07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, August 18, 2015

வலைச்சரத்தில் இரண்டாம் நாள்

அன்பினிய அருமை தோழமைகளுக்கு..அன்னை வணங்கி வணக்கம் கூறி ஆரம்பிக்கிறேன் ..

வலைச்சரத்தின் மற்ற வலைப்பூ எடுத்து தொடுக்கும் முதலான என் இனிய இரண்டாவது நாளை.....

தொடக்க நிகழ்வாய்...நான் தொட்டு நித்தமாளும் பல் மருத்துவம் பற்றிய சிறு குறிப்பு


பல் மருத்துவம்...மருந்தாளுமை துறையில்  தனிப்பெறும் சிறப்பு பெற்று ..சொல் வழங்கும் துறை

சொல்லும் எழுத்தும் ..மொழிக்கு உறுதி என்பது போலே..பல்லும் நலமும்..உடலுக்கு உறுதியளிக்கும் என்பதையும் இதின் தொடக்க அறிகுறி ஆரம்பமே..  அனைத்து வித நோய்களும் என்பதையும் எத்தனை பேர் இங்கு அறிவர்..?!

பலவித மேலாண்மைதுறை கொண்ட பல் மருத்துவத்தில் இன்று நாம் பார்க்க போவது PERIODONTICS

பல் மற்றும் அதைசுற்றி இருக்கும் சதைப்பகுதி எலும்புகளை பாதுகாப்பில் கவனம் செலுத்தும் துறை
பல் கறை...வாய் துர் வாசம் .எழுறு பிரச்சனைகள்..பல் ஆடுதல்...மற்றும் இம்ப்ளாண்ட் எனப்படும் ஸ்குரு பொருத்தி
செயற்கை பல் பொருத்தும் துறை ...... PERIODONTICS
அழகிய பற்களை....நலமுடன் பலமுடன் பெற்று பயனைடையுங்கள்
இன்று மூன்று முத்தாய்ப்பு வலைப் பூக்கள்

முதலில் முதன்மை குரு வணக்கம்: __/|\__
என் ஆசான், இதழியல் செம்மல் திரு இரா. குமார் அவர்களின் வலைப் பூ
 ””””சாகில் தமிழ் படித்துச் சாகவேண்டும் . எந்தன் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும் ". இந்தப் பாடல் வரியை சிறுவயதிலேயே படித்து அதை வாழ்க்கையின் குறிக்கோளாக வரித்துக் கொண்டவன் நான்.””””” //// என்ற அவர்தம் அடையாளத்துடன்

ஊனும் உயிரும் என்னுயிர் தாய்மொழிக்கே என்றே...உயிர் மொழிபடித்து நேசித்து ..உருகி ...மொழிப்பெருமைக்கே அர்ப்பணம் என் எழுத்தும் வாழ்வும் என்று ...9 புத்தகங்கள் எழுதி ...தன் வருமானத்தின் பெரும்பகுதியை ..தாய்மொழிக்கே அர்பணித்து தரணி சொல்ல வென்று வாழும் உயர்திருமகன்.கேட்பவர்க்கும்..கேட்காதவர்க்கும் கையிலிருக்கும் அனைத்தும் தேவையறிந்து உதவிடும் பெரும் மனம்..முகநூல் தோழமையாய் அறிமுகமாகி..இன்று மூத்த சகோதரனாய்..உதிரம் பகிராத உறவாய்..உயிர் நிம்மதிதந்து தாய்வீடு தந்த தலைமை ஆசானின் தாய்மொழிச் சரப் பூ



அடிமுடி அறியமுடியா சிவனை,...மாணிக்க வாசகன் தொழுது அழுது பின்பற்றிய மொழியை.....தானும் உருகிநேசித்து வாசித்து,,,தன் மொழித்திறன் கொண்டு ஈசனுக்கு ஓர் சலங்கை கட்டி..ஆட்டுவித்த வரலாறு சொல்லும் இறைகாவியம் ...100 பாடல்கள் அமைந்த ஒருவாசகம் எனும் சிவ வாசகம்..நாயானார் கட்டிய கோவில் வந்தமர்ந்த ஈசன்..வாசகமாய் இங்கெழுந்து நடனம் புரிந்தான் ....தில்லையில் இதன் புத்தக மற்றும் இசைத்தகடு வெளியீடு சைவசமய மேன்மக்கள் முன்...மேன்மையடை..மாற்று மத கவிஞர்...அப்துல்காதர்  வந்து கண்ணீர் தொட்டு பக்கங்கள் திருப்பி சிறப்பித்தார். திருமதி கிரிஜா ஹரிஹரன் அவர்களின் தேன் மதுரக் குரலில் முதல் பத்து பாடல்கள் இசைவெளியீடாய் வெளிவந்தது.  சிவவாசகம் பக்கம் சென்று படித்து நேசியுங்கள்

2 கல்லூரிக்குறும்பாய்..தன் கல்லூரி கால வசந்தநினைவுகளை..மலரும் மகிழ்வு தொட்டு தன் சுவாரசிய நடையில் சிறப்பிக்கும்
கல்லூரி கவின் தொடர்புகள்  கல்லூரிக் குறும்புகள் வாசித்து
சிரித்து சிந்தை குளிருங்கள் நட்புகளே



3. தமிழ்தேன் ருசி......இலக்கியத்தில் காவியத்திலும்..இலைமறை பொருளாய்,,,ஒளிந்திருக்கும்...அறுசுவைகளை ஆளுமையாய் சமைத்து....ருசிநரம்புகள் தூண்டி..பசி விருந்திடும் பாவல தமிழ் மொழி இலக்கியப் பந்தி...சங்க கால புலவர்களின் திறனை...புரிந்துகொள்ள...நல்லதொரு தமிழாசானாய்..என் ஆசான் எடுத்துரைக்க ...தமிழ்வகுப்பு சென்ரு மெய்மறந்து.செவிக்குணவு ருசித்த மகிழ்வில்.ஊனும் உயிரும் .நிறைவடையும்

தமிழுக்கு சோறு போடுகிறேன் என்று சொன்ன வைரமுத்து ..தன் திரைப்பாடல்களுக்கு..எஙிருந்து எல்லாம் கருத்துக்களை எடுத்துக் கையாண்டுள்லார் என்பதை அலசி ஆராய்ந்து ....எடுத்தது எங்கே தலைப்பில்...சுவாரசியமாக சாட்டை அடி கொடுத்துள்ளார்

புதுக்கவிதைகளை..தன் கல்லூரிகாலத்திலேயே..இருட்டு சுவடு எனும் தன் முதல் புத்தகத்தில் செழித்து பதியம் செய்த ஆசான்..இங்கு அவ்வப்போது ஆளுமைசெய்யும் மொழி .எடுத்துகாட்டாய்...தீ பற்றி ..தித்திக்க எழுதிய கவி...வாசிப்போரை பற்றி அனலெரிக்கும்  முத்தங்கள்...


அரும்பெரும் சாதனையாய்..அவனி வென்று பூமிப் பந்தை எக்காலமும்..சுற்றி சுழலடித்து வாகைசூடி வள்ளுவன் தன்னை தமிழுக்கு தந்து வான்புகழ் செய்த தமிழ் அன்னை என்றே...உயர்ந்தோங்கிய உலகப் பொதுமறைக்கு ..அந்த அருளமுத ஈரடிக்கு எண்ணற்றோர் உரை எழுத....என் ஆசான் மட்டுமே முதம் முறையாய்..குறளமுதமாய்...கவி தொடுத்து எழுதி ....இன்று முடித்து பெருமை நிமிர்கிறார்...முப்பாலையும் எழில் செப்பி செழுமையாளும் இவர்தம் மொழித்திறமை வாசிக்க ..வாசிக்க ..உயிர் சென்று அங்கு வசிக்கும்..அடுத்து புத்தகமாய் வெளிவரப்போகும் இவர்தம் குறளமுதம்...அவனிவென்று ஆசானுக்கு ஓர் கல்வெட்டு மொழிச்சிகரமேன்மை தரும் என்பது நிச்சயம்... அவர்தம் பக்கம் சென்று..அழகின் குறளமுதம் பருகி ஆயுள் நீடியுங்கள் தோழமைகளே..!!! குறளமுதம்...


பெருமையடைகிறேன்..என் திமிரோன்..என் ஆசானை..இவ் வலைப்பூவில் முதல்மொழிப் பூவாய் ...எடுத்து சரம்...தொடுக்க


*********************
அடுத்து என் அறிமுகம் முகப் பூ...நானாகிய என்னை ..நானே கீழ் தள்ளி மீறும்  அன்”பூ”.. 

அன்பனென நேச மூச்சணைக்கும் இவளின் மொழி.....
அன்னப் பூச்சிறகடி மென்மையாய் ..தலைதடவி முன்னுச்சி முத்தமிடும் தாய்மைமொழியாய்....
இறகணைக்கும் எப்போதும் நம்மை

மனமும் மணமும் ...குணமும் கோவமும் ...மழலையெனவே செப்பிடுவாள் ..நாம் மகிழ்வு கொண்டு ரசிக்க

சப்தமில்லா மொழி முத்தங்களை,....முத்திரை சப்தமிட்டு பதிப்பது இவரின் தனி அசாத்திய திறமை

முத்தச்சிதறல்களாய் ..இவரிட்ட...கவியமுதத்தில் தளிம்பிய ஈரம் வடி வடிந்த  தீனி முத்தம் ..இதோ..இங்கு இவளின் தளும்பும் நேசம்..

காலத்தின் ஒருதுளியாய்..கடந்துவந்த பாதைகளை...தாய்வீட்டு செப்பேடுகளை...இவரின் நினைவு உருகொடுத்த மொழி எழில்.. இதோ

பெண்மையின் முதல் ஹீரோ .....விரல்பிடித்து விடியல் தந்த ...ஈகை உதிரம் தந்தை பிரிய ..தான் துடித்த மொழி....அழுகை குழந்தையாய்...இரும்பு மனசையும் ..இளக வைக்கும்.  தாவி மடி அமர மீண்டும் தந்தையழைக்கிறாள் இக்குழந்தை. தந்தைக்கு முதலாம் நினைவஞ்சலி

தன் அருமை தம்பி மகனை...அன்பு அத்தை தன் மெத்தை மடியமர்த்தி அழகு கதை சொல்லி..கவின் உரையாடும்
ஸ்ரீயும் நானும்...இவரை நான் குழந்தையென்றே கொண்டாடும் கோபுரபிரியத்தின் உற்சவ மிச்சம்

வாசித்து நேசியுங்கள் இவர்தம் பக்கம் சென்று ...இரு குறும்புகளையும்
தன் எண்ணச்சிதற்கல்களாய்....நறுக்கு தெறிக்கும் மொழியில்......நடைவாழ்வியலை...எளிமை மொழியெடுத்து நச் சென்று குழந்தை குட்டு வைத்து கற்பிதல் செய்தல்
தனிப் பெரும் அருமை சிறப்பு  தூரிகை சிந்திய எண்ணத் துளிகள் இங்கே...


கதை சொல்லும் ,,கவிப்பூ
ஆரோக்கியம் சொல்லும் நலப் பூ
மனிதம் சொல்லும் மகத்துவப் பூ
தத்துவம் செப்பும் தாமிரப் பூ

வாழ்வியல் அணைக்கும் வண்ண பூ..வலைப்பூவாம் ...என் நிழலின் 
எண்ணத்தூரிகை... வாசித்து வண்ணக் கருத்தெடுத்து மழைதூவி மகிழ்வியுங்கள். .இவ் விதைக் குழந்தையை.

********************************************

மூன்றாவதாய்....இன்று ..இங்கு  முழுமைமையாய்..நான் முத்தாய்ப்பு என மங்களமாய் சொல்லி எடுத்து தொடுக்கும் பூ வலைப்பூவின் முதல் ஆரம்பமாய் மொட்டவிழ்த்திருக்கும் திரு. வை பாலச்சந்தர் அவர்களின் வலைப்பூ.

சட்டம்படித்து..அரசியல் ஆண்டு...தமிழ் மொழி நேசிப்பில் ..உயிர்கொண்டு.....எழுதும் தமிழ் நெஞ்சம் அனைவரும்
என் சொந்த உதிரமே...என்றே தன் பணிவு மொழியாலும்..வாழ்த்து மொழியாலும் ஆசீர்வாத பிரியங்கள் வழங்கும் முகநூல் மூத்த அறிமுகம் ..இங்கு புதிதாய்....அடியெடுத்து வைக்கும் ..மேன்மகனார்....வாழ்த்தி வரவேற்கிறேன்..அன்னைத்தமிழுக்கு ..அருந்தவ தொண்டாற்ற...இவ்வன்பு திருமகனாரை

என் ஆசானுக்கு இவர் எழுதிய..வாழ்த்து மொழி ..இனிய தமிழுக்கு இளநிலவன் பாராட்டு என

தன்னைதான் மேனி குறுக்கி தமிழை தோள் தாங்கிய உயரம் ஒன்றே சொல்லும்....அவரும் இவரும் இன்னாரென்று...இவர் தான் எவ் உயரமென்றும்

அறிமுகமாய் உங்களின் வலைப் பூ சொல்லி வாழ்த்தி வணங்குகிறேன்...தாய்மொழியே

முக்கனி தேன் சுவை நிறை முப்பூக்களை இன்று முகன் செய்து....மொழிநாரெடுத்து முதல் சரம் தொடுத்து
மென்பிரியங்களுடன் ...செந்தமிழ் உரையாடி செழுமையடைகிறேன்....

சந்திப்போம் இனிய இரண்டாம் நாளை இமையணைத்து

இன்னும் ஓர் புது விடியல் மொழியுடன்..புதுப்பூக்கள் எடுத்து நாளை..இனிய வந்தன வணக்கம் தோழமைகளே !!!!!!!




49 comments:

  1. பல் பற்றிய நல்லதொரு குறிப்பு...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி. கருத்திடல்களாய் தங்கள் ஊக்குவிப்பே இங்கு பல பதிவர்களை உற்சாகமாய் மேலும் எழுத தூண்டுகிறது. அன்பின் நன்றிகள்.

      Delete
  2. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! அறிமுகப்பதிவர்களின் URL ஐ தருவதை விட ,அந்த வலைத்தளங்களுக்கு செல்ல இணைப்பு கொடுக்கலாம். இது குறித்து கேட்டால் வலைச்சித்தர் திண்டுக்கல்லார் உதவி செய்வார்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். இப்போது சரி செய்யபட்டுவிட்டது. மிக்க மகிழ்ச்சி!!

      Delete
  3. அருமையான மொழிநடையோடு அழகாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி. அறிமுகபுபடுத்தியுள்ள வலைப்பூக்களுக்கு சென்று வாசித்து கருத்துகளை தெரிவிக்கவும். அன்பின் நன்றிகள்!!

      Delete
  4. புதிய தளங்கள்.. அழகிய தொகுப்பு..

    அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  5. அனைத்தும் எனக்கு புதிய தளங்கள். அறிமுகம் செய்யப்பட்ட மூவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. வாசித்து கருத்து தெரிவிக்கவும்.

      Delete
  6. அற்புதமான பதிவர்கள்
    அறிமுகப் படுத்தியவிதமும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மொழி நடை மனதைக் கவர்கின்றது. புதிய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.நாளை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி. நாளை புதிய அறிமுகங்களுடன்... அன்பின் நன்றிகள்

      Delete
  8. என்னைப்பொறுத்தவரை புதிய அறிமுகங்கள்.நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி. அவர்களின் வலைப்பூக்களை விருப்ப பக்கங்களாக தொடர்ந்து ஊக்கப்படுத்தவும். நன்றி!!

      Delete
  9. பல் மருத்துவர் சொல்லேரெடுத்து உழுகிறார்
    பல்லுக்கும் சொல்லுக்கும் மருந்தளிக்கிறார்
    உயிரோட்டமாய் அறிமுகக் கையாளுமை
    உணர்வாய் தமிழறிஞர்களின் கவிவரிகள்
    தமிழெங்கள் மூச்சென்று இரா.குமாரின்
    தமிழ்த்தேடல், தோழியின் அன்புப்பிரவாகம்,
    பாலச்சந்தரின் பார்வை வீச்சுக் கட்டுரைகள்
    பார்க்க படித்திட பரவசமாய் பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி. நன்றி!!

      Delete
  10. மீரா லக்‌ஷமன் தளம் அறிவேன்! மற்றவர்கள் புதியவர்கள்! சென்று பார்க்கிறேன்! சிறப்பான விரிவான வலைபதிவர் அறிமுகங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மற்ற வலைப்பூக்களையும் பார்வையிடவும். அன்பின் நன்றிகள்

      Delete
  11. அருமை டாக்டர். உங்களுக்கே உரிய தமிழ் நடை...தனி நடை. கவிதையில் மட்டுமின்றி, உரைநடையிலும் வியக்க வைக்கும் சொற்சேர்க்கை. என் வலைப்பூ பற்றி ஒன்றுவிடாமல் குறிப்பிட்டு அழகான அறிமுகம். ஆர்வமூட்டும் அறிமுகம். அவனிக்கு அண்ணனை தங்கை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. பேருவகை கொள்கிறேன்.
    மீரா மேடம் வலைப்பூ, திரு பாலச்சந்தர் சார் வலைப்பூ அறிமுகங்களும் அருமை. ஆசிரியப்பணி சிற்ப்பாக அமைவதில் மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி ஆசானே.

      Delete
  12. சில தளங்கள் சென்று வந்தேன் அனைத்தும் புதியவை. குறளமுதத்தில் சில குறள் களை புதுக்கவிதையாகக் காண விரும்பினேன். முடியவில்லை. எழுதிய வரலாறே வாசிக்க முடிந்தது. ஒரு பரிந்துரை. பதிவுகளில் கவிச் சுவை மட்டும்தானே இருக்கிறது. அறு சுவையில் ஒன்று மட்டும் என்றால் திகட்டி விடாதா. அது தேனாய் இனித்தாலும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. குறளமுதம் கவிதைகளின் தொகுப்பு முகநூலில் திருக்குறள் கவிதைகள் என்ற தனி பக்கதில் சேகரிக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் தங்கள் கூறியவற்றை கவணத்தில் கொள்கிறேன். மிக்க நன்றி.

      Delete
    2. பணிகிறேன் ஆசானே!!

      Delete




  13. ஆஹா.... டாக்டர்.......மகிழ்ச்சி. என் ஒவ்வொரு வளர்ச்சியையும் தன் வளர்ச்சியிலும் மேலாக எண்ணி, என்னிலும் அதிகம் மகிழ்ச்சி அடைபவர் எங்க டாக்டர். ஒரு தாய் வயிறு தாங்காது என்று, தனித்தனி தாய் வயிற்றில் பிறந்தோம் அவ்வளவுதான்.என் வலைத்தளத்தை அழகாக, படிக்கத் தூண்டும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.மீரா மேடத்தின் ஸ்பெஷல் எது என்பதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.திரு பாலச்சந்தர் சார், தமிழ்மீது கொண்டுள்ள பற்று அளப்பரியது. அதுபோலவே அவர் எழுத்தும் ஆழமானது. அதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். ஆசிரியர் பணியைச் சிறப்பாகத் தொடங்கியுள்ளீர்கள். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் வணக்கம் ஆசானே!!

      Delete
  14. வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி போல உன் மொழியில் என் மழலை கிறுக்கல்களின் அறிமுகம். மகிழ்ச்சி டா. என் மொழியை இந்த அளவு செதுக்கிய உளியே,.. இங்கு மட்டுமல்லாமல் வலை பதிவர்கள் மத்தியிலும் என்னை மிகை படுத்தி அணிசெய்திருக்கிறாய். யார் இவர் என்று எல்லோரும் வலைபூவுக்கு சென்று பார்க்கும் அளவுக்கு நம்ம சாரின் வலைதள அறிமுகம் சூப்பர்... கருத்திடல்களாய் அவர் இட்டுசெல்லும் மொழியே தான் மேன்மகனார் தான் என்பதை பதிய வைத்து செல்பவர் பாலசந்தர் சார்.அவரின் வலைதள அறிமுகம் மற்றவர்கள் இனி அவரின் வலைபூவை தொடர வைக்கும். இனி வரும் பதிவர்களின் அறிமுகஙுகளை எதிர்நோக்கி..

    ReplyDelete
    Replies
    1. அன்பின் நன்றி டி

      Delete
  15. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. இன்றைய அறிமுகங்கள் அனைத்துமே எனக்குப் புதியவை. சென்று பார்க்கிறேன். எல்லோருக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  17. அறிமுகப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துகள்!

    நன்றி.
    த.ம. 5
    த.ம.

    ReplyDelete
  18. அறிமுகம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஆசிரியரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  19. புதிய அறிமுகங்கள்தான்...
    சென்று படிக்கிறேன்...

    ReplyDelete
  20. அருமை!

    நற்பணி இது...
    நற்பயன் தந்திட
    வேண்டுகிறேன்
    இறைவனை!

    புலமைக்கு
    அடையாளம்
    சொல்...
    அச்சொல்லுக்கு
    ஆதாரமோ
    பல்...

    பல் காப்பவர்
    சொல் காக்கவும்
    செய்கிறார்....

    மெச்சுகிறேன்...
    வாழ்த்துகிறேன்!

    குமார் சார்...
    மீரா சகோ..
    இவர்கள் குறித்துச்
    சொன்னவை
    சரி மட்டுமல்ல..
    சொற்பம்!

    ஆனால்
    என்னைப்பற்றி...

    புரிகிறது..
    நெல்லுக்கு
    இறைத்த நீர்...
    புசிந்தது கொஞ்சம்
    புல்லுக்கும்!

    புல்லாகவே
    இருப்பினுங்கூட
    ஏன்..
    அருகம் புல்லாக
    ஆகிடல் கூடாது
    என்றே
    எண்ண வைக்கும்
    அறிமுக எழுத்து...
    புகழும் பாங்கு!

    நல்ல மனோ தத்துவம்!

    திட்டமிட்ட பாணி...
    எட்டிப் பறிக்கட்டும்
    வெற்றிக் கனியை.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி!! நன்றி சார்!!!

      Delete
  21. அருமை!

    நற்பணி இது...
    நற்பயன் தந்திட
    வேண்டுகிறேன்
    இறைவனை!

    புலமைக்கு
    அடையாளம்
    சொல்...
    அச்சொல்லுக்கு
    ஆதாரமோ
    பல்...

    பல் காப்பவர்
    சொல் காக்கவும்
    செய்கிறார்....

    மெச்சுகிறேன்...
    வாழ்த்துகிறேன்!

    குமார் சார்...
    மீரா சகோ..
    இவர்கள் குறித்துச்
    சொன்னவை
    சரி மட்டுமல்ல..
    சொற்பம்!

    ஆனால்
    என்னைப்பற்றி...

    புரிகிறது..
    நெல்லுக்கு
    இறைத்த நீர்...
    புசிந்தது கொஞ்சம்
    புல்லுக்கும்!

    புல்லாகவே
    இருப்பினுங்கூட
    ஏன்..
    அருகம் புல்லாக
    ஆகிடல் கூடாது
    என்றே
    எண்ண வைக்கும்
    அறிமுக எழுத்து...
    புகழும் பாங்கு!

    நல்ல மனோ தத்துவம்!

    திட்டமிட்ட பாணி...
    எட்டிப் பறிக்கட்டும்
    வெற்றிக் கனியை.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி!! நன்றி சார்!!!

      Delete
  22. அருமை!

    நற்பணி இது...
    நற்பயன் தந்திட
    வேண்டுகிறேன்
    இறைவனை!

    புலமைக்கு
    அடையாளம்
    சொல்...
    அச்சொல்லுக்கு
    ஆதாரமோ
    பல்...

    பல் காப்பவர்
    சொல் காக்கவும்
    செய்கிறார்....

    மெச்சுகிறேன்...
    வாழ்த்துகிறேன்!

    குமார் சார்...
    மீரா சகோ..
    இவர்கள் குறித்துச்
    சொன்னவை
    சரி மட்டுமல்ல..
    சொற்பம்!

    ஆனால்
    என்னைப்பற்றி...

    புரிகிறது..
    நெல்லுக்கு
    இறைத்த நீர்...
    புசிந்தது கொஞ்சம்
    புல்லுக்கும்!

    புல்லாகவே
    இருப்பினுங்கூட
    ஏன்..
    அருகம் புல்லாக
    ஆகிடல் கூடாது
    என்றே
    எண்ண வைக்கும்
    அறிமுக எழுத்து...
    புகழும் பாங்கு!

    நல்ல மனோ தத்துவம்!

    திட்டமிட்ட பாணி...
    எட்டிப் பறிக்கட்டும்
    வெற்றிக் கனியை.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி!! நன்றி சார்!!!

      Delete
  23. இன்றைய அறிமுகம் பல புதியவர்கள் . அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி!! நன்றி சார்!!!

      Delete
  24. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி! அன்பின் நன்றி!!

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது