நான்காம் சுவை-கூர்ப்பு
➦➠ by:
உணவு உலகம்,
கூர்ப்பு,
நான்காம்சுவை,
வலைச்சரம்
அறுசுவையில் ஒருசுவை கூர்ப்புச்சுவை. உணவு செரித்திட உமிழ்நீரின் பங்கு இன்றிமையாதது.அந்த உமிழ் நீரை நன்றாய் ஊறச்செய்வது கூர்ப்புச்சுவை. சமூகத்தின் மீது அக்கறை கொண்ட வலைப்பதிவுகள் சில இன்று காண்போம்.
விவசாயப் பயிரிடலில், மகசூல் மட்டுமே மிக முக்கியம். அகசூல் தளம், மிக அருமையாக, மகசூலை அதிகரிக்க வழிகாட்டுது. பழங்காடிகரைசல் முதல் பிரம்மாஸ்திரம் வரை அனைத்திலும் அறிவியல் பூர்வ விஞ்ஞானம் இருக்கும். தோட்டம், விவசாயம் பற்றிய தகவல் களஞ்சியம்.
காலமெல்லாம் அழியா கருத்துப்பெட்டகம் காண இங்கே வாருங்கள். இரத்தம்அதிகரிக்கஇனிமையானவழிகள் இங்கிருக்கும். சமையல், தோட்டகலை, அழகு குறிப்புகள்,மருத்துவம் என்று சகல துறைகளிலும், குறிப்புகள் தளமெங்கும் அள்ளி வீசப்பட்டுள்ளன. அழகுக்குறிப்புகள், அமுதமொழிகள் என அனைத்துமிருக்கும்.
வாழும் தலைமுறைக்கும், வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டும் தமிழ்பேரண்ட்ஸ்.குழந்தை வளர்ப்பில், கவனம் மிகக் கொள்ள வேண்டிய வழிகள் இங்கே காணலாம். ஆங்கில அறிவை வளர்க்க அறிவுரைகள் இங்கே இருக்கு. ஆங்கில வழித்தளம் வேண்டுவோர் இங்கே காணலாம்.
தென்றல் போல தழுவி செல்லும்.ஆசையை நெறிப்படுத்த ஐந்து வழிகள் இங்குண்டு.நகைச்சுவையும், இலக்கிய சுவையும் இனிதே கலந்திருக்கும்.
கழட்டி மாட்டப்படும்முகமூடிகள் ஒரு நாடோடியின் பார்வையில் நயமாகச் சொல்லப்பட்டுள்ளது. நேரத்துக்கு ஒன்றாய் மாறும் இன்றைய மனிதனின் மனதை கோடிட்டு காட்டுகிறார். உஷாருமிருக்கும், உதிரிபாகங்களும் இருக்கும்.
தெரியாததைத் தெரிந்து கொள்ள கற்போம் தளம் காணலாம். இணையம் பற்றி அறிய இங்கே செல்லலாம்.கணினியின் வேகம் அதிகரிக்க இங்கே கற்கலாம். இணைய உலகில், அன்றாடம் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் குறித்த கருத்துப்பகிர்வுகள் கலக்கல் ரகம். மின்னிதழ் இங்கே மினுமினுக்கிறது பாருங்கள்.

அன்புடன் ஒரு நிமிடம் என ஒரு சிறு நிகழ்வை கூறி நம் சிந்தையை தெளிவாகக்கூடிய எழுத்தை கொண்டிருக்கும் ஒரு தளம். ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் ஒரு உரையாடலின் மூலம் தெளிவை நோக்கி நம்மை இட்டு செல்வது எனது என ஒரு புரிதல் கிடைகிறது. சுயமுன்னேற்றத் தகவல்கள் பல பரவிக்கிடக்கின்றன.
'எனது நிலை அணுவினும் சிறியது, எனது குறிக்கோள் அண்டத்தினும் பெரியது...!' தன்னை பற்றி இவ்வாறு சொல்லும் இவர் பற்ற வைத்துள்ள சத்தியத்தீ சமூகத்தின் மேலுள்ள அக்கறையைக் காட்டுகிறது. சுற்றுச்சூழல் குறித்த பல பதிவுகள் சேமிப்பில் இருக்க வேண்டியவை. அதிலொன்று இங்கே.