07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 9, 2013

2517.சிகரெட்டும் சின்சியாரிட்டியும்இன்றைய வீடியோ பார்த்தாச்சா ,புகைபிடிக்கும் நண்பர்கள் உறவினர்களுக்கு இதை அவசியம் போட்டு காட்டுங்க நண்பர்களே .ஒரு மாற்றம் வரலாம் அல்லவா ... இன்று இந்த வீடியோவுடன் தொடங்க என்ன காரணம் சமுதாய அக்கறை மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு போன்ற தலைப்புகளில் எழுதும் பதிவர்களின் அறிமுகங்கள் இன்று எனவே தான்

கூடல் பாலாநம்ம பாலா அண்ணே ரொம்ப பிரபலமான பதிவர் தான் ஆனா கொஞ்சம் நாளா எழுதாம இப்ப மறுபடியும் எழுத வந்து இருக்கார் .இவர் எழுதாம இருந்ததற்கு காரணம் கரண்ட் கட் தானாம் .ஹி ஹி ஆனா கூடங்குளம் பிரச்சனைகள் பற்றி இவர் கொடுத்த பதிப்புகளும் பங்களிப்பும் பாராட்டுக்குரியவை .நன்றி நண்பா தொடர்ந்து உங்கள் பதிவுகளுக்கு காத்துக்கொண்டு இருக்கிறோம். என்ன மாதிரி பதிவுகள் என்றால் ..........
வாருங்கள் நண்பர்களே பசுமை உலகம் படைப்போம்.
பள்ளி குழந்தைகளுக்கு அரசுப் பேருந்துகளால் ஆபத்து!


நதியின் வழியில் ஒரு நாவாய்நண்பர் ஸ்ரீநிவாசன் இந்த வலைதளத்தில் பொதுநலம்,வரலாறு விவசாயம் போன்ற தலைப்புகளில் அருமையாக எழுதி வருகிறார் . அதில் மிகவும் பயனுள்ள தகவல்கள் பல இருக்கு படித்து பாருங்கள் ..

மருத்துவமனை அவலங்கள்
மருமகள்

இது பெண்களுக்கான தளம் ..முதல் பக்கமே அதிரடியா தொடங்குது .ஆனா அங்கு கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் பொக்கிஷம் போன்றவை பெண்களே சட்டங்கள் சரியாக பயன்படுத்தி வெற்றி பெற இங்கே போங்க ..அதில் 

tamilkavithaikal

நண்பர் செந்தில் குமார் அவர்கள் இங்கே பெயருக்கு தகுந்தார் போல் வித்தியாசமாக பல தகவல்கள் தருகிறார் .குடி குடியைக் கெடுக்காது என்கிறார் என்னான்னு கேளுங்க போயி ,மேலும் பல ஆரோக்கியமான செய்திகளும் சொலுறார் ..


கொட்டுமுழக்கம்

இது பத்திரிக்கை உலகில் வலம்வரும் நண்பர் கி.ச.திலீபன் அவர்களின் தளம் இங்கே நல்லதை சொல்லி வருகிறார் அதில் 


கொட்டி முழங்கிய இசை செத்து மடியுது!        சாலை விதிகள் பற்றியும் விபத்துக்களை குறைப்பது பற்றியும் இங்கே ஒவ்வொரு பதிவிலும் கூறி வருகிறார் முன்னால டிரான்ஸ்போர்ட் ஆபிசர் அவை நாயகன் என்ற பெயரில் . நாலு பேருக்கு நல்லது செஞ்சாலே நாயகன்னு சொல்லுவோம் இவர் கோடி பேருக்கு நன்மை செய்யுறார் . பார்த்து படித்து பயன்பெறுவோம்....

மனமென்னும் வான்வெளியில் என்ற தலைப்பில் நண்பர் சுவாமிநாதன் முருகவேல் பல நல்ல பதிவுகள் எழுதி வருகிறார் அதில் நமது இன்றைய தலைப்பிற்கு பொருத்தமாக இரண்டு பதிவுகள் கண்டேன் பகிர்ந்தேன்

இன்னலற்ற வாழ்க்கை வாழ -சாலை பாதுக்காப்பு 

வாக்களிப்பது கடமை 

அம்பாள்புரம் தெரியுமா?, எனக்கு தெரியாது ,ஆனால் இப்ப நம்ம செந்தில் குமார் மூலமா நிறையா தெரிந்து கொள்ள போகிறோம் மிகவும் புதிய பதிவர் இவர் இவரும் பொறுப்பா ஒரு பதிவு எழுதி இருக்கார். எல்லா சாமியும் ஒன்னு தான் என்கிற பதிவு தாங்க அது படித்து பாருங்கள்

டெல்லி கற்பழிப்பு அசம்பாவதிர்க்கு பிறகு தான் பலர் கொந்தளித்து பதிவுகள் எழுதி இருக்கோம்,ஆனால் புதிய மாதவி என்ற வலைப்பூவில் இதை பற்றி 2008 லேயே எழுதி விட்டார் இப்படி ஊடங்களும் ஊடறு பெண்களும் என்ற தலைப்பில் ,மேலும் மானுடம் போற்றுதும் என்ற மனிதநேயத்தை சுட்டிக்காட்டியுள்ள பொறுப்பான பதிவும் போற்றவேண்டியது தான் பாருங்கள் 

வால்மார்ட் வருகை குறித்து அலறல்கள் கேட்டுகொண்டு இருக்கும் நேரத்தில்
நம் அனைவரின் பொறுப்புபையும் நமக்கு ஞாபகமூட்டுகிறார் நண்பர் முத்து நிலவன் இங்கே “பொழுதெலாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ- நாங்கள் சாகவோ" .  இவரது வலைப்பூ இது வளரும் கவிதை பல இலக்கிய தகவல்களின் சங்கமம் இது .....

இன்று சின்சியராக எழுதும் இவர்களை அறிமுகம் செய்து நான் என் சின்சியாரிட்டியும் நிரூபித்துவிட்டேன் ஹி ஹி பூவோடு சேர்ந்து நாறும் மணம்பெறும் என்பதை போல ...

இன்று உங்க வலைப்பூவில் என்ன...  என்ன ... என்று கேட்க்கும் அன்பர்களுக்கு இதோ ஒரு கொடுமையான சம்பவத்தை மையமாக வைத்து விஸ்வரூபம் விஷபரிட்சையே என்று ஒரு கவிதை கதை சொல்லிருக்கேன் பாருங்கள் நிறை குறை சொல்லுங்கள் 


அன்பு நண்பர்களே ,அருமை சகோதரர்களே இன்றைய அறிமுகங்கள் பலரை சென்று அடைய வாக்களியுங்கள் ,மேலும் அவர்களின் எழுத்தாற்றல் புத்துணர்வு பெற அவர்களின் தளத்திலும் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். இன்றைய அறிமுகங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்துப்போனது யாரை என்றும் கருத்தில் இங்கு சொல்லுங்கள் .இதுவே வலைச்சரத்திற்கு நாம் செய்யும் சிறப்பாக இருக்கும் ...............31 comments:

 1. சமூக பொறுப்புள்ள அறிமுகங்கள்!! மிக்க நன்றி ரியாஸ்!! இந்த தளங்களை கண்டிப்பாக பிறகு சென்று பார்கிறேன்..

  ReplyDelete
 2. உடன் வருகை மகிழ்ச்சி அளித்தது சகோ ..
  மிக்க நன்றி

  ReplyDelete
 3. என் வலைத்தளத்தைப் பற்றி மிக அருமையாக எழுதி என்னை ஊக்கப்படுத்தியதற்கு என் நன்றிகள்.

  ReplyDelete
 4. வணக்கம்
  ரியாஸ் (அண்ணா)

  இன்று பலவகைப்பட்ட வலைப்பூக்களை அறிமுகம் செய்ததில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அது மட்டுமா ஒவ்வொரு படைப்பாளிகள் பற்றிய அறிமுக கருத்துக்கள் எவ்வளவு அழகாக உள்ளது,இன்று தொகுத்து வழங்கிய வலைப்பூக்கள் எனக்கு சிலது பழையவை சிலது புதியவை,

  ஆசிரியராக கடமையாற்றும் ரியாஸ் (அண்ணாவைப்பற்றி சொன்னால் அவர் ஒரு நல்ல மனிதன் ஏன் நான் சொல்லகிறேன் என்றால் நான் அவருடன் சில நாட்கள் பேசியபோதுதான் அவருடைய பேச்சின் தன்மையை வைத்துத்தான் சொல்லகிறேன் பல வேலைப்பழுகளுக்கு மத்தியில் வலைச்சரப் பொறுப்பேற்று நடாத்தவது பல கடினமான விடயம் இரவில்தூக்கம் இன்றி பலவகைப்பட்ட வலைப்பூக்களை தேடி அதிலும் தரம் பிரித்து முத்தான பதிவுகளை உலகமே அறிய வைக்கிறார்கள் வாழ்க வளமுடன்
  தொடருகிறேன் பதிவுகளை,

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. வணக்கம்
  ரியாஸ் (அண்ணா)

  இன்று பலவகைப்பட்ட வலைப்பூக்களை அறிமுகம் செய்ததில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அது மட்டுமா ஒவ்வொரு படைப்பாளிகள் பற்றிய அறிமுக கருத்துக்கள் எவ்வளவு அழகாக உள்ளது,இன்று தொகுத்து வழங்கிய வலைப்பூக்கள் எனக்கு சிலது பழையவை சிலது புதியவை,

  ஆசிரியராக கடமையாற்றும் ரியாஸ் (அண்ணாவைப்பற்றி சொன்னால் அவர் ஒரு நல்ல மனிதன் ஏன் நான் சொல்லகிறேன் என்றால் நான் அவருடன் சில நாட்கள் பேசியபோதுதான் அவருடைய பேச்சின் தன்மையை வைத்துத்தான் சொல்லகிறேன் பல வேலைப்பழுகளுக்கு மத்தியில் வலைச்சரப் பொறுப்பேற்று நடாத்துவது பல கடினமான விடயம் இரவில்தூக்கம் இன்றி பலவகைப்பட்ட வலைப்பூக்களை தேடி அதிலும் தரம் பிரித்து முத்தான பதிவுகளை உலகமே அறிய வைக்கிறார்கள் வாழ்க வளமுடன்
  தொடருகிறேன் பதிவுகளை,
  மீண்டும் இடுகிறேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. 2008rupan சகோ அவர்களே மிக்க நன்றி உங்கள் அன்பில் நான் மெய்சிலிர்த்து போகிறேன். நன்றி இன்றைய அறிமுகங்களில் கடைசி இரண்டு பதிவர்கள் நீங்கள் தான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தீர்கள் அதற்க்கு நன்றி நன்றி நன்றி ....

  ReplyDelete
 7. ''அவர்களின் எழுத்தாற்றல் புத்துணர்வு பெற அவர்களின் தளத்திலும் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்''.என்று படிப்பவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருப்பது பாராட்டுக்குரியது நன்றி

  ReplyDelete
 8. வணக்கம்
  ரியாஸ்(அண்ணா)

  இன்று அறிமுகமான முதல் பக்கத்தில் வீடியோவைபார்க்கும் மனிதன் நிச்சயம் புகைப்பழக்கத்தை விட்டு விடுவான் இதைப்பார்த்து திருந்தா விட்டால் அவன் மனிதன் இல்லை, வீடியோவில் கடசியில் சட்டியை வைத்து அடுப்பில் புகையூட்டப்பட்ட நீரை காச்சும் போது கடசியில் எஞ்சிய பகுதி கத்தியால் கூட வெட்டமுடியாமல் உள்ளது இப்படியா? என்று நான் பார்த்து வியந்து போனேன் அப்படி என்றால் புகைப் பிடித்தவர்களின் நிலை என்னவாகும்????????????????????????????????கோவிந்தா,,,,கோவிந்தா,,,

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete


 9. இன்றைய அறிமுகப் பதிவும் நன்று! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. பலவகைப்பட்ட வலைப்பூக்களை அறிமுகம் செய்ததில் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. thank u very much for honouring my blog. sentamilanban.blogspot.in in valaisaram

  ReplyDelete
 12. இன்றைய அறிமுகங்களும் சிறப்பு. நேரம் இருக்கும் போது கண்டிப்பாக சென்று வருகிறேன்.

  ReplyDelete
 13. அறிமுகப்படுத்தி இருக்கும் எல்லார் தளங்களுக்கும் சென்று பார்க்கிரேனுங்க.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. இன்று இந்த வீடியோவுடன் தொடங்க என்ன காரணம் சமுதாய அக்கறை மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு போன்ற தலைப்புகளில் எழுதும் பதிவர்களின் அறிமுகங்கள் இன்று எனவே தான்//

  வீடியோ பார்த்து விட்டேன். சிகரெட் குடிப்பவர்கள் பார்த்தால் வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லது.

  நல்ல பதிவுகள் எழுதிய வலைத்தளங்கள் பகிர்வுக்கு நன்றி. நேற்று திரு அமுதவன் அவர்கள் பதிவு படித்தேன் அருமையாக இருந்தது. இன்றும் படிக்கிறேன் நேரம் இருக்கும் போது நீங்கள் குறிப்பிட்ட அனைத்து தளங்களும் செல்ல ஆசை.
  நன்றி.

  ReplyDelete
 15. மிக்க நன்றி .வாழ்த்துக்கள் சகோ உங்கள் பணி சிறப்பாகத் தொடரட்டும் !.....
  அறிமுகமான அனைத்து உள்ளங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

  ReplyDelete
 16. நல்ல பதிவர்கள்.சிறந்த அறிமுகங்கள்....பயனளிக்கும் ..அறிவுரை....அருமை ஜி.

  ReplyDelete
 17. சமூக விழிப்புணர்வோடு எழுதும் பதிவர்களை இன்று அடையாளம் காட்டி இருக்கிறீர்கள். சில தளங்களுக்குப் போய் கருத்தும் சொல்லி விட்டு வந்தேன்.

  பார்க்காத தளங்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி!
  அறிமுகம் ஆனவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. வணக்கம். இன்று தங்களால் அடையாளம் காணப்பட்டுள்ள பதிவர்கள் அனைவருக்கும் என் அன்பான பாராட்டுக்கள் + இனிய வாழ்த்துகள்.

  முடிந்தால் மீண்டும் வர முயற்சிப்பேன்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 19. // விஸ்வரூபம் விஷபரிட்சையே//

  என்ற தங்களின் படைப்பினை மட்டும் படித்தேன். கண்கள் கலங்கின.

  பதிவினில் கருத்தும் சொல்லியிருக்கிறேன்.

  நல்லதொரு படைப்புக்கும், பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  அன்புடன்
  VGK
  ReplyDelete
 20. அறியாத பல வலைப்பூக்களை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 21. புகை பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கே ன்று தெரிந்தும் எளிதில் விட முடியாமல் தவிக்கும் நண்பர்கள் முயற்சி செய்தால் குறைத்து கொள்ளலாம் .நல்ல விளக்க படம்.வலைச்சரத்தில் எனது பதிவுகளை அறிமுகப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி !ஆசிரியர் ரியாஸ் அஹமது உங்களுக்கு எனது நன்றி !

  ReplyDelete
 22. இன்று சமுக அக்கறை கொண்டு, அறிமுகம் தந்த பயனுள்ள தளங்களுக்கு பாராட்டுக்கள் ரியாஸ்.

  ReplyDelete
 23. சிறந்த அறிமுகங்கள்...
  நல்லதொரு அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி...

  ReplyDelete
 24. என்னை அறிமுகம் செய்தமைக்கு அன்பு கலந்த நன்றி

  ReplyDelete
 25. இன்றைய அறிமுகப் பதிவுகளுக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 26. அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

  ReplyDelete
 27. இந்த வாரம் முழுவதும் உங்கள் அன்பை ஆதரவை நாடும் அன்பன் ரியாஸ்

  ReplyDelete
 28. இந்த வாரம் முழுவதும் உங்கள் அன்பை ஆதரவை நாடும் அன்பன் ரியாஸ்

  ReplyDelete
 29. ///இந்த வாரம் முழுவதும் உங்கள் அன்பை ஆதரவை நாடும் அன்பன் ரியாஸ் ///

  இந்த வாரம் மட்டும் போதுமா? அப்ப நேரம் கிடைக்கும் போது உங்கள் தளத்திற்கு ஆதரவு தரக் கூடாதா என்ன?

  ReplyDelete
 30. தன்னைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் மனிதர்கள் மலிந்த எழுத்துலகில் பிறரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் உங்கள் பணி தொடர
  வாழ்த்துகிறேன். நீங்கள் என் வலைப்பூவை அறிமுகம் செய்திருப்பதற்கு நன்றி என்று சொல்லும்போது " நன்றி" என்ற சொல்லுக்கும் இயலாமை ஏற்பட்டுவதை உணர்கிறேன். தொடருங்கள்.

  நானும் உங்கள் அறிமுகப் பக்கங்களைக் கட்டாயம் பார்வையிடுவேன்.

  வாழ்த்துகளுடன்,

  புதியமாதவி,
  மும்பை

  ReplyDelete
 31. என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கலந்த வணக்கம். நல்ல வலைத்தளங்களை பார்வையிட ஆலோசனை வழங்குவது போலான உங்களது முயற்சி உண்மையிலும் பாராட்டிற்குரியது... உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்....

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது