ஜோதிஜி 3வது நாள் - மூன்று க(பெ)ண்கள்
➦➠ by:
கண்மனி,
கோவை மு சரளா,
ரஜ்ஜனி நாராயணன்,
ஜோதிஜி திருப்பூர்
வலையுலகில் கடந்த இரண்டு
வருடங்களாகத்தான் இணையத்தில் உள்ள பெண்களை அடையாளம்
கண்டு கொள்ள முயற்சிக்கின்றேன்.
ஒவ்வொரு முறையும்
தமிழ்மணம் நடத்தும் பரிசுப் போட்டியில் பெண்களுக்கென்று தலைப்புகள் கொடுத்து இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிப்பது வழக்கம். அதன் மூலம் தான் இணையத்தில் பெண்கள் யார் யார் இருக்கின்றார்கள்? எது குறித்து எழுதுகின்றார்கள்?
என்பதை கவனித்து இருக்கின்றேன்.
தேவியர் இல்லத்தோடு குடும்ப
ரீதியான வட்டத்தில் தொடக்கம் முதல் இருப்பவர் டீச்சர் துளசி கோபால். எனக்குத் தெரிந்து
இந்த வலைபதிவுலகில் மிக மூத்தவர். புனைப் பெயர்கள் எதுவுமின்றி தன் பெயரோடு புகைப்படத்தோடு
இந்த இணைய உலகில் தொடக்கம் முதல் இருக்கும் சாதனைப் பெண்மணி.
அடுத்து தொடர்பில் இருப்பவர்
தேனம்மை லஷ்மணன்.
இது தவிர பலரும் தேவியர் இல்லத்திற்கு வந்து நம்பிக்கையோடு விமர்சனம் அளித்து நம்பகத்தன்மையோடு இன்று வரையிலும் வருகை தந்து கொண்டிருந்தாலும் சமீப காலத்தில் சின்மயி பிரச்சனை கொளுந்து விட்டு எறிந்த போது தான் இணையத்தில் உள்ள பெண்கள் குறித்து இன்னும் பல விதங்களில் புரிந்து கொள்ள முடிந்தது. .
இது தவிர பலரும் தேவியர் இல்லத்திற்கு வந்து நம்பிக்கையோடு விமர்சனம் அளித்து நம்பகத்தன்மையோடு இன்று வரையிலும் வருகை தந்து கொண்டிருந்தாலும் சமீப காலத்தில் சின்மயி பிரச்சனை கொளுந்து விட்டு எறிந்த போது தான் இணையத்தில் உள்ள பெண்கள் குறித்து இன்னும் பல விதங்களில் புரிந்து கொள்ள முடிந்தது. .
இணையத்தில்
உள்ள ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் 50 வயதுக்கு மேற்பட்ட அத்தனை பேர்களையும்
ஆச்சரியத்துடன் பார்ப்பது என் வழக்கம். காரணம் வயதாக உடலில் ஏற்பாடும் பிரச்சனைகள்,
பாதிப்புகள், தனிப்பட்ட குடும்ப பிரச்சனைகள், உருவாகும் மன அழுத்தம், விரக்தி மனப்பான்மை, ஒட்டாத தன்மை, தள்ளாமை, தலைமுறை இடைவெளி எண்ணங்கள் என்று இது போல ஏகப்பட்ட மனம் உடல் சார்ந்த போராட்டங்களை தினந்தோறும் தாண்டி வர வேண்டும்.
இதளைத் தாண்டி நீண்ட நேரம் இந்த இணைய உலகில் செயல்படும் சிலர் எனக்கு
உண்மையான சாதனையாளர்களாகவே தெரிகின்றார்.
வயது இருக்கும் போது ரத்தம் சூடாக இருக்கும் வரையிலும் தத்துவம் முதல்
அறிவுரை வரை என்ன வேண்டுமானலும் கூறலாம்.
ஆனால் நம் உடம்பில் ஒரு ஆரோக்கிய கோளாறு என்றதும் தொடக்கத்தில் மருத்துவ உலகத்தை நாடுவோம். பிறகு ஆன்மிக உலகத்தை நோக்குவோம். அதையும் தாண்டி கோளறு பதிகம் பக்கத்தை திருப்புவோம்.
ஆனால் நம் உடம்பில் ஒரு ஆரோக்கிய கோளாறு என்றதும் தொடக்கத்தில் மருத்துவ உலகத்தை நாடுவோம். பிறகு ஆன்மிக உலகத்தை நோக்குவோம். அதையும் தாண்டி கோளறு பதிகம் பக்கத்தை திருப்புவோம்.
ஆனால் இது போன்ற மன உளைச்சல் அடையும் சமயங்களில் எவரும்
சமூகத்தை குறித்து மற்றவர்கள் நலன் குறித்து யோசிக்கக்கூட நினைப்பதில்லை. தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியும்
கழுத்துவலியும் என்பது போல மனிதர்களின் இயல்பான குணம்.
இதில் பாலினம்
பாகுபாடில்லை. நான் பார்க்கும் சிலர் நல்ல அனுபவம் பெற்றிருந்தாலும் அவர்களின்
அனுபவத்தை பகிர்ந்து கொள்ளத் தெரியாமல் அல்லது விருப்பம் இல்லாமல் கும்மியோடு
கும்தலக்கா என்று தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
உடம்புக்குத்தான்
வயதாகின்றது. ஆனால் மனதிற்கு என்றுமே
வயதாவது இல்லை. உணர்பவர்கள் வெகு குறைவே.
ஆனால்
இந்த வருடத்தில் மூன்று பேர்களை கவனிக்க முடிந்தது. மூத்த தலைமுறை அடுத்த தலைமுறை இளைய தலைமுறை.
வயதின்
அடிப்படையில் இவர்களை பிரிக்கவில்லை. எழுதிய கருத்துக்களின் அடிப்படையில் தான்
பிரித்துள்ளேன்.
ரஜ்ஜனி நாராயணன்.
வலைபதிவு உலகத்தில் நான் நுழைந்த போது வேர்ட் ப்ரஸ் தளத்தில் (நானே உருவாக்கிக் கொண்டது) எழுதிக் கொண்டிருந்தேன். நண்பர் நாகா நீங்க ப்ளாக் ல் எழுதினால் உங்கள் வீச்சும் வேகமும் விரைவாக சென்றடைய வசதியாக இருக்கும் என்று துபாயில் இருந்தபடியே இப்போது நான் எழுதிக் கொண்டிருந்த தளத்தை உருவாக்கிக் கொடுத்தார். அப்போது நான் அவரிடம் இன்னும் இரண்டு தளங்களை உருவாக்கி தந்து விடுங்க. நிறைய எழுத ஆசைப்படுகின்றேன் என்றேன். உங்களால் உங்கள் பணியில் இருந்தபடி சமாளிக்க முடியாது என்று கண்டிப்புடன் மறுத்து விட்டார். அப்போது கோபம் இருந்தாலும் அவர் சொன்னதன் உண்மையான அர்த்தத்தை பின்னாளில் தான் உணர்ந்து கொண்டேன்.
ஆனால் இவங்க எத்தனை தளங்கள் வைத்திருக்கின்றார்கள் தெரியுமா. ஒன்றல்ல. மூன்று. மூன்றுமே முத்து தான்.
இரண்டாவது எண்ணம்
இரண்டாவது எண்ணம்
கோவில் பிரகாரத்தை சுற்றிச் சுற்றி உள்ளே வந்து கொண்டே இருந்தேன். கலக்கியிருக்காங்க. என்னுடைய பெரிய பதிவுகள் தொடர்ச்சியான பதிவுகள் பார்த்து சிலர் எப்படி நேரம் கிடைக்கின்றது என்று கேட்பர். ஆனால் இவரைப் பார்த்து எனக்கு கேட்கத் தோன்றவில்லை. காரணம் நமக்கு ஒன்றில் ஆர்வம் இருந்தால், அடைய வேண்டும் என்ற வெறி இருந்தால், அதையே சர்வகாலமும் யோசித்துக் கொண்டேயிருந்தால் இமயமலையின் உச்சி கூட எளிதில் அடையும் தூரம் தான்.
இவரின் உழைப்பு அபாரம் என்பதை விட பிரமித்துப் போயிவிட்டேன்.. என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.
அனுபவம், அறிவியல், ஜாலி, சுயபுராணம் என்று நான்கு திசைகளிலும் சிக்ஸராக விளாசி தள்ளிக் கொண்டேயிருக்கின்றார். 80 சதவிகிதத்திற்கு மேல் தனது அனுபவங்களை சாறாக்கி கொடுத்துள்ளார்.
இவரின் உழைப்பு அபாரம் என்பதை விட பிரமித்துப் போயிவிட்டேன்.. என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.
அனுபவம், அறிவியல், ஜாலி, சுயபுராணம் என்று நான்கு திசைகளிலும் சிக்ஸராக விளாசி தள்ளிக் கொண்டேயிருக்கின்றார். 80 சதவிகிதத்திற்கு மேல் தனது அனுபவங்களை சாறாக்கி கொடுத்துள்ளார்.
நிச்சயம் ஒருவர் அனுபவங்களை எழுதும் போது நாம் அந்த வாழ்க்கை வாழ்ந்த அனுபவத்தை பெற்று விட முடியும்.
மற்றொரு ஆச்சரியம் கூகுள் கூட்டல், முகநூல் என்று எல்லா பக்கங்களிலும் தனது காலடித் தடத்தை பதித்துள்ளார். வந்தேன் போனேன் என்றில்லாமல் நின்று நிதானித்து அவகாசம் எடுத்துக் கொண்டு அப்ளாஸ் வாங்குகின்றார்.
இது தவிர மற்ற தளங்களில் வேறு எழுதுகின்றார். இவர் வயதில் நான் இந்த அளவுக்கு ஆரோக்கியத்தோடு புரிந்துணர்வுவோடு இருப்பேனா என்று தெரியவில்லை.
பெண் என்னும் புதுமை என்ற பெயரில் கோவை மு.சரளா எழுதிக் கொண்டிருக்கின்றார். ஆனால் என்ன புதுமை என்று எந்த இடத்திலும் சொல்லக் காணோம்.
திருப்பூரில் நடந்த விழாவில் இவரை சந்திக்க முடிந்தது. நான் பார்த்தவரைக்கும் தமிழ் மொழியை பாடமாக படித்து அந்த துறையிலேயே ஆசிரியர் பணி செய்து கொண்டிருப்பவர்களின் பங்களிப்பு என்பது வலையுலகில் மிக மிக குறைவு. அப்படியே எழுதினாலும் அது வெகுஜன வாசிப்பாக இருப்பதில்லை. விதிவிலக்குகளை இதில் கொண்டு வர வேண்டாம்.
ஆனால் இவரிடம் நான் ஆச்சரியப்பட்ட சமாச்சாரம், எழுதும் கட்டுரைகளில் எழுத்துப்பிழைகள் இருப்பதில்லை. எனக்கு இன்னமும் இது சவால் தான். தப்பித்து வந்து விடுகின்றது. அடுத்து கல்வெட்டு போல வார்த்தைகளை செதுக்கத் தெரிகின்றது. கலந்துரையாடல்களில் தனது மனதில் உள்ள கருத்துக்களை நறுக்குத் தெறித்தாற் போல எடுத்து வைக்க முடிகின்றது. மேடைப் பேச்சில் பேச முடிகின்றது என்று பன்முக அவதாரமாய் செயல்பட முடிகின்றது.
ஆனால் கல்வித்தகுதி என்பது தொழில் நுட்ப பட்டபடிப்பு. கல்லூரியில் பணிபுரியும் வேலையும் கூட இதே தான். ஆனால் மொழி வளமை என்பது அமுதசுரபி போல இருக்கின்றது. ஆனால் கவிதையை விட்டு கொஞ்சம் வெளியே வந்தால் இவரின் மயக்கம் தாண்டிய பல படைப்புகளை கொண்டு வர முடியும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
இந்த (2012) வருடத்தில் என்னைக் கவர்ந்த முதல் பெண் பதிவர் இவரைப் பார்த்ததும் என் பெண் குழந்தைகள் கல்லூரி செல்லும் போது எப்படி இருப்பார்கள் என்று இவரை வைத்து யூகித்துக் கொள்ள முடிந்தது. நல்ல வேளை வங்கி அதிகாரியாக இருக்கும் அப்பா மகள் மேல் வைத்த புரிந்துணர்வு, அம்மாவின் அரவணைப்பு பெற்ற கணமனி கொடுத்து வைத்தவர் தான். ஆங்கிலத்தில் வேறு ஒரு தளம் வைத்துள்ளார்.
அசரடித்து விட்டார் என்பதை விட ஆச்சரியப்படுத்தி விட்டார். திருப்பூரில் நடந்த உறவோடு என்ற அமைப்பை அதன் அடிப்படை கட்டமைப்பு சம்மந்தபட்ட விசயங்களை தொழிற்களம் அமைப்புக்கு உருவாக்கிக் கொடுத்தேன். படிப்படியாக அவர்களே வளர்த்தார்கள். சில நாட்களுக்கு முன் திரு சகாயம் அவர்களை வைத்து ஒரு விழா நடத்தினார்கள்.
அசரடித்து விட்டார் என்பதை விட ஆச்சரியப்படுத்தி விட்டார். திருப்பூரில் நடந்த உறவோடு என்ற அமைப்பை அதன் அடிப்படை கட்டமைப்பு சம்மந்தபட்ட விசயங்களை தொழிற்களம் அமைப்புக்கு உருவாக்கிக் கொடுத்தேன். படிப்படியாக அவர்களே வளர்த்தார்கள். சில நாட்களுக்கு முன் திரு சகாயம் அவர்களை வைத்து ஒரு விழா நடத்தினார்கள்.
அந்த விழாவில் இவர் தொகுத்து வழங்கியது, பேசிய விதம், உற்சாகப்படுத்திய விதம் என்று எல்லாமே இளங்கன்று பயமறியாது என்பதைப் போலவே எனக்குத் தெரிந்தது. பயோ டெக்னாலஜி படிப்பும், தமிழ் வார்த்தைகளில் கொண்ட ஆர்வமும் ஆச்சரியப்படுத்தியது.
இவர் உறவோடு தளத்திற்கு எழுதிய ஒரு கட்டுரை திருத்துவதற்காக என் வசம் வந்தது. துள்ளல் நடை போலவே இருந்தது. ஏறக்குறைய நடவடிக்கையும் அப்படித்தான் இருந்தது. உற்சாகம் நிறைந்த பெண்மணி என்பதா குழந்தை என்பதா?
உண்மையிலேயே கண்மணி தான்.
இவர் உறவோடு தளத்திற்கு எழுதிய ஒரு கட்டுரை திருத்துவதற்காக என் வசம் வந்தது. துள்ளல் நடை போலவே இருந்தது. ஏறக்குறைய நடவடிக்கையும் அப்படித்தான் இருந்தது. உற்சாகம் நிறைந்த பெண்மணி என்பதா குழந்தை என்பதா?
உண்மையிலேயே கண்மணி தான்.
வலைபதிவு அனுபவம்
விமர்சன கலையை வளர்த்துக் கொள்ளுங்க. எழுதுவதை விட விமர்சனம் செய்து இந்த வலைபதிவுகளில் திரும்பி பார்க்க வைத்தவர்கள் பல பேர்கள்.
ஆயிரம் வார்த்தைகளில் எழுதும் கட்டுரையை 50 வார்த்தைகளில் யாரும் யோசிக்காத வகையில் நீங்கள் விமர்சனமாக எழுத கற்றுக் கொண்டால் உங்களுக்குள் இருக்கும் எழுத்தாற்றலின் திறமை உச்சமானது என்று அர்த்தம். அந்த வகையில் தனது எழுத்தின் மூலம், தான் வைக்கும் விமர்சன பாங்கின் மூலம் என்னை அதிகம் கவர்ந்தவர் அகலிகன்.
நான் முதன் முறையாக முயற்சித்த தொடர்கதை. ஆச்சரியப்படுத்திய விமர்சனங்கள், அக்கறைகள், என்னை நான் உணர்ந்து கொண்டதும் இதற்குப் பிறகே. பெண்ணே நீ யார்?
படங்கள் 4 தமிழ் மீடியா.காம்
|
|
எழுதுவதை விட விமர்சனம் செய்து இந்த வலைபதிவுகளில் திரும்பி பார்க்க வைத்தவர்கள் பல பேர்கள்.
ReplyDeleteவலைச்சர அறிமுக தோழிகளுக்கு வாழ்த்துகள்..
இன்றைய சிறப்பான பதிவர்களுக்கு
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அவர்களைப் பற்றிய அழகான விமர்சனம் தந்த உங்களுக்கு நன்றி.
ஜோதிஜி,
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.
பெண்பதிவர்கள் பலரும் சிறப்பாக,தொடர்ந்து எழுதுவது குறிப்பிடத்தக்கது, ஆனால் அவர்கள் கருத்துக்கள் ஒரு வட்டத்துக்குள் தான் சிக்குண்டு இருக்கு, அனைவருமே தங்களை பெண்ணீயத்தின் பிரதிநிதி ,எனவே பெண்ணியகுரலை மட்டுமே வெளிப்படுத்துவது அல்லது இதெல்லாம் தான் பெண்கள் எழுதுவது என ஒரு தேர்வுக்குள்ளான சப்ஜெக்ட்டில் மட்டும் எழுதுறாங்க,அதையும் சுட்டிக்காட்டி இருக்கலாம்.
ரொம்ப சுலபமா எழுதக்கூடிய சினிமா விமர்சனம் கூட பெண்கள் எழுதுவதில்லை, இல்லை நான் தான் படிக்க தவறிட்டனோ தெரியலை :-))
யாரும் சண்டைப்பிடிக்க மாட்டாங்க என்ற நம்பிக்கையில் சொல்லுறேன், அந்த நம்பிக்கையை காப்பாத்துவாங்களா?
சிறப்பான பதிவர் அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். எல்லார் பக்கமும் இனிமேல தான் போயி பார்க்கப்போகிறேன் நன்றி.
ReplyDeleteபதிவர்கள் அறிமுகம் மட்டும் என்றில்லாமல் பதிவர் பற்றிய முன்னோட்டம், கண்ணோட்டம் என சிறப்பாய் பதிவிட்டீர்கள்.
ReplyDeleteநன்றி திரு ஜோதிஜி அவர்களே என்னை வலைசரத்தில் அறிமுகபடுத்தியதற்கு புதுமை என்பது உடையில் எழுத்தில் மட்டும் இல்லை சிந்தனைகளில் வேண்டும் என்று நினைக்கிறேன் அப்படிதான் நானும் இருக்கிறேன் என்னை சார்ந்தவர்களுக்கும் அதை சொல்லுகிறேன் ஆகவே புதுமை இல்லை என்று நீங்கள் சொன்னதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்னால். மேலும் கவிதைதான் உள்ளத்தை எழுத்தாக்க பயன்பட்ட முதல் கருவி அதைக்கொண்டுதான் என்னால் எல்லாத்தையும் நேசிக்கவும் நேசித்ததை கட்டுரை கதை என பல வடிவங்களில் வடிக்கவும் முடிகிறது .அதை விடுத்தது வர இயலவில்லை என்னால் ஆனால் நீங்கள் சொன்னது போல வேறு படைப்புகளையும் கொடுக்க முயலுகிறேன் .நன்றி புரிதலோடு என்னை பற்றிய எண்ணங்களை பதிவிட்டதற்கு
ReplyDeleteதங்கள் வலையில் மட்டுமல்ல வலைச்சரத்திலும், எதையும், அலசி ஆய்தே எழுதும் திறன் தங்களுக்குக் கைவந்த கலையாக உள்ளது! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅழகான விமர்சனம் . தொடருங்கள்.
ReplyDeleteஅன்புள்ள ஜோதிஜி,
ReplyDeleteஇன்று என்னை வலைச்சரத்தில் உங்கள் கண்ணோட்டத்துடன் அறிமுகப் படுத்தியதில் மகிழ்ச்சி.
எனக்கு தெரியாத ஒரு கோணத்தில் என்னை நீங்கள் பார்த்திருப்பது சந்தோஷத்தைக் கொடுக்கிறது.
திருமதி துளசி கோபால், திருமதி தேனம்மை, திருமதி கோவை மு சரளா, செல்வி கண்மணி ஆகியோருடன் இன்று வலைச்சரத்தில் உலா வருவது அளவில்லா ஆனந்தத்தைக் கொடுக்கிறது.
வலைச்சர வாரத்திற்கு இனிய நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com/
மிக விரிவான விவரமான பதிவர்கள் அறிமுகம்! சிறப்பான பகிர்வு! நன்றி!
ReplyDeleteவலைச்சரத்திலும் சிறப்பாகவே உள்ளது. வாழ்த்துகள்!
ReplyDeleteஅன்பின் ஜோதிஜி - பதிவர் அறிமுகத்திற்கு நன்றி - தள அறிமுகம் சரி - இப் பதிவர்களுடைய சிறந்த பதிவுகள் சிலவற்றையும் அறிமுகம் செய்தல் வேண்டும் - கவனத்தில் கொள்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteமிகவும் நல்ல அறிமுகங்கள். இதில் கோவை மு.சரளாவின் பதிவுகளைப் படிப்பதுண்டு. மற்றவர்களின் பதிவுகளை இனிதான் வாசிக்கவேண்டும்.
ReplyDeleteமுச்சுவையும் கலந்து நான் தருவேன் என வலைச்சரம் மூன்று மற்றும் சேர்ந்திங்கு முத்தமிழைத் தர வேண்டி என வாழ்த்துகிறேன்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஜோதிஜி
இன்று படைக்கப்பட்ட அனைத்துப் படைப்புகளும் அருமை வாழ்த்துக்கள்
இன்று ரஞ்ஜனியம்மாவின் படைப்பு வெளிவந்தது மிக்க சந்தோசமாக உள்ளது
தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மூவரும் அருமையான வலைப்பதிவர்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ஜலீலாகமால்
http://samaiyalattakaasam.blogspot.com/
வவ்வால்
ReplyDeleteசரளா பின்னி பெடல் எடுத்துட போறாங்க.சாக்ரத.
இங்கே பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.
இவர்கள் வலைப்பக்கம் சென்று இருக்கிறேன், பெண்கள் எழுதுவது என்பது மிக மிக கஷ்டம், காரணம் வேலை, வீட்டுவேலை, குடும்பத்தை பார்த்துக்கொள்வது, என்று சகல பொறுப்புகளையும் தலையில் போட்டுகொண்டு செய்வார்கள், அதற்கிடையில் எழுதுவது என்பது மிக மிக பாராட்ட வேண்டிய விஷயம். நீங்கள் அறிமுகம் செய்த அம்மாக்கள், பெண்கள் எழுதுவதற்கு முன்னோடியாக இருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஜோதிஜி,
ReplyDelete//சரளா பின்னி பெடல் எடுத்துட போறாங்க.சாக்ரத.//
ஏன்...ஏன் இந்த கொலவெறி?
நான் பொதுவா பெண்கள்னு தானே சொன்ன்னேன், நீங்க குறிப்பா ஒருவரிடம் என்னை மாட்டி விட்டு சோலிய முடிக்கலாம்னு திட்டம் போடுறிங்களே, நியாமா இது?
இதெல்லாம் நல்லாயில்லை சொல்லிட்டேன் ...ஆமாம், மி பாவம் ...அவ்வ்வ் :-((