என்னைப் பொறாமைப்பட வைக்கும் பதிவர்கள் - பகுதி 1
➦➠ by:
திடங்கொண்டு போராடு சீனு
எத்தனைப் பதிவர்களைப் பற்றி என்ன வேண்டுமாலும் (நாகரிகமாக) எழுதலாம் என்ற சுதந்திரம் கிடைத்த காரணத்தால் இந்த ஆறு நாட்களும் கொஞ்சம் அதிகமாக பதிவர்களைப் பற்றி எழுதலாம் என்று நினைத்துள்ளேன்.
அலுவலகத்தில் பிளாக்(blog) பிளாக்(block) செய்யப்பட்டுள்ள காரணத்தால் வீட்டில் வைத்து மட்டுமே படிக்க இயலும். எனக்குத் தெரியாத எத்தனையோ பதிவர்கள் வலையுலகில் சிறப்பாய் எழுதி வருகிறார்கள். அவர்கள் அத்தனை பேரை எனக்கும், என்னை அவர்களுக்கும் தெரிந்திருக்க நிச்சயமாய் வாய்ப்பில்லை. அதனால் எனக்கு நன்கு தெரிந்தவர்களைப் பற்றி முதலிலும், அதன் பின் சமீபத்தில் எனக்கு அறிமுகமானவர்களைப் பற்றியும் எழுத முடிவெடுத்துள்ளேன்.
நான் பொறாமைப்படும் சில பதிவர்கள் இந்த லிஸ்டில் இல்லை. அவர்களை மற்றுமொரு லிஸ்டில் இருந்து கழட்டி விட முடியாத காரணத்தால் இந்த லிஸ்டில் அவர்களுக்கு இடமில்லை.
புலவர் குரல்
புலவர் ராமானுசம் அய்யா, பதிவர் சந்திப்பு நடைபெற பெரிதும் பாடுபட்டவர். எந்தவிதத்திலும் தடை வந்துவிடக்கூடாது என்று இவர் பார்த்து பார்த்து செய்த செயல்கள், அந்த வயதில் நான் இருந்தால் கட்டிலை விட்டு எழுந்திருந்திருப்பேனா தெரியாது. எப்போது சந்தித்தாலும் "என்ன சீனு நல்லாருக்கியா" என்று கேட்கும் வார்த்தைகளே அவ்வளவு நிம்மதி தரும்.
தற்போது தமிழ் வலை உலகில் புதுகவிதை இல்லாமல் முழு நேர மரபுக் கவிதை எழுதும் ஒரே பதிவர். எண்பது வயதிலும் உற்சாகமாய் செயல்படுகிறார். வலைப் பதிவர்களுக்கு என்று சங்கம் வேண்டும் என்று வருடங்களுக்கு முன்பே சொன்னவர். வலைப்பதிவர் சங்கம்
பால கணேஷ்
மின்னல் வரிகளுக்கு சொந்தக்காரர். தனக்குத் தெரிந்த வித்தையை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்கள் மிகச் சிலரே, அந்த மிகச் சிலரில் ஒருவர் தான் பாலகணேஷ் என்னும் வாத்தியார். தற்போது சிரிதாயணம் என்னும் புத்தகம் மூலம் எழுத்தாளர் அவதாரம் எடுத்திருப்பவர். வெரைட்டி ரைட்டர்ஸ் என்று கூறுவார்கள், எனக்குத் தெரிந்த வரையில் பதிவுலகில் இவர் அத்தனை வெரைட்டியையும் பதிந்துவிட்டார் என்று நினைக்கிறன். இங்கு நான் வெரைட்டி என்று குறிப்பிடுவது விதங்களை அல்ல சுவைகளை.
இவர் எழுதிய நடைவண்டிகள் தொடர் மிக அற்புதமாக இருக்கும். சமீபத்தில் இவரைப் பற்றி தெரிந்தவர்களுக்கு நான் பகிர விரும்புவது இவரது நடைவண்டிகள் தொடரைத்தான். எழுத்தாளர் கடுகு இவருக்கு வண்டி வாங்கிக் கொடுத்த கட்டுரை படித்துப் பாருங்கள் மிக நெகிழ்ச்சியாக இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் முழுத் தொடரையும் படித்துப் பாருங்கள் பால கணேஷ் என்னும் பதிவர் மேல் நீங்கள் வைத்திருக்கும் அத்தனை அன்பும் மறைந்து லேசான பொறாமை எட்டிப் பார்க்கும்.
புத்தக விமர்சனங்கள் யார் வேண்டுமானலும் எழுதி விடலாம், ஆனால் புத்தகத்தின் மையம் மாறாமல் அதை சுருக்கி கேப்ஸ்யூல் (குறு) நாவலாக மாற்றி கொடுப்பது இவரின் மற்றுமொரு கைவந்த கலை.
இவரின் மற்றுமொரு வலைபூ மேய்ச்சல் மைதானம்.. பழையன விரும்புபர்கள் விரும்பிச் செல்லலாம்.
வேண்டுகோள் : வாத்தியாரே பயணக் கட்டுரை முயன்று பார்ப்பது. இந்த திரு-எவ்வளூர் பற்றி எழுதியது எல்லாம் பயணக் கட்டுரை வகையறா கிடையாது.
எங்கள் பிளாக்
எங்கள் பிளாக் - யார் வேண்டுமானாலும் தங்கள் பிளாக்கை சொந்தக் கொண்டாடலாம் என்ற நல்ல எண்ணத்தில் பெயரை வைத்திருக்கிறார்கள். எங்கள் பிளாக் தனி மனித தாக்குதல்களுக்கு எங்கள் பிளாக்கில் இடம் இல்லாத உங்க வூடு தான் என்று சொல்லக் கூடியவர்கள். ஐந்திற்கும் மேலான ஆசிரியர்கள் பணிபுரிந்தாலும் எனக்கு அறிமுகம் ஆனவர்கள் இருவர் தான்.
ஒருவர் உங்கள் அனைவருக்கும் பரிட்ச்சியமான ஒருவர். உங்கள் பதிவில் இவர் பின்னூட்டமிட்டிருந்தால் அதைப் படித்து அந்த பின்னூட்டத்தின் அர்த்தம் உங்களுக்குப் புரிந்து, மெல்லிய புன்னைகை உங்கள் இதழில் உதிரத் தொடங்கினால் அந்த ஹாஸ்யத்திற்கு சொந்தக்காரர் எங்கள் பிளாக் ஸ்ரீராம் சாராக இல்லாமல் வேறு யாராகவும் இருக்க முடியாது.
நீங்கள் பதிவு எழுத அமர்ந்தால் உங்கள் மன நிலை எப்படி இருக்கும், மெல்லிய ஹாஸ்யத்துடன் ஸ்ரீராம் சாரின் இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள், உங்களை நீங்கள் கண்ணாடியில் பார்ப்பது போல் உணர்வீர்கள்.
எங்கள் பிளாக்கின் மற்றுமொரு ஆசிரியர் கௌதமன் சார். இனிசியலை மறக்கவில்லை சார், கே.ஜி கௌதமன் சார். இப்போது சந்தோசம் தானே! இவரை அறிந்தவர்கள் இவரது ஞாயிறை மறக்க மாட்டார்கள். ஒவ்வொரு ஞாயிறு தோறும் ஏதேனும் ஒரு படத்தை பதிவிட்டு அதன் மூலம் கருத்து கூறுவதைத் தவிர மற்றெல்லாவற்றையும் கூறுவார். இவரது அலேக் அனுபவங்கள் அசோக் லைலாண்டில் இவரது வாழ்க்கையைப் பற்றிக் கூறும். அசோக் லைலாண்ட் cab (கால் டாக்சி) க்கும் மற்ற கம்பெனி cabக்கும் வித்தியாசம் தெரியாத அப்பாவிப் பதிவர். அசோக் லைலாண்டில் ஆயுத பூஜை பற்றிய இவரது சிறப்பான பதிவு.
அலேக் அனுபவங்கள் 13:: அ லே க் ஆயுத பூஜை!
"எங்கள்"ளின் புதிய பாணிகள் உள்பெட்டி, பாசிடிவ் செய்திகள், தாங்கள் படித்து ரசித்த புத்தகளில் இருந்து புதிர் போடுவது, சரியாக பதில் அளித்தவர்களுக்கு மட்டும் பரிசளிப்பது (இது அராஜகம்).
வேண்டுகோள் : கெளதம் சார் அலேக் அனுபவங்களுக்கு குறிசொற்கள் சேருங்கள் கண்டுபிடித்து படிப்பதற்குள் படிப்பவர்கள் அலேக்காக எஸ் ஆகி விடப்போகிறார்கள்.
மெட்ராஸ் பவன் சிவா
இளமையான எழுத்துக்கு சொந்தகாரர் அதே நேரத்தில் திறமையான எழுத்துக்கும் சொந்தக்காரர். பதிவர் சந்திப்பில் புதிய பதிவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்தவர் (பதிவர் சந்திப்பு நடந்த காலகட்டத்தில் நான் புதியவன் என்பதால் அதற்கு முழு ஆதரவு வழங்கிய பாக்யவான் ஆனேன்).
வாரத்தின் விடுமுறை நாட்களை, திரைப்படங்களுடனும் பதிவர்களு டனும் செலவழிப்பவர். மேதை பொன்னர் சங்கர் போன்ற உலக தமிழ் சினிமாக்களை பெரிதும் விரும்பிப் பார்ப்பவர். நாடகங்கள் பார்ப்பது, அதைப் பற்றி தனது பார்வைகளை எழுதுவது இவரின் மற்றொரு சிறப்பம்சம்.
சென்ற ஆண்டு டெரர்கும்மி கும்மி நடத்திய போட்டியில் நகைச்சுவை சிங்கம் சேட்டைக்காரன் கையிலிருந்து வாங்கிய விருதை நினைத்து பெருமிதம் கொள்பவர்.
இயல்பான இவரது எழுத்தில் சென்னையின் பேருந்து வாழ்கையை வாசித்து பாருங்கள். பேருந்து இந்த வலைப்பூவில் இது இவருடைய இரண்டாவது படைப்பு. ஐ.டி இளைஞர்கள் பற்றியும் திருப்தி ஏழுமலையானையும் பற்றி வினவு தளம் எழுதியதற்கு சிவாவின் பதில் பதிவு வினவு வெஸ் வெங்கட்
கோ - படம் திரைக்கு வருவதற்கு முன்பே இவர் ப்ரிவியு பார்த்தது போல் எழுதி பதிவுலகின் ஒட்டுமொத்த கோபத்தையும் ஒன்றாக வாங்கிக் கட்டிக் கொண்ட பதிவு.
இவரின் இன்னொரு தளம் நண்பேண்டா
மதுமதி
ஈரோட்டு சூரியன் வழியைத் தேர்ந்தெடுத்த ஈரோட்டுக்காரர். இவரின் இயற்பெயர் மாதேஷ் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும். சில மாத நாவல் இதழ்களில் நாவல்கள் எழுதி இருப்பவர். தமிழக கவிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர். திரைப்பட பாடலாசிரியர் என்பதையெல்லாம் தாண்டி இவர் செய்துவரும் சேவை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
டி.என்.பி.எஸ்.ஸி தேர்வுக்கு வழிகாட்டியாக இவர் எழுதி வரும் பதிவுகள் பெரிய வரவேற்பைப் பெற்றவை.
தற்போது அதில் மற்றுமொரு புதிய முயற்சியாக டி.என்.பி.எஸ்.ஸி வழிகாட்டிகளை வீடியோ பதிவுகளாக மாற்றி வருகிறார்.
பதிவர் சந்திப்பில் இவரது உழைப்பு அபாரம் ஆனது . ஆனால் அந்த உழைப்பைப் பற்றி பிறிதொரு சந்தர்பத்தில், பிறிதொரு பதிவில் பேச இருப்பதால் இங்கு தவிர்க்கிறேன்.
பகுதி இரண்டு இன்றே... மற்றுமொரு நல்ல பொழுதில் விரைவில் ...
|
|
நல்ல அறிமுகங்கள் இதில் மெட் ராஸ் பவன் & எங்கள் ப்ளாக் தவிர அனைவரும் பதிவுகள் மூலம் அறிந்து இருக்கிறேன். அறியாத இருவர்களை நேரம் கிடைக்கும் போது அவ்ரகள் பதிவை பார்க்கிறேன் உங்கள் அறிமுகம் நல்லவையாகத்தான் இருக்கும்
ReplyDeleteசிவா, மின்னல் வரிகள் கணேஷ் சார் இருவரையும் முன்பு அடிக்கடி வாசிப்பேன்.
ReplyDeleteஇப்போ அப்பப்போ தான் எட்டிப் பார்க்க முடியுது. இனி தொடர்ந்து படிக்கணும்.
அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள் :-)
nantri sako....!
ReplyDeleteThanks Seenu.
ReplyDeleteஅனைவரும் நான் விரும்பித் தொடரும் பதிவர்களாய்
ReplyDeleteஇருப்பது கூடுதல் சந்தோஷம்
அருமையான அறிமுகம்
தொடர வாழ்த்துக்கள்
tha,ma 3
ReplyDeleteசீனு, இன்று நீங்கள் குறிப்பிட்டவர்கள் அத்துணை பேரும் மிகச் சிறந்த பதிவர்கள் ஒரு முறை அவர்களது எழுத்தை ரசித்தவர்கள் தொடர்ந்து படிக்காமல் இருக்கமுடியாது. தொடர்க
ReplyDeleteஅனைவருமே நான் தொடர்ந்து, ரசித்துப் படிக்கும் வலைப்பூக்களுக்கு உரிமையாளர்கள்....
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்...
த.ம. 4
சீனுவின் பார்வையில் என்னைக் காண்பது மகிழ்ச்சி. என் நட்புகள் அனைவருடனும் நான் இங்கு இடம் பெற்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சி! நன்றி சீனு! பயணக் கட்டுரை என்கிற விஷயத்தைத் நான் தொடாததற்குக் காரணம்... எனக்கு ரசித்து எழுதும் அளவுக்கு பயண அனுபவங்கள் அமையாததுதான். இருப்பினும் விரைவில் அதையும் செய்து விடுகிறேன் நண்பா! (மேய்ச்சல் மைதானம் பு்ல்லின்றி காய்ந்து கிடக்கிறது தற்போது. நாளை முதல் அதையும் பசுமையாக்க எண்ணியுள்ளேன்)
ReplyDeleteசூப்பர் மச்சி.. ரொம்ப ரஸ் டைம்ல கூட பிரெஸ் பதிவு போல எழுதி இருக்க கலக்கு..
ReplyDeleteபடங்கள் போடும் போது (medium) ல போடு.. வலைச்சரத்துக்கு அது தான் பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறேன்..
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ள அனைவரும் என் அன்பான
ReplyDeleteபாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.
பெரியோர்களின் ஆசியுடன் ஆரம்பித்து, அனைவரும் சிறப்பான அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... மாதேஷ் அவர்களை இன்று தான் தெரியும்...
ReplyDeleteஅருமை... கலக்குங்க சீனு...
ReplyDeleteஅருமையான அறிமுகம். கவிஞர் மதுமதியின் இயற்பெயரை சொன்னமைக்கு நன்றி!
ReplyDeleteநல்ல பதிவு .நேர்மைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் புலவரைய்யாவும் நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்தனை பேரும் பெருமை செய்ய வேண்டியவர்கள்தான் .சரியான பகிர்வு
ReplyDeleteஇன்று வைரங்களாய் மின்னும் அருமையான பதிவர்களின் அறிமுகங்களுக்கு மனம் நிரைந்த பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
ReplyDelete"எங்கள்"ளின் புதிய பாணிகள் உள்பெட்டி, பாசிடிவ் செய்திகள், தாங்கள் படித்து ரசித்த புத்தகளில் இருந்து புதிர் போடுவது, சரியாக பதில் அளித்தவர்களுக்கு மட்டும் பரிசளிப்பது .
ReplyDeleteஎனக்கு இரண்டுமுறை புத்தகப் பரிசுகள் அனுப்பியிருக்கிறார்கள்..
எங்கள் பிளாக் .. !!
சீனு சார் !
ReplyDeleteமிக்க நன்றி - எங்கள் அறிமுகத்திற்கு.
மிக்க நன்றி - என் அறிமுகத்திற்கு.
மிக்க நன்றி - ஸ்ரீராம் சார்பில். அவர் இப்பொழுது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கின்றார். இந்த வாரக் கடைசியில் இருப்பிடம் திரும்புவார். குறிச்சொற்கள் ?? Labels?? முயற்சி செய்கிறேன். ஆங்கிலத்தில் மட்டும் லேபிள் கொடுத்து வருகின்றேன். விவரமாக என்னுடைய மின்னஞ்சலுக்கு (kggouthaman@gmail.com) )நேரம் கிடைக்கும்பொழுது) எழுதினீர்கள் என்றால் சந்தோஷம். மீண்டும் நன்றி.
நீங்கள் பொறாமைப்படும் நபர் நானாக இல்லையே...அடுத்தமுறை உங்களை பொறாமைப்பட முயற்ச்சிக்கிறேன்....நன்றி...உங்களை பொறாமைப் பட வைத்த அத்தனை நண்பர்களுக்கும், புலவர் ராமானுசம் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇரண்டு புதிய பதிவர்கள் அறிந்தேன் நன்றி
ReplyDeleteஅறிமுகம்படுத்தப்பட்ட...இல்லையில்லை...பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பதிவுகளும் படித்திகொண்டிருக்கும் தளங்கள். அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.. இவர்களை பார்த்து நானும் பொறாமை பட்டிருக்கிறேன்... எப்படிதான் இடைவிடமால் எழுதுகிறார்களோ தெரியவில்லை.... நன்றி சீனு!!
ReplyDeleteAvargal Unmaigal said...
ReplyDeleteஎன் மீது உயர்ந்த நம்பிக்கை வைத்திருக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் சார்
Prabu Krishna said...
நிச்சயம் நண்பா ... சீக்கிரம் வலையுலகில் கலக்குங்கள்
Seeni said...
நன்றி நண்பா
! சிவகுமார் ! said...
ReplyDeleteமிக்க நன்றி மெட்ராஸ்
Venkat S said...
மிக்க நன்றி ரமணி சார்
T.N.MURALIDHARAN said...
மிகச் சரியாக சொன்னிர்கள் முரளி சார்
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteமிக்க நன்றி நாகராஜ் சார்
பால கணேஷ் said...
சீக்கிரம் மேய ஆரம்பியுங்கள் .... உங்கள் பார்வையில் பயணக் கட்டுரை நன்றாக இருக்கும் வாத்தியரே
ஹாரி R. said...
மிக்க நன்றி நண்பா... ரஸ் டைம் ஆஆ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். பட அளவை மாற்றி விடுகிறேன். தலைவன் செய்யாமல் இருப்பேனா
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமிக்க நன்றி அய்யா
திண்டுக்கல் தனபாலன் said...
எனக்கும் மாதேஷ் என்று வெகு சமீபத்தில் தான் தெரியும்
ஸ்கூல் பையன் said...
மிக்க நன்றி நண்பா
வே.நடனசபாபதி said...
ReplyDeleteமிக்க நன்றி அய்யா
கவியாழி கண்ணதாசன் said...
நிச்சயம் சார்
இராஜராஜேஸ்வரி said...
எங்கள் பிளாகிடம் இருந்து பரிசு பெற்றவரா நீங்கள் ... வாழ்த்துக்கள் அம்மா
kg gouthaman said...
ReplyDeleteLabels இவைகளைத் தான்சொல்கிறேன் சார். விளக்கமாக மின் அஞ்சல் செய்கிறேன் சார்.
சிவா said...
மிக்க நன்றி நண்பா. உங்களது உற்சாகம் இன்னும் உற்சாகமடைய வாழ்த்துக்கள்
Prillass s said...
நன்றி சகோ
Abdul Basith said...
ReplyDeleteஹா ஹா ஹா மிக்க நன்றி தலைவா
சமீரா said...
எனக்கும் அது தான் ஆச்சரியமாக இருக்கும் சமீரா
அருமையான பதிவர்களை இன்று குறிப்பிட்டமைக்கு வாழ்த்துக்கள் பாரட்டுக்கள்.
ReplyDeleteஇன்றைய பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
எல்லோரும் பொறமைபட வைப்பவர்கள் தான்.
உமது பாணியில் வெகு இயல்பாய் சொல்லியது தான் இங்கு டாப்பு ...
ReplyDeleteஅனைவரும் அறிந்தவர்கள் என்றாலும் சிலது புதிது ...
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
அறிமுகங்கள் அனைத்தும் அருமை...
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
தொடருங்கள்... தொடர்கிறோம்...
அன்புள்ள சீனு,
ReplyDeleteஇன்றைக்கு எல்லோருமே தெரிந்த பதிவர்கள்.
நானும் உங்களைப் போல இந்தப் பதிவர்களைப் பார்த்து காதுல 'புகை'யுடன் தான் இருக்கிறேன்.
எப்படி இத்தனை பேரை கவருகிறார்கள் என்பது புரியாத புதிர்!
அனைவருக்கும், உங்களுக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteநேற்று முழுவதும் மின்தடை எதையும் பார்க்க இயலவில்லை. நன்றி தம்பீ!
பகுதி 1ல் பல நல்ல பிரபலங்களை நினைவு கூர்ந்தீர்கள். அருமை.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி சீனு..
ReplyDeleteநன்றி..
இவ்வாரம் சிறப்பானதாய் அமைய வாழ்த்துகள்..
வணக்கம்
ReplyDeleteசீனு(அண்ணா)
இன்று அறிமுகமான பதிவுகளில் சிலது புதியவை சிலது பழையவை அறிமுகம் கண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் எல்லாம் அருமையான பதிவுகள்,தொடருகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல அறிமுகங்கள். அனைவருமே தெரிந்தவர்கள் தான்.
ReplyDeleteஅனைவரும் தெரிந்த பதிவர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteThanks seenu
ReplyDelete