07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label கோவை மு சரளா. Show all posts
Showing posts with label கோவை மு சரளா. Show all posts

Wednesday, January 2, 2013

ஜோதிஜி 3வது நாள் - மூன்று க(பெ)ண்கள்


வலையுலகில் கடந்த இரண்டு வருடங்களாகத்தான் இணையத்தில் உள்ள பெண்களை அடையாளம் கண்டு கொள்ள முயற்சிக்கின்றேன்.  

ஒவ்வொரு முறையும் தமிழ்மணம் நடத்தும் பரிசுப் போட்டியில் பெண்களுக்கென்று தலைப்புகள் கொடுத்து இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிப்பது வழக்கம். அதன் மூலம் தான் இணையத்தில் பெண்கள் யார் யார் இருக்கின்றார்கள்? எது குறித்து எழுதுகின்றார்கள்? என்பதை கவனித்து இருக்கின்றேன்.

தேவியர் இல்லத்தோடு குடும்ப ரீதியான வட்டத்தில் தொடக்கம் முதல் இருப்பவர் டீச்சர் துளசி கோபால். எனக்குத் தெரிந்து இந்த வலைபதிவுலகில் மிக மூத்தவர். புனைப் பெயர்கள் எதுவுமின்றி தன் பெயரோடு புகைப்படத்தோடு இந்த இணைய உலகில் தொடக்கம் முதல் இருக்கும் சாதனைப் பெண்மணி. 

அடுத்து தொடர்பில் இருப்பவர் தேனம்மை லஷ்மணன்

இது தவிர பலரும் தேவியர் இல்லத்திற்கு வந்து நம்பிக்கையோடு விமர்சனம் அளித்து நம்பகத்தன்மையோடு இன்று வரையிலும் வருகை தந்து கொண்டிருந்தாலும் சமீப காலத்தில் சின்மயி பிரச்சனை கொளுந்து விட்டு எறிந்த போது தான் இணையத்தில் உள்ள பெண்கள் குறித்து இன்னும் பல விதங்களில் புரிந்து கொள்ள முடிந்தது. .

இணையத்தில் உள்ள ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் 50 வயதுக்கு மேற்பட்ட அத்தனை பேர்களையும் ஆச்சரியத்துடன் பார்ப்பது என் வழக்கம்.  காரணம் வயதாக உடலில் ஏற்பாடும் பிரச்சனைகள், பாதிப்புகள், தனிப்பட்ட குடும்ப பிரச்சனைகள், உருவாகும் மன அழுத்தம், விரக்தி மனப்பான்மை, ஒட்டாத தன்மை, தள்ளாமை, தலைமுறை இடைவெளி எண்ணங்கள் என்று இது போல ஏகப்பட்ட மனம் உடல் சார்ந்த போராட்டங்களை தினந்தோறும் தாண்டி வர வேண்டும். 

இதளைத் தாண்டி நீண்ட நேரம் இந்த இணைய உலகில் செயல்படும் சிலர் எனக்கு உண்மையான சாதனையாளர்களாகவே தெரிகின்றார்.  

வயது இருக்கும் போது ரத்தம் சூடாக இருக்கும் வரையிலும் தத்துவம் முதல் அறிவுரை வரை என்ன வேண்டுமானலும் கூறலாம்.  

ஆனால் நம் உடம்பில் ஒரு ஆரோக்கிய கோளாறு என்றதும் தொடக்கத்தில் மருத்துவ உலகத்தை நாடுவோம். பிறகு ஆன்மிக உலகத்தை நோக்குவோம். அதையும் தாண்டி கோளறு பதிகம் பக்கத்தை திருப்புவோம். 

ஆனால் இது போன்ற மன உளைச்சல் அடையும் சமயங்களில் எவரும் சமூகத்தை குறித்து மற்றவர்கள் நலன் குறித்து யோசிக்கக்கூட நினைப்பதில்லை.  தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியும் கழுத்துவலியும் என்பது போல மனிதர்களின் இயல்பான குணம். 

இதில் பாலினம் பாகுபாடில்லை. நான் பார்க்கும் சிலர் நல்ல அனுபவம் பெற்றிருந்தாலும் அவர்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளத் தெரியாமல் அல்லது விருப்பம் இல்லாமல் கும்மியோடு கும்தலக்கா என்று தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

உடம்புக்குத்தான் வயதாகின்றது.  ஆனால் மனதிற்கு என்றுமே வயதாவது இல்லை. உணர்பவர்கள் வெகு குறைவே.

ஆனால் இந்த வருடத்தில் மூன்று பேர்களை கவனிக்க முடிந்தது.  மூத்த தலைமுறை அடுத்த தலைமுறை இளைய தலைமுறை.

வயதின் அடிப்படையில் இவர்களை பிரிக்கவில்லை. எழுதிய கருத்துக்களின் அடிப்படையில் தான் பிரித்துள்ளேன்.

ரஜ்ஜனி நாராயணன்.

வலைபதிவு உலகத்தில் நான் நுழைந்த போது வேர்ட் ப்ரஸ் தளத்தில் (நானே உருவாக்கிக் கொண்டது) எழுதிக் கொண்டிருந்தேன். நண்பர் நாகா நீங்க ப்ளாக் ல் எழுதினால் உங்கள் வீச்சும் வேகமும் விரைவாக சென்றடைய வசதியாக இருக்கும் என்று துபாயில் இருந்தபடியே இப்போது நான் எழுதிக் கொண்டிருந்த தளத்தை உருவாக்கிக் கொடுத்தார். அப்போது நான் அவரிடம் இன்னும் இரண்டு தளங்களை உருவாக்கி தந்து விடுங்க. நிறைய எழுத ஆசைப்படுகின்றேன் என்றேன். உங்களால் உங்கள் பணியில் இருந்தபடி சமாளிக்க முடியாது என்று கண்டிப்புடன் மறுத்து விட்டார். அப்போது கோபம் இருந்தாலும் அவர் சொன்னதன் உண்மையான அர்த்தத்தை பின்னாளில் தான் உணர்ந்து கொண்டேன்.

ஆனால் இவங்க எத்தனை தளங்கள் வைத்திருக்கின்றார்கள் தெரியுமா. ஒன்றல்ல. மூன்று. மூன்றுமே முத்து தான்.

இரண்டாவது எண்ணம்



கோவில் பிரகாரத்தை சுற்றிச் சுற்றி உள்ளே வந்து கொண்டே இருந்தேன்.  கலக்கியிருக்காங்க. என்னுடைய பெரிய பதிவுகள் தொடர்ச்சியான பதிவுகள் பார்த்து சிலர் எப்படி நேரம் கிடைக்கின்றது என்று கேட்பர். ஆனால் இவரைப் பார்த்து எனக்கு கேட்கத் தோன்றவில்லை. காரணம் நமக்கு ஒன்றில் ஆர்வம் இருந்தால், அடைய வேண்டும் என்ற வெறி இருந்தால், அதையே சர்வகாலமும் யோசித்துக் கொண்டேயிருந்தால் இமயமலையின் உச்சி கூட எளிதில் அடையும் தூரம் தான்.

இவரின் உழைப்பு அபாரம் என்பதை விட பிரமித்துப் போயிவிட்டேன்.. என்று சொல்வது தான் சரியாக இருக்கும். 

அனுபவம், அறிவியல், ஜாலி, சுயபுராணம் என்று நான்கு திசைகளிலும் சிக்ஸராக விளாசி தள்ளிக் கொண்டேயிருக்கின்றார்.  80 சதவிகிதத்திற்கு மேல் தனது அனுபவங்களை சாறாக்கி கொடுத்துள்ளார். 

நிச்சயம் ஒருவர் அனுபவங்களை எழுதும் போது நாம் அந்த வாழ்க்கை வாழ்ந்த அனுபவத்தை பெற்று விட முடியும். 

மற்றொரு ஆச்சரியம் கூகுள் கூட்டல், முகநூல் என்று எல்லா பக்கங்களிலும் தனது காலடித் தடத்தை பதித்துள்ளார்.  வந்தேன் போனேன் என்றில்லாமல் நின்று நிதானித்து அவகாசம் எடுத்துக் கொண்டு அப்ளாஸ் வாங்குகின்றார்.  

இது தவிர மற்ற தளங்களில் வேறு எழுதுகின்றார். இவர் வயதில் நான் இந்த அளவுக்கு ஆரோக்கியத்தோடு புரிந்துணர்வுவோடு இருப்பேனா என்று தெரியவில்லை.

பெண் என்னும் புதுமை என்ற பெயரில் கோவை மு.சரளா எழுதிக் கொண்டிருக்கின்றார்.  ஆனால் என்ன புதுமை என்று எந்த இடத்திலும் சொல்லக் காணோம். 

திருப்பூரில் நடந்த விழாவில் இவரை சந்திக்க முடிந்தது. நான் பார்த்தவரைக்கும் தமிழ் மொழியை பாடமாக படித்து அந்த துறையிலேயே ஆசிரியர் பணி செய்து கொண்டிருப்பவர்களின் பங்களிப்பு என்பது வலையுலகில் மிக மிக குறைவு.  அப்படியே எழுதினாலும் அது வெகுஜன வாசிப்பாக இருப்பதில்லை.  விதிவிலக்குகளை இதில் கொண்டு வர வேண்டாம்.  

ஆனால் இவரிடம் நான் ஆச்சரியப்பட்ட சமாச்சாரம், எழுதும் கட்டுரைகளில் எழுத்துப்பிழைகள் இருப்பதில்லை.  எனக்கு இன்னமும் இது சவால் தான்.  தப்பித்து வந்து விடுகின்றது. அடுத்து கல்வெட்டு போல வார்த்தைகளை செதுக்கத் தெரிகின்றது.  கலந்துரையாடல்களில் தனது மனதில் உள்ள கருத்துக்களை நறுக்குத் தெறித்தாற் போல எடுத்து வைக்க முடிகின்றது. மேடைப் பேச்சில் பேச முடிகின்றது என்று பன்முக அவதாரமாய் செயல்பட முடிகின்றது. 

ஆனால் கல்வித்தகுதி என்பது தொழில் நுட்ப பட்டபடிப்பு.  கல்லூரியில் பணிபுரியும் வேலையும் கூட இதே தான்.  ஆனால் மொழி வளமை என்பது அமுதசுரபி போல இருக்கின்றது. ஆனால் கவிதையை விட்டு கொஞ்சம் வெளியே வந்தால் இவரின் மயக்கம் தாண்டிய  பல படைப்புகளை கொண்டு வர முடியும் என்பது என் தனிப்பட்ட கருத்து.


இந்த (2012) வருடத்தில் என்னைக் கவர்ந்த முதல் பெண் பதிவர் இவரைப் பார்த்ததும் என் பெண் குழந்தைகள் கல்லூரி செல்லும் போது எப்படி இருப்பார்கள் என்று இவரை வைத்து யூகித்துக் கொள்ள முடிந்தது. நல்ல வேளை வங்கி அதிகாரியாக இருக்கும் அப்பா மகள் மேல் வைத்த புரிந்துணர்வு, அம்மாவின் அரவணைப்பு பெற்ற கணமனி கொடுத்து வைத்தவர் தான்.  ஆங்கிலத்தில் வேறு ஒரு தளம் வைத்துள்ளார்.

அசரடித்து விட்டார் என்பதை விட ஆச்சரியப்படுத்தி விட்டார். திருப்பூரில் நடந்த உறவோடு என்ற அமைப்பை அதன் அடிப்படை கட்டமைப்பு சம்மந்தபட்ட விசயங்களை தொழிற்களம் அமைப்புக்கு உருவாக்கிக் கொடுத்தேன். படிப்படியாக அவர்களே வளர்த்தார்கள். சில நாட்களுக்கு முன் திரு சகாயம் அவர்களை வைத்து ஒரு விழா நடத்தினார்கள்.  

அந்த விழாவில் இவர் தொகுத்து வழங்கியது, பேசிய விதம், உற்சாகப்படுத்திய விதம் என்று எல்லாமே இளங்கன்று பயமறியாது என்பதைப் போலவே எனக்குத் தெரிந்தது. பயோ டெக்னாலஜி படிப்பும், தமிழ் வார்த்தைகளில் கொண்ட ஆர்வமும் ஆச்சரியப்படுத்தியது. 

இவர் உறவோடு தளத்திற்கு எழுதிய ஒரு கட்டுரை திருத்துவதற்காக என் வசம் வந்தது.  துள்ளல் நடை போலவே இருந்தது.  ஏறக்குறைய நடவடிக்கையும் அப்படித்தான் இருந்தது. உற்சாகம் நிறைந்த பெண்மணி என்பதா குழந்தை என்பதா? 

உண்மையிலேயே கண்மணி தான்.

வலைபதிவு அனுபவம்

விமர்சன கலையை வளர்த்துக் கொள்ளுங்க. எழுதுவதை விட விமர்சனம் செய்து இந்த வலைபதிவுகளில் திரும்பி பார்க்க வைத்தவர்கள் பல பேர்கள். 

ஆயிரம் வார்த்தைகளில் எழுதும் கட்டுரையை 50 வார்த்தைகளில் யாரும் யோசிக்காத வகையில் நீங்கள் விமர்சனமாக எழுத கற்றுக் கொண்டால் உங்களுக்குள் இருக்கும் எழுத்தாற்றலின் திறமை உச்சமானது என்று அர்த்தம்.  அந்த வகையில் தனது எழுத்தின் மூலம், தான் வைக்கும் விமர்சன பாங்கின் மூலம் என்னை அதிகம் கவர்ந்தவர் அகலிகன்.

நான் முதன் முறையாக முயற்சித்த தொடர்கதை. ஆச்சரியப்படுத்திய விமர்சனங்கள், அக்கறைகள், என்னை நான் உணர்ந்து கொண்டதும் இதற்குப் பிறகே. பெண்ணே நீ யார்? 

படங்கள் 4 தமிழ் மீடியா.காம்
மேலும் வாசிக்க...

Sunday, September 2, 2012

மனிதனும் மரணமும்


வலைச்சரம் ஆறாவது நாள்

உறவுகளுக்கு வணக்கம் உற்சாகமாக என்னுடன் இந்த பயணத்தை மேற்கொண்டு வரும் உங்கள் அனைவரையும் இன்று மரணத்திற்கு அழைத்து செல்லுகிறேன் ...!!?

என்னடா இப்படி சொல்லுகிறாளே என்று மனதிற்குள் பயத்தின் ரேகை படருகிறதா ? ம் அதை என்னால் உணர முடிகிறது வாங்க அந்த பயத்தை அகற்றுகிறேன் .

மரணம் இன்னும் நம்மால் உணரமுடியாத ஒரு மாயை ஒரு இருட்டை போல இருக்கும் ,அதிகமாக வலியை  தரக்கூடியது ,ஆபத்தானது இப்படிதான் நாம் மரணத்தை பற்றி சிந்திக்கிறோம் ......

ஆனால் மரணம் அற்புதமான ஒரு அனுபவம் அதை நாம் விரும்பியோ விரும்பாமலோ தினமும் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம் அதுதான் உறக்கம் .

பகலில் அனைத்தையும் நம்மால் திட்டமிட முடிகிறது ஆனால் இரவில் நம்ம ஆட்கொள்ளும் உறக்கம் திட்டமிடாமல் நம்மை தழுவுகிறது .இது மரணத்திற்கான ஒத்திகை .


இருள் சூழ்ந்த நிமிடங்களில் நம்மை முற்றிலும் நம்மால் அடையாளம் காண முடிகிறது நாம் நாமாக இருக்கிறோம். எல்லாவற்றையும் உதறிவிட முடிகிறது .இருள் ஒரு வரம் அதற்குள் நாம் ஐக்கியமாகிவிடுகிறோம் அது நம்மை முழுதாய் ஏற்றுக்கொண்டு நம்மை தாலாட்டுகிறது .

ஒரு நபர் இறந்து விட்டார் என்றால் உடனே நாம் என்ன சொல்லுவோம் " சே இன்னும் கொஞ்ச நாள் கழித்து இறந்திருக்கலாம் " என்று .இந்த கொஞ்ச நாள் என்பது அவர் மீது கொண்ட அனுதாபம் இல்லை .நாம் மரணத்தை ஏற்றுகொள்ள கேட்கும் அவகாசம். அந்த அவகாசதிற்குள் நம்மால் மரணத்தை ஜீரணிக்க முடிகிறது .

நோய்வாய்ப்பட்டு நீண்ட நாள் வலியுடன் இருக்கும் ஒருவரை பார்க்கும் போது
அவரை மரணம் அழைத்து கொண்டால் பரவாயில்லை என்று நினைக்கிறோம் அப்போது நமக்கு அவர் மீது ஏற்படுவதும் பரிதாபம் இல்லை மரணத்தை ஏற்க்க நாம் தயாராகி விட்டோம் என்று அர்த்தம் .

ஆகவே அந்த அற்புத மரணத்தை நாம் தினமும் அனுபவித்து மகிழ்கிறோம் அதை கண்டு பயப்பட வேண்டாம் அதை இலகுவாக ஏற்க துணிவோம் .


புதிய தளங்கள் உங்கள் பார்வைக்கு

தோன்  நதி அமைதியாக  ஓடி கொண்டு இருக்கிறது 

துரை டேனியல் 

வலைசெய்திகள் 

தேன் சிட்டு 

கொங்கு தென்றல்

அரசியல் வாதி 

சக்தி கல்வி நிலையம் 



ஆசியர் என்பவர் தேர்ந்த மன நல மருத்துவனை போல மாணவனை அணுக வேண்டும் நாம் கடந்து வந்த ஆசிரியர்களிடம் நாம் கற்று கொண்டவை ஏராளம் .
காட்சிக்கு எளியவனாய்
காவியம் போற்றும் தலைவனாய்
புன்னகை பரிசளிபவனாய்
புத்துணர்வு தருபவனாய்
ஒரு ஆசானாய் ,தோழனாய்
வேண்டும் ஒரு ஆசிரியர் ........

இப்போது கிடைப்பது அரிதுதான் ஆனாலும் இந்த பணியை செவ்வனே செய்து முடித்த திருப்தியை உங்கள் கருத்து மூலம் அறிந்து கொண்டேன் .

இத்துடன் இந்த உறவு முடிந்துவிடாமல் எழுத்தின் மூலம் பல நல்ல ஆக்கங்களை கொடுப்போம் என்ற என்ற நம்பிக்கையுடன் என்னை இந்த பணியை மேற்கொள்ள  அழைத்த  திரு சீனா ஐயா  அவர்களுக்கும்  தோழமைகளுக்கும் என் நன்றியை கூறி விடை  பெறுகிறேன்

இவள்
உங்கள்
தோழி

கோவை மு சரளா


மேலும் வாசிக்க...

Saturday, September 1, 2012

மனிதனும் வெற்றியும்

உறவாகி
உடன் வருகிறீர்கள்
என்ற நிஜம்
வானை கூட
கைகளில் ஏந்த
துணிகிறது மனம்
என் நம்பிக்கையே
உங்களின் கருத்துக்கள் தான்

******


நம் கண்களால் பார்க்க முடியாதவைகளுக்கு நாம் எப்பொழுதும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் .அதில் இறைமைக்கு பின் வெற்றியை சொல்லலாம் .

வெற்றி கிடைக்கும் அணியின் பக்கம் தங்களை வரிசைபடுத்தி கொள்ள  பலர் காத்திருப்பார்கள் . இவர்களை பச்சோந்திகள் என்று கூட சொல்லுவார்கள் அதாவது முக்கிய பணியில் இருக்கும் போது  மட்டும் அவர்களை நாடி வந்து அன்பு பாராட்டுவார்கள் .

பிளாஸ்டிக் புன்னகைகளை உதடுகளில் பொருத்திக்கொண்டு நம்மிடம் குலைந்து பேசுவார்கள் இவர்களை நாம் பல நேரங்களில் சந்தித்து இருப்போம் .
அந்த முக்கிய பதவி நம்மிடம் இருந்து காணாமல் போகும் போது  இந்த நபர்களும் காணாமல் போய்விடுவார்கள் .அதுவரை நம்முடைய பெரும்பான்மையான நேரங்களை இவர்களே ஆக்கிரமித்து இருப்பார்கள் .

அவர்கள் காணாமல் போனதும் நாமும் இந்த உலகில் இருந்து காணாமல் போய்விடுவோம் மனரீதியாக் நம்மை அப்போதுதான் தேடுவோம் .நமக்கான சுதந்திரத்தை நாம் உணருவோம் .

முக்கியமானவர்களாக இருக்கும் போது நாம் மற்றவர்களால் பயன்படுத்த படுகிறோம் .

ஆகவே நாம் யாருக்கும் விருப்பமானவர்கள் இல்லை ,யாரும் எந்த காரணமும் இன்றி நம்மை விரும்புவதும் இல்லை . இந்த உண்மையை உணர உலகில் இருந்து தள்ளி நின்று உங்களின் உள்ளே பாருங்கள் உங்களுக்கான வெற்றியை அடையாளம் காண முடியும் .


****

நிமிர்ந்து நின்று
உற்சவம்
செல்லும் போது
செருக்குடன்
உடன் வருகிறாய்

தள்ளாடும்
வயதில்
தடுமாறி விழுகிறேன்
தாங்கி பிடிக்க
தயங்குகிறாய்

****
புதிய தளங்கள் உங்களுக்காக

இன்றைய வானம் 

கே .பி . ஜனா 

உயித்தமிழ்

விண்முகில் 

வான் மழை  போற்றுவோம் 


நாளை மீண்டும் புதிய தளங்களுடன் உங்களை சந்திக்கிறேன்



மேலும் வாசிக்க...

Friday, August 31, 2012

மனிதனும் அடையாளங்களும்

வலைச்சரம்  ஐந்தாம் நாள்

அடையாளங்கள்  பற்றி இன்று பேசபோகிறேன் நிச்சயம் நம்மையும் அடையாளம் காண முடியும் .பொதுவாக நாம் ஒருவரை பார்க்கும் முன்பே அவர்களுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கி கொள்கிறது மனம் .

அதன் பின் அந்த அடையாளத்தோடு அவர்களை ஒப்பிட்டு பார்த்து மகிழ்ச்சி கொள்கிறது சில நேரம் அந்த அடையாளத்தோடு  பொருந்தாத போது வருத்தபடுகிறது ..

இந்த ஒப்பீடு என்பது முதலில் தோற்றம் ,ஆடைகள் ,இவைகளோடு தான் தொடங்குகிறது இதனால் அந்த நபர் நம் அருகே இருந்தாலும் நம் கற்பனையில்உருவாக்கிய தோற்றத்தோடு பொருந்தாத போது  அவர்களை நாம் தொலைத்து விடுகிறோம் .

நாளடைவில் அந்த உருவம் தொலைந்து போகிறது அவர்களின் குணநலன்களை பற்றி நினைக்கிறோம். சிரிக்கிற போது நகைச்சுவையாக பேசுபவரை  நினைத்து கொள்கிறோம்.கோபப்படும் போது அதிகமாய் கோபபடுபவர்களை நினைக்கிறோம்.

இவை அனைத்தும் ஒரு ஏமாற்று வித்தை , இதை நம்மால் எளிதில் விட முடிவதில்லை ஒப்பிடுதல் என்பது நம் உடன் பிறந்தது .

பெரிய மனிதர்களுக்கு என்று ஒரு இலக்கணத்தை வைத்திருப்போம் அவர்கள் அந்த இலக்கணத்தை தாண்டி வருகிற போது  அவர்களை நாம் ஏற்றுகொள்வதில்லை .

ஆகையால் அடையாளங்களை தொலைத்து இயல்பாய் இயற்கையாய் அனைத்தையும் ஏற்றுகொள்ள பக்குவ படுங்கள் அப்போது வாழ்க்கை அழகாகும் .

******

ஒவ்வொரு
முறையும்
ஒவ்வொரு
முகமூடியோடு
முகம் காட்டுகிறாய் .......

எதுவும்
என்னை
பாதிக்காத போது
அனைத்தையும்
கழற்றி எறிந்துவிட்டு
சுயத்தை வெளிகாட்டுகிறாய் ....


உன் சுயத்தின்
அப்பட்டமான பிம்பத்தில்
அழுத்தமாய்
பதிந்து இருக்கிறேன் நான் .......




***

புதிய தளங்கள் உங்களுக்காக

ஹிசாலியின்  கவி துளிகள் 

மனோ ஓவியம் 

நட்புடன் சௌம்யா

அன்பு உள்ளம்  

குருசந்திரன் 

நாளை மீண்டும் உங்களை நல்ல சிந்தனைகள் + தளங்களுடன் சந்திக்கிறேன்





மேலும் வாசிக்க...

Thursday, August 30, 2012

உண்மையின் உண்மை


வலைச்சரம்  நான்காம்  நாள்

மகிழ்ச்சியின் எல்லையில் சிறகு விரித்து பறக்கிறேன்

உறவுகள் உடன் இருந்தும்
தனித்து விடப்பட்ட
ஆட்டுக்குட்டியை போல
பல நேரங்களில்
வெற்றிடத்தை
உணர்ந்து இருக்கிறேன் .........

ஆனால் உங்கள்
அன்பின் வலிமையால்
அந்த வெற்றிடம் இப்போது
நிரப்பி இருக்கிறது
மகிழ்ச்சி உறவுகளே .....

ஆசிரியர் பனி என்பது கற்றதை உணர்த்துதல் ஆகவே தான் நான் வாழ்வில் கற்றுக்கொண்ட உணர்ந்துகொன்டத்தை உங்களுக்கு கற்றுக்கொள்ள துணிந்தேன. என் எழுத்தை நிச்சயம் உங்களால் சுவாசிக்க முடியும் என்ற அதீத நம்பிக்கையில் .

பொதுவாகவே நாம் உண்மை பேசுவதற்காக பணிக்கபடுகிறோம் . உண்மையின் உண்மையை பற்றி உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் .

உண்மையான மனிதனை விட சிலை அதிக நாள் வாழும் அதே போல காகித பூக்கள் நிஜப் பூக்க்களை விட நிலைத்து நிற்கும் . .

ஆனால் உண்மை என்பது நீடித்து நிற்பதில்லை உயிரோடு இருப்பது ,உயிர்த் துடிப்போடு இருப்பது .  உயிரோடு இருப்பது எல்லாமே அதிக நாள் நீடித்து நிற்க இயலாது.அது சாத்தியமும் இல்லை ..

மனிதர்களும் அப்படிதான் சிலர் ஜடமாய் இருக்கிறார்கள் அசைவுகளற்று இருக்கிறார்கள்,  இவர்களிடம் எந்த சலனத்தையும் ,எந்த பாதிப்பையும் நாம் எதிர்பார்க்க இயலாது ..

உண்மையாய் இருப்பவர்கள் தங்களுக்குள் மலர்ச்சியை பெற்றிருப்பார்கள், ஜீவித்து இருப்பார்கள் .காண நேரம் வாழ்ந்தாலும் அந்த அழகில் நம்மை சொக்க வைப்பார்கள்.
 .
ஆகவே சில நேரம் நேசித்தாலும்  உயிர்ப்புடன் நேசியுங்கள் அதே பரிணாமத்துடன்  அது நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அதன் தாக்கம் நீடித்து நிற்கும் .

*****
ஆயிரம் வேலைகள்
இருந்தாலும்
ஒற்றை
புன்னகை
வீசிச் செல்
அதில்
ஓராயிரம்
அர்த்தங்களை
புரிந்து கொள்வேன்

****

புதிய உறவுகளின் தளங்கள்

தூரிகையின் தூறல் 

ராஜாவின் பார்வையில்  

தமிழ்ச் சமணம்

கடல் நிறைகளும் என் கவிதைகளும் 

தி சுபாசினி 

மீண்டும்  நாளை உங்களை சந்திக்கிறேன் புதிய சிந்தனைகளுடன் .



மேலும் வாசிக்க...

Monday, August 27, 2012

கோவை மு சரளாதேவியின் சுய அறிமுகம் :



வலைசரம் முதல் நாள்

வணக்கம் அன்பார்ந்த வாசக வட்டங்களே !
வணக்கத்திற்குரிய கருத்தாளர்களே !
வலையுலகில் உலாவும் தமிழ் தாயின் தவபுதல்வர்களே!
என்னை வலைச்சர ஆசிரியர் பணிக்கு அழைத்த திரு சீனு அவர்களுக்கும்
உங்கள் அனைவருக்கும் என் அன்பில் ஊறிய வார்த்தைகளால் வணக்கம்
சொல்லுவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்

நான் என்கிற கோவை மு சரளாதேவியின் சுய அறிமுகம் :
நான் ஒரு பெண்

இந்த அறிமுகம் ஓன்று போதும்
வேறு குறிப்புகள் ஒன்றும் என்னை
இதைவிட அடையாளபடுதிவிட முடியாது
என்னை பற்றி

அகிலத்தின் சாட்சியே நான்தான் - ஆனாலும்
அணுவைவிட அலட்சியமாய் பார்கிறார்கள்
எல்லாம் இருக்கிறது என்னிடம் - ஆனாலும்
எதுவும் இல்லாதவளாய் இருக்கிறேன்

புதுமையின் மூலம் நான் - ஆனாலும்
பெண் என்னும் பதுமையாக பார்கிறார்கள்

கவிதையின் கரு நான் - ஆனாலும்
கவிதாயினியாக மட்டும் பதிவு செய்கிறார்கள்

எல்லாமே என்னில் தோன்றியதுதான் - ஆனாலும்
எதுவாகவும் நான் இல்லை

நான் கல்வி துறையில் பணியாற்றி வருகிறேன் தமிழின் முனைவர் பட்டம் வாங்கி விட்டேன் அதற்கான புலமையை இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன் .

எழுத்து என் சுவாசம் அதன் மீது நான் பால்யம் முதல் காதல் கொண்டு இருக்கிறேன் அதை முதல் காதல் முதல் முத்தம் படித்தால் புரிந்துகொள்வீர்கள் .

என் கவிதை பயணம் என்னோடு பால்யம் முதல் இன்று வரை பல பருவம் கடந்து பயணித்து வருகிறது ஆனாலும் அதை வலை உலகிற்கு அறிமுகம் செய்தது வலைசரம் தான் அதனால் என் நன்றியை தெரிவிக்க கடமை பட்டு இருக்கிறேன் .நன்றி வலைசரம்

என்னுடைய முதல் கவிதைகள் எழுச்சிமிக்க கவிதைகள் ஈழத்து சகோதரிக்காக உதித்தது இந்த கவிதை மூலம் நான் எழுச்சி கவிதாயினியாக அழைக்கப்பட்டேன்
தமிழரின் இருண்ட காலம்

சமூகத்தின் அவலங்களை என் எழுத்தில் சாடியிருக்கிறேன் பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைக்கு எதிராக எழுத்தை வாளாக தூக்கினேன்
சடங்கு
ஆனாலும் அதில் ஒன்றும் மாறவில்லை என் வலை பக்கம் திரும்பி பார்ப்பார் யாரும் இல்லை ஒரு சில உன்னத உள்ளங்கள் உணர்வுகளை மதித்தனர்.

அதன் பின் என் கோபங்களை விழுங்கி அன்பை நேசத்தை காதலை நட்பை கவிதையாக வடிக்க ஆரமித்தேன் ......அமோக வரவேற்ப்பு கருத்து மாலைகளால் என்னை அலங்கரித்தனர். புகழ் ஒரு மனிதனை உச்சியில் நிற்க வைக்கும் என்பதை உணர்ந்தேன்.

காதல் காதல் காதல்
காதல் இல்லையேல் மீண்டும் காதல் என்று காதலால் நிரப்பப்பட்ட என் நாட்குறிப்பை அனைவரும் உணர்ந்தனர்
நாட்குறிப்பின் பக்கங்கள் - 2 ( நாடி துடிப்பு )

கவிதை எழுத ஆரமித்தபின் அகத்திற்குள் ஒரு அகம் இருப்பதை உணர்ந்தேன் அது ஞானம் என்று சொல்லுகிரார்கள அந்த ஞானத்தின் கதவை திறந்தேன் அற்புத உணர்வுகளை உணருகிறேன் நீங்களும் உணர என்னுடன் வாருங்கள் .
உள்ளத்தின் ஓசை - 10 ( மரணம் )

என் சுயத்தை உங்கள் முன் தோலுரித்து காட்டிவிட்டேன் .இனி பிடித்த தளங்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன் வாருங்கள் .
கவிதையின் காதலி என்பதால் முதல் அறிமுகம் கவிதையால் நிரப்படுகிறது

என்னை வியப்பில் நிறுத்திய எழுத்துக்கு சொந்தகாரர் அற்புத புதையல் இவர் .
கவிதைக்காரன் டைரி
அகத்திணை இலக்கியத்தின் கூறுகளை அப்பட்டமாய் விளக்குகிறார் தன கவிதை கொண்டு
நிலைக்கண்ணாடி
காதலியை எப்படி கவருவது என்று அற்புத தகவல்களுடன் இருக்கிறது இவரின் கவிதை
ரசித்தவைகளும் ரணமானவைகளும்

நாளை புதிய தளங்களை பரிசளிக்கிறேன் காத்திருங்கள்
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது