள்ள அய்யா,

    அறிமுகப்படுத்திய கரந்தையார் முதல் முனைவர் B.ஜம்புலிங்கம் உட்பட அனைவரையும் பின்தொடர முயற்சிக்கிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    நன்றி.
    த.ம. 8

    ReplyDelete
    Replies
    1. பின் தொடரும் முயற்சிக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அய்யா!

      Delete
  13. வணக்கம்
    இன்றைய அறிமுங்கள் அனைவருகக்கும் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

      Delete
  14. அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா!

      Delete

  15. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

      Delete
  16. அறிமுகங்களை ஒவ்வொன்றாகப் போய் பார்க்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் நன்றி அய்யா!

      Delete
  17. வணக்கம், சதீஷ் அவர்களின் பதிவுகளை வாசித்ததில்லை. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!

      Delete
  18. ellarum puthiya pathivarkal enakku sir!


    ovvorutharaip patriya arimukamum arumai!

    sirappaaka poyikkondirukkirathu valaicharathil ungalin intha vaaram thodarungal!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மகேஷ்!

      Delete

  19. தேடலில் ஆர்வம் கொண்ட பதிவர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

      Delete
  20. தங்கள் தேடலில் கிடைத்த அறிமுகப்பதிவர்களை இனி நாங்கள் தேடிச்செல்கிறோம். சிறப்பானதொரு சரத்தை தொடுத்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!

      Delete
  21. அறிமுகப் பதிவர்களுக்கு வாழத்துக்கள் ...! ஓரிருவர் தான் எனக்கு தெரிந்தவர்கள் இனி தொடர்கிறேன் புதியவர்களை நன்றி! தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!

      Delete
  22. சதீஷ்குமார், மல்லிகா சங்கரன் தளங்கள் எனக்கு அறிமுகம் இல்லாதவை! மற்றவர்கள் என் இனிய நண்பர்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! தளங்களுக்கு சென்று பார்க்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சென்று பாருங்கள் நண்பரே! தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

      Delete
  23. அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துகள். சிலர் நான் அறியாதவர்கள்... பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      Delete
  24. சதீஷ் குமார் தளம் அறியாத்ததுஏனையோர் பரிச்சயமானவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது