மூன்றாம்நிலை மாடம்!!
➦➠ by:
அனுபவம்,
ஊர் பெருமை,
மகேந்திரன்
கொக்கரிக்கும் சேவலொன்னு
குயிலுபோல கூவுச்சு!
ஜொலிஜொலிக்கும் நட்சத்திரம்
காலையில எழுப்புச்சி!
ரோட்டோர புளியமரம்
கொடுக்காப்புளி காச்சுது!!
பிறந்ததுமே குழந்தையுமே
தாலாட்டு பாடுச்சு!
வருடமொரு பத்துபோக
விளைச்சலங்கே கிடைச்சுது!!
என்னடா இது என்னவோ புலம்புரான்னு பார்க்குறீங்களா?
ஊரூரா சுத்தினாலும், சீமையில பொழைப்பு நடத்த ஏழு கடல் தாண்டினாலும். சொந்த ஊர நினைச்சிபுட்டா நெஞ்செல்லாம் நிறைஞ்சிவிடும். அப்படி சொந்த ஊரைப்பத்தி பேசுறப்போ இப்படித்தான்
கொஞ்சம் அதிகப்படியா பேசுவோம். அதைத்தான் முதல்ல சொன்ன பாட்டில சொன்னேன்.
அதுவும் பெண்கள், பிறந்த ஊர் பெருமை பேசினா அப்பப்பா நாலுகாது வேணும் கேட்க. அவர்களை நான் குத்தம் சொல்லவில்லை, அதிகப்படியான ஊர்ப்பாசம் அவர்களை அப்படி பேச வைக்குது.
பேராசிரியர் திருமதி. விஜயலெட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்கள் கூட தன் பாடலில் பிறந்த ஊர் பெருமை பேசுகையில்,
எல்லோரு கோவிலிலும்
எண்ணெய் ஊத்தி விளக்கெரியும்!
எங்க ஊரு கோவிலில
பச்சத் தண்ணி நின்னெரியும்!!
பார்த்தீங்களா! பச்சத் தண்ணியில எரிவது மட்டுமில்லையாம், நின்னு எரியுமாம்!!
இந்த பாட்டை பார்த்ததும் என்னோட வேதியியல் மூளை கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தது, இது சாத்தியமா?..... சாத்தியமே என வேதியியல் கூறிற்று.
கால்சியம் கார்பைடு என்ற ஒரு வகை வேதிப்பொருள் பார்ப்பதற்கு கருங்கல் போலவே இருக்கும், அதை தண்ணீரில் போட்டால் அசெட்டிலீன் என்ற ஒரு வகை வாயு வெளியாகும். அது எளிதில் தீப்பற்றக்கூடியது. இரும்புகளை ஒட்டவைக்க (வெல்டிங்) இந்த வாயுவைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
அதுவுமன்றி சமீபத்திய வருடங்களில் மாங்காய்களை எளிதில் பழுக்கவைக்க இந்த கார்பைடு கல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள். (நல்ல கழுவிட்டு சாப்பிடுங்க நண்பர்களே)
எது எப்படியோ, நம்ம விஷயத்துக்கு வருவோம். ஊர்ப்பெருமை என்று பேசுகையில் நம்மை நாமே மறப்பது என்பது தவிர்க்கமுடியாத ஒன்று.
சில நகைச்சுவைகள் தெரிந்தாலும் அங்கே பல நல்ல அரிய தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. நம்ம ஊரைப்பத்தி சொல்லுகையில் தவறான தகவல் தந்துவிடக்கூடாதுன்னு, தேடித்தேடி சரியான தகவல்களை சேகரிப்பாங்க.
அப்படி நம்ம பதிவர்கள் சிலர் ஊர்களைப் பற்றி எழுதி இருக்காங்க...
அவங்களோட பதிவுகளை கொஞ்சம் பார்த்துவரலாம் வாங்க.....
.............................. .............................. .............................. .............................. ...............
குழ போட்டுத் திரியும் நம்ம காட்டான் மாமா, கோழி..கொண்டக்கோழி!
அழகா தலைப்பு வைச்சு ஊர்ல இருக்கிற ஆச்சியையும் அங்கே சாப்பிட்ட கோழிக்குழம்பையும் என்னமா விவரிக்கிராருன்னு பாருங்க. வளர்ந்த சேவல்களை பிடிப்பதே ஒரு தனிசுகம்னு அவர் சொல்லும் இடத்தில் கொஞ்சம் நம்மகண்களை மூடி சொந்த ஊருக்கு
போய் குழந்தையா மாறிடுவோம்.. இதோ அவருக்காக
கொண்டக்கோழி பிடிச்ச மாமா
கோழிக்குழம்பு எனக்குண்டா!
அண்டைவீட்டில் கோழிக்குழம்பு
உட்கார்ந்து சாப்பிட்டா
உறவுவளரும்னு சொன்னாங்கய்யா!!
.............................. .............................. .............................. .............................. ...............
பதிவுலக நண்பர்களின் தொடர் பதிவால் நமக்கு கிடைத்த பொற்குவியல் பதிவுகளில் குட்டி சுவர்க்கம் கட்டி வாழும் சகோதரி ஆமினாவின் ராம்நாட் என்ற இந்தப் பதிவு அவரின் பிறந்த ஊரின் பெருமையை விளக்கிக் காட்டுகிறது. அப்படியே ஒரு தாய் தன் சேயின் விரல் பிடித்து ஊர்சுற்றி காட்டுவது போல அழகாக கூறியிருக்கிறார்...வாங்க ராம்நாட் போய்வரலாம்.... அவருக்காக
இயற்கையன்னை சீற்றத்தால
அழிந்துபோன தனுஸ்கோடி
கண்ணில் நீரைவார்க்குது!
சின்னப்புள்ள எனக்கு நீங்க
ஊர்புகழைச் சொல்லிவந்து
சுத்திசுத்தி காண்பிச்சதும்
உற்சாகம் வந்துருச்சி!!
...............................................................................................................................
காரணமாக இருக்கலாம், குறை ஒன்றும் இல்லை என்று சொல்லும் இவரிடம் கற்றுக்கொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருக்குது. மதிப்பிற்குரிய லக்ஷ்மி அம்மாவின் இந்த பதிவின் ஆரம்பத்திலேயே கிரேட் கல்லிடைக்குறிச்சி என்று பார்த்ததுமே அப்படியே உற்சாகம் தொற்றிக்கொள்ளும். எங்க ஊரு நல்ல ஊருன்னு அவங்க சொல்வதை நாமளும் போய் பார்ப்போமே..... அவருக்காக
நாட்டிலொரு நல்ல ஊராம்
எங்க ஊரு அம்மே!
வைரமது விளஞ்சிவரும்
பொறந்த ஊரு அம்மே!
எம்மூரில் பொறந்தவரோ
விண்ணாள்வார் அம்மே!!
................................................................................................................................
பேருந்தில் ஏறிப்போய் பொறந்த ஊரை பார்த்துவரும் நம்மலே இப்படின்னா, ஓரிரு வருடங்களுக்கு பின்னர் விமானத்தில் பறந்துவந்து
ஊரை பார்த்துவிட்டு செல்பவர்கள் எப்படி பேசுவார்கள்...
நம்ம அன்பு சகோதரி சித்ரா அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு மாத காலம் இருந்து விட்டுப்போய் பின்னர் நன்றி ..மீண்டும் வருகிறேன் என கொஞ்சம் வெட்டிப்பேச்சு பேசியிருக்கிறார்... என்ன தான் பேசியிருக்கார் னு போய் பார்ப்போமா....
இதோ அவருக்காக
வந்தாரை வரவேற்போம்
தூளியாட வாங்க!
எம்மண்ணில் பிறந்தோரே
எம் வாசம் ஏத்துகோங்க!
என்னைவிட்டு பறந்துபோயி
மாற்றாந்தாய் மடிமீது
வாசம் செய்யும் மக்கா!
உம் சுவடொன்னு போதுமய்யா
மனம் குளுந்து போவேன்!!
................................................................................................................................
ஊரை பார்த்துவிட்டு செல்பவர்கள் எப்படி பேசுவார்கள்...
நம்ம அன்பு சகோதரி சித்ரா அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு மாத காலம் இருந்து விட்டுப்போய் பின்னர் நன்றி ..மீண்டும் வருகிறேன் என கொஞ்சம் வெட்டிப்பேச்சு பேசியிருக்கிறார்... என்ன தான் பேசியிருக்கார் னு போய் பார்ப்போமா....
இதோ அவருக்காக
வந்தாரை வரவேற்போம்
தூளியாட வாங்க!
எம்மண்ணில் பிறந்தோரே
எம் வாசம் ஏத்துகோங்க!
என்னைவிட்டு பறந்துபோயி
மாற்றாந்தாய் மடிமீது
வாசம் செய்யும் மக்கா!
உம் சுவடொன்னு போதுமய்யா
மனம் குளுந்து போவேன்!!
................................................................................................................................
கரைசேரா அலையென அழகுத் தலைப்பிட்டு செம்மாந்து வாசம் செய்யும் அன்பு நண்பர் அரசன். இவரின் எழுத்துக்கள் படிக்கையிலே மனதுக்குள் ஊடுருவிப்பாயும் தன்மை வாய்ந்தது. எங்க ஊர் .. என்று
ஊரைப் பற்றி பேசுபவர் அளவில் சிறிய படைப்பில் அளவிடமுடியா செய்திகளை பரிமாறுகிறார்.. பால்ய நினைவுகள், திருவிழாக்கள். தான் பிறந்த கிராமம் இன்று படிப்பறிவில் முன்னேறி இருக்கிறது என்று தலை நிமிர்ந்து அவர் சொல்லுவதை நாமும் போய் பார்த்து வருவோமே.. இதோ அவருக்காக
கம்மாக்கரை மேடெல்லாம்
நேத்து நடந்த கதை சொல்லும்!
வத்திப்போன நீராவியோ
வக்கனையா ஓரம்கட்டும்!
புளியமரத்து கொப்பெல்லாம்
ஊஞ்சலாய் மாறிவரும்!
அன்று வந்த திருவிழாவ
இன்று நானும் பார்த்திடவே
திருநாளும் எப்ப வரும்!!
.............................................................................................................................

அனுபவத்தில் முதிர்ந்தவர் ஐயா.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தன் வலைப்பூவில் ஊரைச் சொல்லவா?!! பேரைச் சொல்லவா?!! என்று ஆரம்பித்து திருச்சிராப்பள்ளியின் ஆழ அகலங்களை அக்குவேறு ஆணிவேராக ஆராய்ந்து, வரலாற்று ஆதாரங்களுடன் அழகாக பேசுகிறார். திருச்சிராப்பள்ளி பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் இந்த பதிவை பார்த்தாலே போதுமானது.. அவ்வளவு விஷயங்கள்..
இதோ அவருக்காக...
முதலடி எடுத்துவைச்சேன்
மூத்தோரை வணங்கிடவே!
இரண்டாமடி எடுத்துவைச்சேன்
அனுபவத்தை ஏற்றிடவே!
மூனாமடி எடுத்துவைச்சேன்
ஆவணத்தை காத்திடவே!
நாலாமடி எடுத்துவைச்சேன்
நாற்புறமும் கொண்டுசெல்ல!!
................................................................................................................................
இவ்வளவு சொல்லிட்டு எங்க ஊரு (தூத்துக்குடி) பெருமை சொல்லாம போனா எப்படி......
அன்றைய பெருமை ... முத்துக்குளிப்பது
இன்றைய பெருமை ....
பல தொழிற்கூடங்களுக்கு பெயரேற்று நின்றாலும், கப்பல் போக்குவரத்துடன் சரக்குகளின் ஏற்றுமதி இறக்குமதியில் இந்தியாவில் மூன்றாம் இடத்தில் இருந்தாலும். தேசத்துக்கே சுவை கொடுக்கும் உப்பின் விளைநிலமாம் எம்மூர். உப்பின் உற்பத்தியில்
தேசத்தில் இரண்டாமிடம் வகிக்கிறது.
அன்பன்