மொதல்லயே சொல்லிடரேன் பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;) - எனக்கு பிடித்த வலைப்பதிவர்களையும் அவர்களது ஒரு சில பதிவுகளையும் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்...
(எனக்கும் பிடிச்சிருக்கு அதான்)கார்த்திக் பிரபு -கவிதை எல்லாம் அருமையா எழுதுவாரு. வெகுளித்தனமா பெசுவாரு. (கல்யாணமாயிடுச்சில்ல அதுதான் கொஞ்சம் மரியாதை). இப்ப அவருடைய கல்யாண வைபவத்தை நம் கண் முன் கொண்டு வருகிறார் இந்த தொடர் மூலம்
நான் கணவனான போதுஇவருடைய இந்த கவிதைகளை படித்த பிறகு பலர் அவர்களுடைய தாத்தா, பாட்டிகளை திட்டியதாக எனக்கு தகவல் வந்தது (அத்தை இல்லாத காரணத்திற்காக)
அத்தை பெண்கள் என்னும் ராகஷசிகள்என்னுடைய லொள்ளு சீரிஸை போலவே இவருடைய இந்த லொள்ளும் எனக்கு பிடித்திருந்தது.
லொள்ளுராகவன்இவருடைய இந்த பயணக்கட்டுரையில் பல சமூக கருத்துக்களையும் அள்ளி தெளித்திருப்பார் -
கோவை குற்றாலமும் ஜான் ஆப்ரகாமும்என்னுடைய பல நாள் வருத்தத்திற்கு பதில் சொன்ன பதிவு -
என் கொங்கை நின் அன்பர்கைப்புள்ளஇவருடைய சித்தூர்கட் செலவு சீரிஸ் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று
சித்தூர்கட் செலவுஇவருடைய ஆறு விளையாட்டு பதிவும் அருமையான ஒன்று -
ஆறுமேலும் இவருடைய பஸ் பயணங்களில், தடிப்பசங்கள் சீரிஸும் அருமையாக இருக்கும். ஒரு சின்ன ஆலோசனை, இந்த சீரிஸிற்கெல்லாம் ஒன்றிலிருந்து மற்றொன்று போக ஹைப்பர் லிங் இருந்தால் இன்னும் பலனளிக்கும். மேலும் முகப்பில் இதையெல்லாம் தனியாக எடுத்து போட்டால் இன்னும் நலம்.
நாகை சிவாஇவருடைய பின் தங்கிய மாவட்டம் இவரின் மாவட்டம் பற்றிய இவரின் தெளிந்த பார்வையை காட்டும் -
பின் தங்கிய மாவட்டம்இவரின் "எப்படி கிடைத்தது" இவரின் தேச பக்தியை வெளிப்படுத்தும் ஒரு சிறந்தபதிவு -
"எப்படி கிடைத்தது?"ராம்இவருடைய கைப்புள்ள காவியம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று -
"கைப்புள்ள காவியம்"இவர் போட்டோவை ப்ரோபைலிலிருந்து தூக்கிய இந்த கதை சூப்பர் (கண்டிப்பா படிங்க) -
"நான் ஏன் மாத்தினேன்"CVR- தமிழ்மணத்திலிருப்பவர்களுக்கு இவரை தெரியாது. என்னுடைய கதைகள் பிடித்தவர்களுக்கு கண்டிப்பாக இவரின் கதைகள் நிச்சயம் பிடிக்கும்.
சவுண்ட் பார்ட்டிஇவருடைய கிரிக்கெட் அனுபவம் பற்றிய இந்த பதிவை படித்தால் சிரிக்காமலிருக்க முடியாது -
நானாத்தான் நாறிட்டனா?பொண்ணுங்க இந்த மாதிரி கூட ஓட்டுவாங்களானு இதை படிச்சதுக்கப்பறம்தான் தெரிஞ்சது -
மூக்கறுந்த கண்ணகிகளும் மூக்கில்லாத நானும்Syamஇவருடைய மேட்ரிமோனியல் விளம்பரங்கள் என்னுடைய ஆர்க்குட் அலும்பல்களை நினைவு படுத்தும் -
மேட்ரிமோனியல் அட்வர்டைஸ்மெண்ட்முதல் பதிவிலே கலக்க முடியுமா என்று நான் அசந்தேன். அதுவும் அமெரிக்கா வந்த புதிதில் நானும் இதையே அனுபவித்தேன் -
ரிப்பீட்டுஇவருடைய காலேஜ் அனுபவமும் என்னை ரீல் சுத்த வைத்தது -
தமிழ் மணமும் நானும்தேவ்இவருடைய கதைகளை போலவே எழுத வேண்டுமென்று நான் மிகவும் ஆசைப்படுகிறேன். ஆனால் முடியவில்லை :-(நீங்களும் படித்து பாருங்கள்
கதிரேசன் கதைஇதை படித்து இவருக்கும் எனக்கும் பெரிய விவாதமே நடந்தது (ஆன்லைனில்) -
ஆஷிராசந்தோஷ்எந்த ஒரு நியூஸையும் அருமையான தலைப்பில் அவருக்கே உரிய பாணியில் கொடுப்பார் -
திருந்தவே மாட்டீங்களாடா நீங்கஇவருடைய முதல் வீடியோ பதிவு -
தேசிய கீதம்தம்பிஇப்படி ஒரு கேள்வி கேட்டுத்தான் தம்பி நமக்கு பழக்கமானார் ;) -
தண்டவாலத்துல ஒண்ணுக்கு போனா தப்பா?ரீல் சுத்த வைத்த பதிவு, என்னுடைய நகைச்சுவை பதிவுகள் பிடித்தவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் -
வாலிப வயசு(ஒரு பதிவிலிருந்து மற்றொன்றிற்கு லிங் கொடுத்தால் நன்றாக இருக்கும்தம்பியின் மற்றொரு பரிமானம். வெளிநாட்டிலிருப்பவர்கள் இதை படித்தால் மனம் கனக்கும் -
என் நண்பனுடன் ஒரு நாள்திவ்யாநம்மல மாதிரி பசங்களுக்கு பயனுள்ள பதிவு (ஓரளவுக்கு உண்மையாக இருப்பதாகவே நினைக்கிறேன்) -
பெண்களை கவர்வது எப்படி?ஓசியிலே யூத் ஃபுல்லான படம் பார்க்க -
கல்லூரி கலாட்டா(என்னுடைய நெல்லிக்காய் படித்தவர்களுக்கு இந்த கதை மிகவும் பிடிக்கும்)ஜிஇந்த வாரத்தில் நான் மிகவும் ரசித்த நகைச்சுவை பதிவு. என்னுடைய கவுண்டரின் காமெடியை விட நன்றாக வந்திருந்தது -
லொள்ளு சபா பல்லவன்வசனமே இல்லாத அருமையான கதை -
குறும்பன்கப்பி (நான் பொறாமைப்படும் ஒரே பதிவர். வெரைட்டியிலும் அசத்துபவர்)என்னுடைய கொல்ட்டி கதையின் கருப்பொருள் இந்த கதையிலிருந்தே காப்பி அடித்தேன் -
இன்றும்இப்படியெல்லாம் எழுத முடியுமானு நான் ஆச்சரியப்பட்ட பதிவு -
பின்நவினத்துவ கனவுஇது கற்பனை என்று நான் சத்தியமாக நம்பவில்லை -
அந்த இரவுPosted by வெட்டிப்பயல் at
Friday, December 22, 2006